அத்தியாயம்-10

மறுநாள் காலை 11:00 மணி அளவில் முதல் டான்ஸ் அனைத்து ஸ்டெப்புகளும் போட்டு பார்த்து விட்டதால் இன்னும் இரண்டு நாட்களே இருக்க இன்றிலிருந்து முதல் கட்ட ரிகர்சல் ஆரம்பமானது. 

முதலில் பரதநாட்டியம் டான்ஸ் என்பதால் அவர்கள் நடனம் ஆட வேண்டும் என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்க 

பரதநாட்டியம் ஆடும் சீனியர் மாணவி ஒருத்தி “மேம் எங்க செட்டில் ஒரு பொண்ணு வரல அவளுக்கு இப்போ முக்கியமான கிளாஸ் போயிட்டு இருக்கு லேப் . அதனால நாங்க அந்த பொண்ணு  வந்ததுக்கப்புறம் டான்ஸ் ஆடுகிறோம் ப்ளீஸ் மேம்!”  என்று அவரிடம் கெஞ்சினால். 

அந்தப் பெண் கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் என்பதால் அவரும் நிலைமையை புரிந்து கொண்டு “சரி அதுக்கு அடுத்தடுத்த டான்ஸ் வரிசையா ஆடுங்க அந்த பொண்ணு வந்ததுக்கு அப்புறம் பரதநாட்டியம் டான்ஸ் ரிகர்சல் பண்ணிக்கலாம்!”  என்றவர் அடுத்தடுத்து நடனங்களை ஆட வைத்தார் .

நடுவே அவர்கள் செய்த தவறையும் சுட்டிக்காட்டி ஒரு சில ஐடியாக்களும் கூற அந்த மாணவர்களும் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் ஆட ஆரம்பித்தனர். 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்திருக்க அதற்குள் நான்கைந்து நடனங்கள் ரிகர்சல் முடிந்து விட்டது. வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டே ஓடி வந்த அந்த வேதியல் மாணவி ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தனது சகாக்களுடன் இணைந்து கொள்ள 

அவர்களும் அவளுக்கு உதவி செய்து பரதநாட்டிய உடைக்கு மாற வைத்தவர்கள் அந்த ஆசிரியரிடம் தாங்கள் தற்பொழுது ஆடப்போவதாக கூறிவிட்டு மேடை ஏறினர். 

காலையிலிருந்து ஆராத்யாவும் யாருக்கும் சந்தேகம் வராதது போல் கீழே அமராமல் மேலே பால்கனியில் அமர்ந்து நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

இவர்கள் நடனம்  இன்னும் வரவில்லையே அதற்குள் வேறு யாரு மீதாவது விழுந்து விடுமோ என்ற பயமும் அவளுக்குள் இருந்தது.  ஆனால் அப்படியானால் கூட  தனக்கு என்ன கவலை என்ற ஒரு நினைப்பும் இருக்க 

அவள் எதிர்பார்த்தது போல் பரதநாட்டிய பாடலும் ஆட ஆரம்பித்தனர். 

சிவனின் நாமத்தில் மிகவும் அழகான சலங்கை ஒலி பட பாடலை ஓட ஆரம்பித்தவுடன் அனைத்து மாணவர்களும் நின்று இவர்கள் மயிலாக வளைந்து  நெளிந்து ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர் .

என்னதான் பல வெஸ்டர்ன் நடனங்கள் வந்தாலும் தற்பொழுது வரையிலும் பரதநாட்டியத்திற்கு என்று ஒரு தனி ஈர்ப்பு அதன் தனித்துவத்தால்  நமது மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது .

அதேபோல் மாணவ மாணவிகளும் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க கரண் காலையிலேயே தனது நண்பர்களுடன் வந்து அமர்ந்து கொண்டு இருந்தவன் தன்னவள்  ஆடும் அழகைதான் பார்த்தான் என்பதை விட ரசித்தான் என்றே கூறலாம். 

 அதைவிட அவளை எத்தனை கண்கள் ரசிக்கிறது என்பதை பார்த்து புசுங்கிக் கொண்டிருக்கிறான் என்றும்  சொல்லலாம். 

இவர்கள் தட்டி தட்டி ஆட அதற்கு ஏற்றது போல் அந்த ஸ்டேஜும் கொடுக்கும் வைப்ரேஷனில் மேலே அந்த லைட்டும் சரியாக ஆட்டம் காண ஆரம்பித்தது. 

அதை அங்கே இருந்த யாரும் கவனிக்கவில்லை ஒருத்தியை  தவிர அதுதான் நமக்குத் தெரியுமே ஆராத்யா தான். 

அவளோ காலையில் இருந்தே அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் தற்பொழுது இவர்கள் தங்கள் பாதங்களை தட்டி தட்டி பரதம் சுழன்று அழகாக ஆட அதற்கு ஏற்றால் போல் அந்த அதிர்வு ஏற்பட்டதால் மேலே இருக்கும் லைட்டும் லேசாக ஆட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட பத்து மாணவிகள் ஆடுவதால் அதற்கு ஏற்ப அதிர்வம் சற்று அதிகமாகத்தான் இருந்தது. அதைக் கண்ட பெண் அவள் முகத்தில் சிரிப்பு வந்தது. 

அது எப்பொழுது கீழே விழும் அந்த நேரம் சரியாக அபி இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவள் வேண்டுதலுக்கு ஏற்ப அபியும் சரியாக இடத்தை மாற்றி வேறு ஒரு பாடல்  முன் பாடலின் தொடர்ச்சியாக வர ஆரம்பித்த  உடன் இடம் மாறி நின்று ஆடினாள். 

சரியாக அனைவரும் ஆடிக்கொண்டிருக்க  மெது மெதுவாக அந்த லைட் கீழே விழ ஆரம்பித்தது. 

 அதை பார்த்த மத்த மாணவர்கள் கத்த சத்தத்தை கேட்டு ஆட்டத்தை நிறுத்தியவர்கள் அபி அனைவர் கத்துவதையும் உணர்ந்து  தனக்கு மேலே பார்க்க லைட் விழுவதை  பார்த்தவளுக்கோ அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நெருங்கி வர வர கண்களை மூடி அப்படியே நின்று இருக்க,  இன்னும் அவள் மேல் எதுவும் பட வில்லையே ஏதோ தம் என்று சத்தம் கேட்டு  மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தவள் கண் முன்பு மிகவும் நெருக்கமாக நின்று இருந்தான் கரண் அவனது கைகளை உதறிய வண்ணம். 

ஆம் இவள் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் மற்றவர்களும் ரசிப்பதை கண்டு பொறாமையுடன் அப்படியே மேலே லைட்டிங்கள் அவள் அழகாக தெரிவதை கண்டு கொண்டவன் ஏதோ ஒரு ஞாபகத்தில் அப்படியே மேலே பார்க்க அங்கே இவளுக்கு நேராக இருந்த லைட் கொஞ்சம் கொஞ்சமாக நழுவுவதை கண்டு கொண்டவன் நொடியில் சுதாரித்து நண்பர்கள் தடுப்பதை கூட கண்டுகொள்ளாமல் வேகமாக ஓடியவன் அவன் நெருங்குவதற்குள் அவளுக்கு அருகில் வந்துவிட அவளை இழுத்தால் தப்பிக்க முடியாது என்று தனது கைகளை வைத்து அதை தள்ளி விட்டவன் கைகளோ அந்த இரும்பில் பட்டு பயங்கர வலி எடுத்தது.

அனைத்தும் நொடியில் நடந்திருக்க ஆடிட்டோரியமே பரபரப்பானது. 

சத்தம் கேட்டு வெளியே இருந்த மாணவர்களும் உள்ளே வர நொடிதனில் விஷயமானது காலேஜ் முழுவதும் பரவி விட அந்த விஷயங்களை கேட்டு ஒவ்வொரு ஸ்டாப்பாக வர ஆரம்பித்தனர். 

இறுதியில் பிரின்ஸ்பால் வரை விஷயம் தெரிந்து விட அவரும் வந்து பார்த்தது என்னவோ கரண் பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்ததும் அதை பார்த்து அபி அழுவதையும் தான். 

“எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போறீங்க? நவுருங்க அந்தப் பையன  ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்!”  என்று சொன்ன பிரின்சிபல் பேச்சில்தான் அனைவரும் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அவனை அழைத்துக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். 

அபி அடம் பிடித்து அழுது தானும் அவனுடன் செல்வேன் என்னை காப்பாற்றுவதற்கு சென்று தான் அவருக்கு இப்படி ஆகியது என்று இவ்வளவு நாள் தைரியம் இல்லாமல் இருந்தவள் அவன் கை தன்னால் உடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டு  அவனுடன் ஆம்புலன்சில் சென்றவள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு “சீனியர் சாரி சீனியர் எதுக்காக இப்படி பண்ணினீங்க?”  என்று இது போன்ற வசனங்களை பேசிக்கொண்டே அழுத வண்ணம் சென்று கொண்டிருந்தாள். 

கரண் அவள் தனது கையைப் பிடித்துக் கொண்டிருப்பதில் வானத்தில் பறந்தவன் “எனக்கு இதுபோல் அடிபட்டால் தான்  எனக்கு பக்கத்தில் வந்து என்னிடம் பேசுவியா?  அப்பொழுது இது மாதிரி நிறைய அடி வாங்கலாம்?  என்று அவளிடமும் கூறினான்,  மனதில் நினைத்ததை மறைக்காமல்.

அதைக் கேட்டு அவளுக்கு மேலும் கண்ணீர் வர அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் “ப்ளீஸ் உங்களுக்கு எதுவும் ஆகாது ப்ளீஸ் இப்படி எல்லாம் இனிமேல் பண்ணாதீங்க!”  என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கதவை திறக்க மருத்துவமனை வந்துவிட்டது என்று அவனிடமிருந்து வேகமாக பிரிந்தவள் ஸ்ட்ரக்சர் உள்ளே தள்ளிக் கொண்டு செல்ல 

அவளும் எமர்ஜென்சி அறைக்கு உள்ளே செல்ல முயன்ற அவளை தடுத்து நிறுத்திய செவிலியர் “உள்ள எல்லாம் போகக்கூடாது வெளியே நில்லுமா!”  என்றார். 

பின்னாடியே காரில் இரண்டு ஆசிரியர்களும்  கரண் உடைய காரில் இவனுடைய தோழன் தோழிகளும் வந்து இருக்க 

இவளை பார்த்ததும் “கரண் எங்கே?”  என்று கேட்டார்கள்.

“அவருக்கு உள்ள ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்காங்க நான் உள்ள போலான்னு பார்த்தேன் என்னையும் விடல ப்ளீஸ் அவருக்கு எதுவும் ஆகாது தானே?”  என்றால் அழுகையுடன். 

அதை பார்த்த கரணின் நண்பர்கள் தேவா தேவிக்கு கண்ணை காண்பிக்க அவள் அருகில் சென்று “கவலைப்படாத அவனுக்கு எதுவும் ஆகாது.  உன்ன காப்பாற்றுவதற்காக தான் இப்படி பண்ணி இருக்கான். தயவுசெஞ்சு நீ அழுது உடம்ப கெடுத்துக்காத!”  என்றவள் அவளை அமர வைத்து ஆசுவாசப்படுத்தினால். 

மருத்துவர் உள்ளே அவனது கையை பரிசோதிக்க ஆ என்று அவன் கத்தும் சத்தம் வெளியே கேட்டு அனைவரும் பதறினர். 

கதவை திறந்து உள்ளே போக எண்ணிய அபியை தடுத்து நிறுத்திய  தேவி “இப்படி எல்லாம் உள்ள போகக்கூடாது ஒன்னும் பிரச்சனை இல்ல வந்துருவாங்க அமைதியா இரு ! ” என்று அவளை அமைதிப்படுத்துவதற்குள் பெரும்பாடு பட்டால். 

பத்து நிமிடம் கழித்து வெளியே வந்த மருத்துவர் முன்பு ஆசிரியர்கள் வந்து “சார் அந்த பையனுக்கு இப்ப கை எப்படி இருக்கு சார் பரவாயில்லையே ஒன்னும் பிரச்சனைய இல்லையே?”  என்றார் ஒரு ஆசிரியர். 

“இல்ல மேடம் பெருசா ஒன்னும் இல்ல ஆனா ஒரு கைல லேசா எலும்பு கிராக்காயிருக்கு. அதுக்கு கட்டு போட்டு இருக்கேன்! கவனமா இருக்கணும்! ஒரு வாரம் கழிச்சு வந்து மறுபடியும் பார்க்கலாம் எப்படி இருக்குன்னு! இன்னொரு கையிலும் லேசா லிகமென்ட் டேர் ஆகி இருக்கு! ரெண்டு கையும் ரொம்ப ஜாக்கிரதையா வச்சுக்கணும் அதிகமா யூஸ் பண்ணவே கூடாது அதுவும் எலும்பு கிராக்கான பக்கம் யூஸ் பண்ணவே கூடாது! கூட யாராவது ஒருத்தர் இருந்து பாத்துக்கோங்க ! அவர் இப்போ மாவு கட்டு போட்ட அதனால கொஞ்சம் வலியில அசந்து தூங்கிட்டு இருக்காரு எழுந்தவுடன் கூட்டிட்டு கிளம்பலாம்!”  என்றவர்  பிரிஸ்கிரிப்ஷனை அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட 

ஒரு ஆசிரியர்  அங்கே இருந்த தேவனை அழைத்து சீட்டையும் கொடுத்து “மருந்து மாத்திரைகள் வாங்கிட்டு வா!”  என்று சொல்லி பணமும் கொடுத்து அனுப்ப

 இல்ல மேம் பணம் எங்ககிட்டயே இருக்கு பாத்துக்கிறோம் என்று பணத்தை வாங்காமல் நண்பனுக்காக வேகமாக மருந்து வாங்க ஓடினான். 

தேவி அபியை  சமாதானப்படுத்தியவள்  தேவன் மருந்து வாங்கி வந்ததும் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று நர்ஸ் சொல்லிவிட்டு சென்றுவிட கரண் அருகே சென்ற தேவன் அவன் முழித்துக் கொண்டிருப்பதை பார்த்தவன்  நன்றாக இருக்கிறானா என கேட்டு உறுதி செய்துவிட்டு அவனுக்கு துணையாக நடந்து வந்தான். 

வெளியே வந்த கரணின் கண்களில் பட்டது என்னவோ கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்கும் அபி தான். 

அவளைப் பார்த்து புன்னகை சிந்தியவன் ஆசிரியர் இருப்பதை பார்த்துவிட்டு அவர்களிடம் தான் நன்றாக இருப்பதாக சொல்லி” நீங்க காலேஜ் போங்க மேம் நான் அப்படியே வீட்டுக்கு போறேன்!”  என்றான். 

“சரிப்பா பாத்துக்கோ! ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத கை ஜாக்கிரதை என்ற ஆசிரியரும் நண்பர்களை பார்த்து 

“நீங்க அவன வீட்ல விட்டுருங்க நான் உங்க மேடம் கிட்ட சொல்லிக்கிறேன்!”  என்றார். 

அப்பொழுது அபியை பார்த்தவன் “மேம் உங்க கூட இந்த பொன்னையும் கூட்டிட்டு போக முடியுமா ?” என்றான். 

அந்த ஆசிரியர்களும் சரி என்று தலை ஆட்ட 

தேவி பார்த்தவன்  “அபிய அவங்க கூட அனுப்பிவிடு !” என்றவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

 அவனை முறைத்து பார்த்தவள் தேவியிடம் ஏதோ கூறிவிட்டு அவனைப் பார்த்துக் கொண்டே ஆசிரியர்களுடன் கிளம்பினாள். 

அவள் சென்றதும் தேவியை பார்த்தவன் “அவ உன்னிடம் என்ன சொன்னா?”  என்றான் ஆர்வமாக. 

தேவி அவனை மேலிருந்து கீழாக பார்த்தவள் “உனக்கு கை உடைஞ்சாலும் உடம்புல இருக்குற கொழுப்பு மட்டும் குறையலன்னு சொல்லிட்டு போறா!”  என்று சொன்ன தேவி சிரிக்க 

அதைக் கேட்டு தற்பொழுது அவளை முறைத்து விட்டு தூரத்தில் செல்பவளை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தவன் இதழுக்குள் அவனையும் மீறி சிரிப்பும் புகுந்து கொண்டது. 

இன்னும் இரண்டு நாட்களே இருக்க ஆனால் அபிக்கு தான் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் கரணை பற்றிய நினைவுகள் அவளை வாட்டியது. அதோடையே இரண்டு நாட்களும் கழித்தால். 

காலை மதியம் மாலை என்று மூன்று வேலையும் அவனுடைய நண்பர்களிடம் ”  சீனியர்  எப்படி இருக்கிறார் போன் பண்ணி பேசுனீங்களா? வலி அதிகமாக இல்லையே? துணைக்கு ஆள் இருக்காங்களா?  இப்போ எப்படி இருக்காரு இப்போ எப்படி இருக்காரு?” என்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அவர்களும் ஒவ்வொரு தடவை அவள் கேட்கும் பொழுதும் அவன் நலமாக இருப்பதாக கூற “அவர் எப்போ காலேஜ் வருவாரு நான் அவரை பாக்கணும்!”  என்றால். 

அதைக் கேட்ட தேவி “எதுக்கு அவனை பாக்கணும்?”  என்றால். 

“என்னால தானே அவரு இப்படி வலியை அனுபவிச்சிட்டு இருக்காரு அதுக்காகத்தான்!”  என்றவள் சற்று தயங்கி 

“நான் கேக்குறது நடக்காத விஷயம் என்று தெரியும் இருந்தாலும் கேட்கிறேன் !” என்றவள் மெதுவான குரலில் 

“நாளைக்கு ஃபங்ஷனுக்கு கரண் சீனியர் வருவாங்களா?”  என்றால் ஒருவித எதிர்பார்ப்புடன். 

அதைக்கேட்ட தேவன் “எப்படிமா வர முடியும் அவனே கை முடியாத நிலைமையில் இருக்கான்? ” என்றவன் 

“எதுக்காக அவன வருவான் நீ கேட்கிறாய் ? அவனை எதற்கு எதிர்பார்க்கிற?” என்றான் தெரிந்தும் தெரியாதவன் போல். 

“இல்ல ஒன்னும் இல்ல சரி சீனியர்ஸ் நான் வரேன்!”  என்று அவர்களிடம் இருந்து விடை பெற்றவள் இறுதி நாள் ரிகர்சல் முடித்துவிட்டு ஆசிரியர்களிடமும் சீனியர்களிடமும் பேசிவிட்டு தோழிகளுடன் பஸ் ஏறி இல்லத்திற்கு சென்றால். 

அவளுக்கு எதுவும் ஆகாமல் நன்றாக நடமாடிக் கொண்டு இருப்பது ஏனோ ஆராத்யாவிற்கு  மிகுந்த கோபத்தை கொடுத்தது… அது மட்டும் இல்லாமல் இவளுக்கு வைத்த குறியில் தற்பொழுது கரன் வழியில் துடிப்பது இன்னும் இவளுக்கு எரிச்சலை மூட்டியது அவன் காப்பாற்றியது வேறு இவளுக்கு அவனின் மேல் சொல்ல முடியாத கோபத்தை அதிகமாக்கியது..

அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவள் தன்னுடைய இல்லத்திற்கு சென்றாள்…

என்ன செய்ய காத்திருக்கிறாளோ யார் அறிவார்?” 

கதை பற்றி விமர்சனங்கள் மறக்காம சொல்லிட்டு போங்க நண்பர்களே..…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page