அத்தியாயம் 11

“மிதுன் இதுவரைக்கும் நாம பிசினஸ்காக எவ்வளவோ கிரைம் பண்ணியிருக்கோம். அப்பவும் நாம எந்த பொண்ணையும் காயப்படுத்துனதில்ல. அஃப்கோர்ஸ் நாம கொன்னவங்க பேமிலில இருக்க லேடீஸ், குழந்தைகளுக்கு செட்டில்மென்ட், அவங்க வாழ்க்கைக்குத் தேவையானது எல்லாம் கூட செஞ்சிருக்கோம்.

“ஒரு பொண்ணைத் தெரியாமக் கூட கிண்டலோ, கேலியோ செஞ்சு காயப்படுத்த விரும்பாத நீ, இப்போ நதியாவை இப்படி பண்றது எங்களுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல. அதுவும் உங்க ஃபேமிலில அவளை ரொம்ப மோசமா ட்ரீட் பண்றாங்க. ஒருபக்கம் உன்னோட பாட்டி அவளைப் பொண்டாட்டின்னு உனக்கு தேவையானதெல்லாம் செய்யச் சொல்லி டார்ச்சர் பண்றாங்க, இன்னொரு பக்கம் உன் அம்மா அத்தனை பேர் முன்னாடியும் அவளை அவமானப் படுத்துறாங்க. 

“அந்த பொண்ணுக்கும் மனசு இருக்கும். அவ மனசும் காயப்படும்னு நீ யோசிக்கவே இல்லையா? அவளுக்கும் கல்யாணம் பத்தி எவ்வளவு கனவுகள் இருக்கும்? அவங்க அம்மா இருக்கிற சூழ்நிலையைப் பயன்படுத்தி நீ இப்படி பண்றது உனக்கு தப்புன்னு தோணலையா? 

“நதியா மனசார தான் என்னை அண்ணான்னு கூப்பிட்டா. நானும் அவளை என்னோட தங்கச்சியா நினைச்சுப் பார்த்தா எனக்கு இதெல்லாம் ரொம்ப தப்புன்னு தோணுது. ஒரு நண்பனா சொல்ல வேண்டியது என்னோட கடமை. இதுக்கு மேலக் கேட்கிறதும் கேட்காததும் உன்னோட இஷ்டம்” அரவிந்த் தன் மனதிலுள்ளவற்றை  நீண்ட உரையாய்ப் பேசி முடித்தான்.

ஏற்கனவே தனக்குள் இருக்கும் மனசாட்சி தன்னிடம் கேட்டுக் கொண்டிருப்பவற்றை நண்பனும் இப்போது கேட்டிட, மிதுன் பதில் சொல்லத் தடுமாறினான். தன்னுடைய நிலையை அவர்களுக்குப் புரிய வைத்திட முடியாமல் தவித்தான்.

சுமங்கலி பூஜை அன்று மிதுன் வீட்டில் நதியாவிற்கு நடந்ததெல்லாம் பார்த்த அரவிந்த், சத்யாவிற்கு மனம் பொறுக்கவில்லை. அவனிடம் அதை இப்போது மனம் திறந்து சொல்லியும் விட்டார்கள். அதை விட, சத்யாவிற்கும் அடுத்துத் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் நண்பன் திருமணம் செய்து கொள்ளாமல், இப்படி ஒரு தவறான முடிவில் அவனுடைய வாழ்க்கையைத் தொலைக்கிறானே என்ற ஆதங்கத்திலும் மனதில் நினைத்த அத்தனையும் சொல்லி முடித்தனர்.

‘என்ன இன்னைக்கு அரை வேக்காடு கொஞ்சம் தெளிவா பேசுது. அப்பப்போ இவங்களுக்கு மூளை வேலை செய்யும் போல’ பாராட்டு போல அரவிந்தை மனதிற்குள் திட்டினான் விஷ்ணு.

“மச்சான் லெட்ஸ் ஹாவ் ஏ டிரிங்க்?” மிதுன் ஆர்ப்பரிக்கும் தன்னுடைய மனதை அமைதிப்படுத்த எண்ணி அவர்களிடம் கேட்க, “ஹ்ம்ம்.. போகலாம்” அவனை குடிக்க வைத்து மனதில் உள்ளதை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் சம்மதித்தனர் அவனுடைய நண்பர்கள்.

சில சமயம் வெற்றியைக் கொண்டாடுவதற்காக, சில சமயம் சந்தோஷ மனநிலையில் இருந்தால், சில சமயம் மன வேதனையைக் கரைப்பதற்காக, சில சமயம் பிசினஸ் மீட்டிங், பார்ட்டிகளில், எப்போதாவது லிமிட் தாண்டாத அளவில் குடிக்கும் சோஷியல் டிரிங்கெர்ஸ் மூவரும். 

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் ஏசி பாரில் தனி அறையில் மூவரும் அமர்ந்திருக்க, மிதுன் மூவருக்கும் விலை உயர்ந்த ஷாம்பெயின் ஆர்டர் செய்தான். 

சிறிதோ பெரிதோ வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் மிதுனுக்கு அலாதி விருப்பம். வாழ்வில் கிடைக்கும் இன்பங்களை ஒட்டுமொத்தமாக அனுபவித்திட நினைப்பவன். பிசினஸ் விஷயத்தில் ஆரம்பித்து, அவன் பசிக்காக உண்ணும் உணவு வரை அந்த விஷயத்தில் தன்னை முழுதும் ஈடுபடுத்தி, அதைப் பற்றி தெரிந்து கொண்டு, அதை உணர்ந்து முழுதாக செய்பவன். 

பாவம் நதியா விஷயத்தில் மட்டும் காதல் இல்லாத, அதுவும் முழுமையே இல்லாத அரைகுறை காமத்தை தேர்ந்தெடுத்திருக்கிறான்.

நண்பர்கள் மிதுனிடம் அவனைப் பற்றிய பேச்சை பேசும் போதெல்லாம், கல்லூரியில் நடந்தவை, பிசினஸைப் பற்றிப் பேசி பேச்சை மாற்றிக் கொண்டே இருந்தான். ‘எனக்கு மட்டும் பிடிச்சா அதைப் பண்றேன். பிடிக்காமத் தான் பண்றேன். என் சூழ்நிலை அப்படி’ இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரியாமல் உளறியிருந்தான். 

அளவாகக் குடித்ததால் நண்பர்கள் மூவரும் அவரவர் காரில், அவரவர் வீட்டிற்குக் கிளம்பினர்.

‘இங்கோ மிதுன் எப்போது வருவான்? என்ன செய்வானோ?’ என்ற யோசனையோடு மெத்தையில் சோர்வாகப் படுத்திருந்தாள் நதியா. 

மிதுன் அறைக்கு வந்து குளியலறைக்குச் சென்று சுடுநீர் ஷவரில் இதமான ஒரு குளியலைப் போட்டான். டீஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து மெத்தைக்கு வந்தவன், அவனைப் பார்த்துக் கொண்டே படுத்திருக்கும் அவளை புரியாமல் நோக்கினான். 

“சார்.. அது வந்து இன்னைக்கு” அவள் ஏதோ பேச வரும்முன், “கோ அண்ட் கெட் ரெடி” கரகரத்த குரலில் சொன்னான். பயத்தில் எச்சில் விழுங்கியவள், “சார்.. பிளீஸ் இன்னைக்கு வேணாமே. நான் சொல்ல வர்றதை…..” அவள் பேசி முடிப்பதற்குள் கோபமான பார்வையை வீசினான். 

“இல்ல.. எனக்குப் புரியல. நான் ஏதோ தினமும் உன்னை ரேப் பண்ண வர மாதிரியே ஏதாவது ஒரு காரணத்தை ரெடி பண்ணி வச்சுக்கிற. உனக்கு இஷ்டம் இல்லனா என்ன……… இதுக்கு ஒத்துக்கிட்டு வந்த. சும்மா இல்ல. கத்தை கத்தையா பணம் செலவு பண்ணியிருக்கேன் தெரியுமா? நான் உன் சூழ்நிலையை பயன்படுத்திக்கல. நீ தான் என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்காம நடந்துக்கிற” அவளுக்கு மட்டுமல்ல, அவனுடைய மனசாட்சிக்கும் நண்பர்களுக்கும் சொல்ல முடியாததையும் சேர்த்து அவளிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவளுக்கு என்ன புரிந்ததோ எழுந்து குளிக்கச் சென்றாள். 

குளித்து முடித்து வந்தவள் உடையை கழற்றும் போதும் தயங்கியவாறே நிற்க, அவன் அனல் வீசும் பார்வைக்கு பயந்து உடைகளைக் களைந்து படுத்தாள். வலி அதிகமாக அதிகமாக பற்களைக் கடித்து வலி பொறுத்தவள், பிடிப்புக்காக அவன் தோளை நெருங்கிய தன்னுடைய கைகளையும் கட்டுப்படுத்தினாள். 

வலி தாளாமல் தலையணைக்குள் புதைந்து கொண்டவளை, மயக்கம் மெல்ல ஆட்கொள்ள ஆரம்பிக்க, மிதுன் ஏதோ அசௌகரியத்தை உணர்ந்து பாதியிலேயே எழுந்து பார்த்தான். “நீ மென்ஸஸ் ஆகியிருக்கியா?” இறுக்கமான குரலில் அவன் கேட்க, “ஹ்ம்ம்..” அரை மயக்கத்தில் முனகினாள். 

அவள் மேலிருந்து எழுந்தவன், குளியலறைக்குள் புகுந்து கொண்டான். வலி தாங்காமல் பெருமூச்சுகளாக விட்டவள் போர்வையை இறுக்கமாகப் போர்த்தி, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்தாள். குளித்து உடைமாற்றி அவளுக்கு அருகில் வந்தவன், “நதியா..” என்றழைக்க, அரை மயக்கத்தில் கண்களைத் திறந்து பார்த்தாள். 

“அப்போ இந்த மாசம் நீ ப்ரெக்னன்ட் ஆகலையா?” கோபமும் வருத்தமும் கலந்த குரலில் அவன் கேட்டிட, “இல்ல..” மெதுவாகத் தான் சொன்னாள். தான் நினைத்தது இன்னும் நிறைவேறவில்லையே என்ற கோப மிகுதியில் அவன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திட, அவளுக்கு ஏற்கனவே இருந்த வலியில் அவன் அறைந்தது பெரிதாகத் தெரியவில்லை.

வீட்டில் இருந்து வெளியே வந்தவன் தன்னுடைய காரில் ஏறியதும், தலையை அழுத்தமாக பற்றிக் கொண்டான். அவன் ஒட்டுமொத்த கோபத்தையும் கார் ஸ்டீயரிங் கில் காட்டி ஓங்கி அதை அடித்துக் கொண்டிருந்தான். 

காரை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டினான். தீராத கோபத்தைக் காரின் வேகத்தில் காட்டினான். அவனுடைய அலுவலகத்திற்குச் சென்றவன், அவனுக்கான ஓய்வறையில் இருந்த மெத்தையில் அமைதியாக படுத்துக் கொண்டான்.

நதியா என்ன ஆனாள்? அவன் வெளியே சென்றதும் நீண்ட நேரத்திற்கு அப்படியே படுத்திருந்தவள், கொஞ்சம் வலி குறைந்ததும் போர்வையோடு எழுந்து குளியலறைக்குள் புகுந்து குளித்தாள். கறையாகியிருந்த பெட்ஷீட், போர்வை, துணிகளை எல்லாம் துவைக்கும் இடத்தில் ஒரு ஓரமாக வைத்து விட்டு மெத்தையில் அங்கிருந்த வேறு விரிப்பை எடுத்து விரித்தபின் படுத்தாள்.

வலி மயக்கமும், தூக்கமும் அவள் கண்களைத் தழுவிட தூங்கிப் போனாள். அதிகாலை அலுவலகத்தில் இருந்து வந்தவன், குளித்துக் கிளம்பி, மெத்தையில் படுத்திருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறு மீண்டும் ஆபீஸுக்குச் சென்றான். 

நதியா அவ்வப்போது எழுந்து உடைகளை மற்றும் மாற்றிக் கொண்டாள். வேலையாட்கள் காலை உணவு கொண்டு வர அதை வாங்கி வைத்தவள், “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல, மதியம் சாப்பிட ஒண்ணும் வேணாம்” என்றுவிட்டு படுத்துக் கொண்டாள். 

“அண்ணி எனக்கு ஒரு அசைன்மெண்ட் எழுதித் தர்றீங்களா?” மதியம்போல் வைஷாலி நதியாவைத் தேடி அவளது அறைக்கு வந்தாள். 

“ஹ்ம்ம்.. வச்சுட்டு போடா.. நான் ஈவ்னிங் எழுதித் தரேன்” அவள் படுத்தவாறே பதில் சொல்லிட, “என்னாச்சு அண்ணி? காய்ச்சலா?” பதட்டமாக அவள் நெற்றி தொட்டுப் பார்த்தாள் வைஷு. 

“இல்லடா.. மென்சஸ் ஆகிட்டேன். வழக்கத்தை விட இந்த டைம் பெயின் கொஞ்சம் அதிகமா இருக்கு” சோர்வாய் அவள் சொல்ல, நான் “டாக்டரை வர சொல்லவா? காலைல கொண்டு வந்த டிபன் அப்படியே இருக்குது. சாப்பிடலையா? முதல்ல எழுந்திருங்க” வைஷு அவளுடைய தோளைக் குலுக்கி எழுப்பினாள். 

“என்னடா வைஷு?” அரை மயக்கத்தில் தான் எழுந்து அமர்ந்தாள். வைஷு இண்டர்காமில் ஜூஸ் கொண்டு வர சொல்ல, ஜூஸ் வந்ததும் அவளை வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்தாள். 

நதியா மெல்ல எழுந்து நிற்க, “எங்க போறீங்க அண்ணி? என்ன வேணும்? சொல்லுங்க நான் எடுத்துத் தரேன்” குழந்தையாய் அவள் கரத்தை பற்றிக் கொண்டாள். 

“வைஷு எனக்கு ஒண்ணும் இல்லடா. நான் போய் நாப்கின் மாத்திட்டு வரேன்” மெல்லிய புன்னகையொன்றை உதிர்த்தவள், பாத்ரூமை நோக்கி சில அடிகள் நடந்திருக்க, அப்படியே மயங்கி தரையில் விழுந்தாள்.

“அய்யோ அண்ணி என்னாச்சு? என்னைப் பாருங்க? வைஷு அவள் கன்னத்தில் தட்டியெழுப்பிட, அசைவின்றிக் கிடந்தாள். பதறிப் போன வைஷு இண்டர்காமில் வீட்டிலிருந்த பாட்டி, அம்மா, ரூபிக்கு அழைத்தாள். வந்தது என்னவோ பாட்டி மட்டும் தான். வேலையாட்களின் உதவியோடு அவளை மெத்தையில் படுக்க வைத்தனர்.

வைஷு வேகமாக அவளுடைய போனை எடுத்து மிதுனுக்குப் போன் செய்தாள். அவனோ போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு மீட்டிங்கில் இருந்தான். அதனால் வைஷாலியே அவர்களுடைய ஃபேமிலி டாக்டருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி அவரை வீட்டிற்கு அழைத்தாள்.

அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பிய டாக்டர் நதியாவைப் பரிசோதித்து விட்டு, உடனே மருந்துகளை வரவழைத்து அவள் கையில் ஐவி லைனை மாட்டி, வலிக்கு ஊசியும், தெம்பிற்காக குளுக்கோஸும் போட்டார். 

டாக்டர் ருக்மணி பாட்டியிடம், “மிதுனுக்கு ரீசன்டா தான் மேரேஜ் ஆகியிருக்குதா? எங்களுக்கு லாம் சொல்லவே இல்ல. அவங்க மென்சஸ் ஆகியிருக்காங்க. அதோட ஒண்ணா இருந்திருக்காங்க. இந்தமாதிரி டைம்ல அவங்களோட ஹெல்த்தை யோசிச்சு உங்க பேரனை கொஞ்சம் தள்ளியே இருக்க சொல்லுங்க. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்க. ஹெல்த்தி ஃபுட்ஸ் குடுங்க. ட்ரிப்ஸ் மெதுவா தான் இறங்குது. ஈவ்னிங் நர்ஸ் வந்து செக் பண்ணிட்டு ரிமூவ் பண்ணிடுவாங்க” என்று சொல்லியபின் அவர் கிளம்பினார்.

தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கை அனுபவத்தில் இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பதுபோல் கடந்துவிட்டார் அந்தப் பாட்டி. வைஷாலிக்கு தான் டாக்டர் சொன்னது அவ்வளவு வலித்தது. மிதுன் மீது கொண்ட அளவில்லாத அன்பால் தான் அவன் மனைவியாக நதியாவின் மீதும் அவளுக்கு அன்பு இருந்தது.

நமக்கு சிலசமயம் நம் வாழ்க்கையில் சிலபேரைக் காரணமில்லாமல் பிடித்திடும். நதியாவின் அன்பும், சிரிப்பும், குறும்புகளும் வைஷாலியை வெகுவாக ஈர்த்திட, மிதுனைத் தாண்டி அவளை ஒரு தோழியாக நேசிக்க ஆரம்பித்துவிட்டாள். 

அன்னையின் அருகே அமர்ந்து அழும் சின்னக் குழந்தை போல் நதியாவின் அருகே அமர்ந்து அழுது கொண்டேயிருந்தாள் வைஷாலி. மாலை நர்ஸ் வந்து அவளுடைய கன்னத்தில் தட்டி எழுப்ப, அரை மயக்கத்தில் தான் கண் விழித்தாள். 

அவர் வைஷாலியை வெளியே அனுப்பி விட்டு, மீண்டும் அவளை பரிசோதித்திட நதியா மிகவும் சோர்வாகிப் போனாள். சில சமயம் நோயை விட அதற்கான பரிசோதனைகளும், சிகிச்சையும் கொஞ்சம் அதிகமாகத் தான் வலித்திடும். 

“உங்க ஹஸ்பன்ட் தான் கேட்கிறார்னா நீங்க அவர் கிட்ட முடியாதுனு சொல்ல மாட்டீங்களா?” நர்ஸ் கையில் இருந்த கிளவுஸை கழற்றிக் கொண்டே கேட்க, அவள் பதிலேதும் பேசாமல் இருந்தாள். 

அவள் கையில் இருந்த ஐவி கனெக்டரை எடுத்தவர், “பெயின் குறையலைன்னா நாளைக்கு கால் பண்ணுங்க. வந்து இன்ஜெக்ஷன் போடுறேன்” எனச் சொல்லியபின் சென்றிட, வைஷு அவளுக்கருகில் வந்து அமர்ந்தாள்.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page