அத்தியாயம் 11

என் எஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய திருமண மண்டபத்தில் வைத்து தான் அபிராமி மற்றும் அஸ்வந்த்தின் திருமணம் நடைபெற உள்ளது. 

மண்டபத்தின் வாயிலில் வாழை மரங்கள் கட்டி இருக்க, அதன் அருகில்  ஒலிபெருக்கியில் சுவாமி பாடல் ஒலித்து கொண்டிருக்க, சொந்த பந்தங்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் யாவரும் வாசலில் தாங்கள் கண்ட காட்சியில் வாய் பிளந்து நின்றனர். 

அப்படி எதை பார்த்து வியப்பாய் நிற்கின்றனர். 

இதோ மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த ” திருமண வரவேற்பு பலகை ” இதை பார்த்து தான் அசந்து நிற்கின்றனர்.  அபிராமியின் ஊர் மக்கள். 

 

இருவரின் ஜோடி பொருத்தமும் அமோகமாக இருந்தது. 

இவர்கள் இருவரும் சேர்ந்து தான் ஒரு புகைப்படமும் எடுக்கவில்லையே அப்பறம் எப்படி என்று யோசித்தால் அது தவறு. 

 

இந்த ஏ ஐ உலகத்தில் இது எல்லாம் சாதாரணம். இருவரின் தனி தனி புகைப் படத்தையும்  ஒன்றாக சேர்த்து ஜோடியாக ஒட்டி வைத்த புகைப் படம் தான் இப்பொழுது அவர்கள் பார்த்து கொண்டிருந்த வரவேற்பு பலகையில் இருக்கிறது. 

 

அதுவும் எப்படி இருக்கிறது? 

நம் அஸ்வந்த் அபிராமியின் தோள்களில் கை போட்ட வண்ணம் அல்லவா இருக்கிறது. பின் இதை பார்த்தால் காண்டாக மாட்டார்களா இவர்கள். 

 

ஐயோ விமலா என்ன டி இது?  இவளோ அழகா இருக்குறாங்க ரெண்டு பேரும் என்றாள் ஒருத்தி. அந்த மூவர் நிறைந்த குழு தான் இப்பொழுது ஆச்சரியத்தில் பார்த்து கொண்டிருக்கிறது. 

என்ன டி நாம கல்யாணத்தை நிறுத்திரலாம்னு நினைச்சோம். ஆனால் அது நடக்காது போல என்றார் மற்றொரு பெண்மணி. 

 

இங்க எப்படி இருந்தா நமக்கு என்னக்கா? மண்டபத்துக்குள்ள போவோம். அபிராமியோட வருங்கால மாமியார் யாருனு பார்க்குறோம். அவங்ககிட்டே சொல்லி கல்யாணத்தை நிறுத்துறோம் என்றாள் விமலா. 

 

அப்படி என்ன வன்மமோ இவளுக்கு தெரியவில்லை. 

 

தன்னுடைய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நன்றாக இருக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள் இவள். 

 

மூவரும் அவர்களது இடது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றனர். 

 

மண்டபத்தின் மணமகள் அறைக்குள் இளஞ்சிவப்பு நிற புடவையில் பேரழகாக இருந்தாள் அபிராமி. 

 

பியூட்டிசியன்ஸ் இருவர் அவளை அலங்கரித்து கொண்டிருந்தனர். இந்த செலவும் மாப்பிள்ளை வீட்டில் தான் ஏற்று கொண்டனர். 

 

இந்த திருமணத்தில் சிறு செலவு கூட கல்யாண் செய்யவில்லை. சங்கர் தான் அனைத்து செலவுகளையும் பார்த்து கொண்டார். 

 

மணப்பெண்ணுக்கு சமமாக தானும் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக இள நீல நிற புடிவை அணிந்திருந்தாள் அகிலா. 

 

அக்கா இங்க வாங்க என்று மேக்கப் போடும் பெண்களில் ஒரு பெண்ணை அழைத்தாள் அகிலா. 

 

அபிராமி புருவம் தூக்கி தங்கையை பார்த்தாள். 

 

எனக்கும் மேக்கப் போட்டு விடுங்க என்றாள் அகிலா. 

மேக்கப் போடும் பெண் விழித்து பார்த்தாள். 

 

என்ன பார்க்குறீங்க? இதுக்கும் எங்க மாமா சார்ஜ் பண்ணிருவாங்க. நீங்க போட்டு விடுங்க என்றாள். 

 

ஒரு பெண் அபிராமியையும் மற்றொறு பெண் அகிலாவையும் அலங்காரித்தனர். 

 

இந்த அலங்காரத்தில் தேவதையை விடவும் பேரழகாக இருந்தாள் அபிராமி. 

 

அக்கா இது வேணாம். இந்த ஹேர் ஸ்டைல் பண்ணுங்க. ம்ம் இது நல்லா இருக்கு என்று ஒவ்வொன்றாக மாற்ற, அகி என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி அவங்கள டிஸ்டர்ப் பண்ற. நீ பண்றது எல்லாம் புதுசா இருக்கு  என்றாள் அபிராமி. 

அக்கா!  எல்லாம் அஸ்வந்த் மாமா பார்த்துப்பாங்க என்று ஒற்றை கண்ணை அடித்தாள் அகிலா. 

 

மாமாவா என்ற அபிராமி தங்கையின் வார்த்தைகளில் திகைத்து பார்த்தாள். 

 

இரு பெண்களும் இருவருக்கும் மேக்கப் போட்டு முடிக்கும் நேரம், பாரிஜாதம் சரோஜாவோடு மணமகள் அறைக்குள் வந்தார். 

 

சரோஜாவின் கைகளில் அஸ்வந்த்தின் மகன் இருந்தான். 

அடடே என்னோட மருமகளுங்க ரெண்டு பேரும் அம்சமா இருக்காங்களே என்றார். 

 

அவரின் கண்மையை எடுத்து அபிராமியின் காதுக்கு பின் வைத்து விட்டார். 

 

அப்போ எனக்கு என்றாள் அகிலா. 

உனக்கும் வச்சி விடுறேன் என்றவர் அகிலாவுக்கும் தன் கண் மையை எடுத்து அவளின் காதுக்கு பின்னும் வைத்து விட்டார். 

 

சங்கரும் அன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்றதும் பாரிஜாதத்திடம் அபிராமியின் தங்கை அகிலா நம்முடைய அலுவலகத்தில் தான் பணி புரிகிறாள் என்று கூறியதும் பாரிஜாதம் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தது உண்மையே. 

 

இப்பொழுது நேரில் அவளை பார்த்ததும் அவளின் குணத்தையும் புரிந்து கொண்டார். 

 

சரோஜாவின் கைகளில் இருந்த சிறு பாலகனை வாங்கி கொண்டாள் அகிலா. 

 

அவனின் மெல்லிய கன்னங்களில் குட்டி குட்டி முத்தம் வைத்தாள். நான் தான் உன் சித்தி என்றவள், அவனின் முகத்தில் சுகன்யாவை கண்டாள். 

 

இவனை இன்னைக்கு முழுதும் நானே வச்சிக்கிறேன் என்றவள், பாரிஜாதம் அனுமதி தருவதற்கு முன் அவனை தூக்கி கொண்டு சென்றாள். 

 

அவளுக்கு குழந்தைங்கனா ரொம்ப புடிக்கும் அத்தை என்றாள் அபிராமி. 

 

அபிராமியின் அத்தை என்ற வார்த்தையில் பாரிஜாதம் கண் கலங்கினார். சுகன்யாவின்  நினைவு வந்து விட்டது போல. 

 

என்னையா அத்தைனு கூப்பிட்ட? 

 

அபிராமியும் இப்பொழுது தான் அந்த வார்த்தையை உணர்ந்தாள். அவரை அத்தை என்று எப்படி அழைத்தோம். இதற்கு முன் இப்படி எவரையும் அழைத்ததில்லை என்று யோசித்தாள் அபிராமி. 

 

 அபிராமியின் கன்னங்களை வருடியவர், பார்க்க மஹாலக்ஷ்மி மாதிரி இருக்குற மா என்றார். 

 

அபிராமி மெல்லிய சிரிப்பை உதிர்தத்தாள். 

பாரிஜாதத்தின் சொந்தத்தில் ஒரு பெண்மணி வேகமாக மணமகள் அறைக்கு வந்தார். 

 

பாரிஜாதத்தை பார்த்து அண்ணி பொண்ணை அழைச்சிட்டு வர சொல்லுறாங்க என்றார். 

 

பாரிஜாதமும் அந்த பெண்மணியும் அபிராமியின் ஆளுக்கொரு கையை பிடித்து அழைத்து சென்றனர். 

 

மூவரும் நின்ற குழு அபிராமியின் அழகை பார்த்து பிரமித்து நின்றது. 

 

என்னக்கா இதுக்கு முன்னாடி நின்று போன கல்யாணத்துல கூட இவள் இப்படி அழகா இல்லையே? இப்போ… என்று விமலாவின் கண்கள் சிவந்தது. அவளின் முகத்தில் பொறாமை அப்பட்டமாக தெரிந்தது. 

 

ஹேய் விமலா அங்க பாரு டி. அவளுக்கு வலது பக்கம் இருக்காங்கள அவங்க தான் அவளோட வருங்கால மாமியார் என்றார் மற்றொரு பெண்மணி. 

 

எப்படியும் அவங்க கீழே வருவாங்க. அப்போ புடிச்சிருவோம் என்றாள் விமலா.  

 

அஸ்வந்த் மணவறையில் அமர்ந்திருக்க, அவனின் அருகில் அபிராமியை அமர வைத்தனர். 

 

“அச்சோ எவளோ அழகு” என்று பாரிஜாதம் இருவரையும் பார்த்து கூற, அஸ்வந்த் தாயை மொறைத்தான். 

 

அஸ்வந்த்தை பார்த்து முகத்தை சுழித்தார் பாரிஜாதம். 

 

அஸ்வந்த்  தன் மகனை எங்கே என்று தேட, அகிலா வைத்திருந்தாள். 

 

அகிலாவை பார்த்ததும் நெற்றி சுருக்கினான் அஸ்வந்த். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

 

எதாவது தாயிடமும் தந்தையிடமும் அபிராமியை பற்றியும் அவளின் குடும்பத்தை பற்றியும் பேசிருந்தால் அனைத்தும் விளங்கிருக்கும். ஆனால் அவன் தான் தங்களுக்காக தான் இந்த திருமணம் என்று கூறிவிட்டானே! 

 

இதோ அஸ்வந்த்தின் அலுவலகத்திலிருந்து அவனின் திருமணத்தில் கலந்து கொள்ள ஒவ்வொருவரும் வந்து கொண்டிருந்தனர். 

 

ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகை வீசினாள் அகிலா. அவள் யாருக்கும் திருமண அழைப்பிதழ் வைத்து யாரையுமே அழைக்கவில்லை. 

 

சங்கர் தந்த அழைப்பிதழை பார்த்ததும் அவரே அனைவருக்கும் வைத்து விட்டதும் இவள் யாரிடமும் தன் மூச்சு காற்றை கூட விடவில்லை. 

சில பேர் அழைப்பிதழை  பார்த்து தெரிந்து கொண்டனர். பல பேருக்கு எதுவும் தெரியாது. இப்பொழுது அந்த பல பேரும் ஆச்சர்யப்பட்டார்கள். 

 

ஹேய் அகிலா நீ ஒரு வார்த்தை சொல்லலையே பா என்று கேட்டதற்கு அதான் எங்க மாமா தந்துட்டாருல என்றதோடு முடிந்து விட்டாள் அகிலா. 

 

இன்னும் அந்த அலுவலத்தில் யாருடனும் சரியான ஒட்டுதலோடு பழகவில்லை அகிலா.

 

அவள் இந்த அலுவலகத்திற்கு வேலைக்கு வந்தே முழுதாக ஐந்து மாதங்கள் தான் ஆகின்றது. 

 

சரி வாருங்கள் திருமணம் நடக்கிறதா?  என்று பார்ப்போம். 

 

பாரிஜாதம் மாங்கல்யம் வைத்து பூஜை செய்த தாம்பாலத்தை வாங்கி கொண்டு வந்திருந்த பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க மணவறையை விட்டு கீழே இறங்க, 

 

அந்த மூவர் கொண்ட குழு உஷாராக எழுந்து நின்றது. 

பாரிஜாதம் ஒவ்வொருவரிடமும் செல்ல, அவர்கள் மனதார மணமக்களை ஆசீர்வதித்து அர்ச்சதை எடுத்தனர். 

 

இவர்கள் மூவரிடமும் கடைசியாக தான் சென்றார் பாரிஜாதம். 

 

மாங்கல்யத்தை தொட்டு வணங்குவது போல் வணங்கி, அர்ச்சதையை கையில் எடுத்து விட்டு “அக்கா நீங்க தான் பையனோட அம்மாவா?” என்று கேட்டாள் விமலா. 

 

ஆமா மா என்று புன்னகை முகமாக கூறினார் பாரிஜாதம். 

 

அச்சோ இப்படி வந்து இந்த குடும்பத்துக்குள்ள வந்து மாட்டிகிட்டிங்களே  என்றாள் விமலா. 

 

பாரிஜாதம் புருவம் உயர்த்தினார்.

உங்க குடும்பத்துக்கு இவளால வாரிசை பெத்துக் கொடுக்க முடியாது என்றாள் ஒருத்தி. 

 

பாரிஜாதத்தின் முகம் கொடூரமாக மாறியது. 

அந்த கொடூர முகத்தை நிமிடத்தில் மறைத்தார் பாரிஜாதம்.

 இப்பொழுது நடக்க போகிறது தன் மகனின் திருமணம் அவனை அரும்பாடு பட்டு இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார். இப்பொழுது எந்த ஒரு வார்த்தையும் அவரின் வாயில் இருந்து வெளி வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பாரிஜாதம். 

 

அந்த பொண்ணு ராசி இல்லாதவள் என்றாள் இன்னொருத்தி. 

 

மூவரையும் மொறைத்து பார்த்த பாரிஜாதம், அவள் என் வீட்டு மருமகள் என்றார். 

 

மூவரும் ஒரே போல் வாயை மூடி விட்டனர். 

 

சாப்பிட்டு போங்க மா என்று கனிவாக கூறிவிட்டு கண்களில் நெருப்பை கக்கி சென்றார் பாரிஜாதம். 

 

மூவரின் முகமும் அஷ்ட கோணலாக மாறியது. 

 

பாரிஜாதம் மாங்கல்யத்தோடு மணவறை ஏறினார். 

 

கல்யாண்,  கௌரி மற்றும் அகிலா மூவரும் பட படவென்று அடித்த இதயத்தோடு மாங்கல்யத்தையும் அஸ்வந்த்தையும் மாறி மாறி பார்த்தனர். 

 

அஸ்வந்த் மாங்கல்யத்தை கையில் எடுத்தான். 

 

அபிராமியின் இதயம் திக் திக் என்று அடித்தது. 

 

பாரிஜாதம் மகனின்  அருகில் குனிந்து, ஏதோ சொல்வதற்காக அவனின் காது அருகில் செல்ல, 

 

அபிராமி, அகிலா, கல்யாண் மற்றும் கௌரி நால்வரும் திகைப்போடும் பயத்தோடும் பாரிஜாதத்தை பார்த்தனர். 

கெட்டி  மேளம் கெட்டி மேளம் என்றார் ஐயர். 

 

கனத்த இதயத்தோடு அபிராமியின் பவள கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் அஸ்வந்த். 

 

அபிராமியின் கண்களில் இருந்து விலை மதிப்பில்லாத பொக்கிஷம் கொட்டியது. 

 

முதல் வரிசையில் அமர்ந்திருந்த சின்னஞ்சிறு மழலைகள் கையில் உள்ள அர்ச்சதையை தூவி ஆசீர்வதித்தனர் தங்களது வகுப்பு ஆசிரியை அபிராமியை. 

 

இரு குடும்பங்களும் ஆனந்தத்தில் மிதந்தனர். 

 

சங்கரின் கை விரல்களை இருக்க பற்றினார் பாரிஜாதம். 

 

கல்யாண் கௌரியை தன் தோளோடு அணைத்தார். 

 

அவர்களின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. 

 

தொடரும்.

கதை பிடிச்சிருந்தா விமர்சனம் பண்ணுங்க நண்பர்களே. 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
880 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page