அத்தியாயம் 11

 

 

இவனைப் பார்த்ததும் வர்ஷினியின் முகம் மாறியது. இவனுக்கு எப்படி என் முகவரி தெரிந்தது என்று யோசிக்கையில் மித்ராவின் ஞாபகம் வந்தது. இவனை மித்ரா வேலை செய்யும் இடத்தில் தானே பாத்தோம்.அப்போ அவள் தான் கொடுத்திருப்பா. ஆனால் மித்ரா என்னிடம் எதுவுமே கூறவில்லையே, இருக்கட்டும், அவகிட்ட அப்புறமா பேசிக்கிறேன் என்று எண்ணியவாறு கௌரியை பார்க்காதது போல் கடந்து செல்ல , கரணோ, வர்ஷினி நீ என்னம்மா தம்பி வந்தது கூட பார்க்காம உள்ளே போறே? வீட்டுக்கு வந்தவனை வாங்க கூட  கூப்பிடாம போறே! அவன் உன் நண்பன் தானே உக்காந்து நாலு வார்த்தை பேசுமா என்று கூற, இந்த அப்பாவிற்கு வேறு வேலையே இல்லை நானே அவனை எப்படி தவிர்க்கலாம்னு நினைச்சா இவரோ பக்கத்திலே உக்காந்து பேச சொல்றாரு .என்று நினைத்தவாறே கௌரியை பாத்து போலியாக சிரித்து வா , சங்கர், எப்படி இருக்கே? என்று கேட்க, என்னமா நடிக்கறா! பழைய நடிகை பேர் மறந்து போச்சே!  ஆ.. சாவித்ரி பாட்டி, அவங்களே தோத்துடுவாங்க, நீ என்னை தெரியாதுன்னு சொன்ன நான் உன்னை விட்டுடுவேனா, தேடி வந்துட்டேன்லே என்று நினைத்தவாறே நல்லாயிருக்கேன் வர்ஷினி என்று பதிலுரைத்தான். கரண், போய் தம்பிக்கு குடிக்க காபி கொண்டு வாம்மா என்று அனுப்ப, வர்ஷினியும் நல்ல பிள்ளையாய் சமயலறைக்குள் நுழைந்தாள். டேய்! கருவாயா! உன்னை தெரியலைனு சொன்னா கூட நீ வீட்டுக்கே வருவாயா? உனக்கு காபியா வேணும்! இரு தரேன். காபி இல்லே கார்பி, அதாங்க காரம்+காபியத்தான் நம்ம வர்ஷினி அப்படி சொல்றா. பாலை அடுப்பில் வைத்து காய்ச்சியதும் ஒரு கப்பில் இரண்டு கரண்டி மிளகாய்த்தூள் போட்டு பாலை ஊற்றி ஒரு காபியும் மற்றோரு கப்பில் காபி பொடி போட்டு ஒரு காபியும் தயாரித்து இரண்டையும் தட்டில் வைத்துக் கொண்டு வந்து நீட்ட முதலில் கரண் காரப்பொடி கலந்த காபியை எடுக்க போக, அந்த காபி உங்களுக்கு இல்லப்பா, அது சங்கருக்காக ஸ்பெஷலா பண்ணது என்று சாதாரண காபியை தந்தையிடமும் காரா காபியை கௌரியிடமும் நீட்டினாள். கௌரி அந்த காபியை வாங்கி கொண்டதும் என்ன காபி இவ்வளவு சிகப்பு கலரா இருக்கே ! சிவப்பு கலர் இவளுக்கு பிடிக்கும்னு காபியை கூட சிவப்பு கலர்ல தான் போடுவாளோ? என அது மிளகாய்த்தூள் போட்ட காபி என்று கூட தெரியாமல் பாவம் அந்த புள்ள அப்பாவியாய் யோசிக்க, பின் ஒரு மடக்கு குடித்ததும் பொறக்கை ஏறி கண்களிலும் மூக்கிலும் தண்ணீர் வந்தது. நாக்கு வேறு எரிந்தது. அவன் இருமிக்கொண்டே தண்ணீர் கேட்க கரண் ஓடிப்போய் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். 

 

என்னப்பா ஆச்சு? உனக்கு பிடிச்சவங்க யாராவது உன்னை நினைக்கிறாங்க போலிருக்கு என்று கூற, அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, உடனே வர்ஷினி ஆமாம்பா. அவங்க வீட்டிலே அவங்க மனைவி நினைச்சிருப்பாங்க. போய் இவ்வளவு நேரம் ஆகிடுச்சே இன்னும் வரலையே அப்படித்தானே சங்கர் என்று முறுவலித்துக் கொண்டே கேட்க, அவனால் பதில் கூட கூற முடியவில்லை. வாய் எரிந்துக் கொண்டே இருந்தது  மேலும்  மேலும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். அடிப்பாவி! உன்னை பக்கா வந்தது ஒரு குத்தமா? அதற்கு இப்படியா பண்னுவே! என்று மனதில் நினைத்துக்கொண்டே எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே அங்கிள் என்று திக்கு திணறி கூறி முடித்தான். அதை கேட்ட கரண்,  நல்லா சம்பாதிக்கிறே, பார்க்கவும் நல்லாவும்  இருக்கே, இன்னும் ஏம்பா கல்யாணம் பண்ணிக்கல? கௌரி, எனக்கு பிடிச்ச மாதிரி இன்னும் பொண்ணு கிடைக்கலை அங்கிள் என்று  அவளை பார்த்து கொண்டே கூறினான். அந்த பதிலை கேட்ட வர்ஷினி உன் திமிர் இன்னும் அடங்கல, என்று நினைத்துக் கொண்டு சங்கர் அரைமணி நேரம் பொறுத்துக்கோ, டிபன் செஞ்சுறேன், சாப்பிட்டு போ என்றதும் கௌரி அய்யய்யோ! காபியிலேயே காரம் கலந்து கொடுக்கறா, இன்னும் டிபின்லே பூச்சி மருந்து கலந்து கொடுத்தாலும் கொடுப்பா! உயிர் முக்கியம்டா கௌரி என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, அதெல்லாம் ஒன்னும் வேணாம் வர்ஷினி, நான் வரும்போது சாப்பிட்டு தான் வந்தேன் என்று எழுந்துக்கொள்ள வர்ஷினி அவனை பார்த்து நக்கலாக முறுவலித்தாள். 

 

 பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய கௌரி நேராக கடைக்கு சென்று சாக்லேட் வாங்கி சாப்பிட பின்புதான் அவன் வாய் எரிவது நின்றது. என்னது இவ்வளவு டெரரா இருக்காளே, இவளை எப்படி வழிக்கு கொண்டு வறுவதுனே தெரியலயே! என்று புலம்பிக் கொண்டே தன் வீட்டை நோக்கி சென்றான்.

 

மறுநாள் வர்ஷினி மித்ராவை சந்தித்தாள். ஏன் மித்ரா சங்கரிடம் நான் இருக்கிற இடத்தை சொன்னே?அவன் நேரா என் வீட்டுக்கே வந்துட்டான்டி என்று கோபமாக வினவ, இவ்வளவு நாள் கழித்தா உன்னை பாக்க  வந்தான், நான் போன மாசமே உன் முகவரியை கொடுத்தேனே என அவள் அலட்டிக் கொள்ளாமல் பதில் உரைத்தாள். உன்னை  உதைப்பேன்டி, ஏன் என் முகவரியை கொடுத்தேன்னு கேட்டா போன மாசமே கொடுத்தேன் ஏன் லேட்டா வந்தான்னு சொல்லற என்று சீற, பின்னே என்னடி, அவன் பாக்க கருப்பு அரவிந்தசாமி மாதிரி இருக்கான். என்ன ஸ்மார்ட், என்ன ஹைட்டு, சின்ன வயசில் இருந்தே உன்னை உருகி உருகி காதலிக்கிறான், உன்னை தவிர யாரையும் நினைக்க மாட்டேன்னு சொல்றான்.இப்படி ஒருவன் இந்த காலத்தில் கிடைக்கிறது  ரொம்ப கஷ்டம்டி.  அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா லைப் என்ஜாய் பண்றதை விட்டு என்னை கேள்வி கேட்டு என் கிட்ட சண்டை போட்டுண்டு இருக்கே. ஏன், அவன் கருப்பா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லடி. எனக்கு இன்னொரு கல்யாணத்தில்  சுத்தமா விருப்பமே இல்லை.  முதல் கல்யாணத்திலேயே நான் பட்ட துன்பங்கள் இன்னும் என் மனசில நீங்காத  வடுவா இருக்கு. அதிலிருந்தே இன்னும் நான் வெளியில் வரலே. அது இல்லாம இப்போதுதான் நான் விட்ட  படிப்பை படித்துக் கொண்டிருக்கேன். நான் என் படிப்பை முடிக்கணும். பின் நல்ல வேலைக்கு போகணும். என் அம்மாவை தான் என்னாலே காப்பாத்த முடியலே என் அப்பாவை நான் மகிழ்ச்சியாய் வச்சுக்கணும். கடைசி வரைக்கும் அவரு கூடவே இருந்து அவரை நல்லா பாத்துக்கணும். இப்போதைக்கு இதுதான் என் ஆசை. இதுதவிர எனக்கு வேற எந்த ஆசையும் இல்லை. அதுவும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. முதல் கல்யாணம் பண்ணி நான் பட்ட கஷ்டமே இந்த ஒரு ஜென்மத்திற்கு போதும். இன்னொரு கல்யாணம் நினைச்சாலே எனக்கு பயமாய் இருக்கு மித்ரா என்று கண்கலங்கி கூறினாள். தோழியின் அழுகையை  பார்த்த மித்ரா, நான் இப்படி சொல்றேன்னு என்னை தப்பா நினைச்சிக்காத, உங்கப்பா உன் கூட கடைசிவரைக்கும் வர முடியாதுடி . யதார்த்தத்தை புரிஞ்சிக்கோ. உன் மனச வேதனைபடுத்தணும்னு நான்  இதை சொல்லல. உன் தோழியாய்  உனக்கு நல்லது கெட்டது சொல்றது என் கடமை. நீ கல்யாணம் பண்ணா உன் அப்பா கண்டிப்பாக சந்தோஷம் தான் படுவர். உன் அப்பா உன்னை நினைத்து மனசில வருத்தப்பட்டுட்டு இருக்கிறது உனக்கு தெரியல ! அவர் மனச விட்டு எதுவும் சொல்லாவிட்டாலும் உன்னை பத்தின கவலை அவருக்கு இருக்குனு அவர் அப்பஅப்பா உன்னை பார்க்கிற பார்வையிலே தெரியுது என்று கூற, எனக்கு பெரிய குறை இருக்கு மித்ரா அதை உங்கிட்ட கூட என்னாலே சொல்ல முடியலே என்று ,மனதில் நினைத்துக் கொண்டு, நீ என்ன சொன்னாலும் என்னாலே இன்னொரு கல்யாணத்தை நினைச்சிகே கூட பார்க்க முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி முடித்தாள். பிறகு சற்று நேரம் அமைதிக்கு பின் என் முடிவை நீயே சங்கர்க்கிட்ட சொல்லிடு. அவனை நான் மறுபடியும் பார்க்கக்கூடாது. பார்த்த உனக்கும் சேர்த்து திட்டு விழும். எது என்னடா  வம்பா இருக்கு ! உங்க இரண்டு பேரு சண்டையில என்னை இழுக்காதிங்கப்பா! நீ ஆச்சு உன் கறுப்பழகன் ஆச்சு ! என்னை ஆள விடுங்கப்பா! என்று அவள் அங்கிருந்து ஓட, செய்யறதெல்லாம் செஞ்சுட்டு இப்ப கழுவற மீன்ல நழுவற மீன் போல நழுவறியா என்று அவளை விரட்டிக் கொண்டு பின்னாடியே சென்றாள். 

                                                                                                                                                                                                                                                                    

 

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாக விரைந்து சென்றுக்கொண்டிருந்தன. இன்றோடு விக்னேஷ் வேலையில் இருந்து விலகி மூன்று மாதம் ஆகிவிட்டது. வக்கீல் பத்மநாபன் இவன் வீட்டுக்கே வந்து மன்னிப்பு கேட்டு வேலைக்கு வா என்று கூப்பிட்டும் கூட விக்னேஷ் அங்கு செல்லவில்லை. அன்று மதுமதி அவனிடம் அவன் தன் வேலையே பற்றி என்ன முடிவில் இருக்கிறான் என்று பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள். அவன் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவனிடத்தில் என்ன பேசுவது? எப்படி பேசுவது  என்று தெரியாமல் மதுமதி அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். சற்று நேரத்தில் விக்னேஷ் அவளை பார்த்து என்ன மதி? ஏதாவது என்கிட்ட பேசணுமா ?என்று கேட்க, அவளும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு, இப்படியே எவ்வளவு நாள் இருக்க போறீங்க? அந்த எம்.எல்.ஏ. பார்த்து பயமா?என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க அவன் மெலிதாக சிரித்தான். நான் பயந்தவனா இருந்தா வக்கீல் தொழிலுக்கே வந்திருக்கமாட்டேன் மதி. இந்த தொழிலில் இது வெல்லாம் நடக்கும் என்று தெரிஞ்சு தான் நான் வக்கீலுக்கே படிச்சேன். அதனாலே எனக்கு அவனை பார்த்தெல்லாம் பயம் இல்லை. எனக்கு மனிதர்கள் மேலே இருக்கிற நம்பிக்கையே போயிடிச்சு மதி.நான் கடவுளா நினச்சு அவர் சொல்லறதே வேதம்னு நம்பி என் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் கொடுத்து வேலை செய்தும் நம்பள நம்பாம பழி சுமத்தறப்போ மனசில ஏற்படுகிற வலி இருக்கிறதே அதை என்னாலே சொல்லி விளக்க முடியாது. என் நிலையில் இருந்து உணர்ந்தா தான் தெரியும். அதனால் தான் நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்.இன்னும் அப்பா அம்மா கிட்ட கூட சொல்லல. உன்கிட்டேதான் முதலில் சொல்றேன். எங்க அப்பாவோட தூரத்து சொந்தம் ஒருத்தர் நான்கு ஏக்கர் நிலம் வச்சி இருக்கார். அவராலே அதை முழுவதுமாக பராமரிக்க முடியல. எங்க அப்பாவை பாதி நிலம் வாங்கிக்க என்று ரொம்ப நாளாகவே சொல்லிக் கொண்டிருந்தார். நான் இவ்வளவு நாள் வேலை செஞ்சதல கொஞ்சம் பணம் சேர்த்து வச்சி இருக்கேன். அப்பாகிட்டயும் கொஞ்ச பணம் கடனா வாங்கி அந்த நிலத்தை வாங்கி விவசாயம் செய்யலாம்னு யோசிச்சு வச்சியிருக்கேன். அதனாலே வீட்டில் இருந்த இந்த கொஞ்ச நாலா விவசாயம் பத்தின புத்தகங்களை வாங்கி படித்துக் கொண்டிருக்கேன். ஆனால் எனக்கு நடைமுறை அனுபவம் இல்லாததால அவர்கிட்டயே கொஞ்ச நாள் விவசாயத்தை பத்தி நடைமுறை பயிற்சியை கத்துக்கிட்டு பிறகு இயற்க்கை முறையில் விவசாயம் பண்ணலாம்னு  நினைக்கிறேன், நீ என்ன சொல்ற மதி? நான் எடுத்த முடிவு சரியா தவறா? என்று கேட்க உடனே மதி மகிழ்ச்சியுடன் என்னை பொறுத்த வரைக்கும் இது நல்ல முடிவு தாங்க. தாராளமாய் செய்யலாம். உங்கள மாதிரி படிச்சவங்க விவசாயம் செய்யறதால புது புது உத்திகளை நீங்க பயன்படுத்தலாம். எல்லோருக்கும் நீங்க ஒரு முன்மாதிரியாக இருப்பீங்க.  என்னுடைய முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு என்று கூற விக்னேஷின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ரொம்ப தேங்க்ஸ் மதி. இயற்க்கை முறையில் விவசாயம் செய்யறதால ரசாயனம் கலக்காத நல்ல சத்துள்ள தானியங்களை காய்கறிகளை, பழங்களை மக்களுக்கு கொடுக்க முடியும். இன்னைக்கு விவசாயம் அழிவை நோக்கி போய்ட்டிருக்கு. என்னை மாதிரி நிறைய படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய வந்தா இந்த தொழிலுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். அதோட இப்போ மக்களுக்கும் நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு  வந்திருக்கு. இதனாலே இயற்க்கை முறையில் விளைவிக்கும் பொருட்களுக்கும் நல்ல டிமாண்ட்  இருக்கு. பணமும் சம்பாதிக்கலாம், மக்களுக்கும் நல்ல சத்தான உணவு பொருட்களை விளைவித்துக் கொடுக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியும் பெறலாம்.  

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
796 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page