அத்தியாயம் 12

அத்தியாயம் 12

தீரன் அவ்வாறு பேசி விடவும் அதன் பிறகு அதை நினைத்து அழுது அழுது மாய்ந்து போனாள் மித்ரா.

அவன் பேசிய வார்த்தைகள் காதில் ரீங்காரம் போல் ஒலித்துக் கொண்டே இருந்தது..

என்ன செய்தும் அதை மறக்க முடியவில்லை அவளால்..

பின்பக்கத் தோட்டத்தில் அமர்ந்து வெகு நேரம் அழுது கொண்டிருந்தவள் பிறகு ஹாலுக்கு வந்தாள்..

சுவர் கடிகாரத்தை பார்க்க.. அது இரவு 10 மணி என்று காட்டியது..!!

நேரம் போவது தெரியாமல் அழுது கொண்டே இருந்தவளுக்கு இரவு பத்து மணி ஆகிவிட்டது  என்பதை உணர்ந்ததும் அவளுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது..

இவ்வளவு நேரமா பின்பக்கத் தோட்டத்திலிருந்தோம் நேரம் போவது தெரியாமல்.. இப்ப என்ன பண்றது?? 

அத்தை எங்கே..?? ஒருவேளை நான் சாப்பிட வருவேன்னு வெயிட் பண்ணி பார்த்துட்டு போயிட்டாங்க போல தூங்குறதுக்கு.. நான் கீழ வேகமா வரும் போது அத்தை அங்க இருக்கல.. அதனால் நான் தோட்டத்திற்கு போனது அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..

 நானும் தீரனும் ரூமில் இருக்கிறோம் கீழே இன்னும் இறங்கி வரல அப்படின்னுதான் அவங்க நினைச்சிருப்பாங்க.. நான் அழுதது அவங்களுக்கு தெரியாமல் இருந்தால் அதுவே போதும்.. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டவள் கண்களை நன்றாக துடைத்துக் கொண்டு வாஷ்ரூம் சென்று முகத்தை கழுவிக் கொண்டாள்..

அழுது அழுது முகமெல்லாம் சிவந்து லேசாக உப்பியிருந்தது அவளின் கன்னம்..

 “நீ குழந்தையை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லாதவள்.. நீ அந்த தகுதியை இழந்துட்ட.. பெண்மைக்கு அழகே தாய்மை தான்.. அதை அடைய முடியாத துரதிஷ்டசாலி நீ..”, என்கிற  வார்த்தைகள் அவள் காதில் அதிர்ந்து ஒலித்தது..!!

அவளுக்கு மட்டும் ஆசையா என்ன அம்மாவாக கூடாது என்று??!!

திருமணத்திற்கு முன்பு ,எப்பொழுது வீட்டிற்கு தூரம் ஆனாலும் அவளுக்கு கடுமையான வயிற்று வலி வரும்..

ஒரு நாள் டாக்டரிடம் சென்று பார்த்தபோது..

“ இத்தனை நாள் எப்படி கண்டுக்காம விட்டீங்க.. இப்படி வயிறு வலி வரும்போது நீங்க டாக்டர்கிட்ட போயிருக்கணும்.. இது ரொம்பவே லேட்..”

” என்னாச்சு டாக்டர் ஏதும் பிரச்சனையா??”, பதட்டத்துடன் கேட்டாள் மித்ரா.

” பிரச்சனைதாம்மா கர்ப்பபையில் நீர்க்கட்டி இருக்கு.. அது போக உங்களுடைய கர்ப்பப்பை ரொம்பவே வீக்காக இருக்கு.. உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல அப்படித்தானே?? ஒருவேளை நாளைக்கு உங்களுக்கு கல்யாணமானால் குழந்தையை சுமக்க கூடிய தகுதி வெறும் ஒரு சதவீதம் தான்..  ஒரு குழந்தையை சுமக்கிற அளவுக்கு உங்களுடைய கர்ப்பப்பை பலமாக இல்லை கொஞ்சம் பலவீனமா இருக்கு.. அதனால இப்போதைக்கு சில டானிக் மாத்திரைகள் எல்லாம் எழுதி தரேன்.. தொடர்ந்து சாப்பிட்டு வாங்க பார்க்கலாம்..”, என்றார் அவர் தலையில் இடியை இறக்குவது போல..!!

நமக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்கிறது அதிசயம்.. அப்படியே நடந்தாலும் அதில் இப்படி ஒரு பிரச்சனை வேறு இருக்கா?? அது சரி.. இது நல்லா இருந்தா என்ன நல்லா இல்லன்னா என்ன?? நமக்கு என்ன கல்யாணமா நடக்க போகுது?? எப்படியும் இந்த ஜென்மத்தில் நமக்கு கல்யாணம் நடக்காது, வரதட்சணை வாங்காமல் எவனும் கட்டிக்க மாட்டான்.. வரதட்சனை கொடுக்கிற நிலைமையில் அப்பாவும் இல்லை நானும் இல்லை..

 அப்பாவுடைய பழக்கத்தை பார்த்தாலே எவனும் கல்யாணம் பண்ணிக்க முன்வர மாட்டான் அதனால் இந்த ஜென்மத்துக்கு கல்யாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நினைக்கிறேன் , என அசால்ட்டாக எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு தெரியவில்லை அப்போது.. தான் வருங்காலத்தில் இப்படி ஒரு அரக்கனுக்கு மனைவியாவோம் என்று..!!

பழைய விஷயங்கள் எல்லாம் யோசித்துக்கொண்டு பல மணி நேரம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள்..  இப்படியே அழுதுட்டிருந்தா சரி வராது மாடிக்கு செல்வோம்.. என்று யோசித்தவள் அடுத்த கணமே பேசாம ஹாலிலேயே படுத்து தூங்கி விடலாமா என்று கூட எண்ணினாள்.

பிறகு..

வேண்டாம் வேண்டாம்.. இங்க படுத்து தூங்கினா அப்புறம் வசுந்தரா அம்மாவுக்கு தெரிஞ்சுடும்.. அப்புறம் அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க மகனும் மருமகளும் சந்தோஷமா இல்ல போலன்னு நினைப்பாங்க..  அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொண்டவள் நேராக மாடிக்கு சென்றாள்..

தன் கணவன் இருப்பான் என்று எதிர்ப்பார்த்து வந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..

காரணம், தீரன் அங்கு இல்லை..!!

ஒருவேளை பாத்ரூமில் இருப்பானோ என்று கதவருகே சென்று பார்த்தால், பாத்ரூம் கதவு ஏற்கனவே திறந்துதான் கிடந்தது..

சரி பால்கனியில் இருப்பானோ என்று அங்கே போய் பார்த்தாள்..

ஆனால் அவன் அங்கும் இல்லை..

அப்படி என்றால் வெளியே சென்று விட்டானோ?? ரொம்ப நல்லதா போச்சு நிம்மதியா படுத்து தூங்குவோம், என்று எண்ணியவளாக படுக்கையில் படுத்து உறங்கு தொடங்கினாள்..

நள்ளிரவு மணி 12 இருக்கும்..

அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, யாரோ பின்னிருந்து மெதுவாக இடையோடு சேர்த்து அணைப்பது போல உணர்ந்தாள்..

சங்கடமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்த அணைப்பு மெல்ல மெல்ல இறுகி அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டது..!!

புருவம் முடிச்சிட மெல்ல கண்களை திறந்து பார்த்தாள் மித்ரா..

இந்த வீட்டில்.. அதுவும் இந்த அறையில்.. தன் கணவனைத் தவிர வேறு யாரும் அவளிடம் நெருங்க முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் அதனால் கண்டிப்பாக இது தீரனாக தான் இருக்க வேண்டும்..என்று  யூகித்தாள் அவள்..!!

அவளது நினைப்பை பொய்யாக்காமல் தீரன் தான் அவளை அணைத்திருந்தான்..

அசையாமல் படுத்திருந்தவள் கண்களை மட்டும் உருட்டினாள்..!!

எங்கே அசைந்தால்.. மீண்டும் தன்னைப் புரட்டி எடுத்து விடுவானோ என்ற பயம் அவள் மனதிற்குள் இருந்தது.. அதனால அசையாமல் படுத்திருந்தாள் ..!!

 அவளை அணைத்திருந்தவனின்  கரங்கள் வழக்கம்போல் அவளுடைய மேனியில் பொக்கிஷத்தை தேடவில்லை.. அவள் கழுத்து வளைவில் அவன் முகத்தை புதைக்கவில்லை.. அவனின் இரும்பு கரங்கள் அவளை அழுத்தமாக தீண்டவில்லை.. மீசையும் தாடியும் குத்தும் அளவிற்கு தடிமனான அவன் இதழ்களால் அவள் இதழ்களை சிறை பிடிக்கவில்லை.. பற்களாலும் நகத்தாலும் அவள் மீது காயப்படுத்த வில்லை..!!

மாறாக..

இதமான அணைப்போடு அவளின் காதருகே இசையாய் இசைத்துக் கொண்டிருந்தது அவனுடைய மூச்சுக்காற்று..❤️❤️

எந்தவித அழுத்தமான தீண்டல்களும் இல்லாமல் பூவை வருடுவது போல மெல்ல அவளின் இடையையும் வயிற்றையும் வருடி கொடுத்தது அவனுடைய கரங்கள்..!!

செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டும் குழந்தை போல.. இருளை கண்டு அஞ்சு பிள்ளை தன் தாயிடம் தஞ்சம் புகுந்தது போல.. பின்னிருந்து அவளை அணைத்திருந்தவன் அவள் முதுகோடு தன் முகத்தை புதைத்து கொண்டு அவளுக்கு வலிக்காத வண்ணம் லேசாக அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டான்..!!

கண்களை இறுக மூடி கொண்டாள் மித்ரா..

தூக்கத்தில் இருந்தால் கூட எழுப்பி அமர வைத்த ரொமான்ஸ் செய்யும் ஆள் இவன்..

அப்பேர்ப்பட்டவன் இன்று தன்னை சும்மா விட்டு வைத்திருப்பதை நினைத்து பார்க்கும் பொழுது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது..!! 

இன்னொரு பக்கம்.. கேள்விக்குறியாகவும் பல கேள்விகள் அவள் மனதில் உதித்தது..!!

ஏதோ ஒன்று .. தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அதுவே போதும் என்று நினைத்துக் கொண்டு அவன் அணைப்பில் அப்படியே உறங்கியும் போனாள்..

ஆனால் தீரன் உறங்கவில்லை..

அவளை அப்படி பேசியது அவனுக்கே மனதிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது..

சொல்லக்கூடாத விஷயத்தை சொல்லிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன் இருந்தான்..

அதனால் யார் முகத்தையும் பார்க்காமல் யாரிடமும் பேசாமல் அமைதியாக வீட்டை விட்டு வெளியே சென்றவன் வழக்கம்போல பாரில் அமர்ந்து கொண்டு மது அருந்தலாம் என்று நினைத்திருந்தான்.

என்னவோ தெரியவில்லை மதுவை வாங்காமல் மீண்டும் வீடு திரும்பினான்..

இப்படி, ஒரு விஷயம் செய்ய நினைத்து செய்ய முடியாமல் தடுமாற்றத்தோடு திரும்புவது இதுவே அவன் வாழ்வில் முதல் முறை.. !!

மது அருந்த வேண்டும் மாதுவை ருசிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் உடனே அதை செயல்படுத்தி விடுவான் தீரன்..

எக்காரணத்தைக் கொண்டும் தன் எண்ணத்தையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த மாட்டான்..

அப்படிப்பட்டவன் இன்று நினைத்ததை அடைய முடியாமல் மனக்குமுறலுக்கு வழி தேடி வந்தவன் கடைசியில் அதையும் விரும்பி அருந்தாமல்.. அதை தள்ளி வைத்துவிட்டு இதோ வீடு திரும்பியவன் தன் மனைவியை இறுக்கமாக அணைத்து கொண்டு உறங்கிக் கொண்டிருக்கிறான் இந்த ஆறடி அரக்கன்..!!

விடியற்காலை ஆறு மணி..

ஆதவன் தன் பொற்கரங்களை கொண்டு அனைவரையும் எழுப்ப முயன்றான்.

எத்தனை முயற்சி செய்தாலும் உன்னுடைய பராக்கிரமங்கள் என்னிடம் செல்லுபடியாகாது என்பது போல தீரனும் மித்ராவும் அடித்துப் போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தார்கள்..

வெகு நாட்களுக்கு பிறகு முதல் முறையாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மித்ரா..

 அதனால் தன்னையும் அறியாமல் அவன் மீது ஒரு காலையும் கையையும்  போட்டுக் கொண்டு அவனை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்..

தூக்கத்திலும் கூட அலுவலக விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பவன் தீரன்.. புதிதாக என்னென்ன டீலர்ஷிப் வந்திருக்கிறது யாருக்கு டீலர்ஷிப் கொடுக்கலாம் இப்படி பல விஷயங்களை யோசித்துக்கொண்டே உறங்குவான்..

 தூக்கத்திலும் விழிப்பு இருக்க வேண்டும் என்பார்களே.. அது இவனுக்கு நன்றாக பொருந்தும். 

ஆனால் இன்று அந்த விழிப்பு இவனிடம் இல்லை..

அந்த அளவிற்கு பாதுகாப்பான இடத்தில் சுகமாக உறங்குவது போல அவளுடைய அணைப்பில் கட்டுண்டு கிடந்தான் அவன்..💕💕

அவனுடைய இடது கை  அவளை அணைத்திருந்தது..

எந்தவித கவலையும், யோசனையுமின்றி லேசான மனதுடன், குறுநகை இதழ்களில் பூக்க அவள் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தான் தீரன்..!!

அவளும் ஏதோ குழந்தையை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறுவது போல அவன் தலையில் கை வைத்து வருடி கொடுத்து கொண்டே கால்களால் அவனை கட்டி போட்டிருந்தாள் தன்னுடன்..!!

பூஜை வேளை கரடி போல அந்த நேரம் பார்த்து தீரனின் மொபைலில் அலாரம் ஒலித்தது..!!

திடுக்கிட்டு போய் இருவரும் விலகி கொண்டார்கள்..

அடக்கடவுளே.

 இவ்வளவு நேரம் இவன் கூட தான் தூங்கிட்டு இருந்தோமா?? ஆமா நான் எப்போ அவனை கட்டிப்பிடித்து தூங்க ஆரம்பிச்சேன்?? கடவுளே என்ன நினைப்பான் அவன் என்னை பற்றி?? என்று பலதையும் யோசித்து முகம் எல்லாம் சிவக்க அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அவள்..

ஆனால் அவனோ..

காலையில் வரும் இளவெயில் வெளிச்சத்தில் அவளுடைய முகம் தங்கமாய் ஜொலிப்பதை ரசித்துக் கொண்டிருந்தான்..!!

போதாத குறைக்கு அவளுடைய முகம் இயல்பாகவே சிவந்து கிடக்க அந்த அழகையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

வேகமாய் எழுந்த காரணத்தினால் அவளுடைய சுடிதார் துப்பட்டா முழுக்க விலகி விட.. அவளுடைய மென்மையான அழகு அவன் கண்களுக்கு விருந்தாகியது..!!

எச்சிலைக் கூட்டி விழுங்கியவன் அவளை தாபத்தோடு பார்த்தான் அந்த அதிகாலை வேளையிலும்..💕💕

“மித்து….”, என்றான் கரகரப்பான குரலில்.. 

தன்னையும் அறியாமல் அவள் அழகில் மயங்கியவன் அவள் அருகே செல்ல..

அவளோ அவனின் முக பாவனையை பார்த்துவிட்டு உடனே வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக கட்டிலை விட்டு இறங்கி வெளியே சென்று விட்டாள்..

பொங்கி வந்த பாலில் ஒரு செம்பு பால்டாயிலை ஊற்றியது போலாகிவிட்டது அவனுடைய நிலைமை இப்பொழுது..!!

நெருங்கி வரும் பொழுதெல்லாம் விலகி செல்லும் அவளை ஏக்கத்தோடு பார்த்திருந்தான் அந்த அரக்கன்!!

– தொடரும்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page