அத்தியாயம்-12

நாட்கள் வேகமாக நகர அந்த செமஸ்டர் முடிந்து அடுத்த செமஸ்டர் வந்தது. 

இப்பொழுதெல்லாம்  கரண் மற்றும் அபி இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்கிறார்கள் வெளிப்படையாக.

 அவள் அவனிடம் காதலை வார்த்தைகளால் சொல்லவில்லை என்றாலும், அவள் பேச்சில் இருக்கும் அக்கறையும் காதலும் அவனுக்கு நன்றாக புரிந்தது..

செமஸ்டர் விடுமுறை நாட்களிலும் தினமும் அரை மணி நேரமாவது பேசுவாள் தனது வீட்டில் இருப்பவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு. 

அடுத்த செமஸ்டர் ஆரம்பித்த நாட்கள் வேகமாக கழிய கரண் வகுப்பை சேர்ந்தவர்கள்   மூன்றாம் ஆண்டு பிபிஏ படிப்பதால் அவர்களுக்கு இன்டஸ்ட்ரியல் விசிட்( industrial visit) செல்வதற்கு சர்குலர் வந்திருந்தது.

 அதை பார்த்த மாணவர்கள் சந்தோஷத்தில் உற்சாக கூச்சலிட்டனர். 

கரணின் வகுப்பாசிரியர் அவர்களிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்னென்ன செய்யப் போகிறீர்கள் நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு இரண்டு நாட்களில் எனக்கு டூர் செட்யூல் தர வேண்டும் என்று கூறியவர் சென்றுவிட அந்த வகுப்பின் ரெப்ரெசென்டேட்டிவ் அனைத்து மாணவர்களுடன் பேசி வழக்கம்போல் பெங்களூரை தேர்வு செய்தனர்.. 

இங்கிருந்தே பஸ் பிடித்து அனைவரும் பெங்களூர் சென்று அங்கே முதல் நாள் பெரிய  மேனுஃபாக்சரிங் யூனிட் சென்று பார்த்துவிட்டு 

அதுக்கு அடுத்த நாள் அங்கே இருக்கும் ஆபீஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் கற்றுக்கொண்டு மூன்றாவது நாள் அங்கே இருக்கும் பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு சென்று விட்டு நான்காவது நாளும் சுற்றிவிட்டு அன்று மாலை மீண்டும் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிளம்புவதாக அனைவரும் பேசி முடித்தனர். 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஆராத்யா மனதிற்குள் பல கணக்குகள் போட்டவள் இந்த நான்கு நாள் சுற்றுலாவில்  தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கரணை தன் வலையில் விழ வைக்க வேண்டும் என்று நினைத்தவள்

 தனக்கு மனதில் உதயமான திட்டத்தை நான் தோழிகளிடம் கூற அவர்களும் சம்மதமாக தலையாட்டினர் .

உடனே கிளாஸ் ரெப்ரெசென்டேட்டிவை அழைத்து “எங்க அப்பாவுக்கு தெரிஞ்ச கம்பெனி இருக்கு!  பர்மிஷன் ஈசியா நானே வாங்கி தரேன்!  நம்ம எல்லாம் அங்கே போகலாம் கொஞ்ச நேரம் சுத்தி பார்த்துட்டு நம்ம அப்புறம் ஃப்ரீயா ரெஸ்ட் எடுத்துக்கலாம்!”  என்றால். 

உடனே அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவிக்க அன்று மாலையே ஆசிரியரிடம் கூறிவிட்டனர். 

இன்னும் ஒரு வாரத்தில் கிளம்புவதாக முடிவு செய்து இருக்க அன்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்தவுடன் அவன் பைக்கை எடுத்துக் கொண்டு எப்பொழுதும் அபியை பார்க்கும் இடத்தில் அவன் காத்துக் கொண்டு இருக்க அவளும் தனது தோழிகளுடன் அங்கே வந்தால்.

 இவனும் தனது தோழர்களுடன் நின்று இருக்க பெண்கள் மூவரும் வந்தவுடன் பேசிக்கொண்டே அங்கிருந்து வெளியே வந்தனர். 

அந்த மூன்று பெண்களிடமும் இவர்கள் பெங்களூரு ட்ரிப் போவதை பற்றி கூற அதைக் கேட்டு அந்த பெண்களுக்கு “நாங்களும் வந்த நல்லா இருக்கும்!”  என்றால் வந்தனா. 

“அதுக்கு நீ எங்க கூட படிச்சிருந்தா போயிருக்கலாம் என்ன பண்றது?”  என்று தேவி கிண்டல் அடிக்க 

“போங்க சீனியர் எங்களையும் கூட்டிட்டு போக மாட்டாங்களா?”  என்று ஏக்கமாக கேட்டால் வந்தனா.

” கூட்டிட்டு போக மாட்டாங்க நீங்க பைனல் இயர் படிக்கிறப்ப தான் போக முடியும்!  அதனால நாங்க உங்க தொல்லை இல்லாம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வர போறோம்!”  என்றால் வேண்டுமென்றே!.

 இவர்கள் டூர் செல்ல போகிறார்கள் என்று கேட்டவுடன் அபி உடைய முகம் சோகமாகிவிட்டது.

 நான்கு நாட்கள் கரணை  பார்க்க முடியாத கவலையில் இருந்தால்.

 அதை உணர்ந்து கொண்டவன் ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க வரேன் என்று அவளை அழைத்துக் கொண்டு தனியாக இருந்த ஒரு டேபிளில் இருவரும் அமர்ந்து கொள்ள அப்பொழுது அவள் முகம் சோகமாக இருப்பதை உணர்ந்தவன் “என்னைய பாரு!”  என்றான் .

அவளும் நிமிர்ந்த அவனைப் பார்க்க “ஏன் சோகமா இருக்க நான் வேணா போகாம இங்கேயே இருந்துட்டுமா?” என்றான் அவளது சோகத்தை தாங்க முடியாமல் .

அதைக் கேட்ட அவளோ ” இல்ல இல்ல போயிட்டு வாங்க காலேஜ் டேஸ்ல இதெல்லாம் அனுபவிக்கணும் பின்னாடி நினைத்து பார்த்தால் நல்ல நினைவுகளா இருக்கும் எனக்காக நீங்க அதை இழக்க வேண்டாம்!”  என்று கூறினால்.

 “அதை கொஞ்சம் சந்தோஷமா சிரிச்சிட்டே சொன்னா நல்லா இருக்கும் இல்ல!  அப்பதானே நானும் 4 நாள் போய்ட்டு வருவேன் இல்லனா நீயும் என் கூட வரியா என்றான்.

” இல்ல இல்ல நீங்க போயிட்டு வாங்க நாலு நாள் தானே காலேஜ் இருக்கு டக்குனு போயிடும் செமஸ்டர் வேற வருது ! உங்க தொல்லை இல்லாம நான் ரொம்ப நல்லா படிப்பேன்!” என்றவுடன் 

“அப்போ நான் உனக்கு தொல்லையா ?”  என்றான் சீண்டலாக.

“அச்சோ இல்ல சீனியர் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்!”  என்றால் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு.

அதில் சிரித்தவன் “அப்போ முடிச்சுட்டு வந்த அந்த வீக்கண்டு நீ என்கூட வெளியே வரணும்!”  என்றான்.

” ஐயோ அதெல்லாம் முடியாது எங்க வீட்டுல திட்டுவாங்க!” என்றால். 

” ப்ளீஸ் ப்ளீஸ் நாலு நாள் பிரிஞ்சிருப்போம் இல்ல ஒரு நாள் ஃபுல்லா உன் கூட இருந்தா நாலு நாள் அந்த பிரிந்த ஏக்கம் சரியா போயிடும் ப்ளீஸ் டி ! என்று கெஞ்சினான்.

 தூரத்தில் இருந்து பார்த்தால் இருவரும் காதலர்கள் போல தான் அவர்களும் காதலர்கள் தான். ஆனால் என்ன அவன் சொல்லி விட்டான் இவள் தான் சொல்லவில்லை.

 இருந்தும் அவள் தன்னிடம் முன்பு போல் பயப்படாமல் பேசுவது அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

 அவளும் அவனை அப்பொழுது சமாளிக்க வேண்டும் என்பதற்காக “சரி வரேன்!’  என்று மட்டும் கூறினால் அவளும் சந்தோஷத்துடன்.

 சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டு “சரி டூர் போவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு நீ இப்பத்திலிருந்து  மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்காத அதுவரைக்கும் நம்ம ஜாலியா என்ஜாய் பண்ணலாம் செமஸ்டர் வருது நீயும் நல்லா படி!” என்றான்.

” சரி சீனியர்!”  என்றவள் மீண்டும் இவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொள்ள அரட்டை அடித்து விட்டு அனைவரும் இல்லங்களுக்கு கிளம்பினர். 

இவர்கள் ஐவி போகும் நாளும் வந்தது.

 அந்த நாள் காலை மாணவர்கள் அனைவரும் சீக்கிரமாக கல்லூரிக்கு வந்து இருக்க

 தன்னுடைய அறையில் அக்கா உறங்கிக் கொண்டிருப்பதால் ஃபோன் அடித்தவுடன் தூக்கத்தில் இருந்து விழித்த அபி பாத்ரூமுக்கு சென்று அவனுக்கு வீடியோ கால் செய்தாள்.

அவன் அடித்தவுடன் போன் எடுத்ததற்கு காரணம் அலாரம் வைத்துக் கொண்டு தூங்கி இருந்தால் சரியாக அலாரம் அடித்து முடித்து இரண்டு நிமிடத்தில் அவன் அழைத்ததால் உடனே எடுத்து விட்டால் இல்லையென்றால் கும்பகர்ணனுக்கு தங்கை தான் இவள்.

அவனும் அவளுடைய அழகு வதனத்தை பார்த்தவன் “அபி மிஸ் யூ டி !” என்றான். 

“இன்னும் கிளம்பவே இல்ல அதுக்குள்ள அவன் மிஸ் பண்றீங்க?” என்று  அவள் சிரித்தாள். 

“ஆமா இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கு!  நான் போகலை இவர்கள் அனுப்பிவிட்டு இங்கேயே இருக்கேன்!” என்றான் .

அவனை முறைத்து பார்த்தவள் “ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன்!  போயிட்டு வாங்க வீடியோ கால் டெய்லியும் பேசிக்கலாம்!”  என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஆசிரியர் பின்னால் இருந்து “எல்லாரும் வந்தாச்சு கரண்!  சீக்கிரம் கிளம்பலாம் லேட் பண்ணிட்டு இருக்க!”  என்று கத்தினார்.

 அதைக் கேட்டவள் “எனக்காக யாரும் வெயிட் பண்ண வேண்டாம் சீக்கிரமா கிளம்புங்க எல்லாரும் பாவம் !” என்றால். 

 அவளுக்கு முத்தங்களை கொடுத்து விட்டு அவனும் வண்டிக்குள் ஏற அவன் பேசுவது முத்தம் கொடுத்தது அனைத்தையும் சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யாவிற்கு ‘இப்ப நீ சந்தோஷமா இருக்க ஆனா இந்த ட்ரிப் முடிஞ்சு வர்றப்போ அதுக்கு அப்புறம் லைஃப்ல சந்தோஷமே இருக்காது’  என்ற மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் பல திட்டங்களுடன் அவளும் பேருந்தில் ஏறினாள். 

ஆரவாரத்துடன் கிளம்பிய பேருந்து மாணவர்கள் பாட்டு சத்தத்திலும் ஆட்டத்திலும் டிரைவரும் கலகலப்பாக ஓட்டிக் கொண்டிருக்க நடுவில் உணவிற்கு நிறுத்தியவர்கள் அதன் பின் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அசதியில்  தூங்கி விட  மாலை 5 மணிக்கு பெங்களூர் சென்றடைந்தனர். 

மாணவர்கள் இறங்கியவுடன் அனைவரும் சில் என்ற காற்றை சுவாசிக்க என்ன பெங்களூர் டிராபிக் தான் அவர்களுக்கு விழி பிதுங்கியது.  சென்னையில் கூட தேவலாம்  என்று தோன்றும் அளவிற்கு இருந்தது.

 ஒருவழியாக அவர்கள் அறை இருக்கும் ஹோட்டலுக்கு வந்திருக்க அனைவரும் தங்கள் அரைக்கென்று இருக்கும் சாவியை வாங்கிகொண்டு லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு  ரெஃபரசாரா கிளம்பினர்.

 ஆசிரியர்கள் இரண்டு பெண்கள் ஒரு ஆண் ஆசிரியர் வந்திருக்க “ஸ்டுடென்ட்ஸ் நைட்டு எட்டு மணிக்கு இங்கே கீழே ரிசப்ஷன்ல அசெம்பிள் ஆகிடுங்க இல்ல அதுக்கு முன்னாடியே பசிச்சதுனா கால் பண்ணி சொல்லுங்க சீக்கிரமா சாப்பிட்டு வந்துடலாம் அப்பதான் நாளைக்கு நம்ம கம்பெனி விசிட் பண்றதுக்கு சரியா இருக்கும். இப்ப போய் நல்லா ரெஃப்ரெஷ் ஆகி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க! யாரும் எங்க மூணு பேத்துகிட்டையும் சொல்லாம இந்த ஹோட்டல  விட்டு வெளியே போகக்கூடாது ஞாபகம் வச்சுக்கோங்க!”  என்று கூறிவிட்டு அவர்களும் தங்களுக்கு என்று இருக்கும் அறைகளுக்கு சென்று விட 

ஆராத்யா த்ரீ ஸ்டார் ஹோட்டல் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்ததை கண்டு முகத்தை சுளித்தாள் அறைக்கு வந்தவுடன்.

“இது என்ன ரூம் இப்படி இருக்கு எங்க அப்பாவோட இருந்தா இந்நேரம் செவன் ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருக்கலாம் !” என்று அவள் கூற அதைக் கேட்டு அவளது தோழிகளும் ஆமாம் சாமி போட்டனர். 

இந்த ட்ரிப்பில் என்ன எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறது என்று அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்! 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page