அத்தியாயம் 12

அபிராமி அஸ்வந்த் இருவரும் எழுந்து அக்னியை வலம் வந்தனர். 

 

இந்த ஜென்மத்தில் உனக்கு திருமணம் ஆகாது என்று தினமும் அவளின் காதுகளில் கேட்கும் அசரீரி இன்று கேட்கவில்லை. 

 

அஸ்வந்த் முன் செல்ல அபிராமி அவன் கைகளை பிடித்து அவன் பின் சென்று இருவருமாக சேர்ந்து அக்னியை வலம் வந்தனர். 

 

அபிராமி அஸ்வந்த்தின் விரல்களை இறுக்க பற்றினாள்.  அவளின் மனதில் புது புது உணர்வுகள் முளைத்தது. 

 

அபிராமியின் ஸ்பரிசம் பட்டதும் அஸ்வந்த் அவனின் கைகளை லேசாக தளர்த்தினான்.

 

தன் கணவணானவனின் கை லேசாக தளர்வது போல் இருக்க, அபிராமி மேலும் அவன் விரல்களோடு தன் விரல் கோர்த்து இறுக்கி கொண்டாள். 

 

இன்று இறுக்கி பிடித்த கரங்களை என்றும் விட போவதில்லை என்று  வாய் திறந்து கூறாமல் தன் செயலில் காட்டினாள். 

 

❤️காதல் கணவா உந்தன் 

கரம் விட மாட்டேன் 

சத்தியம் சத்தியம் இது சத்தியமே 

தாய் வழி வந்த எங்கள் 

தர்மத்தின் மேலே 

சத்தியம் சத்தியம் இது சத்தியமே 

ஒரு குழந்தை போலே 

ஒரு வைரம் போலே 

தூய்மையான என் சத்தியம் புனிதமானது ❤️

 

அபிராமியின் உதடுகள் தானாக விரிந்தது. அந்த புன்னகை பல உணர்வுகளை பிரதிபலித்தது. 

 

அஸ்வந்த் அவள் கைகளில் இருந்து தன் கையை பிரிக்க பார்த்தான். 

 

ஐயோ!  அவள் தான் இறுக்கமாக பிடித்து இருக்கிறாளே. பாவம் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

 

அனைவர் முன்னிலையிலும் அவளை மொறைக்க அவன் மனம் இடம் தரவில்லை. வீட்டில் சென்று பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தான். 

 

பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக மட்டுமே அவனின் கைகளை தன் கையில் இருந்து பிரித்தாள் அபிராமி. 

 

ஏதோ விடுதலை கிடைத்து விட்டதை போல் உணர்ந்தான் அஸ்வந்த். 

 

மூவர் கொண்ட குழு இந்த ஜோடியை பார்த்து வயிறு எரிந்து கிளம்பியது. 

 

ஒருவன் தன்னையே பார்வையால் திருடி கொண்டிருக்கிறான் என்பது தெரியாமல் அகிலா அக்காவின் திருமணத்தில் மெய் மறந்து நின்று கொண்டிருந்தாள். 

 

குடும்பம் மொத்தமுமே மெய் மறந்து தான் அந்த ஜோடியை ரசித்து கொண்டிருந்தது. 

 

சங்கரின் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் புகைப்படம் எடுக்க ஆயத்தமானர்கள். 

 

மேடையில் அபிராமி அஸ்வந்த் இருவரும் ஏற, வந்தவர்கள் அனைவரும் பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டு சாப்பிட சென்றனர். 

 

சார் என்று அஸ்வந்த்தின் அருகில் சென்றார் போட்டோகிராஃபர். 

 

கையில் வைத்திருந்த மொபைலை ஆன் செய்து, சார் இந்த மாதிரி போஸ் கொடுங்க என்றான். 

 

அஸ்வந்த் சினத்தோடு அவரை பார்த்தான். 

மேடம் கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க. சார் உங்களுக்காக தான் பார்க்குறாரு போல என்று அபிராமியிடம் போட்டோகிராஃபர் கூற, அபிராமி வெட்கம் கலந்த புன்னகையோடு அஸ்வந்தை நோக்கினாள். 

 

அஸ்வந்த் மனம் குற்ற உணர்ச்சியால் தவிக்க, அபிராமியின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் தன்னையே நொந்து கொண்டான். 

 

இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று மேடை ஏறினார் பாரிஜாதம். 

 

காற்றோடு மகனின் காதில் கிசு கிசுத்தார். 

டேய் என்ன டா பண்ற? ஒரு போட்டோ உன்னால எடுக்க முடியாதா என்று அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டார். 

 

நான் உங்களுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் மா. என் சந்தோசதுக்காக இல்லை என்று கோபத்தோடு மொழிந்தான் அஸ்வந்த். 

 

பற்களை கடித்த பாரிஜாதம், அப்போ அந்த பொண்ணை இங்க வச்சே அசிங்க படுத்தலாம்னு முடிவு பண்ணிட்டியா டா. நானும் வீட்டுக்கு வந்து தான் நீ ராட்சஷனா மாறுவனு பார்த்தேன். இப்போவே மாறிட்டியா. உன்கிட்டே பேசி ஒரு பயனும் இல்லை என்று கூறிவிட்டு சென்றார் பாரிஜாதம். 

 

அஸ்வந்த் கோபத்தில் கை விரல்களை இறுக்கினான். 

 

அபிராமி தாய் மகன் இருவரையும் புரியாமல் பார்த்து நின்றவள் இப்பொழுது அஸ்வந்தை விழித்து பார்த்தாள். 

 

போட்டோ எடுக்குறது ஒரு  ஸ்வீட் மெமரிஸ் சார். இதை பாருங்க என்று மற்றொரு போட்டோவை இருவருக்கும் காண்பித்தான் போட்டோகிராஃபர். 

 

அபிராமி அதை பார்த்ததும் விழி விரித்து பார்த்தாள். 

சார் ப்ளீஸ் என்று கூறிவிட்டு நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக பதிய ஆரம்பித்தார் போட்டோகிராஃபர். 

 

அஸ்வந்த் அபிராமியை பின்னிருந்து அணைத்து அவளின் தோளில் தன் நாடியை பதித்தான். 

 

அவனின் மூற்று காற்று அபிராமியின் கழுத்தை தீண்ட, சில்லென்று உணர்ந்தாள் அபிராமி. 

 

கல்யாண் கௌரி இருவரும் இந்த காட்சியை ரசித்து கொண்டு நின்றனர். 

 

இருவரும் விழிகளோடு விழி கலந்தனர். அபிராமி அஸ்வந்த்தின் கண்களில் தன்னை தொலைத்தாள். 

 

****

யாரோ ஒருவர் தன்னையே கவனிப்பது போல் இருக்க அகிலா யார் என்று  பார்க்க, நம் கார்த்திக் தான் அவளை தின்று கொண்டிருந்தான். 

 

சீ…. என்று முகம் சுழித்தாள் பெண்ணவள். 

 

அவளின் சீ… என்ற முக சுழிப்பையும் தான் அவன் ரசித்து பார்த்தான். 

 

தாய் தந்தை அருகில் இல்லாமல் சற்று தனித்து தான் நின்று இருந்தாள் அகிலா. 

 

இதோ இரண்டு எட்டு எடுத்து வைத்து அவளின் அருகில் நெருங்கி நின்றான் கார்த்திக். 

 

“வாவ் கியூட்டி” என்றான் அவளின் விழியை பார்த்து. 

 

டேய் என்ன டா என்று எகிறினாள் அகிலா. 

 

அச்சோ ஸ்வீட்டி நீங்க பயந்துராதீங்க. உங்க சித்தி அப்படி தான் கொஞ்சம் கோபக்காரி என்றான். 

 

அவளின் கைகளில் இருந்த பாலகனை வாங்க அவன் கைப்போட, இவளோ முகத்தை திருப்பி வேறு பக்கம் திரும்பி நின்றாள். 

 

உதட்டோரம் குறு நகை வைத்த கார்த்திக் மீண்டும் அவள் முன் சென்று நின்றான். 

 

இவன் உனக்கு மட்டும் தான் பையனா என்ன?  என்றவன் அவளின் விழிகளில் கலந்தான். 

 

அவன் கூறுவது புரியாமல் பார்த்தாள் அகிலா. 

 

இது நம்ப பாஸோட குழந்தை எனக்கும் உரிமை இருக்கு என்றவன் குழந்தையை வாங்கினான். 

 

அச்சோ இன்னைக்கு எவ்ளோ அழகா இருக்குறீங்க என்று அவன் குழந்தையை கூறினான் என்றால் அது இல்லை. 

 

அவன் அகிலாவை தான் கூறினான். அது அவளுக்கும் அப்பட்டமாக தெரிய, டேய் குழந்தையை கொடுத்துட்டு பேசாம போடா என்றாள்.

 

அகிலாவிடம் ஏச்சு பேச்சு வாங்கினாலும் அவனுக்கு அந்த இடத்தில் இருந்து கால்கள் நகர மறுத்தது. 

 

அகி இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க டா என்றான் அவளை பார்த்து. 

குழந்தையை வாங்கி கொண்டு அவனின் பேச்சை கேட்காது விருட்டென அவனை பார்க்காது சென்றாள். 

அவள் செல்லும் பொழுது சரோஜா அவளை வழி மறித்தார். 

 

பாப்பா குழந்தையை கொடு மா. மேல ஸ்டேஜ்க்கு அம்மா எடுத்துட்டு வர சொன்னாங்க என்று வாங்கிக் கொண்டு சென்றார். 

 

சரோஜா குழந்தையை வாங்கி சென்றதை கவனித்த கார்த்திக் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளின் கைகளை பிடித்து தனியாக இழுத்து சென்றான். 

 

வந்திருந்த உறவுகள் அனைவரும் போட்டோ எடுப்பதில் கவனமாக இருக்க, இவர்களை யாரும் கவனிக்கவில்லை. 

 

யாரும் அதிகம் வராத மண்டபத்தின் வலப் பக்கம் அகிலாவை இழுத்து வந்த கார்த்திக் அவளை ஒரு தூணில் சாய்த்து நிற்க வைக்க, டேய் பொறுக்கி நாயே என்று சத்தம் வைத்தாள் அகிலா. 

 

ஸ்ஸ்… என்று அவளின் வாயை ஒரு கை கொண்டு பொத்தி, இங்க பாரு அகி இப்போ நீ கத்துனாலும் எனக்கு ஒன்னும் இல்லை. உன்னைய தான் எல்லாரும் கேள்வி கேட்பாங்க. ப்ளீஸ் சைலண்ட்டா இரு. ஒரு ரெண்டே நிமிஷம் நான் சொல்லுறதை கேளு என்றான். 

 

அவள் கத்துவதை நிறுத்தினாள். அவனின் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னால் தள்ள முயற்சித்தான். 

 

கார்த்திக் அகிலாவின் நெஞ்சோடு ஒட்டி நின்றான். 

 

அவனின் நெருக்கத்தில் அகிலாவிற்கு மூச்சு முட்டியது. 

 

பயத்தில் வியர்க்கவும் செய்தது. 

 

அவளின் கைகளை தன் கை கொண்டு சிறை வைத்தான். 

 

அவன் கூறியது போல் இப்பொழுது கத்தினாலும் யாராவது இந்த நிலையில் தங்களை பார்த்தால் கண்டிப்பாக தன்னை தான் தவறாக நினைப்பார்கள் என்று புரிந்து கொண்ட அகிலா, டேய் பரதேசி தள்ளி போடா என்று சத்தம் வராமல் சீறினாள். 

 

அவளின் வார்த்தையை செவியில் வாங்காதவன் “அகி ஐ லவ் யூ டா ” என்றான். 

 

அகிலாவின் இதயம் அவன் கூறிய வார்த்தையில் நின்று விட்டது. 

 

இந்த ஒரு வார்த்தையை கேட்டு விட கூடாது என்று தானே இவ்வளவு நாள் அவனை அருவறுப்போடு பார்த்தாள். 

 

இப்பொழுது அவன் கூறி விட்டானே! ஒரு முடிவோடு தான் இங்கு வந்துருக்கிறான் போலும். 

 

நான் கொஞ்சம் முன் கோபக்காரன் அகி. அன்னைக்கு தெரியாமல் உன்கிட்டே அப்படி நடந்துகிட்டேன். நீயே சொல்லு அந்த நிலைமையில நான் என்ன பண்ணுவேன் என்றான். 

 

இருந்தாலும் ஒரு பொண்ணை அடிச்சது தப்பு தான் என்று மனம் கூறியதை அவளால் கூற முடியவில்லை. அவன் தான் தன் கை கொண்டு அவள் வாய்க்கும் சிறை போட்டு விட்டானே. 

 

இருந்தாலும் ஒரு பொண்ணை அடிச்சது தப்பு தான் அகி. சாரி டா என்றான். அவள் கேட்காமலேயே கூறினான். 

அகிலா தன் கண்மணிகளை சுழற்றி பார்வையை வேறு பக்கம் திருப்பினாள். 

 

அப்பா இறந்துட்டாரு அகி. அது மட்டும் இல்லை அவளும்….  என்று திணறியவன் அவளும் வாழ்க்கையை இழந்துட்டு புள்ளையோட வந்து நிற்குறாள் என்றான். 

 

வேறு பக்கம் பார்வையை வைத்திருந்த அகிலா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். 

 

அவனின் கண்களில் வலி அப்பட்டமாக தெரிந்தது. அவள் பார்க்காதவாறு வலியை மறைக்க சிரமப்பட்டான். ஆனால் முடியவில்லை. காதல் கொண்ட இதயத்திடம் எதையும் மறைக்க முடியவில்லை அவனால். இதோ அவளை பிடித்து அனைத்தையும் கொட்டி விட்டான். 

 

அகிலாவின் கண்களில் இருந்து அவள் அறியாமல்  இரு சொட்டு சிதறியது. 

 

அவளின் கண்ணீரை பெரு விரல் கொண்டு துடைத்து விட்டான் கார்த்திக். 

 

அதன் பிறகு தான் அழுதிருக்கிறோம் என்று புரிந்தது அகிலாவிற்கு. 

கண்ணீரை துடைத்து விட்டவன் அவளின் கண்களில் குட்டி குட்டி முத்தம் பதித்தான். 

 

அவனின் முத்தத்தில் மூச்சைடைத்து நின்றாள் அகிலா. 

 

அவள் நா மேல் அன்னத்தில் ஒட்டி கொண்டது. 

 

யோசிச்சு பதில் சொல்லு அகி. அப்பறம் உன்னைய வலுக்கட்டாயமா பிடிச்சி இழுத்துட்டு வந்ததுக்கு சாரி டா. எனக்கும் இதை விட்டால் வேற வாய்ப்பு கிடைக்காது என்று கூறிவிட்டு சென்றான். 

 

அகிலா சில மணி துளிகள் அதே இடத்தில் நின்று விட்டு பின் மெதுவாக நடந்து  தாய் தந்தை அருகில் சென்று நின்றாள். 

 

தொடரும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
881 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page