அத்தியாயம் 13

இரட்டையர்களான ராகுல் மற்றும் கோகுல் இருவரும் மிதுனின் பள்ளிக்காலத்து நண்பர்கள். கோகுல் போலீஸ் கமிஷனராக இருக்கிறான். ராகுல் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி வைத்திருக்கிறான். சட்ட ரீதியான பிரச்சனைகளை கோகுலும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளை தீர்ப்பதில் ராகுலும் மிதுனுக்கு பக்க பலமாக இருப்பவர்கள். 

மிதுன் யாரைத் தேடச் சொல்லியிருக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு அவன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டான். அது அவனுக்கான விபத்து இல்லை. அது ஒரு கோரமான தொடர் விபத்து. எதிர்பாராமல் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் மோதிக் கொள்ள, அதைத் தொடர்ந்து வந்த கார்கள், பைக்குகளும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோத அந்த இடமே ரத்தக்களறி யாகி இருந்தது. 

அந்த இரவில் சாலை முழுக்க எங்கும் உறைந்த ரத்தம், சிதைந்த உடல்கள், அய்யோ என்ற அலறல்களும் தான். மிதுன் கார் ஸ்டீயரிங் கில் தலை மோதி அடிபட்டு விழுந்திருந்தவன், மயக்கத்தில் இருந்தான். “சார் எழுந்திருங்க..” கண்ணீரோடு ஒரு பெண் அவனுக்கருகில் வந்து அவனைக் குலுக்கினாள். அவன் தலையில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டேயிருக்க, “ஹெல்ப் மீ..” வலியோடு முனகினான். 

வேகமாகத் திரும்பிச் சென்றவள், இன்னொரு நபருடன் வந்து அவனை காரில் இருந்து தூக்கி ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தாள். ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, தன்னுடைய துப்பாட்டாவை அவனது தலையில் இறுக்கமாகக் கட்டினாள். அரை மயக்கத்தில் இருந்தவனுக்கு அந்தப் பெண்ணின் முகம் நினைவில் இல்லை. அழுகையுடனான அவள் குரலும் அவ்வளவு தெளிவாக அவனது நினைவுப் பதிவில் இல்லை. 

அவள் அந்த விபத்தில் சிக்கி அதிலிருந்து தப்பித்தவளாகத் தான் இருப்பாள். விபத்தில் சிக்கியவர்களைப் பற்றி விசாரித்தால், அவளைப் பற்றிய தகவல் கிடைக்கக் கூடும் என்று ராகுலை தேடச் சொல்லியிருக்கிறான். ஏனோ அந்த பெண் மட்டும் கிடைக்கவேயில்லை. 

மிதுன் உயிர் பிழைக்க, ஏதோ ஒருவகையில் அவளும் ஒரு காரணம் தான். ஆரம்பத்தில் அவளிடம் நன்றியைத் தெரிவித்தால் போதும் என்று எண்ணியிருந்தவன் கனவுகளில் அடிக்கடி வந்து போனாள். அவன் சோர்வுறும் போதும், கவலைகளில் இருக்கும் போதும் அவளின் நினைவுகள் தான் அவனுக்கு மன அமைதியைத் தந்தன. அவனுக்குள்ளே அது காதலாக உருமாறியிருந்தது. 

அவளை நினைத்தாலே, எங்கோ இதமாகக் கேட்கும் அவள் மெல்லிய குரலும், அவன் மனதில் தோன்றும் இதமும், முகத்தில் தோன்றும் புன்னகையும் அதைக் காதல் என்று அவனுக்கு உணர்த்தின. அவளை சந்திக்கும் நொடிக்காகக் காத்திருக்கிறான். 

அதெல்லாம் சரி இதுல நதியா எதுக்கு இடையில வந்தா? எதுக்கு அவ மூலமாக குழந்தை பெத்துக்கணும்? அவ கூட தன் படுக்கையைப் பகிர்ந்துக்கணும். மிதுன் இன்னும் என்னென்ன புதிர்களைத் தன் வாழ்வில் வைத்திருக்கிறானோ???

“நான் ஒவ்வொரு குடும்பமா விசாரிச்சிட்டு இருக்கேன். அந்த விபத்துல சிக்குன முக்கால்வாசி பேர் இறந்து போயிட்டாங்க. கொஞ்ச பேர் தான் உயிரோட இருக்காங்க. அவங்களை முழுக்க செக் பண்ணியாச்சு. நீ அவங்க யாரும் இல்லன்னு சொல்லிட்ட. ஒருவேளை அவ டாக்டரா, ஆம்புலன்ஸ்ல வந்த நர்ஸா இருக்கலாம். இல்ல அங்க இருக்குறவங்களை காப்பாத்த உதவி பண்ண பொதுமக்கள்ல ஒருத்தரா இருக்கலாம். கண்டுபிடிக்கிறேன் பொறுமையா இருடா” நண்பனின் டார்ச்சர் தாங்காமல் எரிச்சலுடன் சொன்னான் ராகுல்.

“எனக்கு டைம் இல்ல ராகுல். உனக்கு எத்தனை தடவை சொல்றது. ஐ நீட் ஹெர். அவளைப் பார்த்தே ஆகணும்” அவனது கோபக்குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.

“ஓகே மேன். சியர் அப். ஒன் வீக் வெயிட் பண்ணு. நான் எப்படியாச்சும் கண்டுபிடிக்கிறேன்” ராகுல் சொல்லிட, போனை கட் செய்தவன் தலையை பிடித்துக் கொண்டு சீட்டில் கண் மூடினான். ‘எங்கடா இருக்க? என்கிட்ட வந்துரு. ஐ நீட் யூ’ மனதிற்குள் அவளிடம் மன்றாடினான்.

இரண்டு நாட்கள் கழித்து, வேறு கல்லூரியில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள வைஷாலி சென்றிருக்க, அன்று மாலை, ‘உன் வீட்டு பொண்ணு அங்க கற்பு, மானம் எல்லாம் போய் உட்கார்ந்திருக்கா. இப்படி கூலா இருக்க. இப்போ போனா அட்லீஸ்ட் அவ உயிரையாச்சும் காப்பத்தலாம்’ மிதுனுக்கும், தேவ்வுக்கும் போன் காலில் மிரட்டல் வந்தது. தேவ் உடனே அண்ணனுக்கு அழைத்து விட்டான். இருவரும் அவரவர் அலுவலகங்களில் இருந்து கிளம்பினர். 

தேவ் ரூபிணிக்கு போன் செய்து விசாரித்தால், ரூபி வீட்டில் தான் இருக்கிறாள். வைஷாலி தான் கல்லூரிக்குச் சென்றவள் இன்னும் வீடு திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்தது. அவன் மனைவியிடம் எதுவும் சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை.

வைஷாலி சென்றிருந்த கல்லூரிக்கு பாடிகார்ட்டை அனுப்பி தேட சொல்லிட, அவள் அங்கும் இல்லை. அவளுடைய போனும் சுவிட்ச் ஆஃப். அண்ணன்கள் இருவருக்கும் பயத்தில் உயிர் உறைந்து போனது. தங்கையை என்ன நிலைமையில் பார்க்கப் போகிறோமோ என்று மனம் அடித்துக் கொண்டது. மிதுன், அவனுடன் விஷ்ணு, தேவ் மூவரும் ஒரே நேரத்தில் அந்த ஹோட்டலை அடைந்தனர். வேகமாக மூன்றாம் தளத்தில் இருந்த, அவர்களுக்கு சொல்லப்பட்ட அறை எண்ணைத் தேடி அங்கே சென்றனர். 

கதவை தட்டிப் பார்த்தனர். மிதுன் மொத்த பலத்தையும் கொண்டு கதவை உடைத்திட உள்ளே இருந்து அங்கங்கே அவள் அணிந்திருந்த உடை கிழிந்து, தலைமுடி கலைந்து, பயத்துடன் மிதுன் மேலே வந்து மோதினாள். “வைஷு..” அவன் நடுங்கும் கரங்களுடன் அவளுடைய முகத்தைத் தூக்கி, முகத்தில் இருந்த தலைமுடியை ஒதுக்கிப் பார்த்தால், அது நதியா. “நதியா..” என்றவன் கரங்களில் அவள் மயங்கியிருந்தாள். தேவ்வும் விஷ்ணுவும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர்.

அவளைத் துரத்திக் கொண்டு அரைகுறை ஆடைகளுடன் வெளியே வந்த ஒருவனை பாடிகார்ட் பிடித்து அடித்திட, “அவ தான் என்னைத் தேடி வந்தா. என்னை எதுக்கு அடிக்கிறீங்க?” அடிவாங்கியவாறு சொன்னதையே திரும்பச் சொன்னான். 

நதியாவை தூக்கிக் கொண்ட மிதுன், விஷ்ணுவிடம் கண்ணைக் காட்ட, அவனை குடோனுக்கு தூக்கிச் சென்றனர். இன்னும் வைஷாலி வீட்டிற்கு வரவில்லை. நதியாவை ஹாஸ்பிடலில் அனுமதித்தனர்.  

அவளை முழுமையாக பரிசோதித்த டாக்டர், “ரேப் அட்டெம்ட் தான். பட் நாட் ஸ்பெர்ம் ஃபவுண்ட். அந்த அளவுக்கு போகல. உடம்புல நிறைய காயமாகியிருக்கு. அவங்களை ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க” எனச் சொல்லி சென்றிட, மிதுன் நதியாவை வெறிக்கப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். 

“அண்ணா.. நல்ல வேளை அண்ணிக்கு ஒண்ணும் ஆகல” ஆறுதலாக அவன் கரத்தைப் பற்றினான் தேவ். “அண்ணி ஏன் அங்க போனாங்க? எப்போ போனாங்க? சரி விடுங்க. எழுந்ததும் அவங்களை உடனே எதும் கேட்காதீங்க” என்றவன் வைஷாலியை அவள் தோழிகளின் வீட்டில் தேடிப் பார்க்கக் கிளம்பினான்.

மிரட்டல் வந்த செல்போன் எண்ணைப் பற்றிய விபரங்களைக் கண்டறிய முடியவில்லை. ‘இது எனக்காக வந்த மிரட்டலா? இல்ல இவளோட பிரச்சனையா? உன் வீட்டு பொண்ணுன்னு சொன்னான். நதியாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது இன்னும் யாருக்கும் தெரியாதே’ குழப்பத்தோடு அவளைப் பார்த்திருந்தான்.

நதியா மெல்ல கண் விழித்தவள், ஒரு கணம் அருகிலிருந்த மிதுனைப் பார்த்ததும் பயந்தாள். அவள் மிரண்டிருந்த விழிகளைப் பார்த்தவன், “நதியா கூல்.. நான் மிதுன். யூ ஆர் சேஃப் நவ்” மெல்லிய குரலில் அவன் சொல்லிட, வேகமாக எழுந்து அருகிலிருந்தவனை அணைத்துக் கொண்டாள். இப்போது அவளுக்குத் தேவை அரவணைப்பு தரும் கரம் தான். அவனும் மென்மையாக அவளை அணைத்து, அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

நீண்ட நேரத்திற்கு அப்படியே தான் இருந்தாள். அவள் பயத்தில் இருக்கிறாள் என்பது அவன் அணைத்திருந்த அவளது உடல் நடுக்கத்திலேயே தெரிந்தது. வீட்டில் இருந்து வைஷாலி மிதுனுக்கு போன் செய்தாள். ” மித்து அண்ணா.. செமினார் முடிஞ்சு என்னோட ஃப்ரெண்ட் ரதி வீட்டுக்கு போயிட்டேன். இப்போதான் வந்தேன். என்னைத் தேடினீங்களா? எதுவும் பிரச்சனையா?” பதற்றத்துடன் அவள் விசாரிக்க, 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. நீ காலேஜ் விட்டு வந்துட்டியான்னு பார்க்கச் சொன்னேன், அவ்வளவுதான். பயப்படாத, சாப்பிட்டு தூங்கு” நதியாவுக்கு ஆபத்து என்று தெரிந்தால் வைஷு கஷ்டப்படுவாள் என்பதால் எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டான். 

நதியாவை இப்படியே வீட்டிற்கு அழைத்துச் சென்றால் அம்மாவிற்கும், பாட்டிக்கும் பதில் சொல்ல முடியாது. அதனால் அன்றிரவு ஹாஸ்பிடலில் தங்கினர். விஷ்ணுவை அவளுக்கு மாற்று உடை வாங்கி வரச் சொன்னான். 

விஷ்ணு அங்கு வந்ததும், “நர்ஸை கூப்பிட்டு அவளுக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணி விட சொல்லு. அவளை சாப்பிட வை. நான் குடோனுக்கு போறேன்” என்று கிளம்பினான்.

“சொல்லுடா.. யாருடா உன்னை அனுப்புனது?” ஹோட்டலில் மாட்டியவனை அரவிந்தும் சத்யாவும் குடோனில் அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தேவ் அமர்ந்திருந்தான். நதியாவின் நிலையை பார்த்த மிதுன் மனம் பொறுக்காமல் வந்து ஆத்திரம் தீருமட்டும் அவனை அடித்தான். 

“அவ தான் என்னைத் தேடி வந்தா. அவ எப்பவும் என்கூட வர்றவ தான். நான் அவளோட பாய்ஃப்ரெண்ட்” என எவ்வளவு அடித்தாலும் அவன் கூறியதையே திரும்பக் கூறினான். வீடு, ஹோட்டல் என மொத்த சிசிடிவி புட்டேஜ் களும் மிதுன் மொபைலுக்கு வந்தது.

நதியா தான் வேகமாக வீட்டில் இருந்து கிளம்பி, டாக்சியில் ஏறி, எந்தவித பதற்றமுமின்றித் தானே அந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்திருக்கிறாள். அதைப் பார்த்த நால்வருக்கும் அதிர்ச்சி தான். 

தேவ்விற்கு நதியா மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் மற்ற மூவரும் குழம்பிப் போயினர். தேவ் முன்பு ஏதும் பேச முடியாத நிலையில் இருந்தனர். “மித்து.. நீ தேவ் கூட வீட்டுக்குப் போ. நாங்க இவன்கிட்ட எப்படி உண்மையை வர வைக்கிறதுன்னு பார்க்குறோம்” தேவ்வின் சந்தேக முகத்தைப் பார்த்து நண்பர்கள் சொல்லிட, தேவ், மிதுன் இருவரும் கிளம்பினர். 

தேவ் வீட்டிற்குச் சென்றான். நதியா அந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது. அவள் மீது அவனுக்கு சந்தேகம் வருவது இயல்பு தானே. 

ஹாஸ்பிடலுக்குச் சென்ற மிதுன் வலியில் முகம் சுருங்கித் தூங்கும் நதியாவைப் பார்த்தான். ‘நதியா தான் அவனைப் பார்க்கச் சென்றாளா?’ அவன் மூளை கேட்டிட, அவள் நடுங்கியதை உணர்ந்த மனம் சொன்னது ‘இல்லை.. இதில் வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது’ என்று.

மறுநாள் வீட்டிற்குச் சென்ற பின்பும், நதியா பயத்துடன் இறுக்கமாக இருந்தாள். ‘அவளுடைய மனம் அமைதியாகட்டும்’ என்று மிதுன் அவளிடம் இருந்து விலகியே இருந்தான். அவளோ, ‘அங்கு ஏதாவது நடந்திருக்கும் என்ற சந்தேகத்தில் தான் மிதுன் தன்னிடம் நெருங்குவதில்லை’ என நினைத்துக் கொள்ள, அவளுக்கு மேலும் வேதனையாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து… மிதுன் மெத்தைக்கு வந்ததும், “சார்.. அங்க எதும் தப்பா நடக்கல. நீங்க என்மேல சந்தேகப்படுறீங்களா?” அவள் கண்ணீரோடு கேட்க, “அப்படிலாம் இல்ல. அங்க ஒண்ணும் நடக்கலன்னு எனக்குத் தெரியும், டாக்டர் சொல்லிட்டாங்க” என்றான்.

“அப்புறம் ஏன் நீங்க நைட்….”

“அது நீ பயந்து போயிருந்த. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு தான்”

“தேங்க்ஸ்” என்றவள் சிரிக்க, “சரி சொல்லு.. உன் பாய் ஃப்ரெண்ட பார்க்க எதுக்கு ஹோட்டலுக்கு போன?” அவன் கேட்ட கேள்வியில் சிரித்த முகம் மாறி அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.

“அவன் ஒண்ணும் என் பாய்ஃப்ரெண்ட் இல்ல”

“அப்போ யாரு? நீயா தான் அவனைப் போய் பார்த்திருக்க..”

“என் ஃப்ரெண்ட்டுக்கு ஆபத்துன்னு போன் வந்தது. அதான் போனேன்” அதைக் கூறியவளின் கண்களில் உண்மை இல்லை என அறிந்து கொண்டவன்,

“அப்போ நீ என்கிட்ட தான சொல்லியிருக்கணும். நீ என்னோட பொறுப்புல இருக்க. உனக்கு ஏதாவது ஆபத்துனா அது எனக்குத் தான் பெரிய பிரச்சனையாகும்” என்றான்.

“அது.. அப்போ.. பதட்ட..த்துல தோண..ல…” அவள் வார்த்தைகள் தந்தியடித்தன.

“உன்னோட செல்போனைக் குடு”

“என்னோட போன் எதுக்கு? அதெல்லாம் அக்ரிமெண்ட்ல இல்ல. நீங்க ரொம்ப பண்றீங்க” என்றவளின் கன்னத்தை ஓர் அறையில் சிவக்க வைத்திருந்தான். அவன் கொடுத்த அறையில் அவள் நிலைகுலைந்து மெத்தையில் விழுந்திருந்தாள்.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page