அத்தியாயம் 13
அவனுடைய முக பாவனை கொஞ்சம் கொஞ்சமாக மாறவும் அதை கவனித்த மித்ரா அவனிடமிருந்து விடுப்பட்டு கட்டிலிலிருந்து இறங்கி குளியலறைக்குள் சென்றாள்.
அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அவள் வேகமாக குளியலறைக்குள் வந்து ஆடைகளை களைந்து குளிக்க தொடங்கி விட்டாள்.. ஆனால் அதன் பிறகு தான் அவள் துவட்டிக் கொள்வதற்கு துண்டும் உடுத்திக் கொள்ள உடையும் எடுத்து வராதது அப்பொழுதுதான் அவளுடைய மூளைக்கு உரைத்தது..!!
‘ அடக்கடவுளே நான் பாட்டுக்கு குளிக்க வந்துட்டேன் இப்ப போட்டுக்க டிரஸ் கூட இல்ல அட்லீஸ்ட் துண்டை சுத்திக்கிட்டு வெளியே போயிடலாம்னு பார்த்தால் துண்டை கூட எடுக்க மறந்து வேகமாக உள்ளே வந்துட்டேன் இப்போ என்ன பண்றது ?? இப்படியே வெளியே போனா நல்லா இருக்காதே.. வெளிய வேற அந்த அரக்கன் இருப்பான்.. இப்போ என்ன பண்ணலாம் பேசாம அவன் கிட்டேயே உதவி கேட்கலாமா?? வேற வழி இல்ல அவன்கிட்ட தான் கேட்டாகணும் ‘, என்று தலையில் அடித்துக் கொண்டு மெல்ல கதவை திறந்து பார்த்தாள் அவன் அங்கே இருக்கிறானா என்று.
நல்லவேளை தீரன் இன்னமும் மெத்தையில் படுத்துக்கொண்டு மொபைலை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்..
என்னங்க என்று அன்பாக அழைப்பதற்கு அவன் ஒன்னும் அன்பான கணவனும் கிடையாது.. பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பனும் கிடையாது.. பிறகு என்னவென்று அழைத்து அவனிடம் உதவி கேட்பது என்று சிந்தித்தாள்.
” இங்க கொஞ்சம் பாருங்க நான் பேசுறது கேக்குதா.. இங்க பாருங்க..”, கதவிடுக்கிலிருந்து தலையை நீட்டி அவனை பார்த்து அழைத்தாள் மித்ரா.
சாதூரியமாக அவனை என்னங்க என்று அழைப்பதையும் அல்லது அவனுடைய பெயரை உச்சரிப்பதையும் தவிர்த்து விட்டாள் அவள்..!!
இவன் குரல் கேட்டவுடன் என்னவென்று நிமிர்ந்து பார்த்தான் அவன்..
“ மறந்து போய் எதையும் எடுக்காமல் வந்துட்டேன் கொஞ்சம் டவல் மட்டும் எடுத்து கொடுக்குறீங்களா??”
“ம்ம்”, என்றான் நமுட்டு சிரிப்புடன்.
” பெரிய இவளாட்டம், நான் கிட்ட வரவும் கோச்சிக்கிட்டு போனா.. இப்போ போட்டுக்க துணியை மறந்துட்டு போயிருக்கா ரொம்ப அறிவு தான்..”, வாய்க்குள் முணுமுணுத்தவன் அங்கிருந்த பிங்க் நிற டவலை அவளிடம் எடுத்து கொடுத்தான்.
கதவு சந்தில் வெளியே வந்த அவளுடைய வெண்டை பிஞ்சு விரல்கள் தண்ணீர் பட்டு பளபளத்து..
சிறிது நேரமாவது தன் கைக்குள் அந்த விரல்களை அடக்கி வருடி கொடுக்க வேண்டும் என்கிற ஆவல் அவன் மனதிற்குள் தோன்றியது..
எங்கே?? லேசாக தொட்டால் கூட தொட்டாச்சிணுங்கி போல முகத்தை சுருக்கி கொள்கிறாளே.. என்று யோசித்தவன் தன் ஆவலை அடக்க முடியாமல் டவலை வாங்கும் அவளுடைய கை விரல்களை மென்மையாக வருடினான்..
கிடைக்கும் கேப்பில் சின்ன சின்னதாக ரொமான்ஸ் செய்யப் பார்த்தான் கள்வன்..
ஆனால் அவளோ வெடுக்கென்று கையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
வெளியே வந்து தானே ஆகணும் அப்ப இருக்குடி உனக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அவளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
எண்ணி ஐந்தே நிமிடத்தில் வெளியே வந்தாள் அவள்..
அந்த ஒற்றை பிங்க் நிற டவல் அவளுடைய மேனியை போர்த்தியிருந்தது..
தண்ணீர் சொட்ட சொட்ட ஈர மேனியுடன் வெளியே வந்தவளை வாயை பிளந்து கொண்டு பார்த்தான் அவன்.
ஏதோ இதற்கு முன்பாக பெண்களையே பார்க்காதவன் போல அவளை அப்படி பார்த்து வைத்தான்..
உலக அழகி போல அழகு இல்லை என்றாலும் அவனுடைய உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவிற்கு அழகை சேமித்து வைத்திருந்தாள் அவள்..
அவளுடைய உடல் வளைவு நெளிவுகள் அப்பட்டமாக தெரிய.. தோள்வளைவில் கிடந்த நீர் துளிகள் வைரமாய் ஜொலித்தது..!!
அவனுக்குள்ளிருந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் வண்ணம் கை முஷ்டி இறுக நின்றிருந்தான் அவன்.
இறுக கண்களை ஒரு முறை மூடி திறந்தவன் இதற்கு மேல் தாங்க முடியாது என்பதை போல் ஓடிச்சென்று பின்னிருந்து அவளை அணைத்து கொண்டான் இறுக்கமாக..
இந்த மாதிரி ஏதாவது சில்மிஷ வேலைகள் அவன் செய்வான் என்று நினைத்துதான் அவள் வேகமாக உடையை உடுத்தி விடலாம் என்று வேகமாக கையில் எடுத்தாள் அதற்குள் அவன் தன் சாகசங்களை காட்டத் தொடங்கி விட்டான்..
இயல்பாகவே அவள் மேனியில் வீசும் அந்த மெல்லிய நறுமணத்தை தாண்டி அந்த சோப்பின் மணம் அவன் மூக்கை துளைத்தது..!!
ஆழ மூச்செடுத்து சுவாசித்தவன் அவளுடைய கழுத்து வளைவில் முத்தமிட்டான் அழுத்தமாக..
” விடுங்க என்னை விடுங்க.. ஒரு மாதிரி இருக்கு”, என்று கூறியவள் வேகமாக அவனை தள்ளி விட்டு விட்டு ஓடி சென்று நின்று கொண்டாள்.
” இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி நடந்துக்கிற??”, என்று கர்ஜித்தான் தீரன்.
ஆசையாக நெருங்கி வந்தவனை அவள் தள்ளி விட்டதில் கடும் கோபம் கொண்டான் அவன்..
“ இல்லை எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அவசரமா வெளியே கிளம்பிட்டிருக்கேன் அதான்”
“ எங்க??”
“ அதெல்லாம் உங்க கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை”
“ சொல்லித்தான் ஆகணும்”
” முடியாதுன்னு சொன்னா என்ன செய்வீங்க?? நான் எங்க போறேன் என்ன பண்றேன் இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லியே ஆகணும்னா நீங்க டீல் பேசினீங்க என்கிட்ட..?? உங்க டீலர்ஷிப் வேற விஷயத்தை பற்றி தானே??”, அவனைப்மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த வண்ணம் ஜாடையாக கேள்வி கேட்டாள் அவள்.
உஷ்ணமாக மூச்சு காற்று வெளியேற அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவன் கோவம் தாங்காமல் வேகமாக குளியலறைக்குள் சென்று கதவை அறைந்து சாற்றினான்..
அவன் வெளியே வருவதற்குள் வேகமாக கிளம்பி தயாராகி வெளியே சென்று விட்டாள் மித்ரா.
வந்ததும் அறை முழுக்க தேடினான்.. பால்கனி பக்கம் எட்டிப் பார்த்தான் ஆனால் அவள் எங்கேயும் இல்லை..
அவன் வருவதற்குள் அவசரமாக தயாராகி வெளியே சென்று விட்டாள் என்பதை அறிந்து கொண்டான்.. உடனே பற்களை கடித்துக் கொண்டு அவள் மீதுள்ள கோபத்தை அருகில் இருந்த மேஜை மீது காட்டினான்.
அவனும் அவசர அவசரமாக தயாராகிக் கீழே வந்து தன் அன்னையிடம் அவள் எங்கே என்று விசாரிக்க..
“என்னமோ முக்கியமான வேலைன்னு சொல்லிட்டு இப்பதான்பா கிளம்பி போறா.. சரியா சாப்பிட கூட இல்லை என்ன பிள்ளையோ?? ஆமா ஏதாவது நீ முக்கியமான வேலை கொடுத்திருந்தியா அதனாலதான் அவ கிளம்பி வெளியே போறாளா?? காரணம் கேட்டதுக்கு எதுவும் சொல்லல வந்து சொல்றேன் அப்படின்னு சொல்லிட்டு வேகமா கிளம்பி போயிட்டா”, என்றார் வசுந்தரா.
அப்படி அம்மாவிடம் கூட சொல்லாமல் எங்கே போய் இருப்பாள்?? என்கிட்டயும் ஒன்னும் சொல்லல சரியான திமிரு புடிச்சவளா இருப்பா போலருக்கு.. அப்படி என்ன பெரிய வேலை வந்துடுச்சு இவளுக்கு?? அவதான் இப்போ எங்கேயும் வேலைக்கு போகல இல்ல.. ஒருவேளை கோயிலுக்கு போறாளோ?? அப்படி போறதா இருந்தா அம்மா கிட்ட சொல்லிட்டு போயிருப்பாளே.. சொல்லாம அவசரமா போற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயமா இருக்கும்??, என்று கேள்விகள் அவன் மனசுக்குள் அலையலையென கிளம்பியது..!!
“ உக்காரு தீரா நீயாவது சாப்பிட்டு போ..”
” இல்லம்மா எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் இப்ப கிளம்புறேன் நீங்க சாப்பிடுங்க”, என்று கூறிவிட்டு அவனும் வேகமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
போகும் வழியெங்கும் அவள் எங்காவது தென்படுகிறாளா என்று கவனித்துக் கொண்டே காரை ஓட்டினான்.. இரண்டு தெருக்களை கடக்கும் வரை அவள் அவன் கண்ணில் படவே இல்லை ஆனால் அதன் பிறகு பேருந்து நிறுத்தத்தை தாண்டி பத்தடி தூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தாள் அகமித்ரா.
வேகமாக காரை அவள் அருகே கொண்டு போய் நிறுத்தி எதற்காக வீட்டில் காரணம் சொல்லாமல் வெளியே கிளம்பி வந்தாய் என்று கேள்வி கேட்க தோன்றியது அவனுக்கு.. ஆனால் அப்படி கேட்பதால் அவளிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை என்று நன்றாகவே அவனுக்கு தெரியும்..
அதனால் காரை நிறுத்தாமல் மெதுவாக அவளை பின்தொடர்ந்த வண்ணம் ஓட்டி சென்றான்.
வேக வேகமாக நடந்தவள் பிறகு அந்த மூன்று மாடி கட்டடத்தின் முன்பு வந்து நின்றாள்.
வாசலில் இருக்கும் செக்யூரிட்டியிடம் எதையோ கேட்டு விட்டு உள்ளே நுழைந்து விட்டாள் மித்ரா.
அந்த பில்டிங் மீது விமலா காம்ப்ளக்ஸ் என்று எழுதியிருந்தது..
எதுக்காக இங்க வந்திருக்கா?? யாரை பார்க்க வந்திருப்பா ?? என்று யோசித்துக் கொண்டே அவனும் காரை ஓரமாக நிப்பாட்டி விட்டு அந்த காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைந்தான்.
இவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட செக்யூரிட்டி அவனுக்கு வழி விட்டுவிட்டு சல்யூட் அடித்தான்..
சிறுதலையசைப்புடன் அதைப் ஏற்று கொண்டு கம்பீரமாக உள்ளே நுழைந்த தீரன்..
அங்கே கண்ட காட்சியை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தான்..!!
காரணம் அங்கே மித்ராவும் அவளுடைய நண்பன் அருணும் நின்று கொண்டு சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவ எதுக்காக இப்போ அவனை பார்க்க வந்திருக்கா?? அன்னைக்கே இவனை பார்க்க கூடாது பேச கூடாதுன்னு சொல்லியும் கேட்கவில்லை.. என்ன நினைச்சுகிட்டு இருக்கா இவ மனசுல?? என் பேச்சை கேட்கவே கூடாது அப்படிங்கிற முடிவில் இருக்காளா?? அவன் கிட்ட மட்டும் இப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறாளே அப்படி என்ன இருக்கு அவன் கிட்ட?? என்னை பார்த்தால் மட்டும் முறைக்கிறா சிணுங்குறா விலகுறா.. என்னை பார்த்தால் இவளுக்கு எப்படி தெரியுது??
அவனத்தான் புடிச்சிருக்குன்னா பேசாம அவனையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டை போட்டுட்டு அவன் கூட சிரிச்சு பேசணும்??
டேய்.. நீ என்ன முறைப்படி தாலி கட்டி அவ கூட குடும்பம் நடத்தி சந்தோஷமா வாழ்றதுக்காகவா அவ கழுத்துல மூணு முடிச்சு போட்ட?? நல்லா ஞாபகப்படுத்தி பாரு கிட்டத்தட்ட ஒப்பந்த கல்யாணம் போல தானே உன்னுடைய கல்யாணம் நடந்தது அப்புறம் என்னடா உனக்கு கோவம் வருது அவ மேல ?? அவ யார் கூட பேசினா உனக்கு என்ன சிரிச்சா உனக்கு என்ன?? உனக்கு தேவை சந்தோஷம் திருப்தி இது மட்டும் தானே அப்புறம் என்ன?? எதுக்கு இந்த தேவையில்லாத பொஸசிவ்னஸ்?? என்று அவனுடைய மனசாட்சி இன்னொரு பக்கம் அவனைப் பார்த்து கேள்வி கேட்டது..!!
என்னவாக வேணுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே அதான் நான் தாலி கட்டிட்டேனே இப்போ எனக்கு பொண்டாட்டி தானே?? அப்ப என் பேச்சைக் கேட்டுதானே ஆகணும்.. அவளுக்கு என்கிட்ட பேச பிடிக்கல ஆனால் அவன் கிட்ட மட்டும் பேச பிடிக்குதா ??இது எந்த விதத்தில் நியாயம் ??இப்ப காலையில் கூட என்கிட்ட அப்படி மூஞ்சி காட்டிட்டு போனா இவன் கிட்ட சிரிச்சு பேசுறா.. எதுக்காக வீட்டில யாருகிட்டயும் எதுவும் சொல்லாமல் ரகசியமா இவனை வந்து சந்திக்கணும் இப்படி பேசணும் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா அவ மனசுல ??அவளுக்கு இன்னைக்கு இருக்கு, என்று கோபமாக மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் வேகமாக அவர்களை நோக்கி எட்டி நடை போட்டான்.
ஆனால் அவன் அவர்களை நெருங்குவதற்குள்.. அவர்கள் இருவரும் அங்கிருந்து லிஃப்டிற்குள் சென்று விட்டனர்..!!
– தொடரும்..
