பாகம் – 13
அமிர்தனை கூட கொஞ்சம் திருத்தி விடலாம் போல.. மித்ராவை தான் சரி செய்ய முடியவில்லை அரவிந்தால்.. பையனுக்கு மூன்று வயதாகவும் என்னதான் செய்யப் போகிறாள் என்று பொறுமையாக இருக்கிறான்..மகனை ஸ்கூலில் சேர்க்க சொல்லி அவளாக வருவாள் என்று அமைதியாய் காத்திருக்கிறான்..
இப்பொழுதே அமிர்தன் எல்லாவற்றிற்கும் அடம் செய்ய தொடங்குகிறான் ..அவன் சொன்னால் சொன்னதுதான்.. அவன் கேட்டால் கேட்ட பொருள் தான் ..அதில் பின்வாங்கவே இல்லை அவன்.. அழுது அடம் செய்தாவது அவன் சொன்னதை சாதித்து விடுகிறான்..
பிள்ளையை செல்லம் கொடுத்தே வீண் அடித்து விடுவாளோ .ஆறில் வளையாதது பிறகு அறுபதில் வளையாது என்று பயமாகிறது அவனுக்கு..
பள்ளி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியும் அவள் வாயை திறக்க காணோம்..அதற்கு மேல் பொறுமையை இழந்தவன்,
“என்னடி எல்லாரும் மூன்று வயதுக்கு குழந்தைகளை ஸ்கூலுக்கு சேர்த்து விடுகிறார்கள்.. நீ மட்டும் இன்னும் தூக்கி வைத்து பால் கொடுத்து கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறாயா..”
” ஏங்க இப்படி அநியாயமாக அபாண்டமாக பேசுகிறீர்கள்..நான் தான் உங்கள் தொந்தரவு தாங்க முடியாமல் ஒன்றரை வயசுக்கே பாலை நிறுத்தி விட்டேனே .. இன்னமும் அதையே சொல்லிக் கொண்டு இருக்கீங்க..”
“பெரிய அதிசயம் தான்டி ..மகன் ஏங்கி விடுவான் என்று இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறாயோ என்று நினைத்தேன்..”
” ஏன் உங்களுக்கு தெரியாதா.. நான் எப்படி வைத்திருக்கிறேன் என்று .. “
“எனக்கு எப்படி டி தெரியும்.. நீயும் என்னிடம் முன்பு மாதிரி அதிகம் பேசுவதில்லை.. அதே போலவே உன் மகனையும் வளர்த்து விட்டாய் .என் அம்மா அப்பாவிடம் தான் அவன் ஒட்டவில்லை என்றால், என்னிடமும் பாசமாக இருக்க மாட்டேன் என்கிறான்.. நானும் அவனிடம் எப்படி எப்படியோ பொருந்தப் பார்க்கிறேன்.. என்னால் முடியவில்லை..நீதான் ஆரம்பத்தில் இருந்தே பிரித்து விட்டாயே..”
எப்படி பேசினாலும் குழந்தையை வைத்து தான் இருவருக்கும் சண்டை வருகிறது.. அவள் உடனே அழத் தொடங்குகிறாள்.. அவளுக்கே தெரிகிறது .தான் செய்த தவறு அது என்று ..
“நான் ஆரம்பத்தில் அதிக பாசத்தினால் அப்படி செய்தேங்க.. அப்புறம் நான் இது மாதிரி செய்யவே இல்லை ..ஆனாலும் அவன் என்னை விட்டு நகர மாட்டேன் என்கிறான் ..சில சமயம் அடித்தும் பார்த்து விட்டேன் ..அவன் கேட்க மறுக்கிறான்.. நான் என்ன செய்வது.. “
மனைவி தன் தவறை உணர்ந்து பேசவும் அவளை சமாதானம் செய்கிறான் ..
“சரி டி அவன் இப்படி சின்ன குழந்தையாகவேவா இருக்கப் போகிறான் ..வளர வளர எல்லாம் மாறி விடும் கவலைப்படாதே.. இதைப்பற்றி பேசி நாம் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் .. ஆனாலும் ஏதாவது வேண்டுமென்றால் மட்டும் என்னிடம் வருகிறான்டி. அதை மட்டும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான்.. அதை வாங்கி முடித்ததுமே அம்மாவிடம் போக வேண்டும் என்கிறான். கொஞ்ச நேரம் தாமதம் ஆனால் ஆழத் தொடங்கி விடுகிறான்.. ரோட்டில் என்னை பிள்ளையை கடத்தி வந்தவன் மாதிரி பார்க்கிறாங்க.. அதனாலயே அவன் எப்போது வீட்டுக்கு வரவேண்டும் என்று சொல்கிறானோ.. உடனே அழைத்து வந்து விடுகிறேன்.. எல்லாம் மாறுகிறதா என்று பார்ப்போம் ..ஹும் என ஏக்கப் பெருமூச்சு விடுகிறான்..
பொறுத்து பொறுத்து பார்த்தவன், ” ஏன்டி பிள்ளையை ஸ்கூல் சேர்க்க வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா..” கேட்டே விடுகிறான் ..
” இல்லைங்க அவன் ரொம்ப குட்டி பிள்ளையா இருக்கான்.. அதனால நான்கு வயதிற்கு தான் சேர்க்கப் போகிறேன்..”
” எல்லா பிள்ளைகளும் இவன் வயசுக்கு யுகேஜி போயிடும் ..இவன் எல்கேஜ்லயே உட்கார்ந்து இருப்பான் .. எல்லா பசங்களும் இவனை கிண்டல் செய்ய போறாங்க பாரு..”
உடனே மித்ரா சண்டை போடுகிறாள். “ஆமா என் காலத்துல எல்லாம் என் அம்மா ஆறு வயசுக்கு தான் முதல் வகுப்பில் சேர்த்து விட்டாங்க.. நான் என்ன படிக்காமலா இருந்தேன்..ஒரு வருஷம் அவன் வீட்டில் இருக்கட்டும்.. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. “
இவள் எதற்கும் சரிப்பட்டு வர மாட்டாள் என்று முடிவு செய்தவன் ஏதாவது செய்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுகிறான் ..அமிர்தனுக்கு நான்கு வயதும் ஆகி விட்டது..
மித்ராவின் கடைசி தங்கையைத் தவிர மற்ற இருவருக்கும் திருமணமாகி அவர்களுக்கு பெண் குழந்தையும் இருக்கிறது.. இதை கிண்டலாக தான் கேட்டான்..
“என்னடி உங்க அம்மா வீட்டு வகையில வெறும் பெண் குழந்தைகளாகவே இருக்கு.. உனக்கு மட்டும் தான் என்னமோ அதிசயமா ஆண் குழந்தை பிறந்து இருக்கு என்றதும்.. “கேட்டு வாயை மூடுவதற்குள்ளேயே அவள் கத்தத் தொடங்குகிறாள் ..
” அப்படி என்றால் என்னை சந்தேகப்படுறீங்களா..”
இதைக் கேட்டதுமே அரவிந்த் அவளை அடிக்கவே வந்து விடுகிறான் .. “நீ ஏற்கனவே ஒரு முறை இப்படித்தான் கேட்டாய் ..என்னை நான் எப்படி நிரூபிப்பது என்று தெரியவில்லைடி.. நான் என்ன அனுமனா..நெஞ்சை பிளந்து ராமனும் சீதா மட்டும்தான் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்கு.. என் மனம் முழுக்க நீயும் என் பிள்ளை மட்டும் தான் இருக்கீங்க.. நான் சந்தேகத்துடனா பேசுகிறேன் .நான் பேசும் தொனியை கூடவா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..நான் விளையாட்டாய் கேட்டேன் . “
” இல்ல இது சரிப்பட்டு வராது. உனக்கு ஏதோ மனநோய் மாதிரி இருக்கு .உன் வீட்டில் பெண் குழந்தைகள் பிறக்க பிறக்க உன் முகமே வேறு மாதிரியாக மாறி விடுகிறது ..ஏன் இப்படி இருக்கிறாய் ..எல்லார் மாதிரியும் இயல்பாக இருந்தால் என்ன . டாக்டரிடம் காட்டி விட்டு வருவோம் முதலில் கிளம்பி தயாராய் இரு ..” என்கிறான்..
உடனே அவன் காலில் விழுந்து கதறுகிறாள் . “நான் தெரியாமல் பேசி விட்டேங்க.. எனக்கு உண்மையிலேயே பைத்தியம் தான் பிடித்து விட்டது ..அதை போய் ஏன் டாக்டரிடம் காட்டிக் கொண்டு.. நான் எந்த டாக்டரிடமும் வர மாட்டேங்க.. என் பிள்ளைக்கு நான் பைத்தியம் என்று தெரிந்தால் அவன் என்னோடு வாழவே பயப்படத் தொடங்கி விடுவான் .. “
“உனக்கு பைத்தியம் எல்லாம் இல்லை.. திமிரு டி அதுதான் ஜாஸ்தியா இருக்கு.. முதலில் டாக்டரிடம் காட்டி கவுன்சிலிங் பண்ணி விட்டு வருவோம். “
” நான் வர மாட்டேங்க.. அப்படி பிடிவாதமாய் என்னை அழைத்துச் செல்ல முயற்சித்தீர்கள் என்றால் என் பிணம் தான் வரும் .. “
” அய்யய்ய ஒரு சாதாரண விஷயத்திற்கு போய் ஏன்டி இப்படி பாடாய் படுத்துகிறாயோ ..ச்சே உன்னிடம் பேசவே எனக்கு எரிச்சலாய் வருகிறது.. நீயும் உன் பிள்ளையும் உன் அம்மா வீட்டில் போய் கொஞ்ச நாள் தங்கி விட்டு வாங்க .. அப்போதாவது உன் மனநிலை மாறுகிறதா என்று பார்ப்போம்.. “
” இல்லைங்க நான் உங்களை விட்டு போக மாட்டேன். என்னால உங்களை பிரிந்து வாழ முடியாது ..நான் என்ன தவறு செய்தேன் .. எதற்காக என்னை துன்புறுத்துகிறீர்கள்.. “
“இதை நான் கேட்கணும்டி .சாதாரணமா பேசினால் கூட என்னை சந்தேகப்படுறீங்களான்னு நீதான் வம்பு செய்கிறாய்..யார் சண்டை போடுறார்கள் என்று தெரியவில்லை :உன்னிடம் பேசாமல் மௌன விரதம் இருந்தால் தான் சரி வரும் என்று நினைக்கிறேன்..”
அதன் பிறகு சில மாதங்கள் அமைதியாக செய்கிறது.. அவனும் இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையுமே கவனித்துப் பார்க்கிறான்..
‘இப்படி ஏதாவது சண்டை வந்தால் தான் கொஞ்ச நாள் ஒழுங்காக இருக்கிறாள்.. பிறகு திரும்பவும் இப்படித்தான் பேசுகிறாள்.., என்று.
இப்பொழுது எல்லாம் அவனுக்கு ஏனோ இந்த சந்தேகமும் வருகிறது ..ஆனால் அதை நினைத்து பார்ப்பதற்கே அவன் மனம் கூசுகிறது .. ‘நான் ஏன் இப்படி மோசமானவனாக மாறி விட்டேன்.., என்று..
அவன் அமிர்தன் தூங்குவது சாப்பிடுவது நடப்பது என்று ஒவ்வொன்றையும் கருத்து கொண்டு கவனிக்கிறான் .. தான் செய்வது தவறு என்று புரிந்துமே அவனை அவன் மனம் இதை செய்யத் தூண்டுகிறது
‘இவனுக்கு ஏன் என்னுடைய சாயல் கொஞ்சம் கூட இல்லை ..அட என் அப்பா மாதிரியாவது இருக்க வேண்டாமா..பிறந்த போது சுருள் முடியை பற்றி கேட்டதற்கு கொள்ளு தாத்தாவின் கொள்ளு தாத்தாவுக்கு இப்படித்தான் இருக்கும் என்று அம்மா கிழவி சொல்லி விட்டது ..அது உண்மையா பொய்யா என்று அம்மாவுக்கே தெரியாது .யாரோ சொல் வழியாய் கேட்டது தான்..,
ஆனாலும் என் மித்ராவை நான் எப்படி சந்தேகப்படுவது.. என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டாளே ..என் புத்தி ஏன் இப்படி ஆகி விட்டது.. ” என்று அவளை சந்தேகப்பட்டதற்காகவே தன் தலையில் மடேர் மடேர் என்று அடித்துக் கொள்கிறான் ..
‘அவளை சுலபமாக கவுன்சிலிங் செய்ய கூப்பிட்டு விட்டேன்.. என்னை எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போய் காட்டுவது.., என்று ஒரே குழப்பமாகிறது. அவன் தலையே வெடித்து விடும் போல.. யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ஒரு காரணம்தானோ என்று யோசிக்கிறான்..ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனுக்கு இந்த சிந்தனை மட்டும் தான் மனதில் ஓடுகிறது.
ஒவ்வொன்றையும் இப்பொழுது கூர்ந்து கவனிக்க தொடங்குகிறான்.. இடையே மனைவியை நறுக்கென்றும் பேசுகிறான்… கிட்டதட்ட மனநோயாளி மாதிரி தான் ஆகி விடுகிறான் அரவிந்த் ..
அவளால் தான் வாயை திறக்க முடியவில்லை.. சண்டை போட்டால் உடனே டாக்டரிடம் போவோம் என்கிறான் என்று..
கயல் அவனைப் பார்த்து மிகவும் கவலைப்படுகிறார் .. “உனக்கு என்னதான்டா ஆனது. ஏன் இப்படி ஆகி விட்டாய் ..பார் எப்படி ஆகி விட்டாய் என்று.. இளைத்து , கருத்து ,துரும்பாய் பாதி உடம்பாய் போய் விட்டாய். என்னிடம் தான் உன் கவலை என்னவென்று சொல்லேன் .. என்னால எப்படியாவது சரி செய்ய முடிகிறதா என்று பார்க்கிறேன்..”
” அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நான் ஒரு பைத்தியம் ..அப்படித்தான் இருப்பேன். . “விரக்தியாய் பேசி விட்டு நகர்கிறான் ..
” நேரம் நல்லா இல்ல போலங்க.. அதனாலதான் மூன்று பேரும் திசைக்கு ஒன்றாய் இருக்காங்க .எப்பொழுது இவனுக்கு நல்ல நேரம் வரப்போகிறதோ.. ” என்று பெற்றவர்கள் கவலைப்படுகிறார்கள் ..
அரவிந்த் சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை வருவதால் இப்பொழுது மித்ரா தன் மகனை தாத்தா பாட்டியிடம் நன்றாக விளையாட விடுகிறாள்..
தன் அம்மாவை போலவே அமிர்தனுக்கும் மாறன் தாத்தா உடன் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்வதும் விளையாடுவதும் ரொம்ப பிடித்து இருக்கிறது ..
தொடரும்.
