அத்தியாயம்-14

அவளும் முத்தம் கொடுக்கலாம் என்று நினைக்க கதவு தட்டும் சத்தம் கேட்டவுடன்  அப்படியே அந்த போனை உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு சென்று கதவை திறந்தவள் “என்னடி பண்ணிட்டு இருந்த கதவை சாத்திட்டு?”  என்றால் பவித்ரா.

” இல்ல ஒன்னும் இல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு இருந்தேன்?”  என்று கூற

” இல்லையே நீ அதே ட்ரெஸ்ல தான் இருக்கிற மாதிரி இருக்கு !” என்ற  பவித்ரா கேட்டால்.

” இல்ல இனிமேதான் பண்ண போறேன்னு சொன்னேன்!”  என்று பெயருக்கு வேறு ஒரு உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தால். 

கதவில் சாய்ந்தவள் அப்பாடா என்று சொல்லி நெஞ்சில் கை வைக்க அப்பொழுதுதான் போனை சட்டையில் போட்டது ஞாபகம் வர வேகமாக அதை எடுத்து பார்க்க கரணும் என்னவென்று சொல்ல முடியாத ஒரு நிலையில் அமர்ந்திருந்தான். முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியாத குறை தான். அதைக் கண்ட அவள் முகம் சிவந்து போக உதட்டை கடித்து அதை கட்டுப்படுத்தினால்..

ஆனால் அவன்  முகம் சட்டென்று  கோபத்தை தத்தெடுத்துக் கொள்ள 

“என்னாச்சு இவ்வளவு நேரம் சிரிச்சிட்டு இருந்தீங்க இப்போ கோவப்படுறீங்க?”  என்றால் தன்னை சகஜமாக காட்டிக் கொள்கிறாளாம். 

“இல்லடி நான் ஏன் லவ்வர் கிட்ட இருந்து ஒரு முத்தம் தான் கேட்டேன் ஆனா எனக்கு அவ பயங்கர ஷோவே காமிச்சிட்டா திடீர்னு அது இப்போ இல்லாம போயிடுச்சா அது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு!”  என்றான் அவனும் சீரியஸ் ஆக. 

அதில் அவனை முறைத்துப் பார்க்க தற்பொழுது அவனின் பார்வையில் காமமும் கலந்து இருந்தது.

” சூப்பரா இருந்தது ஆனா என்கிட்ட பண்ண மாதிரி இனிமே யார்கிட்டயும் பண்ணாத சரியா எனக்கும் இன்னும் உன்கிட்ட கேட்கணும்னு ஆசையா தான் இருக்கு ஆனா அது தப்பு படிக்கிற பொண்ணு உன் மனசுல தப்பான ஆசையை வளர்க்க கூடாதுன்னு தான் நானும் என்ன கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்கிட்ட இருந்து வட்டியும் முதலமா சேர்த்து வசூல் பண்ணிக்கிறேன்!” என்றவன் 

அவளை சகஜமாக்கும் பொருட்டு வேறு விஷயங்கள் பேச அவளும் அவனுடைய நல்ல குணத்தை எண்ணி மனதிற்குள் மெச்சி கொண்டவள் சிறிது நேரம் பேசி விட்டு “டிரஸ் மாத்த பாத்ரூமுக்கு வந்திருக்க போல சரி சரி அப்படியே கொஞ்சம் போன அங்க வச்சுட்டு டிரஸ் மாத்து நானும் பார்த்துக் கொள்கிறேன்!”  என்றான் வேண்டுமென்றே கிண்டல் செய்யும் நோக்கில். 

அதில் அவனை முறைத்து பார்த்தவள் “பிச்சுபிச்சு! பேட் பாய்!”  என்று  வெட்கத்துடன் கூறியவள்

” பாய் கரண் !” என்று கூறி காலை கட் செய்ய அதில் சிரித்தவன் “இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரி தான்!”  என்று சொல்லிக் கொண்டு படுக்கையில் சிரித்த முகத்துடன் வந்து விழுந்தான். 

மீண்டும் மறுநாள் காலை அனைவரும் அதே கம்பெனியில் இருக்கும் வேறு ஒரு இடத்திற்கு சென்று பார்த்துக் கொண்டிருக்க தனது தோழிகளுக்கு கண்ணை காட்டிய ஆராத்யா  தனது அப்பாவிடம் இருந்து வாங்கிய ஒரு நபரின் நம்பரை காண்டாக்ட் செய்ய  அவரும் இவளிடம்  பேசிவிட்டு  அந்த இடத்திற்கு இவளை தேடி  வந்தார். 

அவரை  பார்த்தவள் “அப்பா உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன் சொன்னதெல்லாம் ரெடியா இருக்கா?”  என்றால்.

அவரும் தயக்கத்துடன் இவளை பார்த்தார் . “என்ன எங்க அப்பா பேச்சையே எதிர்க்கலானு முடிவு பண்ணிட்டீங்க அப்போ உங்களுக்கு வேலை வேண்டாமா?”  என்று மிரட்ட

” அய்யோ அப்படி இல்ல மேடம் நீங்க சொன்னதெல்லாம் சரியா இருக்கு ஆனா எங்க பாஸ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் எனக்கு எதுவும் ஆகாதுங்களே?”  என்றார் மீண்டும்.

” கவலைப்படாதீங்க!”  என்றவள் “உங்க போன எடுத்துப் பாருங்க!”  என்று கூற அதில் அவர் எண்ணுக்கு ஒரு லட்ச ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்க 

அதை பார்த்து சிரித்தவர் “ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்னதெல்லாம் கரெக்டா இருக்கு! நீங்க அந்த இடத்துக்கு வந்த உடனே சிக்னல் மட்டும் குடுங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன் !” என்றார். 

“சரி! ஜாக்கிரதையா பண்ணுங்க சந்தேகம் வராம பண்ணுங்க!”  என்றவள்  தனது தோழிய அழைத்துக் கொண்டு வந்து மற்ற  மாணவர்களுடன் ஐக்கியமானால்.

” என்னடி பிளான் பண்ணி இருக்க?”  என்று கேட்டால் அந்தத் தோழியும் மெதுவான குரலில் .

“அந்த கரண இன்னிக்கு எப்படியாவது என் கூட கொஞ்ச நேரம் தனியாக இருக்க வச்சா போதும்!”  என்று திட்டத்தை கூறியவள் 

“அதுக்கு தான் இவரை எங்க அப்பா கிட்ட கேட்டு ஏற்பாடு பண்ணி இருக்கேன்!  நீயும் எனக்கு ஹெல்ப் பண்ணனும் கரெக்டா ஒரு மணி நேரம் கழித்து அந்த இடத்துக்கு வந்து நான் சொல்ற மாதிரி செஞ்சின்னா உனக்கும் நிறைய பெனிபிட் கிடைக்கும்!”  என்றால் ஆராத்யா 

அவளும் சரி என்று பல் இழுத்துக் கொண்டு தனது தோழிக்கு உதவ தயாரானால்.

இவர்கள் அலுவலகத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இடத்தில் பொருட்கள் எல்லாம் அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும் வேர்ஹவுசை பார்த்துவிட்டு வெளியேறினர்.

மற்ற மாணவர்கள் மொத்தமும் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆராத்யா தனக்கு முன்னால் போனை பார்த்து சிரித்துக் கொண்டு மெதுவாக சென்று கொண்டிருக்கும் கரணை  பார்த்தவள் அவனுக்கு கேட்கும் விதமாக 

“அய்யோ என்னோட பிரேஸ்லெட் காணோமே எங்க அப்பா கேட்டா நான் என்ன சொல்லுவேன் அவரு எனக்கு ஆசையா வாங்கி கொடுத்தது?”  என்று அவனுக்கு கேட்கும் குரலில் சத்தமாக அழுதால். 

அதில் சுற்றம் உணர்ந்தவன் மொபைலை அனைத்து விட்டு  திரும்பி பார்க்க அனைவரும் சென்று இருந்தனர். 

இவர்கள் இருவர் மட்டும் இருந்ததை பார்த்துவிட்டு செல்லலாம் என்று பார்க்க இன்னும் அவள் அழுகை அதிகமாக அதில் பொறுக்க முடியாமல் திரும்பி பார்த்தவன் “என்ன ஆச்சு எதுக்கு அழுதுட்டு இருக்க?”  என்று அருகில் நெருங்கினான். 

“அப்பா ஆசையா  வாங்கி கொடுத்த பிரேஸ்லெட். ரொம்ப வருஷமா கையில போட்டு இருக்கேன் ! அதை காணோம் எனக்கு கொஞ்சம் தேடி கொடுக்க ஹெல்ப் பண்றியா ?” என்று அழுது கொண்டே கேட்டால். 

அப்பொழுது சுற்றி பார்த்தவன் “எங்க உன் கூடயே சுத்திட்டு திரிவாங்களே உன் பிரண்ட்ஸ் எங்க அவங்கள ஒருத்தரையும் காணோம் அவங்கள கூப்பிட்டுக்கோ!”  என்றான் கோபமாக. 

அவனுக்கு தேடித் தருவதெல்லாம் பிரச்சனை இல்லை.  ஆனால் இவளுடன்  தனியாக இருப்பது எரிச்சலாக வந்தது.

அதனால் கரண் அவ்வாறு  கூறியிருக்க 

அதை உணர்ந்து கொண்டவள், “ப்ளீஸ் கரண்  அவங்க எல்லாம் முன்னாடி போயிட்டாங்க!  நான் அதைத் தேடிக்கிட்டே வந்தேன் அதனாலயா அவங்க  போனதெல்லாம் கவனிக்கல ப்ளீஸ் உன் இடத்துல யார் இருந்திருந்தாலும் நான் ஹெல்ப் கேட்டு இருந்திருப்பேன்!  தயவு செஞ்சு எனக்கு ஹெல்ப் பண்ணு எங்க அப்பாவோட பெஸ்ட் கிப்ட் அது எனக்கு ! ப்ளீஸ் எனக்கு இந்த இடத்துல தனியா தேடுறதுக்கு வேற பயமா இருக்கு!” என்றால் சுற்றி பார்த்த வண்ணம். 

அவனும் பல்லை கடித்துக் கொண்டு “சரி வா  சீக்கிரம் தேடிட்டு போலாம்!”  என்று இருவரும் அந்த பெரிய ஹாலில் உள்ளே தேட சென்று அங்கே நிறைய  அட்ட பெட்டிகள் அடைக்க வைத்து பட்டு இருக்க 

குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கரணுக்கு தெரியாமல் ஆராதியா  திரும்பிப் பார்த்தாள் .

இவளுக்கு உதவுகிறேன் என்ற சொன்ன அந்த நபரும் இவளுக்கு தம்சப் காட்டி விட்டு சென்றுவிட அவளும் எதுவும் தெரியாதது போல் முகத்தை மாற்றிக் கொண்டவள் அதைத் தேடாமல் அவனை பார்த்துக் கொண்டே சென்றவள் அவன் பார்க்கும் பொழுது தேடுவது போல் நடிக்க டப் என்ற சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்து வேகமாக திசை வந்த பக்கம் செல்ல அங்கே கதவானது அடைக்கப்பட்டு இருந்தது. 

“என்ன ஆச்சு கதவு சாத்தி இருக்கு நம்ம உள்ள வர்றப்ப தொறந்து இருந்தது? ”  என்று கூறிக் கொண்டே அதன் அருகில் சென்றவள் கதவை திறக்க முயல அதுவோ மூடியே இருந்தது. அதை பார்த்து பயந்தது போல் நடித்தவள்

“ஐயோ பூட்டிட்டாங்க! இப்ப என்ன பண்றது எப்படி வெளில போறது நம்ம இருக்கறது எப்படி அவங்களுக்கு சொல்லுவோம்?”  என்று அழுது கொண்டே அவளும் கதவை தட்டினாள்.

அவனும்  தட்டிக் கொண்டே  “கதவை திறங்க! யாராவது இருக்கீங்களா?  உள்ள ரெண்டு பேர் மாட்டிட்டு இருக்கோம்!  கதவை திறங்க!”  என்று கத்திக் கொண்டே தட்டினான் .

அதுவும் மிகவும் கனமான அறை அங்கே பதப்பட்ட பொருட்கள் சில இது எக்ஸ்போர்ட்டுக்காக இருந்ததால் குளிரூட்டப்பட்டு இருக்க அந்த கதவானது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அடைந்து கொண்டதால் குளிர் அதிகமாக தொடங்கியது..

கரண் அந்தக் குளிரூட்டப்பட்ட அறையை ஒரு முறை சுற்றி பார்த்தவன் ஏதாவது வேறு கதவு இருக்கிறதா எமர்ஜென்சி எக்ஸிட் போல் என்று முழுவதும் ஆராய்ந்தான் அப்படி ஒரு கதவு அங்கே இருப்பதாகவே தெரியவில்லை..

அதையும் அவர்கள் அட்டைப்பெட்டி வைத்து அடைத்திருப்பதால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை..

நேரம் ஆக ஆக குளிர் எடுக்க ஆரம்பித்தது.  இவன் தன்னை விட்டு தள்ளி சென்று நின்று கொண்டிருப்பதை பார்த்த ஆராத்யாவிற்கு கோபம் எழ அதை மறைத்துக் கொண்டவள் குளிரில் நடுங்குவது போல் முகத்தை வைத்துக்கொண்டு “கரண் ப்ளீஸ் கொஞ்சம் என் பக்கத்திலேயே இரு இந்த இடத்தில் குளிர் ரொம்ப அதிகமா இருக்கு. தனியாய் இருக்க பயமா இருக்குப்பா!” என்றால் .

அவளைப் பார்த்தவன் நக்கலான புன்னகை உதிர்த்துவிட்டு “ஒரு மினிஸ்டரோட பொண்ணு இதுக்கெல்லாம் பயப்படலாமா? நீ தான் தைரியமானவள் ஆச்சே, இதுக்கெல்லாம் போய் பயப்படுற?”  என்றவன் தன்னுடைய மொபைலை எடுத்துப் பார்க்க வழக்கம்போல்தான் அதில் சிக்னல் கிடைக்கவில்லை..

” என்ன ஆபீஸ் வெச்சிருக்காங்க உள்ள ஆளுங்க இருக்காங்களா இல்லையான்னு தெரியாமலேயே டோரா க்ளோஸ் பண்ணிட்டு போறாங்க?”  என்றவன் மீண்டும் ஐந்து நிமிடம் தொடர்ந்து கதவை தட்டி போராடி பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் கதவின் அருகிலேயே ஓரமாக அமர்ந்து கொண்டான். 

அவனுக்கும் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அவனை வாட்டி எடுக்க ஆரம்பித்தது. 

கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்தவன் கண்களுக்குள் கேளாமல் வந்து நாட்டியம் ஆடினால் நமது அபி. 

அதில் முகத்தில் புன்னகையை தோன்ற மன பெட்டகத்தில் ராணியாக அமர்ந்திருப்பவளை மனதிர்குள்ளயே ‘அபிமா இப்படியும் உன் மாமா மாட்டிக்கிட்டேன்டி என்னடி பண்ணுவேன்? அதுவும் இந்த ராட்சசி கூட எப்படியாவது யாராவது சீக்கிரம் வந்து டோர் தொறந்துட்டா பரவால்ல என்னால குளிர் தாங்க முடியலடி. உன்ன பாக்காம இருந்திருந்தா இதுதான் என்னோட கடைசி தருணமா நினைச்சு நான் நிம்மதியா வாழ்வதற்கு ட்ரை பண்ணாம இருந்திருப்பேன்!  எவ்வளவு நேரம் கழிச்சு திறக்க போறாங்கன்னு தெரியாது ஆனா கண்டிப்பா உன்கூட நல்லபடியா வாழனும்னு மாமாவுக்கு ரொம்ப ஆசையா இருக்குடி! இந்த இடத்துல இந்நேரம் அவளுக்கு பதிலா நீ இருந்தா இந்நேரம் நடக்கிற கதையை வேற! ‘  என்று உதட்டில் சிரிப்புடன் மனதில் நினைத்துக் கொண்டவன் அவளுடன் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தவன் உடலில் சூடாக எதையோ உணர சட்டு என்று கண்களை திறந்து  திரும்பி பார்க்க

அவனை உரசிய வண்ணம் அமர்ந்து கொண்டு இருந்த ஆராத்யாவை கண்டு திடுக்கிட்டவன் அவரிடம் இருந்து எழுந்தான். 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page