அத்தியாயம் 14

நாட்கள் கடந்து சென்றன. விக்னேஷுக்கு ஆறு மாதங்கள் எப்படி போயின என்றே தெரியவில்லை. இந்த ஆறு மாதத்தில் அவன் விவசாயத்தை பற்றி ஓரளவு தெரிந்துக் கொண்டான். மாரிமுத்து அய்யாவிடம் நிலத்தை வாங்கி தானே பயிரிட ஆரம்பித்துவிட்டான். இப்போது அவனும்அவர்களின் குடும்பத்தில் ஒருவராகி விட்டான். ஜெயந்தியை தன் சொந்த தங்கையாகவே எண்ணி தன் தம்பியிடம் காட்டாத மொத்த பாசத்தையும் அவளிடம் காட்டினான். அவனிடம் இப்போது பொறைமையோ தான் என்ற கர்வமோ துளி கூட இல்லை. அந்த குடும்பமும் அங்கிருக்கும் சூழ்நிலையும் அவனை மொத்தமாக மாற்றிவிட்டிருந்தது. அவன் தன்னுடைய தேவைக்காக இரு சக்கர வாகனம் வாங்கியிருந்தான். ஜெயந்தியை அவன் தான் தன் வண்டியில் கல்லூரிக்கு கொண்டு போய் விட்டு திருப்பி கூட்டிக் கொண்டு வருவான். அவளிடத்தில் தான் இதுவரை பேசாத கதைகளை எல்லாம் மனம் விட்டு பேசினான். அவள் செய்யும் சேட்டைகளில் சந்தோஷமாக வாய்விட்டு சிரிக்க கூட கற்றுக்கொண்டான். அவளுடைய படிப்பு செலவை மாரிமுத்து அய்யா எவ்வளவு மறுத்தும் தானே ஏற்றுக் கொண்டான். நடுவில் கவிதா, மதுமதி மற்றும் மாசிலாமணி வந்து அவனை பார்த்து விட்டு சென்றனர். தன் மகனின் மாற்றத்தை பார்த்து கவிதாவிற்கு சந்தோஷம் தாள முடியவில்லை. விக்னேஷை அழைத்து உன்னை இப்படி பார்க்க எவ்வளவு  சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா, என்று அவனை உச்சி முகர்ந்தாள்

 

ஜெயந்தியையும் அழைத்து இதெல்லாம் உன்னாலயேயும் உங்க குடும்பத்தினாலேயும் தான் என்று அவளையும் மனதார பாராட்டிவிட்டு அங்கு சில நாட்கள் தங்கி விட்டு தான் அவர்கள் சென்றார்கள். கௌரியும் ஓரிருமுறை வந்து அண்ணனை பார்த்து விட்டு சென்றான். அடிக்கடி அலைபேசி மூலம் அவன் நலம் விசாரித்துக் கொள்வான். அது மட்டுமல்லாமல் அவனுக்கு விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் விவசாயத்திற்கு சம்பந்தமானபொருட்களை சென்னையில் இருந்து அனுப்பி வைத்தான்.

 

வர்ஷினியும் கல்லூரி படிப்பை இரண்டாம் ஆண்டு முடித்திருந்தாள். அன்று பிரகாஷ் அவளிடம் வந்து வர்ஷினி, என் படிப்பு முடிந்துவிட்டது. நான் இந்த கல்லூரியை  விட்டு போகப் போறேன், இன்னும் உன் மனசு மாறலையா ? என் மீது உனக்கு காதல் வரவில்லையா? என்று உருகி கேட்க,  அவள் இல்லை என்று தலையாட்டினாள். அவனுக்குள் கோபம் தகித்தது. இருந்தும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சரி, வர்ஷினி இதுக்குமேலே உன்னை எப்படி சம்மதிக்க வைக்கிறதுனு எனக்கு தெரியல. நாளைக்கு மாலையில் என் கூட படித்த மாணவர்கள் அனைவருக்கும் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்கேன். அதில் நீயும் கலந்துக்கணும் என்றதும், பார்ட்டி எல்லாம் எனக்கு பழக்கமில்லை பிரகாஷ் , நான் வரல என நேரடியாகவே அவள் மறுக்க, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது வர்ஷினி , என்னை காதலனாகத்தான் ஏற்கமாட்டேனு சொல்லிட்டே, நண்பனாகக் கூட  ஏற்கக்கூடாதா? நான் மேல்படிப்புக்காக வெளிநாடு போறேன். இனிமேல் உன்னை பார்க்க முடியுமான்னு கூட தெரியல! நாளைக்குதான் உன்னை கடைசியா பார்க்கபோறேன், அந்த தருணங்கள் இனிமையாய் இருக்கட்டுமே! ப்ளீஸ் வர்ஷினி எனக்காக நீ கண்டிப்பா வரணும். நான் உனக்காக காத்திருப்பேன். ஒரு நண்பனா  என்னுடைய இந்த கோரிக்கையை நீ ஏத்துக்கிடுதான் ஆகணும் என்று கேட்கவும் வர்ஷினிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் அவன் அவளுக்கு படிப்பில் நிறைய உதவிகள் செய்து இருக்கிறான். அவளால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத புத்தகங்கள் எல்லாம் அவன் அவளுக்கு கொடுத்து உதவி செய்திருக்கிறான்  

 

 

பிரகாஷ் செல்வந்தர் வீடு பிள்ளை என்பதலாலும் அவன் தந்தை அந்த கல்லூரிக்கு நிறைய செய்துள்ளார் என்பதாலும் பிரகாஷ் ஒரு ஹீரோவாகத்தான் அந்த கல்லூரியை வலம் வந்தான். அவனிடத்தில் நிறைய பெண்கள் சுற்றியபோதும் அவன் கண்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாய் கடந்துசெல்லும் வர்ஷினியின் மேல் தான் பட்டது. அதனாலதான் அவள் காதலை ஏற்றுக் கொள்ளாத போதும் அவளையே சுற்றி வந்தான். அவளுக்கு படிப்பில் நிறைய உதவிகள் செய்தான். மேலும் அவள் பிரகாஷின் தோழி என்ற காரணத்தால்  அவளிடம் எந்த மாணவர்களும் தவறாக பேசவோ நடந்துக் கொள்ளவோ மாட்டார்கள். இதனால் அவளால் பார்ட்டிக்கு திட்டவட்டமாக வரமுடியாது என்று சொல்ல முடியாத பட்சத்தில் சரி  வரேன், ஆனால் கொஞ்ச நேரம் தான் இருப்பேன் என்ற நிபந்தனையோடு வர சம்மதித்தாள்.

 

மறுநாள் வர்ஷினி இள நீல நிற லெகங்காவை அணிந்து அதற்கு ஏற்றால்போல் எளிமையான நகைகளை கைகளிலும் கழுத்திலும் மின்ன பிரகாஷ் தரும் பார்ட்டிக்கு புறப்பட்டாள். பார்ப்பதற்கு வானத்தில் இருந்து இறங்கிய தேவதை நடந்து வருவது போல் இருந்தது. ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் பார்ட்டி வைத்திருந்தான். அவன் கூட படித்த மாணவ மாணவியர் மற்றும் அவனது நண்பர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். அவள் உள்ளே நுழைந்தவுடன் பேரிரைச்சலுடன் பாட்டு ஓட பாதி பேர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். மீதி பேர் கலர்கலரான திரவங்கள் அடங்கிய கண்ணாடி குவளையை கையில் ஏந்திக்  கண்டு அவர்களை பார்த்துக் கொண்டு நின்று இருந்தனர். வர்ஷினிக்கு இதை எல்லாம் பார்க்க புதுமையாய் இருந்தது. அங்கு வந்த பெண்களின் குறைந்த ஆடையை கண்டதும் எப்படி இவர்கள் இதை போட்டு கொண்டு நடனமாடுகிறார்கள்  என்று வியப்பாக பார்த்துக் கொண்டு நின்னிருந்த சமயம் பிரகாஷ் அவளை பார்த்து விட்டு கையசைத்து  அவளருகில் வந்தான். ஏய் வர்ஷினி, வா, வா,  ரொம்ப அழகா இருக்கே, நீ வந்தது எனக்கு ரொம்ப  சந்தோஷமாக இருக்கு என்று அவளை அங்கே அமர சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு ஜூஸ் டம்பளரோடு  வந்தான். வர்ஷினி நீ இங்கே இருக்கிறே எதையும் குடிக்க மாட்டேன்னு தெரியும். அதனால் தான் உனக்காக  ஸ்பெஷலா இந்த ஜூஸ் கொண்டு வந்திருக்கேன்.குடி என்று அவளிடம் நீட்ட, அவள் தயங்கியவாறு அதனை பெற்றுக் கொண்டாள். அவன் அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பின் தன் நண்பர்கள் அழைக்கவே அவர்களுடன் சென்றுவிட்டான். அவள் ஜூஸ் குடிக்கும் மன நிலையில் இல்லை. உள்ளே  நுழைந்தவுடன் பேரிரைச்சலான சத்தம் அவளுக்கு தலைவலி உண்டாக்கியது. அதுமட்டில்லாமல் அன்று சாப்பிட்டதும் செரிமாணம் ஆகவில்லை என்பதால் அதனை அப்படியே கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். தூரத்தில் இருந்து பிரகாஷ் அவளை பார்த்து குடி குடி என்று சைகை செய்ய  அவளும் வேறு வழியில்லாமல்   இரண்டு  மிடறு தான் குடித்திருப்பாள் அதற்குள் அவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. உடனே கழிவறை சென்று அனைத்தையும் வாந்தி எடுத்து விட்டாள். தலைவலியும் விட்ட பாடில்லை. ப்ரகாஷிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு போகலாம்  என்று அவனை தேடி சென்று அவனிடம் சொல்ல, என்ன வர்ஷினி இப்போது தானே வந்தே , அதற்குள் கிளம்பறேன்னு சொல்ற, நான் கொடுத்த ஜூஸை குடிச்சியா? என்று கேட்க, கொஞ்சம் தான் குடிச்சேன், எனக்கு ஒரே தலைவலியா இருக்கு, நான் வீட்டுக்கு போறேன் என்று அவள் கிளம்ப, இரு வர்ஷினி உடம்பு  சரியில்லைன்னு சொல்ற, நானும் உன் கூட வரேன் என்று அவள் மறுக்க மறுக்க அவள் கூடவே  கிளம்பி, அவன் தன் காரை எடுத்துக்கொண்டு வர, இல்லை பிரகாஷ், எனக்கு ஒன்னும் இல்லை, நானே போய்டுவேன் என்று அவள் சொல்லிக் கொண்டே இருக்கும்போதே அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய்  காரில் தள்ளினான்.  காரில் ஏறியதும் அவள் பார்த்தது அவளை திடுக்கிட செய்தது. காரில் ஆங்காங்கே சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், காண்டோம்கள் என சிதறி கிடந்தன. அவளுக்குள் உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொள்ள, பிரகாஷ் காரை நிறுத்து,  என் வீடு பக்கத்தில் தான் இருக்கு, நான் ஆட்டோவிலே போயிடுறேன் என்று சத்தம் போட, ஷ்.. சத்தம் போடாதே, அமைதியாய் இரு, இன்னைக்கு ராத்திரி நீ என்கூடதான் இருக்கனும். என்னை பார்த்த உனக்கு எப்படி தெரியுது? இவ்வளவு நாள் உனக்காக காத்து இருந்து நல்லவன் போல் நடிச்சது உன்னை அடைவதக்காகத்தான். நீ என்னை வேணாம்னு சொன்னா அப்படியே உன்னை விட்டு விட்டு போக நான் ஒன்னும் அவ்வளவு நல்லவன் இல்லம்மா, இந்த ஒரு நாளுக்காகத்தான் நான் இவ்வளவு நாளா காத்திருந்தேன். நீ அன்னைக்கே என்கிட்ட மாட்டவேண்டியது, சரி எங்கே போய்டுவே, அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன் , இன்னிக்கும் உனக்கு ஜூஸில் மயக்கம் மருந்து கலந்து மயங்கவைத்து  உன்னை அனுபவிக்கலாமான்னு பார்த்த நீ அந்த ஜூசை குடிக்கல. இனிமேல் நீ என்கிட்ட தப்பிக்க முடியாது என்று அவன் சிரித்துக் கொண்டு கூற, டேய் ! பொறுக்கி, நீ இந்த எண்ணத்தோடு தான் என்னை இங்கே வரச் சொன்னேனனு முன்பே தெரிஞ்சியிருந்த நான் வந்திருக்கவே மாட்டேன். என்னை விடுடா, நான் போகணும் என்று  அவனை அடிக்க, அவன் கார் ஓட்டிக்கொண்டே ஒரு கையால் அவள் கழுத்தை பிடித்து, ஒழுங்கா அமைதியாய் வா , இல்லனா சேதாரம் உனக்குத்தான் என்று கூற, அவள் திமிர, அவன் பிடி இறுகவும் அவள் அவன் கையை கடித்து விட்டாள். அவன் கையையே உதறி, நாயே, கையை கடிக்கிறே, இதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில அனுபவிப்பே என்று அவன் அவள் கன்னத்தில் அறைய வர அவள் நாசுக்காக ஒதுங்கிக் கொண்டாள். அவளுடைய மூளை எப்படி இவனிடமிருந்து தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது அவளுடைய பார்வை பின் சீட்டில் உள்ள குடையின் மீது விழுந்தது. சடாரென்று எழுந்து  அந்த குடையை எடுத்து அவனை வேகமாக அடிக்க ஆரம்பித்தாள். அவன் அந்த அடியை தாங்க முடியாமல்  ஏய், அடிக்காதடி, என்னாலே கார் ஓட்ட முடியல, இருடி உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறிக் கொண்டே அவள் பக்கம் திரும்ப கார் திசை மாரி ஒரு கம்பத்தில் போய் சடாரென்று மோதியது. மோதிய வேகத்தில் பிரகாஷின் தலை ஸ்டெரிங்கில் அடிபட்டு அவன் மயங்கி விட,  வர்ஷினியை காரில் ஏற்றும் அவசரத்தில் அவன் அவள் அமர்ந்திருந்த கதவை ஒழுங்காக மூடவில்லை என்பதால் இடித்த வேகத்தில் காரின் கதவு திறந்துக் கொள்ள வர்ஷினி உருண்டு போய் அங்கு இருக்கும் புதரில் விழுந்து மயக்கமடைந்தாள். 

 

அன்று  வர்ஷினி பிரகாஷ் தரும் பார்ட்டிக்கு செல்ல இருப்பதால் சீக்கிரமாகவே கல்லூரியை விட்டு கிளம்பி இருந்தாள் அதனால் கௌரியால் அவளை பார்க்க முடியவில்லை. அன்று அவன் வழக்கம் போல் அவளுக்காக காத்து இருக்க, அவள் வராததை கண்டு, இன்னைக்கு நம்ம ஆளுக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? ஆளையே காணோமே, ஒரு வேலை வீட்டுக்கு சீக்கிரமாகவே போய் இருப்பாளோ, அவ வீட்டிலேயே போய்  பாக்கலாமா, வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றமே நடத்தி கடைசியில் வீட்டிக்கே போய் பாத்திடலாம் அப்பத்தான் என்னாலே நிம்மதியாய் தூங்க முடியும் என்று எண்ணியவாறே அவள் வீட்டை நோக்கி  போகும் வேளையில் அவனுடைய அலைபேசி ஒலித்தது. அவனுடைய அண்ணன் தான் பேசினான். கௌரி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்க, கௌரியும் சொல்லுங்க அண்ணா, என்ன வேணும், நான் ஒருத்தரை நம்ம வீட்டுக்கு அனுப்பிருக்கேன். அவர் பேரு செந்தில். அவர்கிட்ட ஒரு லிஸ்ட் கொடுத்துருக்கேன். அதிலே விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் சில பொருள்களை எழுதியிருக்கேன்  அது எங்கே வாங்கணும் னு 

எழுதியிருக்கேன். அவருக்கு சென்னை அவ்வளவாக தெரியாது.  நீ அவர் கூட போய் அதெல்லாம் வாங்கி கொடுத்து அனுப்பிரயா? என்று கேட்க , கௌரியும் அண்ணன் கேட்கும் போது மாட்டேன் என்று சொல்ல மனமில்லாமல்  அவனும் ஒத்துக் கொண்டு அந்த செந்திலை வீட்டில் போய் பார்த்து தேவையானதை எல்லாம் வாங்கி கொடுத்து அவனை வழி அனுப்பி வைத்து அண்ணனுக்கும்  தகவலும் தெரிவித்து விட்டு பார்த்தபோதுதான் தெரிந்தது மணி ஒன்பதை தாண்டிவிட்டது என்று. 

                                             

மறுபடியும் அவனுக்கு பழைய யோசனை வந்துவிட்டது. வர்ஷினியை வீட்டில் போய் பாக்கலாமா, இந்நேரத்திற்கு வீட்டிற்கு போனால் அவள் தந்தை என்ன சொல்லுவார், என்னால் வர்ஷினியை பாக்கவிட்டால் தூக்கமே வராதே என்ன செய்வது என்ற சிந்தையில் இருந்த அவன் ஒருவாறு அவள் அப்பா கேட்டால் ஏதாவது சொல்லி சமாளித்துவிடலாம் என்று முடிவு பண்ணி அவள் வீட்டை நோக்கி நடந்தான்.

 

வீட்டை அடைந்ததும்  கரண் வீட்டின் வாசலிலேயே நின்றுக் தெருவையே பாத்து கொண்டிருந்தார். அவர் கௌரியை பார்த்ததும் என்னப்பா இந்த நேரத்தில இங்கு வந்திருக்கே என கேட்க, இங்க பக்கத்தில் என்னுடைய  பிரென்டை பாக்க வந்தேன் அங்கிள் என்று ஒருவாறு சமாளித்து விட்டு, என்ன அங்கிள் வெளியிலே நிக்கிறீங்க? என்று கேட்க, கரண், வர்ஷினி அவளது பிரெண்ட் ஒருத்தருடைய பார்ட்டிக்கு போறேன், சீக்கிரம் வந்திடறேன்னு சொல்லிட்டு  போனா, மணி பத்து ஆகுது இன்னும் வரலே. இதுவரைக்கும் அவளை எங்குமே தனியா அனுப்பியதில்லை, எனக்கு ரொம்ப பயமாய் இருக்குப்பா என நடுக்கத்துடன் கூறியதை கேட்டவுடன் கௌரி  கவலைப்படாதீங்க, வர்ஷினிக்கு ஒன்னும் ஆகாது. நீங்க அவ எந்த இடத்துக்கு  போயிருக்கானு சொல்லுங்க, நான் போய் அவளை அழைச்சிட்டு வரேன் என்று கேட்டதும் அவர் இடத்தை சொல்ல தன் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கு விரைந்தான்.  

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
804 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page