அத்தியாயம்- 15

பாகம் – 15

நவீன் சொன்னது இதுதான் ..

காதலித்த போது அந்த பெண்ணைப் பற்றி விசாரித்து இருக்க மாட்டாய்.. திருமணத்திற்கு பிறகும் முன் உள்ள வாழ்க்கை விவரம் உனக்கு தெரிந்திருக்காது ..அதனால் கூட உனக்கு இந்த உறுத்தல் இருந்திருக்கலாம்டா..”

” இருக்கலாம் டா நவீன்..”

” அப்படி என்றால் திருமண வாழ்க்கைக்கு முன் உள்ள வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள பார்.. “

” இதைப்பற்றி எப்படி யாரிடம் போய் கேட்பது.. நான் போய் என் மாமியாரிமோ என் கொழுந்தியா ள்களிடமோ கேட்டால் என் மனைவியின் காதில் விழுந்து விடாதா .. “

“நீ என்னடா சரியான டியூப் லைட்டாக இருக்கிறாய்.. சந்தேகத்தை விசாரிப்பது என்றால் தான் இப்பொழுது ஏகப்பட்ட டிடெக்டிவ் ஆட்கள் இருக்கிறார்களே.. யாராவது ஒருவரிடம் உன் வேலையைக் கொடுத்து விசாரிக்கச் சொல் .. அது உனக்கும் அவருக்கு மட்டுமே இருக்க வேண்டிய ரகசியமாக இருக்கட்டும்.. “

“ரொம்ப நல்ல யோசனைடா..உனக்கு எப்படி நான் தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல ..நன்றி சொல்லி விட்டு  மறுநாளே அந்த வேலையை செய்ய தொடங்குகிறான் ..இதன் பிறகு தான் அரவிந்துக்கு மண்டை குழம்பப் போகிறது என்று அப்பொழுது தெரியாமல் போய் விட்டது ..

அவரிடம் சென்று எல்லாவற்றையும் சொன்ன பிறகு, ” இதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றால் ஆண்கள் யாரும் போனால் சரி வராதுங்க.. அந்த பெண்ணின் பெயர் கெடுவதோடு இல்லாமல் எங்களுக்கும் அடி விழும்.. இது ரொம்ப நுணுக்கமாக செய்ய வேண்டிய விஷயம்.. என்னுடைய அசிஸ்டன்ட்டை அனுப்பி விடுகிறேன். ” என நீலாவை அறிமுகம் செய்து வைக்கிறார்.

” இந்த பெண் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார். பார்ட் டைம் ஜாப்பாக என்னிடம் வேலை செய்கிறார்.. இவர் தான் விசாரிப்பதற்கு சரியான நபர் .. “

ஹரிஹரன் உங்களுக்கு  எப்படி வசதியோ ..அது போல செய்யுங்கள்..என் மனதில் இருக்கும் சந்தேகம் நீங்கி நான் சந்தோஷமாக இருந்தால் போதும். எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ..எவ்வளவு செலவு வேண்டும் ஆனாலும் ஆகட்டும் .. செலவை பற்றி கவலைப்பட வேண்டாம்.ஆனால் இந்த விஷயம் அவளள் காதில் விழக்கூடாது. அவளுக்கு மட்டுமல்ல அவளது குடும்பத்தினர்களுக்கும், குறிப்பாய் என் அப்பா அம்மா காதில் இந்த செய்தி வரவே கூடாது.. “

“அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்வோம் சார் கவலைப்படாதீங்க.. “டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்தும் ஹரிஹரன்  புத்திசாலியாகத்தான் இருக்கிறார்.. அரவிந்தனின் காதல் கோவிலில் இருந்து ஆரம்பித்ததும் எடுத்ததுமே கோவிலிலேயே விசாரிக்க சொல்கிறார்..

அவன் சந்தேகப்பட்டதோடு சரி ..அடுத்த நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை ..அவனுக்கு அந்த கோவில், அவள் பிறந்த ஊரில் விசாரிக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட தோன்றவே இல்லை..அதுதான் அவன் செய்த பெரிய தவறும் கூட .. தீர்வு கண்டு இருந்தால் இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க மாட்டான்…

ஐந்து வருடங்களுக்கு முன்பு என்றாலுமே கோவில் குருக்கள் சங்கருக்கு மித்ராவை நன்றாக தெரிந்திருந்தது .. நீலா,சங்கரிடம் அவர் நம்பும் படியாய் அழகாய் பொய் சொல்கிறாள்..

மித்ரா அக்கா தன்னுடைய உறவு பெண் என்றும், அவர்களை நீண்ட காலமாய் தேடிக் கொண்டு வருவதாகவும்,சொத்துப் பிரச்சனைகளில் தலைமுறை இடைவெளி விழுந்ததாகவும், அவர்கள் குடும்பத்தினரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்றும் மனம் உருகி கேட்கவுமே கோவில் குருக்கள் மனம் விட்டு பேசத் தொடங்குகிறார் ..

இது ஹரஹரனும் நீலாவும் போட்டு வைத்துக் கொண்ட திட்டங்கள் ..அரவிந்த் பேச்சு வாக்கில் தன் மனைவி வீட்டில் நடைபெற்ற சம்பவங்களைக் கூறும் போது சொத்துப் பிரச்சனையில் உறவினர்கள் யாருடனும் பேச்சு வார்த்தை இல்லை.. தன் மூன்று மகள்களை சென்னையில் வரிசையாய் கட்டிக் கொடுக்கவும் சக்திவேலும் மீனுவும் சென்னையில் குடி வந்து விட்டார்கள் என்று சொன்ன ஒரு வார்த்தையை மனதில் கொண்டு தான் நீலாவை இப்படி விசாரிக்க சொன்னார்..

எப்படியும் கோவில் குருக்கள் மித்ராவின் குடும்பத்தினரை எப்பொழுதாவது சந்தித்தால் உங்கள் மகளைப் பற்றி நீலா என்று ஒரு பெண் விசாரித்தாள் கூறினால் இப்படி சொல்லி விடலாம் என்று.. காரணம் மித்ராவின் குடும்பத்தினருக்குமே தலைமுறை இடைவெளியில் தன் உறவினர்கள் யாரையும் தெரியாது என்பதை கருத்தில் கொண்டு.. அந்தத் திட்டம் நன்றாகவே வேலையும் செய்தது..

மித்ராவின் உறவினர் என்றதுமே சங்கர் நீலாவை அவர் வீட்டிலேயே தங்க வைக்கிறார் ..அப்பொழுதே நீலாவுக்கு புரிந்து விடுகிறது.. மித்ராவின் மீது எந்த தவறும் கிடையாது என்று ..முகம் தெரியாத மித்ராவின் மீது மனதிற்குள் மரியாதை அதிகரிக்கிறது ..மித்ராவின் கணவர் அரவிந்த் மீது எரிச்சல் ஆகிறது..

‘தேவையில்லாமல் மனைவி மீது சந்தேகப்பட்டு கொண்டு இப்படித்தான் தன் காசை கரியாக்குகிறார்கள் நிறைய ஆண்கள் என்று.. அவர்களின் இப்போதைய உளவு வேலையே இதுதான் போல .கணவன் மனைவியை உளவு பார்ப்பதும், மனைவி கணவனை உளவு பார்ப்பதுமாய் . நீலாவுக்கு இந்த வேலையுமே பிடிக்காமல் தான் இருக்கிறது..ஆனாலும்  கைநீட்டி சம்பளம் வாங்குவதற்கு கொஞ்சமாவது வேலை பார்க்க வேண்டுமே என்று மித்ராவை பற்றி நைச்சியமாய் அவரிடம் விசாரிக்கிறாள்..

“சங்கரை விட அவர் மனைவிதான் ஓகோ என்று புகழ்ந்து பேசுகிறார்.. “அந்த பெண் மித்ரா இருக்காளே.. ரொம்ப நல்ல மாதிரி. யாரையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாள்..காதல் வலையில் விழுந்தாள் என்ற சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை ..இந்த பெண்ணா அப்படி ஒரு காரியத்தை செய்தது என்று. அழகாய் பாவடை தாவணி அணிந்து தினமும் தலை குளித்து ஈசனுக்கு பூவோ அர்ச்சனை சாமானோ எடுத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் தெருவில் போகும் .. “

“அதுவும் கோவிலுக்கு மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே வரும்.. கல்யாணம் ஆகி போனாலும் எப்பொழுதாவது அம்மா வீட்டுக்கு வந்தால் என் வீட்டுக்கும்  கோவிலுக்கும் வந்து விட்டு தான் போகும் .. “அவர் சொல்ல சொல்ல நிலாவுக்கே மித்ராவை பார்க்க வேண்டும் என்று ஆசையாகிறது..

தான் பேசியதைக் கேட்டால் மட்டும் போதாது என்று நுணுக்கமான கருவியின் மூலம் அவர்கள் பேசுவதை எல்லாம் பதிவு செய்து கொள்கிறாள்.. தங்கள் வாய் வார்த்தைகளை கஸ்டமர்கள் எப்பொழுதுமே நம்ப மாட்டார்கள்.. அதனால் தான் இந்த ஏற்பாடு.

“மித்ரா ரொம்ப நல்ல பெண்மா.. நீ எதற்கும் கவலைப்படாதே .உன்னை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார்கள்…இவ்வளவு காலமாக நீ மித்ராவை தேடாமல் இருப்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .. நீ வேண்டுமானால்  பாரேன்.. உனக்கு மித்ராவை ரொம்ப பிடித்து விடும். “

இப்படி சொன்னதுமே ஹரிஹரனிடம் நீலா போனில் செய்தி சொல்கிறாள்..பதிவு செய்தவற்றை செல் மூலமாய் போட்டும் காட்டி விடுகிறாள்..

” அந்த குருக்களுக்கு தட்டில் நிறைய பணம்  வைப்பாங்களோ என்னமோ .. அதனால் தான் ரொம்ப உயர்த்தி வைத்து பேசுகிறார்கள் .அக்கம் பக்கம்  கொஞ்சம் விசாரித்து பாரு .ஆனால் பார்த்து விசாரி.. உன் மண்டை பத்திரம்.. ” என்று எச்சரிக்கிறார் ஹரிஹரன்..

நீலா ஊரையே அலசி விசாரித்து பைலும் தயார் செய்து  கொடுக்கிறாள்..அரவிந்த் கடவுளிடம் வேண்டிய படியே தான் வருகிறார்.. மித்ராவின் மீது எந்த தவறும் இருக்கக் கூடாது என்று. அதே போல நீலா சொன்ன தகவல்கள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கிறது. இனிமேல் நான் அவளை சந்தேகப்பட மாட்டேன்.. சந்தோசமாய் குடும்பம் நடத்த ஆரம்பிப்பேன் ரொம்ப நன்றி சார்.. ” என்று இருவரிடமும் நன்றி கூறி பீசையும் கொடுத்து விட்டு அதோடு விடை பெறுகிறான் ..

அதுவும் கொஞ்ச நாள்களுக்கு தான்.. பழைய குருடி, கதவைத் திறடி என்று திரும்பவும் அவன் மனதிற்கு சஞ்சலம் என்ற பேய் அரிக்கத் தொடங்குகிறது..

இப்பொழுது அவனுக்கு ஒரு ஆபத்பாந்தவன் நவீன் இருக்கவும் அவனிடமே திரும்பவும் செல்கிறான்..

“ஏன்டா அதுதான் துல்லியமா விசாரித்து தகவல் எல்லாம் தெரிந்து விட்டதே.. பிறகு என்ன இன்னமும் ஏன் உனக்கு மனதை அரிக்கிறது .சந்தேகம் என்ற இந்த பூச்சி..”

” அது என்னவென்று தெரியவில்லைடா நவீன்.. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை ..எனக்கு ஏதோ ஒரு உறுத்தலாக இருக்கிறது. நான் என்ன செய்வது..நானும் யோசித்து பார்த்தேன்.. அந்த நீலாவும் ஹரிஹரனும் என்னை நன்றாக ஏமாற்றி விட்டார்கள் என்று தோன்றுகிறது..

“அப்படி போடு ,விசாரித்தவர்கள் மீது சந்தேகமா.. எந்த போதி மரத்தின் கீழே உனக்கு இந்த ஞானோதயம் வந்ததடா.. நவீன் அவனை கிண்டல் செய்கிறான் ..

” அதுவா அந்த நீலா விசாரித்தது முழுக்க மித்ராவின் சொந்தக்காரர்களையும், தெரிந்தவர்களையும் தான்.. புதிதாக யாருக்கும் எதுவும் தெரியவில்லை.. “

” ஏன்டா ஒரு பெண்ணைப் பற்றி வேறு எப்படியடா விசாரிப்பது . வேறு ஒன்றுமில்லை உனக்கு சந்தேக புத்தி வந்து விட்டது.. அது சாகும் வரை உன்னை விட்டு போகாது என்று நினைக்கிறேன். எனக்கு என்னவோ உன் மனைவி மீது எந்த தவறும் இல்லை என்று தான் தோன்றுகிறது .உனக்கு தான் இப்படி ஒரு மோசமான ஒரு புத்தி வந்து விட்டது. என்ன பினாயில் போட்டு கழுவினாலும் உன் புத்தி சுத்தமாகாது போடா..” என்று நவீன் திட்டுகிறான்..

நண்பன் திட்டுவதை  எல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருக்கவுமே அவனை பார்க்கவே பாவமாக இருக்கிறது..

“இப்ப என்னதான்டா செய்வது.. வேறு  ஏதாவது வழி இருக்கிறதா..ஆனா ஒன்றுடா, உன்கிட்ட தான் ஏதோ தப்பு இருக்கு. உன்கிட்டதான் உன்னோட மனைவியும் உன் மகனும் மாட்டிக் கொண்டாங்க என்று நினைக்கிறேன்..” சொன்னதுமே அரவிந்த் அடித்து பேசுகிறான்.. தன் மீது எந்த தவறும் இல்லை என்று.. வேறு வழி என்ன இருக்கிறது என நவீன் நீண்ட நேரமாக யோசிக்கிறான்..

“ஒரு யோசனைடா. அதை மட்டும் நீ சரியாக செய்து விடு. அதற்கு பிறகு நீ நிம்மதியாய் குடும்பம் நடத்த தொடங்கலாம் . “

அரவிந்த் அது என்ன யோசனை என்று கேட்டு தெரிந்து கொள்கிறான் .. ‘இவ்வளவு நாட்களாக ஏன் எனக்கு இது தோன்றவில்லை என்று தன்னையே திட்டிக் கொள்கிறான் ..

ஆனால் அவன் அந்த திட்டத்தை செயல் படுத்தியதும் தான் ஏன்டா இதை ஆரம்பித்தாய்.. இனி உன் வாழ்க்கை முழுக்க சிக்கல்தான் என்கிறது அவன் வாழ்க்கை ..

ஏதோ பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறானோ அரவிந்த்?

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page