அத்தியாயம் 15

ரஞ்சித்தும் மனிஷாவும் பேசிக்கொண்டிருந்ததை தங்களின் அறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்தனர் சரஸ்வதியும் அம்பிகாவும்! 

“ரஞ்சித் சொன்ன மாதிரி தான் நடந்திருக்குமோ நான் கூட, ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான் பண்ணி இருப்பாங்கன்னு ஒரு நிமிஷம் சந்தோஷப்பட்டுட்டேன்” என்று அம்பிகா சிரிக்க, அம்பிகாவை முறைத்தார் சரஸ்வதி.

“இங்க பாரு அம்பிகா இந்த கல்யாணம் எந்த சூழ்நிலையில நடந்து இருக்குன்னு உனக்கு நல்லா தெரியும், நீ  தேவையில்லாத எதிர்பார்ப்ப   உருவாக்குகிறாத! ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் சந்தோஷம்தான்.  இல்ல ரெண்டு பேருக்குள்ள ஒத்துப் போகாம பிரிஞ்சு வாழ வேண்டியது வந்தால் நீ அவங்க மேல வச்சிருக்கற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி  உன் மனசு ரொம்ப கஷ்டப்படும். அதனால கொஞ்ச நாள் அமைதியா இரு!” என்று கூறினார் சரஸ்வதி.

“அப்படி இருக்க முடியலையே! மகனும் மருமகளும் சேர்ந்து வாழ்றத பாக்குறது தானே நமக்கு சந்தோசம் அதைத்தான் என் மனசும் எதிர்பாக்குது,ரஞ்சித் வேற நாளைக்கு காலையில கோயில்ல ஏதோ பண்ண  போறேன்னு சொல்லிட்டு போறானே! ஏதாவது பிரச்சனை பெருசா பண்ணுவானோ” என்று பயந்து கொண்டே  அம்பிகா கேட்க,

“பண்ணலாம்” என்று சாதாரணமாக கூறினார் சரஸ்வதி. “என்ன சரசு சாதாரணமா பேசுற, ரஞ்சித் சொன்னதைக் கேட்டு உனக்கு பயமா இல்லையா?” என்று அம்பிகா கேட்க “என்ன பண்ண சொல்ற! இது அவ வாழ்க்கை இதுல எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இத பிரதிக்ஷா தான் பேஸ் பண்ணனும். நம்ம எல்லாத்துக்கும் அவ கூடவே நின்னுகிட்டு இருக்க முடியாது அதனால நாளைக்கு என்ன நடக்குதுன்னு நம்ம வேடிக்கையை மட்டும் பார்ப்போம்! இப்பவே நேரம் ஆகிட்டு சீக்கிரம் தூங்கினால் தான் காலையில எழுந்திருக்க முடியும்! என்று  சொல்லிவிட்டு சரஸ்வதி அங்கிருந்த கட்டிலில் படுத்துவிட்டார். 

சரஸ்வதி சொன்னதை கேட்ட அம்பிகா சில வினாடிகள் அப்படியே நின்று கொண்டிருந்தார். ” அம்மா எல்லாம் சுமூகமா நடந்து முடிஞ்சிருச்சா? ” என்று கிண்டலாக ரேணு கேட்க, ” நீ இன்னும் தூங்கலையா? ” என்று கேட்டார் அம்பிகா.

“நீங்க இல்லாம நான் என்னைக்கு தூங்கி இருக்கேன். நீங்க இவ்வளவு நேரம் ரூமுக்கு வராம இருக்கவும் நானே உங்கள தேடி வந்தேன்” என்று சொல்ல 

“சரி வா காலையில சீக்கிரமா எந்திரிக்கணும்! இப்ப போய் தூங்குவோம் “என்று சொல்லிவிட்டு ரேணுவை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று கதவை தாழ்ப்பாளிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தார்.

இங்கு,

அறையை சுற்றி சுற்றி வந்தான் விதுரன். அவன் மனம் முழுவதும் குழம்பி தவித்தது. காலையில எழுந்ததும் முதல் வேலையா வக்கீல் தான் சந்திக்கணும். அப்பதான் இந்த பிரச்சனைகள் எல்லாத்துல இருந்து நம்ம தப்பிக்க முடியும் என்று நினைத்து விட்டு  படுக்க ஆயத்தமானான்.

கட்டிலில் படுக்கலாம் என்று விதுரன் நினைக்க பாவையவள் படுக்கை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, மெத்தையில் தானும் படுத்தால் சரி வராது என்று நினைத்துக் கொண்டு தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு கீழே  படுத்து விட்டான்.

இதையெல்லாம் ஓரக் கண்ணால் பிரதிக்ஷா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். ‘என்ன அத்தான் கீழ படுத்துட்டாரு, மேல படுத்தாத்தான நம்ம பிளான் நடக்கும்’ என்று  யோசித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் உருண்டுபுரண்டு படுத்துப் பார்த்தான். பிறந்ததிலிருந்தே  தரையில் படுத்து பழக்கம் இல்லாத விதுரனுக்கு தரையில் படுப்பது  கடினமாக தோன்ற, வேறு வழி இல்லாமல் மேலே படுத்திருந்த பிரதிக்ஷாவை ஓரமாக நகர்த்தி விட்டு பிரதிக்ஷாவின் பக்கத்தில்  படுத்தான் விதுரன்.

‘அத்தான் சிக்கிட்டாரு இனிமேல் வச்சு செஞ்சிட வேண்டியதுதான்’ என்று மனதுக்குள்ளே புன்னகைத்தாள் பிரதிக்ஷா.

அறை முழுவதும் மல்லிகை வாசமுனும்  மங்கையவளும்   இருக்க  தவித்துப் போனான் விதுரன்.

அறையின் சூழ்நிலை  அவனின் உணர்வுகளை தட்டி எழுப்ப, தன்னுடைய உணர்வுகளை எல்லாம் அடக்கி விட்டு,  ‘இந்த பக்கம் படுத்தால் சரி வராது அந்த பக்கம் திரும்பி படுத்துற வேண்டி தான்’ என்று நினைத்துக் கொண்டு  ஓரமாய் படுத்தான் விதுரன்.

விதுரன் படும் பாட்டை எல்லாம் ரசித்துக்கொண்டே  இங்கு ஓரக் கண்ணால்  பார்த்துக் கொண்டிருந்தாள்  கள்ளி!.

‘என்னைய பார்க்க கூடாதுன்னு நீங்க அந்த பக்கம் திரும்புனால் விட்ருவேனா இப்ப பாருங்க’என்று சொல்லி தூக்கத்திலேயே புரள்வதைப்போல  விதுரனின் அருகில் நெருங்கினாள் பிரதிக்ஷா.நெருங்கியவள் மெதுவாக விதுரன் மேல் கையை போட, விதுரன் திடுக்கிட்டு எழுந்துதான்.

 விதுரன் பிரதிக்ஷாவை பார்க்க ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைப் போல் நடிக்க,  ‘தூக்கத்துல தான் போட்டு இருப்பா போல’ என்று நினைத்து விட்டு  அவள் கையை எடுத்துவிட்டு மீண்டும் படுத்தான்.

பிரதிக்ஷாவும் மீண்டும்  முன்பு போல் விதுரன் மீது கையை போட, ” ஏய் எந்திரி நானும் பார்த்துகிட்டு இருக்கேன்! நீ நடிக்கவா செய்ற, நீ வேணும் தானே இப்படி பண்ணிக்கிட்டு இருக்க! இப்படி பண்ணிக்கிட்டே இருந்தனு வச்சுக்கவே நல்லா இருக்காது!” என்று சொல்லிவிட்டு விதுரன் திட்ட,பிரதிக்ஷாவிற்கு சிரிப்பு வந்தாலும் அதை எல்லாம் அடக்கிக் கொண்டு தூங்குவதைப் போல் நடித்தாள்..

‘உண்மையிலேயே தான் தூங்குகிறாளா? நம்ம தான் தூங்குற மாதிரி நடிக்கிறான்னு தப்பா நினைச்சு பேசிகிட்டு இருக்கோம் போல!’என்று நினைத்துக் கொண்டு விதுரனும் அமைதியாக இருக்க அவனின் அமைதியை தனக்கென சம்மதமாக எடுத்துக் கொண்டு அவனை இறுக்கி அணைத்து தூங்க ஆரம்பித்தாள் பெண்ணவள். தூக்கத்துல தான் பிரதிக்ஷா இப்படி நடந்துக்கிற  போல! என்று இந்த முறை எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனும் தூங்க ஆரம்பித்தான்!

காலை இருளின் ஆட்சி முடிந்து பகலின் ஆட்சி தொடங்க ஆரம்பிக்க அவர்களின் அறைக்கதவு தட்டும் சட்டம் கேட்டது!

இருவரும் வெகு நேரம் கழித்து தூங்கியதால் எழுந்திருக்க முடியாமல் கதவு தட்டும் சத்தம் கேட்டும் திறக்காமல் புரண்டு படுத்தனர்.

அம்பிகா கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் இவர்கள் இருவரையும் கிளம்ப சொல்வதற்காக அவர்களின் அறை கதவை தட்டினார்.

கதவை தட்ட இருவரும் திறக்காமல் இருக்க விதுரனின் செல்போனிற்க்கு அலைபேசியில் அழைப்பை விடுக்க, எப்போதும் தான் படுத்து இருக்கும் பக்கத்து டேபிளுக்கு அருகில் செல்போனை வைப்பவன் அதே நினைவில் கையை அந்தப் பக்கம் நீட்டி துலாவி தனது செல்போனை எடுக்க முயற்சி செய்தான்.

அவன் தடவி பார்க்கும் இடத்தில் செல்போன் இல்லாமலிருக்க, ‘என்னது இது வித்தியாசமா இருக்கு’ என்று  தடவிக் கொண்டே   கண் திறந்து பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனின் கைகள் பெண்ணவளின் மென்மைகளில் இருந்தது.

விதுரனின் நிலையை இவ்வாறு இருக்க பிரதிக்ஷாவின் நிலையோ அந்தோ பரிதாபம். அவள் எதுவும் சொல்லாமல் எச்சில் விழுங்கிக் கொண்டே  அதிர்ச்சியில் உறைந்து இருக்க,

படாரென்று விதுரன் எழுந்து, சாரி சாரி செல்போன்…..அடிச்சது அதான் என்று… தெரியாம.. ”  என்று விளக்கம் கொடுக்க அங்கிருந்து அவசர அவசரமாக  குளியலறை நோக்கி ஓடினாள் பிரதிக்ஷா.

‘ஏன்டா லூசு பயலே! கண்ண திறந்து தான் பார்த்து செல்போன் எங்க இருக்குன்னு எடுத்திருக்கலாம் இப்படி அவசரப்பட்டு..போச்சு இப்போ உன்னைய தப்பா நினைச்சிருப்பா!”என்று அவனின் மனசாட்சி கேட்க,

‘அவ எங்க தப்பா நினைப்பா, தடவுனதுக்கே தப்பா நினைக்கவா எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு  பொய் சொல்லி தானே என்னை கல்யாணம் பண்ணுனா,?’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

ஆனாலும் அவன் மனதில் தான் செய்தது மிகப்பெரிய பிழை என்று தோன்ற பிரதிக்ஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மீண்டும் அவனின் செல் போன் ஒலிக்க இந்த செல்போன்னால தான் எல்லா பிரச்சனை வந்துடுச்சு ‘என்று சலித்துக் கொண்டே அலைபேசியை பார்க்க சரஸ்வதி தான் அழைத்திருந்தார்.

கோபத்தோடு அலைபேசியை எடுத்தவன் சரஸ்வதியின் நம்பரை தொடுதிறையில் பார்க்க “என்னம்மா”என்று கொஞ்சம் கோபத்தோடு கேட்க,

“எவ்வளவு நேரம் வந்து கதவை தட்றது  கதவை தட்டினாலும்  திறக்கல, போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேங்கற! நேத்தே சொன்னேன்ல நாளைக்கு காலைல குலதெய்வம் கோயிலுக்கு போகணும்னு!, சீக்கிரம் நேரம் ஆயிடுச்சு நீயும் உன் பொண்டாட்டியும் குளிச்சிட்டு கிளம்பி வாங்க”   என்று சொல்ல, “பொண்டாட்டியா?” என்று அதிர்ச்சியானான்.

அவனுடைய அதிர்ச்சியை உணர்ந்தாலும் பிரதிக்ஷா அவனுடைய மனைவி என்பதை அவனுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று சரஸ்வதிக்கு தோன்ற,  “ஆமா உன் பொண்டாட்டியும் நீயும் சீக்கிரமா கிளம்பி வெளிய வாங்க.நாங்க எல்லாரும் ரெடியாகி இருக்கோம்! இப்ப கிளம்பினால் தான் சீக்கிரம் குலதெய்வம் கோயிலுக்கு போக முடியும்!” என்று சொல்ல சரி கிளம்பிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தான்.

சிறிது வினாடிகள் யோசித்தவன் தன்னுடைய யோசனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.

அதற்குள் பிரதிக்ஷா குளித்துவிட்டு அவசரமாக அறைக்குள் ஓடியதால் எந்த உடையும் எடுத்துக் கொண்டு போகாமல் இருக்க பாத்ரூமில் இருந்த டவலை கட்டிக்கொண்டு விதுரன் இருக்கிறானா? என்று பார்க்க அவன் இல்லாதிருக்க மெதுவாக பூனைப்போல வெளியில் வந்தாள்.

பிரதிக்ஷா வீட்டிற்கு வரவும் அவளுக்கு தேவையான உடைகளை எல்லாம் கொண்டு வந்திருக்க அதை எல்லாம் அந்த அறையில் எடுத்து வைக்காமல் அவள் கொண்டு வந்த சூட்கேசில் இருந்தது.

தனக்கான உடைகளை சூட்கேஸை திறந்து பெண்ணவள் தேடிக் கொண்டிருக்க, குளித்துவிட்டு  ஈரம் சொட்ட சொட்ட டவலோடு எப்போதும் போல வெளியே வந்தான் விதுரன்.

பெண்ணவள் கீழே அமர்ந்து சூட்கேசில் உடைகளை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க விதுரன் பிரதிக்ஷா கீழே அமர்ந்திருந்ததை பார்க்கவில்லை,

ஆனால் அவனின் நடந்து வரும் கால் தடத்தின் சத்தத்தை கேட்டு அதிர்ந்து எச்சில் விழுங்கி கொண்டே பார்க்க, விதுரன் அவனுடைய  ஈரமான தலைமுடியை தன் கைகளால் நீவி விட்டு  மேனரிசம் செய்து கொண்டிருக்க அதை பார்த்து மயங்கிப் போனாள் பாவையவள்.

தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து அவனை ரசித்துக் கொண்டிருக்க,

ஏதோ ஒரு கூரிய  பார்வை ஆடவனை துளைப்பதை போல் ஆடவனுக்குள் எண்ணம் தோன்ற அந்த திசையை பார்க்க அங்கு பிரதிக்ஷா தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரதிக்ஷாவை முதலில் அதிர்ந்து பார்த்தவன் பின்பு கண்கள் சிவக்க கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தான்.

‘என்ன ஆச்சு நம்ம ஆளு, கோபமா முறைக்கிறாரு ‘ என்று பிரதிக்ஷா யோசிக்க அப்பொழுதுதான் அவள் இருக்கும் கோலம் அவனுக்கு ஞாபகம் வர தன் உடைகளை கையில் எடுத்து தன் மார்பில் வைத்து மறைத்து  அவனுக்கு புறமுதுகுக் காட்டி நின்றாள்.

கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களின் எண்ணங்களை கமெண்ட்களாக பதிவேற்றிச் செல்லுங்கள்.

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
980 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page