அந்த கம்பெனியில் இருக்கும் இன்டஸ்ட்ரியல் கிளினிக் அதாவது வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறையில் உடலில் சிறு நடுக்கத்துடன் கரண் மற்றும் ஆராத்யா இருவரும் தனித்தனி பெட்டில் படுத்து இருக்க அவர்களை சுற்றி மாணவர்கள் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆசிரியர்கள் அந்த மருத்துவரிடம் இருவரின் நிலை குறித்து கேட்க அவரோ “ஒன்னும் பிரச்சனை இல்ல கொஞ்ச நேரம், இந்த ட்ரிப்ஸ் முடியட்டும் கூட்டிட்டு போங்க. காய்ச்சல் வந்தா அதுக்கு மாத்திரை எழுதி தரேன், போட சொல்லுங்க. மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்ல. ஒரு மணி நேரமும் தான் இருந்திருக்காங்க.. ரூம் டோர் க்ளோஸ் ஆனதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தான் டெம்பரேச்சர் இன்கிரீஸ் ஆகும். ஒரு 4 டு 5 ஹவர்ஸ் இருந்தா தான் ரொம்ப கிரிட்டிக்கல் கண்டிஷன் ஆகி இருக்கும். அதனால இது பிரச்சனை இல்ல கேர்புல்லா பார்த்துக்கோங்க!” என்று மட்டும் கூறியவர் மாத்திரைகளை கொடுத்து எப்பொழுது போட வேண்டும் என்ற அறிவுரையும் கூறிவிட்டு சென்றுவிட, அப்பொழுதுதான் ஆசிரியர்களுக்கு நிம்மதியாக இருந்தது .
எங்கே தாங்கள் தலைமையில் கூட்டிக்கொண்டு வந்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டதோ என்று மிகவும் பயந்தனர்.
மாணவர்களை கலைத்துவிட்டு இருவருக்கும் அருகில் சென்று நின்று “இரண்டு பேரும் நல்லா இருக்கீங்களா இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே இல்ல வேற ஏதாவது இருந்ததுனா சொல்லுங்க பெரிய ஹாஸ்பிடல் போகலாம்!” என்றார் ஒரு ஆசிரியர்.
கரண் “இல்ல மேம் ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் நல்லா தான் இருக்கேன் என்றான்.
ஆராத்யாவும் ” மேம் நல்லா இருக்கேன்!” என்றால்.
அன்று அதற்கு மேல் அங்கே இருக்க வேண்டாம் என்று அனைவரும் மீண்டும் அறைகளுக்கு திரும்பி விட கரண் நண்பர்கள் அவனை பத்திரமாக பார்த்துக் கொண்டனர்..
தேவியும் யாருக்கும் தெரியாமல் தனது நண்பர்கள் இருக்கும் அறைக்கு வந்தவள் கரணை சிறிது நேரம் பார்த்துக் கொண்டால்..
மாலை வேலை அவனுக்கு லேசாக காய்ச்சல் அடிக்க சீக்கிரம் செரிமானம் ஆகும் உணவை கொடுத்துவிட்டு மாத்திரைகளையும் கொடுக்க மறுநாள் காலையில் பிரஷ்ஷாக பீல் செய்தான்.
அவன் முகத்தில் இருந்த தெளிவை வைத்து குணமாகிவிட்டான் என்பதை உணர்ந்து கொண்ட நண்பர்கள் நிம்மதி அடைந்தனர்.
அப்பொழுதுதான் தனது மொபைலை எடுத்து பார்த்தவன் அதில் அபியிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மிஸ்டு கால்களும் 50க்கும் மேற்பட்ட மெசேஜ்களும் இருப்பதை பார்த்தவன் தலையில் அடித்து கொண்டான்.
உடனே திரும்பி தனது நண்பர்களை முறைத்தவன் “ஏண்டா நேத்து போன் அடிச்சிருக்கு ஏன்டா என்கிட்ட குடுக்கல? ” என்றான்.
” டேய் உன் உடம்ப பார்க்கிற கவனத்தில நாங்க எங்கடா அதை கவனிச்சோம் சத்தமே கேக்கல டா கேட்டிருந்தா கண்டிப்பா சொல்லி இருப்போம் !” என்றான் தேவன்.
தனது அறைக்கு வந்த ஆராத்யா உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அவன் முகத்தில் சோர்வையும் தாண்டி ஒரு கோபம் வெறி இருந்ததை உணர்ந்து கொண்ட தோழிகளில் ஒருத்தி, இன்னொருத்திக்கு கண்ணை காட்ட, அவளோ தான் கேட்பதாக சொல்லி சைகை செய்தவள் “ஆராத்யா என்னாச்சு அந்தக் கரண் கிட்ட நீ உன்னோட மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லிட்டியா? உன் விருப்பத்துக்கு சம்மதம் சொல்லிட்டானா? கதவு திறக்கிறப்ப பார்த்தோம் ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உக்காந்துட்டு இருந்தீங்களே அப்போ போன விஷயம் சக்ஸஸ் தானா ? என்றால் சந்தோஷமாக .
அதைக் கேட்டு கோபம் கொண்ட ஆராத்யா அருகில் இருந்த தலையணையை தூக்கி வீசினால்.
அதில் அனைவரும் அதிர்ச்சி அடைய ஆ….. என்று மீண்டும் கத்தியவள் “அவன் என்ன வேணான்னு சொல்லிட்டான் அந்த அபி நாய்தான் அவனுக்கு வேணுமாம் . எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த ஆராத்யாவை அவன் வேணான்னு சொல்லி இருப்பான் ? ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான். எனக்கு கிடைக்காத ஒரு பொருள் இந்த உலகத்துல நிம்மதியா இருக்க நான் விற்றுவேனா? அவங்க ரெண்டு பேரும் எப்படி என்னை மீறி சேர்ந்துடறாங்க நானும் பார்க்கிறேன். என்று கத்தினாள்!” .
இன்னொரு தோழியும் அவளது கைகளை பிடித்து “சரி டி சரிடி ஒன்னும் இல்ல அப்படி என்னதான் ஆச்சு அங்க?” என்று கேட்க சுருக்கமாக விஷயத்தை கூறினால்.
அதைக் கேட்ட தோழியோ ” நீயே அவ்வளவு நெருங்கி வந்தும் அவன் உன்னை ஏத்துக்களையா கரண் கிரேட் தான் !” என்றால் தவறுதலாக.
அதில் சற்றும் தாமதிக்காமல் சொன்ன தோழியை அறைந்து விட்டு “ஏன்டி இங்கே நான் அவ என்னை ஏத்துக்கல அப்படின்னு சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருந்தா அவனை கிரேட்ன்னு பேசிட்டு இருக்க நீ?” என்று முறைக்க
“அதுக்கு ஏண்டி அடிச்ச ?” என்று அவளும் உதட்டை பிதுக்கினால்.
“தயவு செஞ்சு எல்லாரும் இந்த ரூம விட்டு வெளியே போங்க என்ன கொஞ்ச நேரம் ஃப்ரீயா இருக்க விடுங்க !” என்று கத்த மற்றவர்களும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அந்த இடத்தை காலி செய்தனர்.
உடனே தனது தந்தைக்கு அழைத்து அப்பா என்ற சொல்லி அழைத்தவுடன் அவளுக்கு இவ்வளவு நேரம் இருந்த கோபம் இயலாமை அனைத்தும் சேர்ந்த அழுகை வெளிப்பட , மகளின் அழுகையை கேட்டு பதறியவர் “என்னாச்சுடா எதுக்கு அழற?” என்று பதட்டப்பட நடந்த அனைத்தையும் கூறியவள், “அந்த அபியை மட்டும் நிம்மதியா இருக்க விடக்கூடாது ஏதாவது பண்ணனும் அப்பா என்று கத்தினால் .
அதைக் கேட்ட அவளது தந்தை ஆதிகேசவன் “சொல்லுமா அந்த பொண்ண கொலை பண்ணிடலாமா ஃபேமிலியே தூக்கிடலாமா? அவங்க இருந்தா தானே அந்த பையன் அந்த பொண்ண காதலிப்பான்?” என்றார்.
அதை கேட்டவள் “இல்லப்பா அவ சாகக்கூடாது. செத்தா அவளுக்கு உயிர் போய்விடும். அதை நினைத்து இவன் காலம் ஃபுல்லா அவ நினைப்பிலேயே இருப்பானே ஒழிய அப்பையும் என்ன திரும்பி பார்க்க மாட்டான். அது எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு . அவங்க ரெண்டு பேரும் பிரியணும் . பக்கத்துல இருந்தாலும் சேர முடியாமல் தவிக்கணும் . அப்படிப்பட்ட ஒரு வலிய அவங்களுக்கு கொடுக்கணும். ஒருத்தர் மேல ஒருத்தர் வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் . அதுதான் அவர்களுக்கு நான் கொடுக்கப்போற தண்டனை! என்ன வேணான்னு சொன்ன அவன் எனக்கும் வேண்டாம் ஆனா அவனுக்கு அந்த அபியும் கிடைக்கக் கூடாது. அவன் தனி மரமா நின்னு கஷ்டப்படணுமே ஒழிய அவ கூட சேரக்கூடாது. ஏன்டா என்கிட்ட வச்சுக்கிட்டு வருத்தப்படணும் அவன் வாழ்க்கையில் இனிமேல் நிம்மதி சந்தோஷம் எதுவுமே இருக்க கூடாது!” என்றவள், “அந்த குடும்பத்தை பத்தின முழு விவரத்தையும் நான் வரதுக்குள்ள கலெக்ட் பண்ணி வைங்க. ஒரு சின்ன வீக்னஸ் கூட விடாதீங்க அவங்க குடும்பம் யாரு என்ன பண்றாங்க சொந்தக்காரர்கள் யாரு அவங்களுக்கு ஏதாவது எதிரி இருக்காங்களா என்ன எது எல்லாம் எனக்கு தெரியணும் பா!” என்றால்.
அவரும் “நீ கவலைப்படாம வா என் பொண்ணு நினைப்பது தான் நடக்கும் . என் பொண்ணு ஒரு விஷயம் கேட்டு நான் இதுவரைக்கும் பண்ணாம இருந்திருக்கேனா கண்டிப்பா பண்ணிடலாம் ” என்றவர் மகளை பத்திரமாக இருக்க கூறிவிட்டு காலை கட் செய்ய இவளும் அழைப்பை துண்டித்தவள்
” எவ்வளவு நாள் சந்தோஷமாய் இருக்க முடியுமோ இருந்துக்கோ கண்டிப்பா கூடிய சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் பிரிச்சே காட்டுவேன்!” என்று சபதம் எடுத்தால் ஆராத்யா.
கரண் பிரஷ் ஆகி வந்தவன் அறை பால்கனியில் நின்று தன்னுடைய காதலிக்கு அழைக்க, அப்பொழுது அபி குளிக்க சென்று இருந்தமையால் அபி செல்போன் ஏற்கப்படாமல் அடித்துக் கொண்டிருக்க கிளம்பிக் கொண்டிருந்த பவித்ராவின் கவனம் அதை நோக்கி திரும்பியது.
‘காலையில இவளுக்கு யார் கூப்பிடுகிறா ?’ என்று நினைத்துக் கொண்டே செல்போனை எடுத்துப் பார்க்க
அதில் 🥰 கரண் மை லவ் 🥰 என்ற சேமித்து வைத்த எண்ணில் இருந்து வந்து மிஸ்டு காலை கண்டவள் பேரைக் கண்டு அதிர்ச்சி அடைய , மீண்டும் போன் ரிங் ஆனது.
ஆனால் தற்பொழுது அதுவோ வீடியோ காலாக வந்திருக்க அதே பெயர் வாட்ஸ் அப்பிலும் காண்பிக்க அவள் ஒற்றை கையில் காலை கட் செய்யலாம் என்று நினைக்க போன் தடுமாறி கீழே விழப் போக அதை பிடித்தவள் கைபட்டு தெரியாமல் கால் அட்டன் ஆகி விட , நச்சு நச்சு நச்சு என்று எலி கத்தும் சத்தம் போல் யார் அழைப்பை ஏற்றார் என்பது தெரியாமல் கரன் முத்தம் கொடுக்க அதில் பயந்தவள் சற்று தள்ளி ஃபோனை வைத்து அதிர்ந்து பார்க்க அப்பொழுதுதான் கண்களை திறந்தவன் தன்னவள் முகம் சாயலில் வேறு ஒரு பெண் நிற்பதை கண்டு திடுக்கிட்டவன் “ஐயோ சாரி சாரி !” என்றவன் அழைப்பை வேகமாக துண்டித்தான்.
அதன் பிறகு தான் சுயம் வந்தவள் அதிர்ச்சியில் இருக்க , குளித்து முடித்து தலை துவட்டிக் கொண்டே வெளியே வந்த அபி தனது அக்காவின் கையில் இருந்த போனை பார்த்தவள் “என்னக்காச்சு?” என்று கேட்டுக் கொண்டே போனை வாங்க அவளோ தனது தங்கையை சந்தேகப்பார்வை பார்த்தவள் “கரண் யாரு ?” என்றால் பவித்ரா அதிரடியாக.
அதைக் கேட்டு அபி அதிர்ச்சியுடன் பவித்ராவை பார்க்க “சொல்லுடி யாரையாவது லவ் பண்றியா படிக்கப் போற இடத்துல இதுதான் உனக்கு வேலையா? அதுவும் ஃபர்ஸ்ட் இயர் லவ் கேக்குதா? என்ன அபி இப்படி பண்ற உன்னை நம்பி தானே காலேஜுக்கு அனுப்பி வச்சிருக்காங்க இதெல்லாம் நமக்கு தேவையா ?” என்றால் அதிராத குரலில்.
உடனே வேகமாக தனது அக்காவை கட்டிக் கொண்டவள் சுருக்கமாக ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரை நடந்த அனைத்தையும் கூற
“
சரி ஆனாலும் எனக்கு எதுவும் சரியா படல! இந்த வயசுல படிப்பு முக்கியம் அதை மட்டும் மறந்துடாத!” என்றால் பவித்ரா.
“இல்லக்கா அவர் ரொம்ப நல்லவரு எப்பவுமே என்கிட்ட அதிகமா உரிமை எடுத்துக் கூட ட்ரை பண்ண மாட்டாரு. ஒரு காதலர்கள் கிட்ட இருக்கிற நெருக்கம் கூட காட்ட மாட்டார். மற்ற காதலர்களைப் போல் வெளியில போலாம் சுத்தலாம் அந்த மாதிரி எல்லாம் சொன்னதில்ல. என்னோட மனசு கெட்டுப் போயிடும் நான் நல்லா படிக்கணும்! அப்படித்தான் அவர் அடிக்கடி சொல்லுவாரு!” என்றவள்
அவனுடைய வீட்டைப் பற்றியும் கூறி “அவருக்கு ஒரு அன்பு தான் தேவை அதுதான் என்கிட்ட எதிர்பார்க்கிறார் மத்தபடி வேற எதுவுமே இல்ல கவலைப்படாத!” என்றால்.
அவன் வீட்டை கேட்டவுடன் இவளுக்கும் சற்று கவலையாக இருக்க “சரிமா ஆனா இது தடுமாற வயசு அதனால எப்பவும் எல்லாம் மீறாமல் இருங்க. கண்டிப்பா நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் நானே அப்பா கிட்ட சொல்லி உன்னோட லவ் ஜெயிக்க உதவி பண்றேன்!” என்றால் பவித்ரா தங்கையின் தலையை பாசமாக வருடி கொண்டே.
” சரிக்கா ரொம்ப தேங்க்ஸ்!” என்றவள் தனது அக்காவை கட்டிக் கொள்ள, தனது தங்கையை கட்டி கொண்டு நெற்றியில் முத்தம் வைத்தவள் “சரி சீக்கிரம் ரெடி ஆகு!” என்று அவளை ஈரமாக இருக்கும் தங்கையின் தலையை ஹேர் டிரையர் மூலம் உலர்த்தி விட்டவள் அவளுக்கு எளிமையான ஒரு ஹேர் ஸ்டைல் செய்துவிட கல்லூரிக்கு தயாரானால் அபி.
பவித்ரா அறையை விட்டு வெளியேறும் முன் “அந்தப் பையன் கால் பண்ணினாங்க. நானு நினைச்சு வீடியோ கால்ல உனக்கு நிறைய முத்தம் கொடுத்து இருக்காரு அவர்கிட்ட பேசிட்டு வா நான் பாத்துக்குறேன் அப்பா அம்மாவ சமாளிச்சுக்கிறேன் ஆனா ரொம்ப நேரம் எடுத்துக்காத!” என்று கூறியவள் முழித்துக் கொண்டிருக்கும் தனது தங்கையை பார்த்து சிரித்துக் கொண்டே பவித்ரா வெளியேறிவிட கதவை சாற்றி விட்டு வந்தவள் , கரணுக்கு கால் செய்து கத்த ஆரம்பித்தால்.
” எதுக்குடா யார் போன் எடுக்குறாங்கன்னு பாக்காமயே எங்க அக்காவுக்கு கிஸ் பண்ணின?” என்றால் எடுத்தவுடன் .
அவளுடைய டா என்ற அழைப்பில் நெருக்கத்தை உணர்ந்தவன் அவள் செல்ல கோபத்தை நினைத்து சிரித்துக் கொண்டே “எனக்கு என்னடி தெரியும் நீ தான் போன் அட்டென்ட் பண்ணுவ நான் நினைச்சேன் உங்க அக்காவை நான் எதிர்பார்க்கவே இல்லை என்ன சொன்னாங்க நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சா? உன்னை ஒன்னும் திட்டலையே?” என்று பதட்டமாக கேட்டான் .
“அதெல்லாம் ஒன்னும் இல்ல கவலைப்படாதே! என்றவள் அவள் சொன்னதை எல்லாம் சொல்லிவிட்டு “நம்ம வீட்ல இப்பவே ஒரு சப்போர்ட் இருக்கு கவலையே பட வேண்டாம்!” என்றால்.
” சரி சரி நேத்து நைட்டு சாரிம்மா உன்னோட காலை எடுக்க முடியல!” என்றான் வருத்தத்துடன்.
” சரி நீ போன இடத்துல ஜாலியா பிரண்ட்ஸ் கூட இருப்பீங்க அதுதான் நானும் கூப்பிட வேண்டாம் தான் இருந்தேன். ஆனாலும் மனசு கேட்கல அதுக்காக தான் அத்தனை மெசேஜ் அனுப்பி இருந்தேன் இனிமேட்டு சப்போஸ் நீங்க பிஸியாக இருந்தால் எனக்கு முன்கூட்டியே மெசேஜ் பண்ணிடுங்கப்பா ரொம்ப பதட்டமா இருக்கு அதனால தான் நேத்து விடாமல் கால் பண்ணு மெசேஜ் பண்ணினேன்!” என்றால் வருத்தமான குரலில்.
“புரியுது சாரி!” என்றவன் தன்னுடைய காய்ச்சலையும் நேத்து நடந்த சம்பவத்தையும் அவளிடம் முழுமையாக மறைத்து இருந்தான். காரணம் நேரில் சொல்லிக் கொள்ளலாம் தற்பொழுது சொன்னால் தான் திரும்பும் வரை அவள் அதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள் என்ற காரணத்தினால் மறைத்தான்..
அவளும் அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கல்லூரிக்கு நேரம் ஆவதால் முத்தங்களை பரிசளித்து விட்டு காலை கட் செய்தால் . தன்னவளுடன் காலையில் பேசியதே கரணுக்கு எனர்ஜி பூஸ்டராக அமைந்துவிட அன்று சுற்றி பார்க்க கிளம்பினான் நண்பர்களுடன்.
அனைவரும் ரிசப்ஷனில் காத்திருக்க இவர்களும் வந்துவிட ஆசிரியர்கள் கரண் மற்றும் ஆராத்யா இருவரின் உடல் நலம் நன்றாக உள்ளதா? இல்லையென்றால் ஓய்வு எடுத்துக் கொள்ள சொல்ல
“மேம் நல்லா தான் இருக்கேன் போகலாம்!” என்றான் கரன்.
ஆராத்யாவும் ” எனக்கும் ஒன்னும் பிரச்சனை இல்ல வெளியே சுத்தி பார்க்கலாம்!” என்றவுடன் அனைவரும் பெங்களூரில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு சுத்தி பார்க்க சென்றனர்..
