அத்தியாயம் 17
வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த தீரனையும் மித்ராவையும் அங்கு அமர்ந்திருந்த டாக்டர் வளர்மதி அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார்.
“ ஹலோ மிஸ்டர் தீரன்.. எப்படி இருக்கீங்க??”
” என்னை விசாரிக்கிறது இருக்கட்டும் முதல்ல இவளுக்கு மருந்து போட்டு விடுங்க”, என்று விட்டு அவளை ஒரு நாற்காலியில் அமர வைத்துவிட்டு இவனும் அமர்ந்து கொண்டான்..
என்ன ஏது என்று கேட்டு தெரிந்து கொண்டவர் அவளின் உதட்டை பார்க்கும் பொழுது அவர்களின் மத்தியில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து விட்டார்.
தீரனை சங்கடமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மித்ராவை பாவமாக ஒரு பார்வை பார்த்து வைத்தார்.
பிறகு அவளை உள்ளே அழைத்துச் சென்று உதட்டில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு மருந்து போட்டு விட்டு அவளை அனுப்பி வைத்தார்..
” ஒரு நிமிஷம் தீரன் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”, கையை குறுக்கே கட்டிக் கொண்டு தீரனை பார்த்து கட்டளையிடுவது போல கூறினார் வளர்மதி.
சற்று யோசித்தவன் பிறகு தன் அருகில் நின்று கொண்டிருக்கும் மித்ராவை பார்த்து “கொஞ்ச நேரம் வெளியே இரு நான் வரேன்.. எங்கேயும் போயிடாத”, என்று அதட்டலாக கூறினான்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்து வைத்துவிட்டு என்னவாக இருக்கும் என்ற யோசனையுடனே அவளும் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
” உட்காரு தீரன் உன்கிட்ட பேசணும்..”,என்று கூறி அவனுக்கு நாற்காலியை காட்டிவிட்டு அவரும் அவன் எதிரே அமர்ந்து கொண்டு பேச தொடங்கினார்.
” எஸ் வளர்மதி மேடம்.. என்ன விஷயம் சொல்லுங்க??”.
மூக்கு கண்ணாடியை கழட்டி அதை டேபிள் மீது வைத்து விட்டு அவனை நேருக்கு நேராக ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவர்..
“ இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல தீரன்.. நீ முரடன் தான் ஆனால் புத்திசாலி, கண்ணியமானவன், நேர்மையானவன் என்று நினைத்தேன்.. ஆனா ஒரு பெண்ணை கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் இந்த அளவுக்கு கொடுமை பண்ணிருக்க..??”
“ என்ன பேசிட்டடிருக்கீங்க?? நான் என்ன கொடுமை பண்ணேன்.. நான் ஒன்னும் பண்ணலையே..”
” அந்த பொண்ணோட உதட்டை பார்க்கும் போதே நல்லா தெரியுது நீ எந்த அளவுக்கு அவளை காயப்படுத்திருக்க அப்படின்னு.. என்னதான் அவ உன்னுடைய மனைவியா இருந்தாலும் அவளுடைய அனுமதி இல்லாமல் நீ அவளை நெருங்கிறது கூட தப்புதான் இந்த அடிப்படை விஷயம் கூட உனக்கு தெரியாதா என்ன?? நான் சொல்லித்தான் உனக்கு இதெல்லாம் புரியணுமா?? பார்த்தால் ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுறா.. ரொம்பவே அமைதியா வேற இருக்கா ஆனா இவளை ஏன் இப்படி கஷ்டப்படுத்துற?? உங்களுக்குள்ள என்ன பிரச்சனை போய்கிட்டிருக்குன்னு எனக்கு எதுவும் சரியா தெரியாது தீரன்.. ஆனால் இப்போ அவளுடைய உடல் நிலை இருக்கிறத வச்சு நான் சொல்றேன்.. அவ ரொம்பவே வீக்கா இருக்கா.. நல்ல ரெஸ்ட் தேவை, நல்லா சாப்பிடணும்..முக்கியமா நிம்மதியா தூங்கி எந்திரிக்கணும் நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்..”, என்றார் அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே..
“ நல்லாவே புரியுது… ஆனா..”
” இந்த ஆனா ஆவன்னாவெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. உன்னை சின்ன வயசுலருந்து நான் பார்த்துட்டிருக்கேன் நீ எப்படி நடந்துப்ப , எப்படி பேசுவன்னு எல்லாமே எனக்கு தெரியும்.. உன் மேல நான் நிறைய மரியாதை வெச்சிருக்கேன் ..
உன்னுடைய தொழில், அதில் நீ ஈட்டுகிற வருமானம், நீ அடையும் வளர்ச்சி இது எல்லாத்தையும் பார்த்து நான் ரொம்பவே பிரம்மிச்சு போயிருக்கேன்.. எங்க கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணாம தொழில் தொழில் அப்படின்னு ஓடிக்கிட்டே இருந்திடுவியோன்னு கூட சில சமயம் யோசிச்சிருக்கேன்.. ஆனா நல்லவேளை இப்போ எனக்கு அந்த கவலை இல்ல.. ஏன்னா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. அதுவும் இப்பேர்பட்ட ஒரு நல்ல அமைதியான அழகான அடக்கமான நல்ல பெண்ணோடு திருமணமாகிருக்கு.. இந்த பந்தம் உனக்கு கடைசி வரைக்கும் நிலைக்கணும் அவகிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கோ இப்படி முரட்டுத்தனமா மூர்க்கத்தனமா நடந்துக்காத.. வேறொரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரத்துக்கு உன் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பா.. இல்லன்னா குறைஞ்சபட்சம் என்கிட்டயாவது அந்த விஷயத்தை சொல்லி அழுதிருப்பா.. என்ன காயம் ??எதனால் ஆனது என்று நான் கேட்டதுக்கு அந்த பொண்ணு வாயே திறக்கல.. வீட்ல எதுவும் சண்டையான்னு கேட்டதுக்கு அதெல்லாம் ஒன்னுமில்ல நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்னு பச்சையா பொய் சொல்லுது.. உன்னை காப்பாற்றனும்னு அவளுக்கு என்ன அவசியமா?? நீ பண்ண வேலைக்கு , அவளுக்கு உன் மேல இருக்கிற கோபத்துக்கும் வருத்தத்துக்கும் உன்னை தண்டிக்கத்தானே செய்யணும்.. ஆனா அப்பவும் அவ உன்னைத்தான் காப்பாற்ற நினைக்கிறா.. இதுதான் பெண்களோட மைனஸ்..
என்னதான் கணவன் தப்பு செஞ்சாலும் அவனை தலை மேல் தூக்கி வைத்து ஆடுவாங்க யார்கிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க ஏன்னா புருஷனாச்சே.. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு வேற சொல்லி வச்சிட்டு போயிட்டாங்களே என்ன பண்றது அதனால பெண்கள் அதையெல்லாம் கடைப்பிடித்து தானே ஆகணும்.. என்னவோ சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன்னுடைய இஷ்டம்..”, என்று கூறியவர் அதற்கு மேல் உன்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பது போல அடுத்த பைலை எடுத்து பார்க்க தொடங்கிவிட்டார்.
அவனும் எந்த பதிலையும் சொல்லாமல் யோசனையுடனே அந்த அறையை விட்டு வெளியேறினான்.
வளர்மதி…
அவர்களின் குடும்ப டாக்டர் தான்.. சிறுவயதிலிருந்து தீரனை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்..
அவனுடைய வளர்ச்சி, குணம், நடவடிக்கை என அனைத்தும் நன்கு அறிந்தவர்.
இடையில் அவசர அவசரமாக அவன் திருமணம் செய்திருக்கிறான் என்கிற விஷயத்தை மட்டுமே கேள்விப்பட்டார்.. அந்நேரம் அவர் வெளிநாட்டில் இருக்க அவரால் வர முடியாமல் போய்விட்டது..
இப்பொழுதுதான் முதல்முறையாக அவனுடைய மனைவியான மித்ராவை சந்திக்கிறார். அதுவும் இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்..!!
அதுவே அவருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது..
அதனால் தான் அவனை தனியாக அழைத்து உபதேசம் கூறினார்..
அது அவன் மண்டைக்கு ஏறியதோ இல்லையோ தெரியவில்லை.. அது அவனுக்கே வெளிச்சம்..
வெளியே அவனுடைய வருகைக்காக காத்திருந்த மித்ராவை இழுத்துக் கொண்டு மீண்டும் காருக்கு சென்றான்.
காயப்படுத்தி விட்டு பிறகு அதற்கு மருந்து போடுவதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருக்கிறான் மிகவும் அக்கறை தான் மனைவி மீது.. என்று மனதிற்குள் எண்ணியவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ என்ன என்னை சைட் அடிக்கிறியா??”
“ஆஹா.. அடிக்கிறாங்க சைட்.. ச்சே, உங்களை போய் யார் சைட் அடிப்பா?? அந்த அளவுக்கு நீங்க ஒன்னும் நல்லா இல்ல.. பெரிய ஹீரோ என்று நினைப்போ மனசுல?? “, என்று மூக்குடைப்பது போல கேள்விகளை கேட்டாள்.
” ஆமா ஆமா உன் கண்ணுக்கு நான் எல்லாம் அழகா தெரிய மாட்டேன்.. எல்லாம் அந்த அருண் தானே?? இந்த உலகத்தில் என்னை தவிர மற்ற எல்லா ஆண்களும் உன் கண்ணுக்கு அழகா தான் தெரிவாங்க”, உதட்டை சுழித்து விரக்தியாக கூறுவது போல கூறினான் அவன்.
“ வாய்க்கு வந்தபடி பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க.. இப்போ எதுக்காக அனாவசியமா அருணை இழுக்குறிங்க இதுல??”
“ நானா இழுத்துட்டு வந்தேன்?? நீ தான் அவன இழுத்துட்டு எங்கேயோ போன.. ஆமா எதுக்கு போன?? உனக்கு அங்க என்ன வேலை?? ”
வேலை தேடி போனேன்.. நாளையிலிருந்து வேலைக்கு போக போகிறேன் என்று சொன்னால் என்ன சொல்லுவான்??
” நிச்சயமா போகக்கூடாது என்னுடைய மனைவி வேலைக்கு போறதை நான் விரும்ப மாட்டேன்”, என்று பக்கம் பக்கமாக வசனம் பேசுவானே அப்படி என்றால் இவனிடம் அதைப் பற்றி கூறக்கூடாது.. என்று மனதிற்குள் உறுதி செய்து கொண்டாள்.
“ உன்னைத்தான் கேட்கிறேன் எதுக்கு போன??”
“ ஏற்கனவே உங்களுடைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிட்டேன் உங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லணும்னு எனக்கு அவசியம் கிடையாது”
“ இப்படி பேசினதுக்கு தான் வாயில பிளாஸ்டர் போட்டு வந்துட்டிருக்க.. மறுபடியும் வேணுமோ பிளாஸ்டர்??”
நக்கலாக அவன் கேள்வி கேட்கவும் திரும்பி முறைத்துப் பார்த்தாள் அவனை..
நேராக வீட்டிற்கு அழைத்து வந்ததும் அவளை மாடிக்கு இழுத்துச் சென்றான்..
அந்நேரம் வசுந்தரா வீட்டில் இருக்கவில்லை பக்கத்து வீட்டு சுசீலாவிடம் கதை பேச போய்விட்டார் போல..
அது இவனுக்கு வசதியாக போய்விட்டது அதனால் அவளை தரதரவென்று இழுத்து கொண்டு மாடி ஏறினான்.
அறைக்குள் சென்றவன் அவளை தள்ளி விட்டு விட்டு கதவை அடைத்தான்.
மருண்ட மான் விழிகளோடு அவனை ஏறிட்டு பார்த்தாள் அச்சத்தோடு.
” போய் கட்டிலில் உட்கார்..”, அதிகாரமாக ஒலித்த அவனுடைய குரலுக்கு கட்டப்பட்டு மந்திரம் போட்டது போல அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அருகில் இருந்த டேபிள் மீதுள்ள பிரட் மற்றும் ஜாமை கையில் எடுத்தான்.
அழகாக அதில் ஜாமை தடவி ஒவ்வொன்றாக மடக்கி அவள் கையில் கொடுத்து சாப்பிட சொன்னான்.
” எனக்கு பசிக்குதுன்னு நான் உங்ககிட்ட சொல்லவே இல்லையே.. எதுக்கு தேவையில்லாம என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க??”, வார்த்தைகளை தீப்பிழம்பாய் அவன் தலையில் கொட்டினாள்.
யாருக்கும் இத்தனை அக்கறை காட்டி அவன் நடந்து கொண்டதே கிடையாது..
பெற்ற தாய்க்கு கூட அக்கறை காட்டுவதில் கஞ்சத்தனம் காட்டுபவன்..
சாப்பிட்டாயா என்று தூரத்தில் நின்று கேட்பதோடு சரி அருகில் அமர்ந்து சாப்பாடு ஊட்டும் ரகம் கிடையாது அவன்.
அப்படிப்பட்டவன் இன்று தன் மனைவிக்கு பசிக்குமே என்று உணவு உண்ண கொடுக்கிறான், அதுவும் அதட்டலாக.. அதுவே சிறு முன்னேற்றம் தான்..!!
இதை அவனும் அறியவில்லை..
அவளும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
“ போனால் போகுது பாவம் பசிக்குமேனு சாப்பாடு எடுத்து கொடுத்தா ரொம்பதான் ஓவரா பேசுற.. திமிரு புடிச்சவளே , ஒழுங்கு மரியாதையா இப்ப நான் கொடுத்திருக்கிற சாப்பாட்டை சாப்பிடு இல்லன்னா அவ்வளவுதான்..”
“ முடியாதுன்னு சொன்னா என்ன செய்வீங்க??”
“ நான் என்ன செய்வேன்னு உனக்கு நல்லாவே தெரியும் மித்ரா.. அதனால நீயே எடுத்து சாப்பிடு..”
அரை வினாடி அதிர்ச்சியை தாங்கிய அவளுடைய கருவிழிகள்.. உடனே சுதாரித்துக் கொண்டது!!
“ என்ன மிரட்டினாலும் என்னை பணிய வைக்க உங்களால் முடியாது..”
” என்னடி சொன்ன??”, என்றவன் அவளுடைய கூந்தலை கொத்தாக கையில் பிடித்திழுத்தான்..!!
“ஸ்ஸ்.. ஆ…..!!”
வலி தாங்காமல் அவள் கத்தினாள்.
“ இப்ப சாப்பிடு..”
அப்பொழுதும் முடியாது என்றே தலையாட்டினாள் மித்ரா.
” இப்படியெல்லாம் சொன்னா நீ சரிப்பட்டு வர மாட்ட இரு..”, என்றவன் அவள் அருகே மேலும் நெருங்கினான்..!!
– தொடரும்..
