அந்தப் பேருந்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் பெங்களூர் சிட்டியை பார்த்துக் கொண்டிருக்க லால்பாக், cubbon பூங்கா, பெங்களூர் பாலஸ் என அனைத்தையும் மதியத்திற்குள் பார்த்துவிட்டு மதிய உணவையும் முடித்துவிட்டு அருகில் இருக்கும் நந்தி அருவிக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கேயே வேகமாக சென்று அனைத்தையும் சுத்தி பார்த்துக் கொண்டு விட்டு சஞ்சர் பார்த்தவுடன் கிளம்புவதாக பிளான் செய்திருக்க அதேபோல் ரீச் ஆனவுடன் இயற்கையை ரசித்து அங்கிருந்து இடங்களை அனைத்தும் சுற்றி பார்த்தனர்.
அப்பொழுது கரண் தன்னவளுக்கு அனுப்புவதற்கு இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து அப்பொழுதே அனுப்பி கொண்டிருக்க அவன் அருகில் வந்த ஆராத்யா அவனை ரசித்துப் பார்த்தவள் யாரோ அருகில் இருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தவுடன் தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவள் “கரண் உனக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” என்றால் .
அவனும் அமைதியாக அவளை ஆராய்ச்சி செய்து கொண்டே “நல்லா இருக்கேன்! நீ எப்படி இருக்க ?” என்ற உடன் ஒரு புன்னகை உதிர்த்தவள் “ஒன்னும் பிரச்சனை இல்ல ரொம்ப நல்லா இருக்கேன்!” என்றவன் தயங்கிக் கொண்டே பேசுவது போல்
“சாரி நான் அப்படி நடந்திருக்க கூடாது மன்னிச்சுடு உன் மேல இருக்கிற ஆசையில நீ என்ன ரிஜெக்ட் பண்ணினதனால தான் அப்படி கோவமா நடந்துக்கிட்டேன். என்னோட தப்பா புரிஞ்சுகிட்டேன் இனிமே உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!” என்றால்.
அப்பொழுதும் அவளை நம்பாத பார்வை பார்க்க, அதை உணர்ந்தவள் உள்ளுக்குள் கோபம் , ஆத்திரம் எழுந்தாலும் வெளியில் விரக்தியாக புன்னகை செய்வது போல் சிரித்தவள், “புரியுது உன்னோட பார்வைக்கு அர்த்தம், நீ என்ன நம்பலன்னு .ஆனா நம்பி தான் ஆகணும் கிடைச்சதெல்லாம் வாங்கி கொடுக்கிற அப்பா, இதுவரைக்கும் நான் கேட்டு எதுவும் எனக்கு கிடைக்காமல் இருந்ததில்லை அதனால உன்னோட உதாசீனம் எனக்கு கஷ்டத்தையும் கோபத்தையும் கொடுத்தது. அதனால் தான் அப்படி பண்ணிட்டேன். ஆனா காதல கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது. என்று புரிந்து கொண்டேன். அந்த நேரத்திலும் மத்த யாராவது இருந்தா மனசு தடுமாறி இருப்பார்களோ என்னவோ ஆனா உன்னோட கண்ணியம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது ஐ ஸ்டில் லவ் யூ ஆனா உன்னை தொல்லை பண்ண மாட்டேன்! மறுபடியும் என்ன மன்னிச்சிடு” என்றவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து செல்வது போல் திரும்ப அந்த இடம் பாறையாக இருப்பதால் வேண்டுமென்றே வழுக்கி விடுவது போல் அவள் தடுமாற அவள் விழப் போவதை பார்த்து கரண் தடுத்து பிடிக்க அருகில் நெருங்கி அவளை கைகளில் தாங்கினான். அதை சரியாக கிளிக் செய்து கொண்டனர் அவளுடைய தோழிகள் சற்று தொலைவில் இருந்து.
உடனே அவளை நேராக நிற்க வைத்தவன் “கவனமா பாறை வழுக்குது கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்து போ” என்றான் .
“சரி கரண் ரொம்ப தேங்க்ஸ் அண்ட் சாரி ” என்று மட்டும் கூறியவள் அவன் பாக்காத நேரம் விஷம புன்னகை சிந்தியவள் அவ்விடம் விட்டு நகர்ந்தால் .
சன்செட் அங்கிருந்து பார்க்க நன்றாக இருக்கும் என்பதால் அதையும் தனது நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தவன் மனதிற்குள் தன்னுடைய அபியை அழைத்துக் கொண்டு இங்கே வரவேண்டும் என்று நினைத்தவன் அதை புகைப்படம் எடுத்த தன்னவளுக்கு அனுப்பி வைத்தான்.
அவளும் காலையிலிருந்து கல்லூரி கல்லூரியில் இருந்தாலும் தன்னவன் அனுப்பும் புகைப்படங்கள் மூலம் அவனுடன் நேரம் செலவிடுவதை போல் நினைத்து சந்தோஷம் கொண்டவள், மாலை வீட்டிற்கு வந்ததும் டீ மட்டும் குடித்துவிட்டு அசைன்மென்ட் வொர்க் இருக்கிறது என்று அறைக்குள் அடைந்து கொள்ள தன்னுடைய whatsappல் அவன் அனுப்பும் புகைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டு இருந்தால் இரவு வழக்கம் போல் இருவரும் பேசிவிட்டு உறங்கினர்…
நான்காவது நாள் காலை அருகில் இருந்த சில இடங்களுக்கு மட்டும் சென்றவர்கள் மதிய உணவை எடுத்துக் கொண்டு தங்கள் பேருந்துகளில் ஏறி அங்கிருந்து சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர் .
அப்பொழுதும் இடையில் தன்னவலுடன் பேசிக்கொண்டே வந்தான் கரண்.
அவன் முகத்தில் காதலும் சந்தோஷமும் இழையோட அது தன்னால் இல்லாமல் வேறு ஒருத்தியால் ஏற்படுகின்றது என்பதை பார்த்து ஆராத்யா யாரும் அறியாத நேரம் அவனை முறைத்து பார்த்தவள், ‘நல்லா சந்தோஷமா இரு இன்னும் எவ்வளவு மணி நேரம் இந்த சந்தோஷம் நீடிக்குது நானும் பாக்குறேன் கண்டிப்பா நாளைக்கு இந்த சந்தோஷம் இருக்காது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல்களை மனதிற்குள் திட்டமிட்டால்.
அன்று திங்கட்கிழமை காலை சூரியன் தனது பணியை செய்ய வந்திருக்க அனைவரும் தங்கள் வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தனர் .
அதேபோல் கல்லூரியிலும் மாணவர் கூட்டம் படையெடுக்க தன்னவலை ஐந்து நாட்கள் கழித்து பார்க்க போகும் ஆவலில் சீக்கிரமாக கல்லூரிக்கு வந்து எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்த கரன் அபியின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தான்.
அவனும் எதிர்பார்த்தது போல் வந்த காரிகை முகத்தில் துளி கூட சந்தோஷமோ கண்களில் தவிப்போ இல்லாமல் இருப்பதை பார்த்து மனதிற்குள் வருத்தம் ஏற்பட்டாலும் திடீர் என்று அவள் வாடிய வதனம் கண்டு அவளுக்கு உடம்பு சரியில்லையா என்ற படபடப்பு ஏற்பட
அவள் தன்னை கவனிக்காமல் நடந்து சென்று கொண்டிருப்பதை உணர்ந்தவன் அருகில் சென்று அவளது கை பிடித்து கான்டீன் அருகே இருந்த ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர வைத்தான்.
அதுவரை அமைதியாக வந்தவள் அங்கே அமர்ந்ததும் எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க? நான் கிளாசுக்கு போகணும். நேரமாச்சு! என்னை விடுங்க” என்று சொன்னவள் அவன் முகத்தையும் பார்க்காமல் அவன் பிடித்து இழுத்து வந்தது ஏற்பட்ட கைவலியை போக்குவதற்கு அதை தேய்த்துக் கொண்டிருந்தால்.
அதைக் கண்டு அப்பொழுதுதான் அவளை வேகமாக இழுத்து வந்தது புரிய அதை உணர்ந்தவன் அவளது கைகளைப் பிடித்து தேய்த்துக் கொண்டே “ஏன்டி இவ்ளோ நாள் உன்னை பார்க்கல ஆசையா வந்துட்டு இருக்கேன் நீ என்னடான்னா என்னையும் கவனிக்க மாட்டேங்குற உன் முகம் வேற டல்லா இருக்கு ஏதோ சிந்தனையில் போயிட்டு இருக்க என்னைய பார்த்த பிறகும் எந்த சந்தோஷமும் இல்லாம இருக்கியே என்னாச்சு உனக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா? அதைத்தான் தனியா பேசறதுக்கு உன்னை கூட்டிட்டு வந்தேன்!” என்றவன்
“இல்லையே உன் கை ஒன்னும் சுடலையே?” என்று மீண்டும் அவளது நெத்தியில் வைத்துப் பார்த்தான்.
அவளோ அவனது கைகளை தட்டி விட்டு “எதுக்காக நான் உங்கள பாக்கணும் எதுக்கு வருத்தப்படணும் நீங்க தான் நான் இல்லாம சந்தோஷமா இருந்து இருப்பீர்கள் போல இந்த நாலு நாளும்” என்றாள்.
அதைக் கேட்டவன் “என்னடி சொல்ற நானு எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும் போன்ல பேசுறப்ப கூட உன் கிட்ட சொல்லித்தானே இருந்தேன் அப்புறம் ஏன் புரிஞ்சுக்காம பேசுற? ஏன் இவ்வளவு கோவமா இருக்க? என்ன ஆச்சு வாய் திறந்து சொன்னதாமா தெரியும்?” என்றான் கெஞ்சலாக.
” நீங்க என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா ? இல்ல எனக்கு தேவையில்லாதது இவளுக்கு எதுக்கு தெரியணும் அப்படின்னு நீங்க பெங்களூரில் இருந்த போ நடந்தத ஏதாவது மறைக்கிறீங்களா?” என்றால் .
“என்ன சொல்ற எனக்கு சுத்தமா புரியல? நான் எதுக்கு உன்கிட்ட மறைக்கணும் நீ என்ன கேட்கிறேன்னு எனக்கு எந்த ஐடியாவுமே இல்ல தெளிவா சொல்லு!” என்றான்.
” டெய்லியும் என்னென்ன பண்ணேன்னு சொன்னீங்களே உங்க நீங்களும் ஆராத்யா சீனியரும் அந்த பிரீசர் அறையில் மாட்டினதை ஏன் என்கிட்ட சொல்லல?” என்றால்.
அது .. அது….என்று தடுமாறியவன் “அத சொன்னா நீ வருத்தப்படுவ அதனால்தான் நான் சொல்லல !” என்றவன் அந்த அறையில் நடந்ததை சுருக்கமாக அவள் தவறாக எடுத்துக் கொள்ளாத வண்ணம் விளக்கினான்..
“ஓ இவ்வளவு நடந்து இருக்கு இதை என்கிட்ட சொல்லணும்னு உங்களுக்கு தோணல முக்கியமான விஷயம்னு நினைக்கலையா இல்ல முக்கியமான விஷயத்தை என்கிட்ட ஷேர் பண்ண கூடாதுன்னு விட்டுட்டீங்களா? அது இருக்கட்டும் மறுநாள் அவுட்டிங் போயிருந்தப்போ நீங்களும் ஆராத்யா சீனியரும் ரெண்டு பேரும் கட்டி புடிச்சு நின்னுட்டு இருக்கீங்க? அதுவும் முக்கியம் இல்லன்னு என்கிட்ட மறைச்சிட்டீங்க அப்படித்தானே?” என்றால் கோபமாக.
அதைக் கேட்டவன் “என்ன உளர? நான் அவளை கட்டி புடிக்கல!” என்றதும்
“நடிக்காதீங்க கரண்! நீங்க சொல்லலனாலும் எனக்கு எல்லாம் உண்மையும் தெரிஞ்சிருச்சு” என்றவள் தன்னுடைய மொபைலில் இருந்த புகைப்படத்தை காட்ட அவள் விழும் பொழுது இவன் தாங்கி பிடித்ததை தான் அதில் பார்த்தான்.
“அவ என்னிடம் முதல் நாள் நடந்து கொண்டதுக்கு சாரி கேட்க வந்தா அது பாறை இருக்கிற இடம் லேசா வழிக்கு அவர் தடுமாறிட்டா. அதனால நான் அவளை தாங்கி பிடிச்சேன் அவ்வளவுதான். மத்தபடி ஒன்னும் இல்ல ஆமா இதை உனக்கு யார் அனுப்பினா?” என்றான் சந்தேகமாக.
“யாரோ அனுப்பிவிட்டு போறாங்க இதை ஏன் என்கிட்ட சொல்லல?” என்றால்.
“ஏன்னா இது ஒரு மனிதாபிமான அடிப்படையில் காப்பாத்தினது அந்த இடத்தில் அவன் கிடையாது யார் இருந்தாலும் தாங்கி பிடித்து காப்பாற்றி இருப்பேன். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியல. அவளை பத்தி நினைக்கவே கூடாது பார்க்கவே கூடாது பேசவே கூடாது என்று இருக்கிறப்போ, அவளா வந்து பேசினா நான் என்ன பண்ணட்டும் அது மட்டும் இல்லாம அவ என்கிட்ட பேசுறப்ப எல்லாம் நான் முகத்தில் அடிச்ச மாதிரி தான் பேசிட்டு இருக்கேன்! அவ கிட்ட பேச கூட எனக்கு பிடிக்கல அப்புறம் எப்படி இது ஒரு பெரிய விஷயமா நான் கருத முடியும் அதனாலதான் உங்ககிட்ட சொல்லல” என்றவன்
“அப்போ இந்த புகைப்படத்தை பார்த்துட்டு தான் நான் வந்ததுக்கப்புறம் உன்கிட்ட பேசறதுக்கு கூப்பிட்டா அப்பவும் நீ போன் எடுக்கல. நான் அனுப்பின மெசேஜ் எல்லாம் ரிப்ளை பண்ணல நேத்தும் எதுவும் எனக்கு போன் பண்ணி பேசல இதுதான் காரணமா அப்ப என் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே என்ன அவ்வளவுதான் நீ புரிஞ்சு வெச்சுட்டு இருக்கியா உனக்காக உயிரை கொடுக்க கூட தயாரா இருக்கேன் என்ன போய் நீ சந்தேகப்பட்ட இல்ல ” என்றவன் ,
” அப்பவே என்கிட்ட கேட்டு டவுட்டு கிளியர் பண்ணி இருக்கலாமே நானும் உன் கிட்ட சொல்லி இருப்பேன் எந்த விதத்துல என்னோட காதல் உனக்கு நம்பிக்கை கொடுக்காமல் போச்சுன்னு எனக்கு சுத்தமா தெரியல என் கண்ண பாத்து சொல்லு நான் உன்னை ஏமாத்துற பர்சனா சொல்லுமா” என்றான் உடைந்த குரலில் .
தற்பொழுது தான் தங்கள் இருவரையும் பிரிப்பதற்காக ஆராத்யா இப்படி செய்திருக்கிறாள் என்று நினைத்தவள் கரண் என்று கலங்கிய குரலில் கூப்பிட
” வேண்டாம் நீயாவது என்ன புரிஞ்சிட்டு கடைசி வரைக்கும் வருவேன் என்று நினைத்தேன்? ஆனா என்னோட காதலயே சந்தேகப்பட்டுட்டியே அவ கிட்ட சொன்னது தான் உன் கிட்டயும் சொல்றேன் எனக்கு எனக்காக பொறந்தவ நீ மட்டும் தான் என்னை என்ன வேணா திட்டிக்கோ. என்னுடைய காதல் மேல மட்டும் சந்தேகப்படாத. என்ன நாலு அடி கூட அடிச்சிடு . ஆனா தயவு செஞ்சு இந்த மாதிரி என் காதலை கேவலப்படுத்தாத” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான்.
அப்பொழுது தன்னைத்தானே திட்டிக் கொண்டவள் , தவறை உணர்ந்து ஆராத்யாவின் மேல் கோபம் இருந்தாலும் தன்னவனை நம்பவில்லையே என்ற வருத்தம் மேலோங்க அடுத்த ஒரு வாரம் முழுவதும் அவனிடம் பேச முனைந்த அபியை அவாய்ட் செய்தான் கரன்.
அவள் தன்னிடம் பேச வரும்பொழுது எல்லாம் ஏதாவது காரணம் சொல்லி அங்கே இருந்து கிளம்பி விடுவான் நண்பர்களும் எவ்வளவோ கூறி பார்த்தும் முடியாமல் போக அவளும் அவனை சமாதானப்படுத்த வழி தெரியாமல் சோர்ந்து போனால்.
