அத்தியாயம் 18

சிறிது நேரம் இருவரின் அணைப்பும் நீண்டது. 

 

அபிராமி அவனின் அணைப்பில் இருந்து வெளி வந்தாள். 

 

சாரி அபி தெரியாமல் கேட்டுட்டேன் என்று மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் அஸ்வந்த். 

 

பரவாயில்லைங்க என்றவள் ” யாரு உங்ககிட்டே அப்படி சொன்னாங்க எனக்கு குழந்தை பொறக்காதுனு என்று கேட்டாள் “. 

 

அஸ்வந்த் புரியாமல் அவளை பார்த்தான். 

 

என்னங்க? ஏன் அப்படி பார்க்குறீங்க? யாரு சொன்னாங்க? என்று கேட்டாள்.

 

அம்மா என்று சொன்னால் கோபப்படுவாளா?  என்று தனக்குள் யோசித்தான் அஸ்வந்த். 

 

குழப்பமாக இருந்தது அவனுக்கு. ஒன்றும் விளங்கவில்லை. குழந்தை பெற்று எடுக்க முடியாது என்ற காரணத்தால் தானே இவளுக்கு முதல் திருமண உறவு முறிந்து போனது என்று நினைத்து அவளின் முகம் பார்த்து நின்றான். 

 

சொல்லுங்கங்க. என்னாச்சு? உங்க அம்மா சொன்னாங்களா என்று கேட்டாள். 

 

மெதுவாக தலை அசைத்தான் அஸ்வந்த். 

 

கண்ணீர் சிந்துவாளோ என்று நினைத்து அவளின் கண்களை பார்த்தான். 

 

தன் கணவனின் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. தனக்கு குழந்தை பிறக்குமா? இல்லையா? என்ற சந்தேகத்தை தான் தான் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் இது ஒரு மன கசப்பை ஏற்படுத்தும் என்று நினைத்தாள் அபிராமி. 

 

கணவனின் முகம் பார்த்தவள், எனக்கு குழந்தை பிறக்கும். நான் நல்லா தான் இருக்குறேன். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றாள் அபிராமி. 

 

விழிகளை சுழற்றிய அஸ்வந்த் புரியல என்னும் விதமாக அவளை பார்த்தான். 

 

என்னங்க புரியலையா? 

 

ஆமா. 

 

சரி இங்க இருங்க. நான் தெளிவா சொல்லுறேன் என்றாள் அபிராமி. 

 

என்கிட்டே எதும் கேட்காதீங்க. எதுனாலும் எங்க அம்மாகிட்டே கேளுங்க என்று கூறியவள் இப்பொழுது தன்னிடம் ஏதோ கூற போகிறாள் என்றதும் அஸ்வந்த் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான். 

 

அவனின் அருகில் அமர்ந்தாள் அபிராமி. 

எனக்கு இருபத்தொரு வயசா இருக்கும் போது பீரியட்ஸ் டைம் ரொம்ப வயிறு வலிச்சுதுங்க. . நார்மலா வயிறு வலி இருக்கும். ஆனால் நான் அதை தாங்கிப்பேன் என்று கணவனின் முகம் பார்த்தாள். 

 

அவன் அவளுடைய கைகளை பிடித்தான். அவளுடைய கண்கள் லேசாக கலங்கி இருந்தது. 

 

சொல்லு அபி எதுனாலும் நான் இருக்கேன் என்றான் அஸ்வந்த். 

 

ஆனால் ஒரு டூ மந்த்ஸ் என்னால வலி தாங்க முடியல. ரொம்ப வயிறு வலி. காலை கீழே தரயில வைக்க முடியாது. செத்துரலாம் போல இருக்கும் என்றாள். 

 

அவளை பற்றிய உண்மையை கூறும் பொழுது அவளுக்கு ஆறுதலாக இருக்க விரும்பினான் அஸ்வந்த். அவன் பிடித்த அவளுடைய விரல்களை இன்னும் விடவில்லை. 

 

ஒரு டைம் காலேஜ்ல வச்சி என்னால சுத்தமா முடியலைங்க. அன்னைக்கு ஒரு நாள் முழுதும் யாருகிட்டேயும் சொல்லாமல் வலியை தாங்கி இருந்துட்டேன். காலேஜ் முடிஞ்சு வீட்டு வாசலுக்கு வரவும் என்னால நடக்க முடியல அப்படியே மயங்கிட்டேன். 

 

அம்மா ரொம்ப பயந்துட்டாங்க. ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனாங்க. 

பீரியட்ஸ் டைம் ரொம்ப வயிறு வலி இருக்குனு சொன்னதும் ஸ்கேன் பண்ணி பார்ப்போம் அப்படினு டாக்டர் சொல்லிட்டாங்க என்று அவனின் முகம் பார்த்தாள். 

 

உண்மை தெரிந்து வேணாம் என்று கூறி விடுவானோ என்ற பயம் அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 

 

கணவனிடம் எதையும் மறைக்க கூடாது என்று நினைத்தாள். இன்று அவன் கேட்டதே வலியாக இருக்கிறது. அதனால் தானே கூறிவிடுவோம் என்று நினைத்து தான் இப்பொழுது கூறுகிறாள். 

 

சொல்லு அபி என்றான் அவளின் கணவன். 

 

அதுனால அடிக்கடி ஹாஸ்பிடல் போக வேண்டிய சூழ்நிலை. ஸ்கேன் பண்ணிட்டு என்னோட கருப்பையில  சின்னதா ஒரு கட்டி இருக்குனு சொல்லிட்டாங்க என்று பயந்து அவனின் முகம் பார்த்தாள். 

 

அடிக்கடி ஹாஸ்பிடல் போய்ட்டு வரதுல அக்கம் பக்கத்துல இருக்குற எல்லாரும் எங்க அம்மாகிட்டே கேட்டாங்க. எங்க அம்மா என்னோட உடல் நிலைய பற்றி அவங்ககிட்டே சொன்னாங்க. 

 

மாதா மாதம் என்னோட பீரியட்ஸ் டைம்ல அந்த கட்டி வளர்ந்துட்டே வந்துச்சு. அதுனால பர்ஸ்ட் டேப்லெட் போட்டு கட்டியை கரைச்சிரலாம். அப்படி கட்டி கரையலைன்னா  ஆப்ரேசன் செஞ்சு  கருப்பையை அகற்றனும் சொல்லிட்டாங்க என்றாள். 

 

அப்போ அவளோட கருப்பையை எடுத்துட்டாங்களா? அதுனால தான் முதல் திருமணத்துல குழந்தை பொறக்கலையா என்று யோசித்தான். 

 

அம்மாவும் அப்பாவும் ரொம்ப பயந்துட்டாங்க. நான் சின்ன பொண்ணு. எல்லாரும் கல்யாணமாகி சந்தோசமா இருக்குற வயசுல எனக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு அம்மாவும் அப்பாவும் ஆசைப்பட்டாங்க. அதுனால டாக்டர்கிட்டே பேசுனாங்க. நாங்க ட்ரீட்மென்ட் பண்ண ஹாஸ்பிடல இது ஒன்னு தான் வழினு சொல்லிட்டாங்க. 

 

எங்க அம்மாவும் அப்பாவும் மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க. 

 

அப்பறமா ஊருல இருக்குற எல்லாரும் இந்த விஷயத்தை திரிச்சி பேச ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு குழந்தை பொறக்காது. கல்யாணம் நடக்காது. மற்ற பொண்ணுங்க மாதிரி நான் சந்தோசமா இருக்க மாட்டேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. 

 

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த விஷயம் ரொம்ப கஷ்டத்தை கொடுத்துச்சு. என்னைய நினைச்சி ரொம்ப கவலைப் பட்டாங்க என்று அவனின் முகம் பார்த்தாள். 

 

அப்போ உனக்கு சர்ஜெரி பண்ணிட்டாங்களா அபி என்று கேட்டான். 

 

இந்த கேள்வியை அவளும் எதிர் பார்த்தாள். 

 

இல்லைங்க என்றாள். 

அவனின் முகத்தில் அதிர்ச்சி. இல்லையா அப்பறம் என்னாச்சி?  என்று கேட்டான். 

 

அப்பறம் ஒரு  மாசம் கழிச்சி எங்க தூரத்து சொந்தகாரங்க ஒருத்தங்க எங்க வீட்டுக்கு வந்தாங்க. என்னைய பற்றி விசாரிக்கும் போது அம்மா என்னோட உடல் நிலை பற்றி சொல்லி அவங்ககிட்டே வருத்தப்பட்டாங்க. 

 

அவங்க தான் எங்களுக்கு ஒரு அட்ரஸ் தந்து அபிராமியை சித்த வைத்தியத்துக்கு அழைச்சிட்டு போங்கன்னு சொன்னாங்க. நாங்களும் அங்க போனோம். 

 

என்னைய முழுசா செக் பண்ணிட்டு ஹீமோ தெரபி பண்ணினா சரி ஆயிடும் சொன்னாங்க. அப்பறம் மறுபடி புது டேப்லட்ஸ், பத்திய சாப்பாடு. ரொம்ப எடை குறைஞ்சி மெலிஞ்சு அசிங்கமா மாறிட்டேன். எலும்பு எல்லாம் வெளிய தெரிய ஆரம்பிச்சிருச்சு.

 

எங்க ஊருக்குள்ள எல்லாரும் நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு உண்மையாவே கருப்பை நீக்கியாச்சுன்னு . ஊரு முழுக்க எனக்கு கருப்பை இல்லைனு காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. 

 

ஆனால் நான் ஆறு மாசம் முழுசா பொறுமையா வெயிட் பண்ணேன். எனக்கு கருப்பையில இருந்த கட்டி இருந்த இடம் தெரியாமல் மறஞ்சு போச்சு. நான் முழுசா சரி ஆயிட்டேன். பீரியட்ஸ் டைம்ல எனக்கு எப்பவும் வலிக்குற மாதிரி நார்மலான பெயின் தான் இருந்து. அது நான் எப்பவும் தாங்கிக்கிற வலி தான் என்றாள். 

 

அஸ்வத்தின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போனது. 

அப்பறம் இதோ கிட்டத்தட்ட நாலு அஞ்சு வருசத்துக்கும் மேலே மாப்பிள்ளை பார்த்து மண மேடை வரை வந்து என்னோட கல்யாணம் நின்று போயிரும். ஏனா எனக்கு குழந்தை பொறக்காதாம். மாப்பிள்ளை வீட்டு காரங்களும் ஊர் சொல்றதை நம்பி கல்யாணத்தை நிறுத்திட்டு போயிருவாங்க. 

 

நாங்க சொல்றதை யாரும் நம்ப மாட்டாங்க. எனக்கு கல்யாணம் ஆகாதுனு நானே நினச்சேன். உனக்கு கண்டிப்பா இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாதுனு என் காதுல கேட்டுட்டே இருக்கும். 

 

ஆனால் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்ற அபிராமியின் முகம் உண்மையான சந்தோஷத்தில் மிளிர்ந்தது. 

ஹீரோ மாதிரி ஒரு புருஷன். ராஜ குமாரன் மாதிரி ஒரு பையன் என்றவள் அஸ்வந்தின் நெஞ்சில் சாய்ந்தாள். 

 

கணவனிடம் உண்மையை கூறியதும் ஏதோ ஒரு சுமையை இறக்கி வைத்தது போல் இருந்தது அவளுக்கு. 

 

அஸ்வந்த்தின் இதய துடிப்பு நின்றது. 

இது வரைக்கும் ஒரு டைம் கூட கல்யாணம் ஆகலையா?  என்று நினைத்தவனின் மனம் சத்தம் இல்லாமல் விசும்பியது. 

 

என்ன செய்வான்?  இவளுக்கும் இது இரண்டாவது திருமணம் என்று தானே நினைத்து திருமணம் செய்தான். 

 

தன் தாயின் மேலும் கோபம் வந்தது. தேவை இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை நம்மால் இப்படி கேள்வி குறியாகி விட்டதே என்று தன் மேலும் கோபம் வந்தது. 

 

அபிராமி அவன் நெஞ்சில் இருந்து பிரிந்து அஸ்வந்தின் முகம் பார்த்தாள். 

 

என்னங்க என்று அழைத்தாள் . 

 

சொல்லு அபி சிரமப்பட்டு தொண்டை குழியில் இருந்து வார்த்தையை வெளி விட்டான். 

 

“என்னைய எப்பவும் விட்டுற மாட்டிங்கள” என்று அவள் கேட்பது இவனின் நெஞ்சை குத்தியது. 

 

தன்னை நம்பி என்னிடம் கொடுத்து விட்டாளே என்று நினைத்தவனின் உள்ளுணர்வு அவளை கை விடாதே என்று எச்சரிக்கை செய்தது. 

 

அவனின் அனுமதி இல்லாமல் அவனின் தோளில் சாய்ந்தாள். 

ஏதோ பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக இருப்பது போல் அபிராமிக்கு தோன்றியது. 

அவளை தவறாக என்ன அவனுக்கு மனம் வரவில்லை. தோள்களில் சாய்ந்திருந்த அவளின் தலையை வருடி  கொடுத்தான். 

 

எப்பவும் உன்னைய விட மாட்டேன் அபி என்றான் அஸ்வந்த். 

 

அந்த வார்த்தை உண்மையில் அவன் வாயில் இருந்து வந்ததா? இல்லை மனதில் இருந்து வந்ததா?  என்று அவனுக்கே தெரியவில்லை. 

 

ஆனால் அவளிடம் இந்த வார்த்தையை உறைக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. 

 

ஒரு சாதாரண பிரச்சனையை பேசி பேசி பெரிதாக்கி திருமணமே நடக்க கூடாத அளவுக்கு பண்ணி விட்டதே இந்த சமூகம். 

 

அப்படி பெண்களால் குழந்தை பெற்று தரவில்லையெனில் ஏன் இந்த ஆண்கள் பெண்களை கை விடுகின்றனர். 

 

இப்பொழுது எத்தனையோ வழிகள் வந்து விட்டதே குழந்தை பெற்று கொள்ள அதில் ஒரு வழியை பின் பற்றலாமே என்று யோசித்தான். 

 

இதோ அவர்களின் குட்டி கண்ணன் அழ ஆரம்பித்து விட்டான். அபிராமி அவனை எடுத்து கொண்டு காற்றோட்டமான இடத்திற்கு சென்றாள். 

 

மகன் தூங்கி எழுந்து பசிக்காக அழுவான் என்று தெரியும். அதனால் ஏற்கனவே பசும்பால் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்து இருந்தாள் அபிராமி. 

 

மகன் அழவும் அதை எடுத்து அவனுக்கு பசியாற்ற, என்ன ஒரு ஆச்சர்யம் தன் அன்னையின் முகத்தை பார்த்தே அந்த பசும்பாலை பருகி கொண்டிருக்கிறது. 

 

பால் பவுடர் கலந்த நீரை தான் இது நாள் வரை அந்த குழந்தை ஆகாரமாக எடுத்து கொண்டிருந்தது. இன்று தன் தாயின் கரங்களால் பசும்பாலை பருகி கொண்டிருக்கிறது. 

 

பிரசவம் என்பது பெண்களின் மறு பிறவி. அந்த பிரசவத்தில் தான் சுகன்யாவும் உயிரை இழந்தாள். 

 

இப்பொழுது தன்னை நம்பி வந்த அபிராமியையும் விட்டு விட அவனுக்கு எண்ணம் இல்லை. 

 

ஆனால்,  சுகன்யாவுக்கும் தனக்கும் தானே கொடுத்து கொண்ட  தண்டனையை அபிராமிக்கும் கொடுக்க அவன் மனம் இடம் தரவில்லை. 

தொடரும். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
877 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page