அன்று காலை இரண்டு வகுப்புகள் முடிந்து இடைவேளை விட்டிருக்க வேகமாக அபி தோழிகளிடம் கூட கூறாமல் கரண் உடைய வகுப்பிற்கு சென்றால்.
அவன் அங்கே இல்லாமல் போக வேகமாக அங்கே இருப்பவர்களிடம் கரண் பற்றி விசாரித்துவிட்டு கேண்டின் அருகே வந்தவள் அவனை வாசலில் நின்று உள்ளே தேட தனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
உள்ளே செல்வதற்கு கால் எடுத்து வைத்தவள் பின்பு அவன் முகத்தில் சிரிப்பையும் சாப்பிட்டு கொண்டு இருந்ததையும் கண்டுவிட்டு, அவனை தொல்லை செய்ய வேண்டாம் வெளியே வரும்பொழுது பேசிக் கொள்ளலாம் என்றவள் அங்கேயே சற்று ஓரமாக காத்திருந்தாள்.
15 நிமிடங்கள் காத்திருப்பது பின் அவன் வெளியே வர, ஆனால் அவள் ஏதோ ஒரு யோசனையில் அமர்ந்து கொண்டிருக்க, அவளை கண்டு கொண்டாலும் அவள் மேல் இருந்த கோபத்தில் கரண் அவ்விடம் விட்டு நண்பர்களுடன் சென்றுவிட, ஏதோ சிந்தனையில் இருந்தவள் அதிலிருந்து தெளிந்து சுற்றி பார்க்க அவன் தன்னைத் தாண்டி சென்று விட்டதை உணர்ந்து கொண்டவள், வேகமாக “கரண் சீனியர்!” என்று கத்திக் கொண்டே ஓடினாள்.
அவள் அழைப்பு கேட்டு இன்னும் அவனது நடையானது வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு அவனை வழி மறைக்கும் விதமாக வந்து நின்றவள், “சீனியர் ப்ளீஸ் சாரி என்கிட்ட பேசுங்க !” என்றால் அழுது கொண்டே.
அவளது வாடிய முகத்தையும் கண்ணீரையும் சரியாக தூங்காததால் ஏற்பட்ட கருவளையம் தன்னவள் இருக்கும் துயரை கண்டாலும், மனம் இலகாமல் அவ்விடம் விட்டு நகர முயல, அவனை கையை பிடித்து தடுத்தவள் “ப்ளீஸ் சீனியர் தெரியாம தப்பு பண்ணிட்டேன் அதுக்காக இவ்வளவு நாள் எனது தண்டித்துவிட்டீர்கள் அது பத்தாதா ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க!” என்றால் அழுகையுடன்.
தேவியோ “டேய் பாவம்டா அவ!” என்ற உடன், அவளை திரும்பி ஒரு பார்வை மட்டும்தான் பார்த்தான் அதிலேயே தேவன் தேவி ஸ்ரீநந்தன் மூவரும் அவ்விடம் விட்டு சென்றுவிட, அபியை பார்த்தவன் “ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட என்னோட சிச்சுவேஷனை புரிய வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்க முடியாது. என் மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சு தானே உனக்கு யாரோ ஒருத்தி போட்டோ அனுப்பினா உடனே நீ என்ன சந்தேகப்படுவியா? உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தி இருக்கேன் . அங்கே இருந்தபோதும் உனக்கு அத்தனை வாட்டி கால் பண்ணி இருந்தேனே அப்ப அதெல்லாம் நீ பொய்யின்னு நினைச்சுட்ட தானே? இல்ல உன்கிட்ட டைம் பாசுக்கு பேசிட்டு இருக்கேன் நினைச்சுட்டு இருக்கியா? எனக்கு எவ்வளவு வலிக்கும் எங்க அம்மாவுக்கு அப்புறம் உன்னை தான் என்னை பிடிக்கும் என்று சொல்லி இருக்கேன். அப்போ நீ எப்படி என்னோட காதல சந்தேகப்படலாம்? என் கண்ணுல எண்ணிக்காவது காதல் குறைந்து இருக்கா இல்ல உன் முகத்தை தாண்டி வேற எங்கேயாவது நான் தப்பா பார்த்து இருக்கேனா உள்ள உன்னை தப்பா தான் அப்ரோச் பண்ணி இருக்கேனா?” என்றவன்
” இனி என்ன தொல்லை பண்ணாத!” என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றுவிட, அப்படியே நின்றவள் அழுது கரைந்தால்.
சிறிது நேரம் வகுப்பு ஆரம்பிக்க மணி ஒலித்தது அதையெல்லாம் அவள் காதில் விழவில்லை. தன்னவன் பேசாமல் சென்றதை நினைத்து வருந்தி கொண்டு இருந்தவள், அப்படியே நின்று இருக்க சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது..
இவள் வருவாள் வருவாள் என்று காத்துக் கொண்டு இருந்த தோழிகளும் ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்ததால் அவர்களை பார்த்துக் கொண்டும் இவள் வருகிறாளா? என்று வாசலை பார்த்துக் கொண்டும் இருக்க லஞ்ச் பிரேக் பெல் அடித்தது.
ஆசிரியர் வெளியேறியவுடன் சமிக்ஷா மற்றும் வந்தனா இருவரும் தோழியை தேடி அலைய, அவள் வகுப்பு மாணவன் “இவ்வளவு நேரம் மழையில் நனைந்து அபி மயக்கம் போட்டு விழுந்து கிடக்கா நீங்க என்னடான்னு இங்க இருக்கீங்க? சீக்கிரம் போங்க கிரவுண்டுக்கு” என்றவுடன் வேகமாக இடத்தை காலி செய்து தோழியை தேடி கிரவுண்டிற்கு வர , அங்கே ஒரு இடத்தில் கூட்டமாக இருக்க அவர்களை விலக்கி உள் நுழைந்த இரண்டு பேரும் தங்கள் தோழியை பார்த்து கன்னம் தட்டி எழுப்ப முயல, அப்பொழுதும் கண் திறக்காமல் இருந்த அவளை கண்டு இருவரும் பதற, யாரோ திடீர் என்று அவள் அருகில் நெருங்கி அபியை கைகளில் அள்ளிக் கொண்டு நிற்க, முகத்தில் கலவரத்துடன் தன்னவலை வேகமாக மெடிக்கல் அறைக்கு தூக்கிக் கொண்டு ஓடினான் கரண்.
அவனைப் பார்த்தவுடன் தான் நிம்மதி மூச்சு விட்ட தோழிகளும் அவன் பின்னால் ஓட அவனுடைய நண்பர்களும் சென்றனர்.
மருத்துவர் அவளை செக் செய்து விட்ட “சாதாரண மயக்கம் தான். ஆனா ரொம்ப சோர்வா இருக்காங்க ஒழுங்கா பாத்துக்கோங்க நல்லா சாப்பிட்டுவிட்டு தூங்க சொல்லுங்க காய்ச்சல் அடிக்குது ட்ரிப்ஸ் போடுறேன் அது ஃபுல்லா முடிஞ்சதுக்கு அப்புறம் கூட்டிட்டு போகலாம் டிரஸ் மட்டும் மாத்தி விட சொல்லுங்க! இப்படியே ஈரத்துல இருந்தா இன்னும் ஃபீவர் ஜாஸ்தி ஆயிடும்!” என்றவர் அவ்விடம் விட்டு சென்றுவிட,
அவளின் கைகளை அழுந்த பற்றி கொண்டு அமர்ந்திருக்கும் கரணை பார்த்த தேவி “பாருடா எப்படி இருக்கான்னு பாரு எவ்வளவு வாட்டி சொன்னோம் அவகிட்ட பேசு பேசு என்று. இப்படி அவளை படுக்க வச்சுட்டியேடா அப்படி என்னடா உனக்கு கோவம் அந்த பொண்ணு சின்ன பொண்ணுடா யாரோ ஒருத்தவங்க காமிச்சதுல உன்னையே சந்தேகப்பட்டுட்டா அதனால என்ன இப்போ அவளுக்கு நீ எடுத்து புரிய வைக்க வேண்டியதுதானே? ஏதோ ஒரு நாள் ரெண்டு நாள் கோச்சுட்டு இருப்பன்னு பார்த்தா? இப்படியா வாரக்கணக்கா பேசாம இருப்ப. பாரு எவ்வளவு சந்தோஷமா பளிச்சுன்னு இருக்குற பொண்ணு முகத்தை பாருடா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்து சோகமா இருக்கா இப்படி அவளை படுக்க வச்சுட்டியேடா?” என்றவளை “தேவி போதும் நிறுத்து!” என்று கத்தி தடுத்தான் தேவன்.
“நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணாத. பாக்குறீங்கல்ல அவ எவ்வளவு கஷ்டப்படுறான்னு?” என்ற உடன்
” அதெல்லாம் இப்ப பேசறதுக்கு நேரமில்லவா ரெண்டு பேரும் போய் அந்த பொண்ணுக்கு டிரஸ் எடுத்துட்டு வரலாம் பாரு அவளுக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணனும்னு சொன்னாங்க இல்லையா?” என்றவுடன் தான் அவளுக்கும் அது தோன்ற அவளது தோழிகளிடம் சொல்லிவிட்டு வெளியேறியவள், அடுத்து கால் மணி நேரத்தில் இருவரும் அவளுக்கு உடையுடன் வர உடைமாற்றி மீண்டும் படுக்க வைத்தனர்.
“கரண் ப்ளீஸ் ஐ லவ் யூ கரண் என்கிட்ட கோச்சுக்காதீங்க தெரியாம பண்ணிட்டேன்!” என்று தூக்கத்தில் உளறினால் அபி.
அப்பொழுது அவளது கன்னத்தில் இருந்து கண்ணீர் வழிய , அவள் தன்னுடைய ஒதுக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட கரண் அவளது கன்னத்தை தட்டி “நான் உன் பக்கத்துல தான் இருக்கேன் இனிமேல் உன்னை விட்டு போகவே மாட்டேன் ப்ளீஸ் அபி கண்ணை முழிச்சுடு எனக்கு கஷ்டமா இருக்கு!” என்றவன் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு கைகளைப் பிடித்துக் கொண்டான். அதுவோ பயங்கரமாக கொதித்தது இப்படியே ஒரு மணி நேரம் கடந்தது.
அப்பொழுது நன்றாக வியர்த்துப் போக படுத்திருந்தவள் லேசாக கண்களை திறந்தாள். அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கண்களை திறந்தவுடன் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு “அபிமா இப்ப எப்படி இருக்க பரவாயில்லையா ஏதாவது அசோகரிமா இருக்கா?” என்றான் கரன்.
அவனைப் பார்த்து மீண்டும் அழ ஆரம்பித்தவள் “சீனியர் சாரி…” என்று ஆரம்பிக்கும் பொழுதே “போதும்டி தெரியாம பண்ணிட்டேன் நீ தான் என்ன மன்னிக்கணும் சாரிமா! என்னால தான் நீ இப்படி இருக்க. நான் உன்னை மன்னிச்சிட்டேன். இனிமே உன் கிட்ட பேசாம இருக்க மாட்டேன்” என்றவன் நொடிப் பொழுதில் அவளது இதழை சிறை செய்திருந்தான் .
அவளுக்கும் அவனது இத்தனை நாள் ஒதுக்கத்திற்கும், பேசாமல் இருந்த கவலைக்கு மருந்தாக அது தேவைப்பட்டதால், அவனை இன்னும் தன்னுடன் இழுத்துக் கொண்டு முத்தத்தை தொடர்ந்தால்.
அவளுடைய ஒத்துழைப்பு கிடைத்ததும் வன்மையில் ஆரம்பித்தவன் தற்பொழுது மென்மைக்கு மாறி இருக்க, ஏதோ சத்தம் கேட்டு பார்க்க வந்த தேவன் தேவி இருவரும் வாயை பிளந்து கொண்ட அந்த காட்சியை பார்க்க, அதை பார்த்து லேசாக புன்னகை செய்த ஸ்ரீநந்தன் அவர்கள் இருவரையும் அப்படியே இழுத்துக் கொண்டு அரை கதவை சாற்றி விட்டு வெளியேறி இருக்க, மூச்சுக்கு தடைபடும் ஏங்கும் நேரம் அவளிடம் இருந்து பிரிந்தவன் , “எதற்காக டி இப்படி உடம்ப கெடுத்துக்குற நான் என்ன செத்தா போயிட்டேன்?” என்று அவன் பேச ஓங்கி உனது கன்னத்தில் அறைந்தவள், செயலை பார்த்த அதிர்ச்சி அடைந்தவன் கண்கள் விரிய அவளை பார்க்க “இன்னொரு வாட்டி இந்த மாதிரி பேசினீங்க நானே உங்கள கொன்னுடுவேன்!” என்றால். அப்பொழுதும் அவள் கண்களில் இருந்து விடாமல் கண்ணீர் வர,
” சரி சரி தெரியாம பண்ணிட்டேன் எதற்காக இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்துகிற? எப்படி போய் மழையில நனைந்து உடம்ப கெடுத்துக்கணுமா ? ஏன் அபி மா இப்படி பண்ற?” என்றவன் மீண்டும் அவளது கண்ணீரை துடைத்து விடு கன்னத்தை பார்க்க,
அப்பொழுதுதான் அதில் ஏதோ விரல் தடம் இருப்பதை உணர்ந்தவன் கோபம் கொண்டு “யாரடி உன் அடிச்சா ?” என்ற உடன், அவனது கையை எடுத்தவள் “யாருமில்லை எதுவும் இல்லை என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!” என்றால்.
” இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?” என்ற உடன்
” ப்ளீஸ் அபி நான் இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் அதை கெடுக்கணும்னு நினைக்கிறீங்களா?” என்று அவள் மீண்டும் அழுகையுடன் கேட்க,
” சரிமா தாயே நீ அழுகாத தயவு செஞ்சு போன ஃபீவர் மறுபடியும் நான் வந்துட்டேங்குற மாதிரி வந்துரபோது!” என்றவுடன் அவன் சொன்ன பாவனையில் சிரித்து விட்டால்.
அவள் முகத்தில் இவ்வளவு நாள் கழித்து புன்னகையும் பார்த்தவுடன் அவனுக்கே தான் சற்று ஓவராக நடந்து கொண்டோமோ என்று தோன்ற, அப்பொழுது மீண்டும் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த நண்பர்கள் கிண்டலுடன் ” வரலாமா?” என்று கேட்டுக் கொண்டே வர, “அதுதான் வந்துட்டீங்களே அப்புறம் என்ன கேள்வி ?” என்றான் கரன் அவளிடம் இருந்து சற்று நகர்ந்து அமர்ந்து கொண்டு.
“டேய் இது காலேஜ் ஞாபகம் இருக்கா உன் வீடு உன் பெட்ரூம் கிடையாது!” என்று தேவி அவனை கலாய்க்க,
” அது எனக்குத் தெரியும். இது என் பெட்ரூமா இருந்தா இந்நேரம் நான் எதுக்கு உங்களை எல்லாம் உள்ள விட போறேன்?” என்றான்.
அடப்பாவி என்று அவள் வாயில் கையை வைக்க, தேவன் சிரித்துக் கொண்டே நண்பனின் அருகில் வந்தவன் “தங்கச்சிமா இப்ப எப்படி இருக்க பரவாயில்லையா?” என்றான் அபியை பார்த்து.
” நல்லா இருக்கேன் அண்ணா” என்றவள், அங்கு தன்னையே முறைத்து பார்த்து நின்று கொண்டிருக்கும் இரு தோழிகளையும் கண்டவள் “சாரிடி ” என்றால் இருவரையும் பார்த்து.
“அப்படியே ஒன்னு அரஞ்ஜேனா தெரியும் லூசு பிரச்சனைன்னா போய் நேரடியா அவர்கிட்ட பேசணும் இல்லனா எங்ககிட்டயாவது வந்து சொல்லணும் நீ பாட்டுக்கு கிரவுண்ட்ல நின்னுட்டு இருக்க நீ உயிரோட இருந்தா தானே முதல்ல உன்னோட காதல பெற முடியும் இப்படியே உடம்பை கெடுத்துக்குவாங்க !” என்று வந்தனா கத்தினால். அதற்கு சமிக்க்ஷாவோ “விடுடி அவ ஏதோ டென்ஷன்ல அப்படி பண்ணிட்டா ஏன் இதோ எல்லாத்தையும் பண்ணின இந்த அண்ணாவை தான் சொல்லணும்!” என்ற அவள் குரல் அப்படியே அமைதியாக ,
வந்தனாவும் கரணை பார்த்தவள், அவனிடம் “சீனியர் உங்க ரெண்டு பேரு விஷயத்துக்குள்ளேயும் நான் தலையிட விரும்பல. ஆனா அது அவளோட தினசரி வாழ்க்கையை பாதிக்குது தயவு செஞ்சு எதா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்கோங்க இந்த மாதிரி ஒதுக்கம் காட்டிட்டு சண்டை போட்டுட்டு இருந்தீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கும் பாதிப்படையும் அவளோட லைஃபும் பாதிப்படையுது. தயவுசெய்து எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கோங்க பேசினா கண்டிப்பா எந்த பிரச்சனையும் தீர்ந்திடும்” என்றால்.
அதைக் கேட்ட ஸ்ரீநந்தன் அவளை ஒரு மாதிரியாக பார்க்க நிமிர்ந்தவள் அவனைப் பார்த்துவிட்டு அவளும் அவனுக்கு சளைக்காத பார்வை பார்த்தால் அதில் சற்று தடுமாறியவன் வேறு புறம் திரும்பிக் கொள்ள அவளும் மீண்டும் தற்பொழுது கரணை பார்த்தாள்.
அப்பொழுது அங்கே வந்த மருத்துவர் சலைன் முடிந்து விட்டதை பார்த்துவிட்டு, அதை எடுத்துவிட்டு, அவளுக்கு டெம்பரேச்சர் செக் செய்தவர், “ஓகே இப்ப நல்லா ஆயிட்டாங்க கூட்டிட்டு போலாம்!” என்றவர் கரண் கையில் சிறிது மாத்திரைகளையும் கொடுத்து “இதையும் போட சொல்லுங்க சத்து மாத்திரை தான் கொஞ்சம் அவங்களுக்கு தேவைப்படுது இனிமே இது மாதிரி மழையில நனையாதம்மா!” என்றவர் ஒரு சின்ன ஆயின்மெண்ட் டியூபையும் கொடுத்து “கன்னத்துல யாரோ அடிச்சிட்டாங்க போல கைத்தடம் தெரியுது இந்தாங்க இதை பூசி விடுங்க!” என்று கரன் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட,
அப்பொழுதுதான் மற்ற அனைவரும் அவளது கன்னத்தில் இருந்த கைதடத்தை கண்டனர்.
தேவி தான் முதலில் கேட்டால் “என்னம்மா ஆச்சு? எப்படி ஆச்சு இது? யாரு உன்ன அடிச்சாங்க?” என்ற உடன், அப்பொழுதும் அவள் அமைதியாக இருக்க “இதைத்தான் ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்கேன் அவ சொல்லவே மாட்டேங்குறா?” என்றான் கோபமான குரலில்.
