அத்தியாயம் 18

 

 

என் பொண்ணை அவள் மாமியாரும் ஆதேஷும் தான் பாதி உயிரா மருத்துவமனையில் சேர்த்திட்டு எனக்கு போன் பண்ணாங்க என்று கூறும்போது கரண் கண் கலங்கி குலுங்கி அழுதார். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கம்பீரமான அந்த மனிதர் தன் பெண்ணின் துயரை எண்ணி சிறு குழந்தை போல் அழுவதை பார்க்க கௌரிக்கு  வருத்தமாகவும் சங்கடமாகவும் இருந்தது. அவர் தோளில் கை வைத்து அவரை தட்டி கொடுக்க, அவர் தொடர்ந்து பேச தொடங்கினார், டாக்டர், துரு பிடித்த கம்பி வயித்தில் ஆழமாக பட்டிருக்கு. எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்குன்னு ஸ்கேன் பண்ணி பார்த்தான் தெரியும்னு சொல்லிட்டு அவளை பார்க்க போய்ட்டாரு. என் மனைவி அவ நிலைய பார்த்து துடிதுடித்து போய்ட்டாப்பா. அப்புறம் அவளுக்கு ஆபரேஷன் பண்ணி  சாதாரண வார்டுக்கு மாத்தி அவ கண் திறக்க ஒரு வாரம் ஆகிடிச்சி. இந்த ஒரு வாரமும் நாங்க எங்க உயிரை கையில பிடிச்சிட்டு இருந்தோம். இதற்கு இடையில் அவளுடைய மாமியாரும் ஆதேஷும் வந்தாங்க. அப்ப கூட அந்த  திமிர் பிடிச்ச எரு வெட்டி பயல் வரல, ஆனா அவர்கள் என் பொண்ணை பார்க்கவே நான் விடலே, நீங்க அவளுக்கு ஏதாவது நன்மை செய்ய நினச்சா தயவு செய்து அவளை பார்க்க யாருமே வராதீங்க. அவளை இனிமேலாவது சந்தோசமா வாழ விடுங்க , நானே என்  பொண்ணுகிட்ட விவகாரத்து பத்திரத்திலே கையெழுத்து வாங்கி அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி அவங்களை அனுப்பிட்டேன். வர்ஷினி ஒரு மாசம் மருத்துவமனையில் தான் இருந்தா, பிறகு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். ஏற்கனவே உடம்பு சரியில்லாத என் மனைவி  தன் பெண்ணோட வாழ்க்கையை நினச்சு உருகி மருகி மேலே போய் சேர்ந்துட்டா. இதெல்லாம் பத்தாதுன்னு இப்போ மறுபடியும் இந்த நிலமையில் ஆஸ்பத்திரியில் வந்து படுத்திருக்கா. அந்த ஆண்டவனுக்கு அப்படி என்ன என் பொண்ணு மேல் கோபம்னு தெரியல என்று அவர் பேசி முடிக்க, அனனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த கௌரியின் மனம் கொந்தளித்தது. இவ்வளவு கொடுமைப்படுத்திய அந்த ஆர்யாவை நீங்க சும்மா விட்டாலும் நான் விடமாட்டேன், மலர்ந்த ரோஜாப்பூ போன்ற என் வர்ஷினியை இப்படி வாடிய கொடி போல படுக்க வச்சிட்டானே, ஆர்யா உனக்கு கடவுள் தண்டை கொடுக்கிறாரோ இல்லையோ ஆனா கண்டிப்பா நான் உனக்கு தண்டணை கொடுப்பேன் என்று மனதிற்குள் கருவி கொண்டான்.  

 

கௌரி கரணிடம் அங்கிள், இந்த நேரத்தில் இதை பேசறது சரியா இல்லையானு தெரியல, ஆனாலும் உங்கிட்ட முன்னைய பேச வேண்டியது, அப்ப நான் தவற விட்டதால்தான் வர்ஷினிக்கு இந்த நிலமையோனு தோணுது. இனிமேலும் காலம் தாழ்த்த கூடாதுனு தான் கேக்கிறேன். வர்ஷினியை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா? நான் அவளை பத்திரமா பாத்துக்குவேன். என்று கூறவும் கரணுக்கு சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை . பிறகு வர்ஷினியை பத்தி முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும். அதை கேட்ட பிறகு உன்  முடிவை சொல்லுப்பா என்று வர்ஷினியை பற்றி அந்த விஷயத்தை கூறியதும் கௌரி அதை கேட்டு  ஒரு நிமிடம் கூட தயங்கவில்லை, பரவாயில்லை மாமா எனக்கு வர்ஷினி மனைவியாய் வர்றது மட்டும் போதும் வேறு எதுவும் எனக்கு அவசியம் இல்லை என்று தெளிவாக கூறியதை கேட்ட கரண் அவன் அங்கிள்லில் இருந்து மாமா என்று அழைப்பதிலேயே அவர் உருகிவிட்டார். கண்ணீர் மல்க அவர் கையை பிடித்து அவ உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை விட சந்தோசம் எனக்கு என்ன இருக்கு, ஆனா இதுக்கு வர்ஷினி சம்மதிப்பாளான்னு  தெரியல என்று சொன்னதும் கண்டிப்பா அவ சம்மதிப்பா. இப்ப அவகிட்ட எதுவும் பேச வேணாம். கொஞ்ச நாள் போகட்டும். அவ மனசும் உடம்பும் தேரட்டும். அப்புறம் பேசலாம் மாமா என்றதும் அவரும் சந்தோசமாக தலையசைத்தார்.

 

 மறுநாள் வர்ஷினி கண் திறக்கும் போது கௌரி எதிரே அமர்ந்து இருந்தான். அவனை பார்த்ததும் அவள் காரில் இருந்து உருண்டு விழுந்தது, பின் அரை மயக்கத்தில் இருந்த போது கௌரி தன்னை தோளில் தூக்கி போட்டு வெளியே கொணர்ந்தது என்று அனைத்தும் ஞாபகத்தில் வர அவனை பார்த்து இலேசாக புன்னகை புரிய அவனும் அவள் அருகில் வந்து இப்ப எப்படி இருக்கு? என்று கேட்க, கொஞ்சம் பரவாயில்லை, தலை தான் பாரமா இருக்கு, அப்பா எங்கே? அப்பா இராத்திரி எல்லாம் இங்கே தான் இருந்தாரு. விடியற்காலையில் தான் நான் வந்து உங்க அப்பாவை வீட்டுக்கு போய் குளிச்சுட்டு சாப்பிட்டு வாங்கனு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தேன். அவள் மெதுவாக என்னாலே எப்பவும் உனக்கு கஷ்டம் தான் சங்கர் என்று உரைக்க, நீ இப்படி சொல்றது தான் எனக்கு கஷ்டமாக இருக்கு வர்ஷினி. நீ அடிக்கடி ஒன்னை மறந்துடற, நாம இரண்டு பேரும் சின்ன வயசில் இருந்தே நல்ல நண்பர்கள். நண்பர்கள் ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்வது இயல்பு தானே,என்ன நான் உனக்கு நண்பன் தானே! இல்லை நண்பன் பதவியில் இருந்தும் என்னை தூக்கிட்டியா 

என்று குறும்பாக கேட்க, நீ என்னுடைய நண்பன் தான் என்று கூறி முறுவலித்தாள். சற்று நேரத்தில் கரணும் அங்கு வந்தார். அவர் தான் சாப்பிட்டு விட்டு கௌரிக்கும் வர்ஷினிக்கும் காலை சிற்றுண்டி வாங்கி வந்தார். வர்ஷிணியால் முதலில் சாப்பிட முடியவில்லை. ஒரு இட்லி மட்டுமே சாப்பிட்டு இருக்க, அதோடு போதும் என்று மீதியை திருப்பி கொடுக்க அதை வாங்கிய கௌரி, வர்ஷினி நல்லா சாப்பிடாதான் இங்கிருந்து சீக்கிரமா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்ல முடியும். நான் உனக்கு ஊட்டி விடறேன் வாயை திற என்று அவள் வாய் அருகில் உணவை கொண்டு செல்ல சற்று தயங்கி பின் அவன் ஊட்ட ஊட்ட முழுதும் சாப்பிட்டு முடித்தாள். பின் மாத்திரை கொடுத்து படுக்க வைத்தான். கரண் மெதுவாக அவளிடம் என்னம்மா நடந்துச்சி? எப்படி விபத்து நடந்தது? என்று விசாரிக்க,வர்ஷினி நடந்ததை ஒன்று விடாமல் கூறி முடித்தான். கரண், தனியே உன்னை அனுப்பிச்சியிருக்க கூடாதும்மா, நானும் உன் கூட வந்திருக்கணும்,  எப்படியோ போராடி அவன்கிட்டயிருந்து  தப்பிச்சிட்டே, ஆனா கௌரி வரலைனா உன்னை நான் எப்படி கண்டுபுடிச்சி காப்பாத்தியிருப்பேனே தெரியல. ரொம்ப நன்றி கௌரி என்று அவனை திரும்பி பார்த்து கூற, அய்யோ மாமா எத்தனை வாட்டி தான் உங்க நன்றியை சொல்லுவீங்க என்று வெட்கத்துடன் நெளிய, அவனுடைய மாமா என்ற சொல்லில் வர்ஷினி அவனை ஒரு மாதிரி பார்க்க, என்ன இப்படி பார்க்கிறா, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சா என்று நினைத்தவாறே, அதில்லை வர்ஷினி அங்கிள்னு கூப்பிடா, அந்நியர் மாதிரி இருக்கு மாமனே கூப்பிடுனு உங்க அப்பா தான் சொன்னார் என்று பழியை அவர் மீது தூக்கி போட்டு கண்களாலேயே எப்படியாவது சமாளிங்க என்று கெஞ்ச, உடனே கரண் ஆமாம்மா நான் தான் மாமான்னு கூப்பிட சொன்னேன் என்று ஒருவாறு நிலைமையை சமாளித்தார். பிரகாஷுக்கு என்ன ஆச்சுப்பா? என்று வர்ஷினி கேட்டதும் , அவன் கோமாவிற்கு போய்ட்டான். அவனுடைய அப்பா வந்து அவனை நாங்க வீட்டில் வைத்து பாத்துக்கிறோம்னு டிஸ்சார்ஜ் செய்து கூட்டிட்டு போய்ட்டாங்க என்று கூறியதும் அவள்  நீண்ட பெருமூச்சு விட்டாள். 

 

ஒரு வாரம் கழித்து வர்ஷினி வீட்டுக்கு வந்துவிட்டாள். கௌரி தினமும் அவளை வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு செல்வான். அவளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்துவிட்டு அவளை சாப்பிடவைத்துவிட்டுதான் செல்வான்.மித்ராவும் வர்ஷினியை அடிக்கடி வந்து பார்த்து கொண்டாள். அவள் வரும்போதெல்லாம் கௌரியும் அங்கிருக்க, என்ன ஹீரோ இங்கேயே டேரா போட்டீங்க போல,வீட்டுக்கு எல்லாம் போவதே இல்லையா? என்று நக்கலாக கூற  அதில உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா மித்ரா மேடம் என்று அவன் பதில் கூறவும் , ம்ம்.. நடத்து, நடத்து என்று கிண்டல் அடிப்பாள்.  வர்ஷினியும் முன்பு போல் அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள். அதுவே கௌரிக்கு பெரிய நிம்மதியை கொடுத்து இருந்தது. சில நாட்களில் வர்ஷினி கல்லூரிக்கும் செல்லலானாள். வழக்கம் போல் கௌரியும் அவளை கல்லூரியில் பார்ப்பதை விடவில்லை. 

 

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. இப்போது விக்னேஷ் விவசாயத்தில் தேறி இருந்தான். புது புது தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்தி மகசூலை அதிகரித்தான். கௌரியின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களை தருவித்து புதிய புரட்சியே புரிந்து கொண்டிருந்தான். அவனுடைய மகசூலும் பெருகியது. தான் விளைவித்ததை தானே பெரிய பெரிய கடைகளுக்கும் வணிக வளாகங்களுக்கும்  வி.ஜி. ஆர்கானிக் என்ற பெயரில் விற்பனையும் செய்தான். பெரும் லாபத்தையும் ஈட்டினான் . மாரிமுத்து அய்யாவுக்கு அவனுடைய இந்த அசுர வளர்ச்சி பெரும் மகிழ்ச்சியை தந்தது. எனக்கு பிறகு இந்த விவசாயத்தை பண்ண ஆளே இருக்கமாட்டாங்கனு நினைச்சி தினம் தினம் கண் கலங்கி இருந்தேன். ஆனா இப்ப உன்னை பார்க்கிறப்போ மனசுக்கு ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு. நீ நல்லா இருக்கனும். இன்னும் மேலும் மேலும் வளரனும். உன்னை பார்த்துட்டு நிறைய இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வரணும் என்று மனதார வாழ்த்தினார். கவிதாவிற்கு தன் பிள்ளையின் தொழில் வளர்ச்சியை கண்டு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவனை நிக்க வைத்து திருஷ்டி சுற்றி போட்டார். விக்னேஷ் , நீ விவசாயம் செய்யப்போறேன் வந்தப்போ எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சுப்பா. நல்லா படிச்ச புள்ள இப்படி சேத்துல காலை வச்சு கஷ்டப்படணுமானு நினச்சேன். ஆனா நீ இதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு ஜெயிச்சு காட்டிட்டேப்பா. சரி இனிமே உன் கல்யாணத்தை பத்தி பேசலாம்லே என்று கேட்க சரிம்மா! உங்க விருப்பம் என்ற வெட்க புன்னகையுடன் கூறியதை கேட்ட கவிதாவுக்கு உற்சாகமாகியது. நான் நாளைக்கே போய் ஐயரை பார்த்து பேசி அடுத்த முகூர்த்தத்திலேயே உன் கல்யாணத்தை முடிக்கிறேன் என்று வானுக்கும் பூமிக்குமாக சந்தோஷத்தில் பறந்தாள். 

 

அன்று அனைவரும் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தொலைக்காட்சியில் விரைவு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. எம்.எல். ஏ திரு சதாசிவம் அவர்கள்  இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரின் மீது எண்ணற்ற ஊழல் புகாரின் பேரில் அவரை அவரது வீட்டிலேயே கைது செய்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டதாக அவரது கட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது என்ற செய்தியை பார்த்த கவிதா என் புள்ளையை என்ன பாடுபடுத்தினான் இந்த எம்.எல்.ஏ. அவன் செய்த பாவத்துக்கு அந்த சிவனே  அவனுக்கு தண்டனை கொடுத்திருக்கு என்று கூற, அதை கேட்ட கௌரி உள்ளுக்குள் அந்த சிவன் இல்லம்மா இந்த கௌரி சங்கர் தான் என்று சிரித்துக் கொண்டான். திரு வர்மாவின் துணைக்கொண்டு  சதாசிவத்திற்கு  எதிராக ஆதாரங்கள் திரட்டி அதை எதிர் கட்சிகாரர்களிடம் கொடுத்து கலகம் செய்து இன்று சிறையில்  தள்ளியது வரை அவனுடைய  திட்டம் தான் என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்.    

 

விக்னேஷுக்கும் மதுமதிக்கும் இரு  வீட்டாரும் கலந்து ஆலோசித்து இரண்டு வாரம் கழித்து வரும் நல்ல நாளில்   முகூர்த்தம் குறிக்கப்பட்டது. கவிதா தன் வயதையும் மறந்து பம்பரமாக சுற்றி கல்யாண வேலைகளை செய்ய தொடங்கினாள். அவளுடைய நீண்ட நாள் கனவே தம் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்கவேண்டும் என்பது தானே. அந்த திருமணத்திலேயே தன் இளைய மகன் கௌரிக்கும் பெண்ணை பார்த்துவிட வேண்டும் என்று மனதிற்குள் திட்டமும்  வைத்திருந்தாள்.

 

அன்று கவிதா குடும்பமும் வெங்கட்ராமன் குடும்பமும் கல்யாணத்திற்கு தேவையான நகைகள், புடவைகள் எடுக்க காலையே கிளம்பி சென்றனர். கௌரிக்கு  வர்ஷினிக்கும் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும், அந்த புடைவையை கட்டிக் கொண்டு அவள் அண்ணனுடைய திருமணத்திற்கு  வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை அம்மாவுக்கு தெரியாமல் எடுக்க வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். காரை கௌரி தான் ஓடிக் கொண்டு வந்தான். அவன் தன அண்ணனிடம் அண்ணா எப்படியோ இவங்க புடைவைகள் எடுத்து முடிக்க இராத்திரி ஆகிடும். நீங்க போய் எனக்கு, உங்களுக்கு அப்பா வுக்கு மாமாவுக்கு உட்க்கார இடம் புடிங்க. கொஞ்சம் தாமதம் ஆனாலும் இடம் கிடைக்காது. ஏன்னா நம்மை மாதிரி அப்பாவி ஆண்கள் அமர இடம் இல்லாமல் வரிசையில் நிப்பாங்க என்று கூறியதும் விக்னேஷ் சிரிக்க, அதை கேட்ட கவிதா அப்படி உங்களுக்கு கஷ்டமா இருந்தா நாங்க மட்டும் போயிட்டு வரோம், நீங்க ஒன்னும்  வர வேணாம் என்று பொய் கோபம் காட்ட, சும்மா விளையாடிக்கு சொன்னேன் அம்மா, கோச்சுக்காதீங்க மாம்ஸ் என்று சமாதானம் செய்ய, நீ கல்யாணம் ஆகி உன் மனைவிக்கு புடைவை எடுக்கும் போது என்ன சொல்றேன்னு நானும் பாக்கத்தானே போறேன் என்று அவளும் பதிலுக்கு கலாய்க்க, அனைவரும் சிரிக்க அங்கு சிரிப்பு சத்தம் எதிரொலித்தது.     

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
781 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page