அத்தியாயம்-19

காற்றை கிழித்துக்கொண்டு பைக் ஆனது வேகமாக சென்று கொண்டிருக்க, கரண் கோபத்துடன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவன் பின்னால் அபியின் பயத்தை துளி கூட கண்டு கொள்ளவில்லை. 

அவளோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். 

அவளது அணைப்பில் நொடி பொழுதில் அவனது கோபமானது தணிந்துவிட மெது மெதுவாக வேகத்தை குறைத்து மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டினான். 

ஒரு இடத்தில் வண்டி ஆனது நிற்க “இப்படியே கட்டி புடிச்சிட்டே இருக்கிறதா இருந்தா எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க உனக்கு பரவாயில்லையா ?” என்று குரல் கேட்ட பின்பு தான்,  சுயம் உணர்ந்து அவனிடமிருந்து பிரிந்து சுற்றி எங்கு இருக்கிறோம் என்று பார்க்க 

அவள் வீடு இருக்கும் ஏரியாவில் வண்டியை நிறுத்தி இருந்தான். அதை உணர்த்தவள் வேகமாக அவனிடமிருந்து பிரிந்து அமர்ந்தால். 

வண்டியிலிருந்து இறங்கியவள் “தேங்க்ஸ் சீனியர் நான் இங்கிருந்து நடந்து போயிடுறேன்!  ஆனா நீங்க தயவு செஞ்சு இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டாதீங்க !” என்றவள் அக்கறையில் கரைந்தவன்,

” யார் உன்னை அடிச்சா அப்படின்னு நான் கேட்டதுக்கு இன்னும் உன்னிடம் இருந்து பதில் வரல?”  என்றான். 

அதில் மீண்டும் அவள் அமைதி அடைய, ” இப்பதான் உன்கிட்ட பேசலாம்னு முடிவு பண்ணி பேச ஆரம்பிச்சேன்!  மறுபடியும் என்ன கோபப்படுத்தாதே ஒழுங்கா சொல்லு”  என்ற உடன் 

“நாளைக்கு சொல்றேன் ப்ளீஸ்!”  என்று கெஞ்சினால்.

அதற்கு மேல் அவளை வற்புறுத்தாதவன் “சரி பார்த்து வீட்டுக்கு போ நான் வேணா பக்கத்து தெரு வரைக்கும் வரட்டுமா?”  என்றான் சாவியை வண்டியில் இருந்து எடுத்த வண்ணம்.

அவள் அவனது கைகளை தடுத்து “அதெல்லாம் வேண்டாம் இங்க இருந்து பக்கம் தான். நானே நடந்து கொள்கிறேன் அங்க வீட்டை சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரி. அதனாலதான் எப்பவும் நீங்க வண்டியில கூப்பிட்ட போ வேண்டான்னு சொன்னது. இன்னிக்கி உங்க கூட வரணும்னு எனக்கும் ஆசையா இருந்தது. அதனால நீங்க வேற டென்ஷனா இருந்தீங்க உங்க கூட வந்துட்டேன் ப்ளீஸ் என்னைய அடிச்சு கொல்லுங்க என்ன வேணாலும் பண்ணுங்க ஆனா தயவு செஞ்சு இது மாதிரி பேசாம மட்டும் இருக்காதீங்க ரொம்ப வலிக்குது!”  என்று சொன்னவள் கண்களில் கண்ணீர் வழிய அதை பார்த்து துடைத்தவன்,  அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு “சரிமா இனிமேல் உன்கிட்ட கோச்சுக்க மாட்டேன் நீயும் யார் என்ன சொன்னாலும் என் மேல சந்தேகப்படாத எதா இருந்தாலும் நேரடியா என்கிட்ட கேளு! புரியுதா?”  என்றான். 

“புரிஞ்சது சீனியர் இனிமேல் நான் அந்த தப்பு பண்ண மாட்டேன் அந்த கடவுளே வந்து உங்கள பத்தி தப்பா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்!”  என்று சொல்ல ,

அதைக் கேட்டு சிரித்தவன் “அவரெல்லாம் இறங்கி வர மாட்டாரு அந்த தைரியத்துல அப்படி சொல்ற?”  என்று சிரித்தவன்,  அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு “மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா போட்டுக்கோ. நாளைக்கு  பார்க்கலாம்! ரொம்ப உடம்பு முடியலன்னு சொல்ல ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறேன்”  என்றவன் அவளை போகச் சொல்ல 

“சரி சீனியர் நான் பாத்துக்குறேன்.கவலைப்படாமல் கிளம்புங்க!” என்றால் .

“இல்ல நீ போ கொஞ்சம் தூரம் நீ போறதை பார்த்துட்டு அப்புறம் நான் போறேன்!”  என்றவுடன் அவளும் அதற்கு மேல் நேரமாவதை உணர்ந்து அவனுக்கு tata காட்டிக்கொண்டு நடந்து சென்றால்.

தன் கண்ணில் இருந்து அவள் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் அவ்விடம் விட்டு அகன்றான்.

மறுநாள் வழக்கம்போல் அனைவரும் கல்லூரிக்கு வர காலை இரண்டு பீரியட் முடிந்து இடைவேளை விட்டவுடன் தோழிகளிடம் சொல்லிவிட்டு கரணை பார்க்க அவனது வகுப்பிற்கே வந்துவிட்டால் அபி. 

அவளைப் பார்க்கத்தான் அவனும் எழுந்தான் அதற்கு முன் தன்னவள் தன்னைக் காண ஓடி வந்ததைக் கண்டு ஆனவனுக்கு மனதிற்குள் காதல் இன்னும் அவள் மேல் பொங்கி எழுந்தது..

வேகமாக அவள் அருகில் வந்தவன் கைகளை கோர்த்துக்கொண்டு கன்டினுக்கு செல்ல பின்னாலே அவன் நண்பர்களும் வர இவனும் அவர்கள் வருவதை பார்த்துவிட்டு “எதுக்குடா எங்க பின்னாடியே வரிங்க?”  என்றான்.

” டேய் எங்களுக்கு பசிக்குது நாங்க வரோம் எங்களுக்கு முன்னாடி நீ போயிட்டு இருக்க !” என்று தேவன் வம்பு இழுக்க, 

” உனக்கு வேற வேலை இல்ல!”  என்றவன் ,” நீ வா அபிமா என்று அவளை அழைத்துக்கொண்டு இருவருக்கும் தேவையான உணவுகளை வாங்கிக் கொண்டு இருவரும் கேண்டினை விட்டு வெளியேறி அங்கே தோட்டம் போல் இருக்கும் ஒரு இடத்திற்கு வந்து கல் மேடையில் அமர்ந்து கைகளில் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை பரப்பி வைத்தவன் அவை பார்த்து சாப்பிடு!”  என்றான்.

அவளோ அவனை  முறைத்து பார்த்து “என்ன பார்த்தா இவளோ ஐட்டம் சாப்பிடற மாதிரி இருக்கா சொல்ல சொல்ல கேக்காம வாங்கிட்டு வந்துட்டு எல்லாத்தையும் சாப்பிடுன்னு சொல்றீங்க?” என்றால். 

அவள் பொய்யான கோபத்தில் பேசுவதை கண்டு சிரித்தவன் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “சரி டி டீ யாவது குடி !” என்று எடுத்துக் கொடுக்க , அதை மட்டும் வாங்கி குடிக்க ஆரம்பித்தால்.

அவனும் டீ குடித்துக் கொண்டே தன்னவள் டீ கப் பட்டுக் கொண்டிருக்கும் அவள் இதழை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

டீ குடித்துக் கொண்டிருந்தவள் ஏதோ தோன்ற அவனை நிமிர்ந்து பார்க்க தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டு எச்சில் விழுங்க,  அதில் அசைந்த அவளது தொண்டை குழியை ரசித்துப் பார்த்தவன் “ஒரே மடக்கில் மிச்சமிருந்த டீயை தனது வாய்க்குள் ஊற்றிக் கொண்டு நொடியில் நெருங்கி அவள் இதழை சிறை செய்து டீ முத்தத்தை ஆரம்பித்தான்.

இதை எதிர்பார்க்காதவள் அதிர்ந்து கண்களை சிமிட்டி பின்பு அவன் முத்தத்தில் மூழ்கினால். இதழ் வழி அவன் தரும் டீயை பருகி முடித்தவள் இதழில் இருக்கும் இதழ் தேனை தற்பொழுது இவன் குடிக்க ஆரம்பித்தான்..

இப்படியே இது சென்று கொண்டிருக்க மூச்சுக்கு ஏங்கியவுடன் அவளை விட்டு பிரிந்தவன்,  அவள் நெற்றி முட்டி மூச்சு வாங்க இருவரும் அந்நிலையில் இருப்பதை பார்த்து ரசித்தான் கரண். ஆனால்  அவர்களைத் தொடர்ந்து வந்த ஆராத்யா அனைத்தையும் கண்டு வயிற்றெரிச்சல் பட்டு,  தனது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவள் அவர்களை  குரூரமாக பார்த்துக் கொண்டு அவ்விடம் விட்டு சென்றால். 

அவனிடம் இருந்து பிரிந்த அபி வெட்கம் தாளாமல் “சரி சீனியர் நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்!”  என்று முகம் பார்க்காமல் கிளம்ப முயன்றவள் கைகளை பிடித்து தடுத்தவன், “சாரி அபி இதுதான் கடைசி தடவை இனிமே பண்ண மாட்டேன் ப்ளீஸ் டி என்ன வெறுத்துடாத தப்பா நினைச்சுக்காத பொம்பள பொறுக்கி நெனச்சுடாத!”  என்ற பதட்டத்தில் அவள் தான் கொடுத்த முத்தம் பிடிக்கவில்லை என்று விலகி செல்கிறாள் என நினைத்து இவன் பாட்டுக்கு பேச வேகமாக அருகில் நெருங்கி அவன் இதழில் பட்டம் படாமல் முத்தமிட்டு விலகியவள்,

  “வெக்கத்துல தான் எந்திரிச்சு போனேன் வேற எதுவும் இல்ல.  எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!”  என்று சொன்னவள் , தற்பொழுது அவன் நெற்றியில் பாசமாக முத்தமிட்டு விட்டு “ஐ லவ் யூ சீனியர் பை ஈவினிங் பார்க்கலாம்!”  என்று அவ்விடம் விட்டு ஓடி விட அவள் இதழ் முத்தம் கொடுத்ததில் மயங்கி இருந்தவன் நெற்றி முத்தத்தை எதிர்பார்க்காமல் இருக்க மீண்டும் அவள் ஐ லவ் யூ என்று சொன்னதில் இன்னும் உறைந்த நிலையில் இருந்தவனை செல்போன் அழைப்பு நிகழ்வு உலகத்திற்கு கொண்டுவர எடுத்துப் பார்க்க ஸ்ரீ நந்தன்தான் அழைத்திருந்தான். 

அழைப்பை ஏற்றவன் “இதோ வந்துட்டேன்டா!”  என்று மட்டும் கூறிவிட்டு தன் அவள் கொடுத்த காதலை நினைத்து பார்த்துக் கொண்டே வகுப்பறை சென்றான். 

இப்படியே காதலித்து தங்கள் நாட்களை இருவரும் கடத்திக் கொண்டிருக்க, நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் இவர்கள்  நெருக்கத்தை பார்த்து கோபமடைந்த ஆராத்யா அவள் எடுத்த போட்டோக்களை பிரிண்ட் செய்து to அட்ரஸ் மட்டும் போட்டு அபியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்..

“ஏண்டி அவ்வளவு தூரம் சொல்லியும் நீ இன்னமும், அவன் கூட பேசிட்டு தானே இருக்க? இப்போ உன்னோட காதல் லீலைகள் எல்லாம் உன்னோட வீட்டுக்கு தெரிஞ்சு,  கண்டிப்பா மிடில் கிளாஸ் ஃபேமிலி இதுக்கு அப்புறம் நீ காலேஜுக்கு வரதே சந்தேகம்தான் உன்ன உங்க வீட்ல ஒரு வழி பண்ணிடுவாங்க!”  என்று ஆராத்யா சந்தோஷமாக சொல்லிக் கொண்டே கல்லூரிக்கு கிளம்பி சென்றால். 

அதே நாள் மாலை அந்த கவர் அவள் வீட்டிற்கு வந்து விட, “நம்ம வீட்டுக்கு யாரு போஸ்ட் அனுப்பி இருக்கா?”  என்று அதை வாங்கி பார்த்த அவளது தாய்  கௌரி உள்ளே கொண்டு வந்து வைத்து கணவன் வந்தபின் அவரிடம் கொடுத்து என்னவென்று பார்க்க சொன்னார். 

அவரும் அதைத் திறந்த பார்க்க தனது மகள் யாரும் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து விட்டு கோபம் கொண்டு வேகமாக அவள் அறைக்கு சென்று அரை கதவை தட்ட கதவைத் திறந்தவள் பேசுவதற்கு முன்பு ஓங்கி அவளது கன்னத்தில் அறைந்து இருந்தார் அவளது தந்தை .

தந்தை செயலில் அதிர்ந்தவள் “என்னாச்சுப்பா?”  என்று கேட்க,  தலை முடியை பிடித்து ஹாலுக்கு இழுத்து வந்தவர் அவள் முகத்தில் புகைப்படங்களை விட்டு எறிந்து “என்ன கருமாந்திரம் பண்ணிட்டு இருக்க காலேஜுக்கு படிக்க அனுப்பினா இப்படித்தான் பண்ணுவியா? உன்ன நம்பி தானே அனுப்பினோம் 18 வயசுலயே உனக்கு ஆம்பள சுகம் கேட்குதா?”  என்று அசிங்கமாக பேசினார். 

ஆனால் அவளோ புகைப்படத்தை பார்த்தவள்,  யாரோ தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, “அப்பா ப்ளீஸ் நான் இவரை லவ் பண்றேன் எங்களை பத்தி அசிங்கமா பேசாதீங்க!”  என்றால். 

மீண்டும் அறைந்தவர் “பாத்தியா எப்படி பேசுறா? உன் பொண்ணு சின்ன பொண்ணு சின்ன பொண்ணு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்க!”  என்ற தனது மனைவியையும் திட்டியவர்,  மீண்டும் அடிக்க கையை ஓங்க பவித்ரா வந்து தடுத்தால்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page