அத்தியாயம் 2
பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கௌரி தான் வேலை தேடி வந்த அந்த பன்னாட்டு நிறுவனத்தை நிமிர்ந்து பார்த்தான். அது பத்து மாடி அடுக்குடன் கண்ணாடி கதவுகளை தாங்கி கம்பீரமாக வெய்யோனின் கதிரில் மினுமினுத்துக்கொண்டிருந்தது. அந்த கட்டிடத்தை பார்த்தவுடன் கௌரி மலைப்புடன் நிமிர்ந்து பார்த்து இந்த அலுவலகத்தில் எனக்கு வேலை கிடைக்குமா? என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைய அங்கு தானியங்கி கதவு திறந்துக் கொண்டதும் அவன் உள்ளே சென்றான்.அங்கு கிட்டத்தட்ட பத்துபேர் அமர்ந்துக் கொண்டிருந்தனர். அவன் நேரே வரவேற்பறையை நோக்கி சென்றான். அங்கு அழகிய பெண் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அவனை பார்த்து மே ஐ ஹெல்ப் யு சார்? என்று கேட்க, அவன் தான் நேர்முக தேர்வுக்கு வந்திருப்பதாக கூறியவுடன் அந்த பெண்ணும் அவனை அவர்களுடன் அமர வைத்தாள். சிறிது நேரத்தில் ஒவ்வருவராக அழைக்கப்பட்டு உள்ளே சென்று வந்துக் கொண்டிருந்தார்கள்.இவனுடைய முறை வந்ததும் தன்னுடைய படிப்பு சான்றிதழ்கள் தாங்கிய கோப்பை(பைலை ) எடுத்துக்கொண்டு வரவேற்பறையை தாண்டி நடந்து செல்ல சிறிது தூரம் சென்றதும் M.D. என்ற பலகையை தாங்கி ஓர் அறை இருக்க, பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கௌரி தான் வேலை தேடி வந்த அந்த பன்னாட்டு நிறுவனத்தை நிமிர்ந்து பார்த்தான். பத்து மாடி அடுக்குடன் கண்ணாடி கதவுகளை தாங்கி வெய்யோனின் கதிரில் மினு மினுத்துக்கொண்டிருந்தது. அந்த கட்டிடத்தை கௌரி மலைப்புடன் நிமிர்ந்து பார்த்து, நமக்கு இங்கே வேலை கிடைக்குமா? என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைய அங்கு தானியங்கி கதவு திறந்துக் கொள்ள அவனும் உள்ளே வந்தான். அங்கு அவனை போல் கிட்ட தட்ட பத்து பேர் நுழைவு தேர்வுக்காக அமர்ந்து இருந்தனர். அவன் நேரே வரவேற்பறையை நோக்கி சென்றான். அங்கு அழகிய பெண் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அவனைப் பார்த்து மே ஐ ஹெல்ப் யு சார் என்று கேட்க, அவன் தன்னை நேர்முக தேர்வுக்கு அழைத்ததாக கூறியவுடன், அந்த பெண் அவனை அவர்களுடன் அமர வைத்தாள்.
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு உள்ளே சென்று வந்துக்கொண்டிருந்தனர். இவனுடைய முறை வந்ததும் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான். உள்ளே இரு ஆண்கள் ஒரு பெண் என்று மூன்று நடுத்தர வயதினர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவன் நுழைந்தவுடன் அதில் இருந்த ஒருவர் அமருங்கள்! என்று ஆங்கிலத்தில் மொழிந்து இருக்கையை காட்ட, அவனும் அமர்ந்து தான் கொண்டு வந்த தன்னுடைய சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை அவர்களிடம் கொடுத்தான். அவர்கள் அதை பார்த்தவுடன் வெரி குட்! எல்லா பாடங்களிலேயும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருக்கீங்க, கல்லூரி படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று கோல்ட் மெடல் வாங்கி இருக்கீங்க. எதனாலே எங்க கம்பெனியில் வேலை செய்ய விரும்புறீங்க? என்று ஆங்கிலத்தில் கேட்க, கௌரி, சார் எனக்கு வெளிநாட்டில் வேலை செய்யவேண்டும் என்று அதிக விருப்பம். தாங்கள் நிறுவனத்தின் கிளை அமெரிக்காவில் இருப்பதை தங்களின் விளம்பரம் மூலம் பார்த்தேன். தங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று ஆங்கிலத்தில் உண்மையாக பதிலளிக்க, அவரும் சிரித்துக் கொண்டே, சரி, கௌரி எங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை நான் சொல்லி விடுகிறேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் சம்மதம் தெரிவியுங்கள், என்று கூறி நீங்கள் மூன்று வருடம் ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்து இட வேண்டும். இந்த மூன்று வருடம் நீங்கள் வேலையை விட்டு செல்லக்கூடாது. அப்படி இடையில் சென்றால் அபராதம் வசூலிக்கப்படும். ஒரு வருடம் கழித்து தான் பணி நிரந்தம் செய்யப்படும். நங்கள் அடிக்கடி உங்களை எங்களுடைய மற்ற கிளை அலுவலங்களுக்கு பணி மாற்றம் செய்வோம். நீங்கள் மறுக்க கூடாது போன்ற வேறு சில நிபந்தனைகளையும் அள்ளி தெளிக்க கௌரியும் அனைத்துக்கும் ஒப்புக்கு கொண்டதும் நீங்கள் ஒரு வாரத்துக்குள் வேளையில் வந்து சேர்ந்துக் கொள்ளலாம். இதர நடைமுறைகள் எல்லாம் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு தகவல் அனுப்புறோம் என்று கூறி congratulations என்று கை குலுக்க, கௌரியின் மனதிலும் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி. தேங்யு சார்! என்று கூறி வெளியே வந்தவனுக்கு அப்போது தான் உயிரே வந்தது போல இருந்தது. மனதிற்குள்ளே ஒரு குத்தாட்டம் போட்டுக் கொண்டு வெளியே வர அவன் தொலைபேசி சிணுங்கியது. அழைத்தது அவன் அம்மா கவிதா தான். என்னடா? போன காரியம் என்னாச்சு? என்று கேட்க, கவிம்மா, எனக்கு வேலை கிடைச்சிருச்சு! என்று புன்சிரிப்போடு கூறினான். அவன் சந்தோஷமாக இருக்கும்போது அன்னையை கவிம்மா என்று தான் அழைப்பான். சந்தோஷம்டா. இனிமேல் உனக்கு பொண்ணு பார்க்க வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். உன் அண்ணன் தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாமுனு சொல்றான், நீயாவது கல்யாணம் செய்து எனக்கு ஒரு பேரன் அல்லது பேத்தி பெத்து கொடுத்து என் ஆசையை நிறைவேத்துடா! என்று அவன் அம்மா கூறியவுடன் உற்சாகமாக இருந்த அவன் முகம் இருக்கமாக மாறியது. அம்மா! என் மனசபத்தி உங்களுக்கு தெரியுமில்லே? பின்னே என்னம்மா! என்னை கல்யாணம் செஞ்சிக்க வற்புறுத்துறீங்க? டேய் கௌரி! நீ சொல்றது சரி இல்லைடா ! நீ சின்ன வயசில் ஒரு பொண்ணு மேல ஆசைப்பட்ட ! சரி பிள்ளைக்காக நம்ம இனம் அந்த பொண்ணு இல்லனாலும் உனக்காக சரி சொல்லலாம்னு பார்த்தா அந்த பொண்ணு நா எங்க அப்பா அம்மா பாக்கிற பையன தான் கல்யாணம் செஞ்சிக்குவேனு சொல்லி உன்னை உதறி தள்ளிட்டு அவங்க அப்பா அம்மா சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுச்சி.
இவ்வளவுக்கு அந்த பொண்ணு போய் இந்த இரெண்டு மூணு வருசத்தில இரண்டு பிள்ளைக்கே தாய் ஆகி இருப்பா! அடுத்தவன் பொன்டாட்டியை மனசில நினைச்சிட்டு கல்யாணம் வேணாம் சொல்றதெல்லாம் நல்லாவே இல்லடா? என்று கடிய, போதுமா! இப்போ நா நல்ல மூட்ல இருக்கேன். இது பத்தி அப்புறம் பேசலாம் என்று கூறி போனை அணைக்க, கவிதாவுக்கு முகம் சுருங்கியது. பெரியவன் என்னடானா நான் தனியா வழக்கு எடுத்து நடத்தின பின் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இருக்கிறான். சின்னவன் கல்யாண பேச்சை எடுத்தாலே கடுப்பாயிறான். இவங்களை ஒரு வழி கொண்டு வந்து கல்யாணம் முடிச்சு எப்ப என் பேரக் குழந்தைகளை பார்ப்பேன்னு தெரியலையே? கடவுளே! முருகா! என் இரண்டு பிள்ளைகளின் மனதை மாற்றி அவங்களுக்கு சீக்கிரமா ஒரு நல்லதை நடத்திக் கொடுப்பா! பழனி ஆண்டவா! உன் கோவிலுக்கு பாத யாத்திரை வந்து உன்னை தரிசிக்கிறேன் என்று வேண்டியது வேலவனின் காதில் விழுந்திருக்கும் போல இருக்கு.
கௌரி கடுப்புடன் போனை அணைத்து விட்டு திரும்ப யாரோ அவனை அழைப்பது போல கேட்க திரும்பி பார்த்தான். அங்கு ஒரு இளைஞன் அவனை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்தான். கௌரி இவன் எதற்கு என்னை நோக்கி வருகிறான்? என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்தான். அவன் அருகில் வந்ததும், சங்கர் சார், என்னை உங்களுக்கு தெரியாது, ஆனால் உங்களை எனக்கு நல்லா தெரியும் சார். நான் நீங்க படித்த கல்லூரியில் தான் படித்தேன். நீங்கள் மூன்றாம் ஆண்டில் இருந்தபோது நான் முதலாம் ஆண்டு மாணவன். நீங்கள் கல்லூரியின் கலைவிழாவில் பாடிய பாட்டு எல்லாம் கேட்டிருக்கிறேன். உங்களுடைய மெல்லிசை பாட்டுக்கு நான் அடிமை சார். உங்க குரலில் பாடல்கள் எல்லாம் கேட்க எவ்வளவு இனிமையாய் இருக்கும். படிப்பிலேயும் நீங்க வாங்கின விருதுகளை எல்லாம் பார்த்து நீங்க என் மானசீக குருவாகிடீங்க. நீங்க தான் என்னோட ஊன்றுகோல் என்று கூறியவுடன் கௌரி நிறுத்துப்பா, விட்டா எனக்கு கோயிலே கட்டி என்னை சாமி ஆக்கிடுவே போல, நான் பெரிசா எதுவுமே சாதிக்கவில்லை. எனக்கு பாடறதுலேயும் படிப்புலேயும் விருப்பம் இருந்தது. என்னை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்காங்க, அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு என் கல்லூரி மூலமா வாய்ப்பு கிடைத்து. அதை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான், என்று அவன் அடக்கமாக கூற, சார், நான் ஓர் ஏழை குடும்பத்தில் தான் பிறந்தேன். சாதாரண தமிழ் வழி பள்ளியில் தான் படித்தேன். கஷ்டப்பட்டு படித்து தான் அந்த கல்லூரியில் சேர்ந்தேன். இங்கிருக்கும் மாணவர்களை பார்க்கும் போது எனக்கு பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. உங்களை கல்லூரி கலை விழாவிலும் இதர கல்வி சம்பத்தப்பட்ட விழாவிலும் பார்த்த போது தான் சார் உங்களைப் போல் நானும் சாதிக்கணும் என்ற ஊக்கமே வந்திச்சு. அதனாலே நான் நல்லா படிச்சேன். நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன் இப்போ இங்கே மூன்று மாசத்துக்கு முன்னாடி தான் அட்மினியில் வேளையில் சேர்ந்தேன் என்று கூறவும் கௌரி மலைத்து போனான். அவனை பார்க்க பார்க்க கௌரிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னுடைய வழக்கமான புன்சிரிப்பை உதிர்த்த கௌரி உன் பேர் என்ன ப்ரோ? என்று கேட்க, சார் என் பெயர் சந்தோஷ். நீங்க நேர்முக தேர்வுக்கு வந்தீங்களா சார்? உங்க திறமைக்கு உங்களுக்கு கண்டிப்பாக இங்கே வேலை கிடைச்சி இருக்கும். சரி தானே சார், ஆமாம் என்று கௌரி தலையாட்ட, வாழ்த்துக்கள் சார். சார் மோர் எல்லாம் வேணாம் என்னை சங்கர் என்று கூப்பிடு இல்லனா ஜி.எஸ் என்று கூப்பிடு. என்னுடைய நண்பர்கள் எல்லாம் அப்படி தான் கூப்பிடுவாங்க, கௌரி மட்டும் கூப்பிடாதே நண்பா என்று சொல்ல அவனும் புன்சிரிப்போடு சரி ஜி.எஸ், வாங்க! நம்ம ஆபீஸ் உணவகத்தில் காபி சாப்பிட்டு விட்டு போகலாம் என்று அழைக்க கௌரியும் காலை சிற்றுண்டி சாப்பிடாததால் அவனுக்கும் பசி எடுக்க சந்தோஷ் உடன் நடந்து சென்றான். இருவரும் பேசிக் கொண்டே உணவகத்தில் நுழைந்தனர். அந்த அறை மிகவும் விசாலமாக இருந்தது. இருவரும் இருக்கையில் அமர்ந்த உடனே சந்தோஷ் நான் போய் இருவருக்கும் காபி எடுத்துக்கொண்டு வரேன் என்று கூறி அங்கிருந்து செல்ல, கௌரி அமர்ந்தபடியே அந்த உணவகத்தை கண்களால் நோட்டமிட்டான்.
சாப்பிடும் இடம் மற்றும் சமையல் புரியும் இடம் என்று அனைத்து இடங்களும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. ஆங்காங்கே பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு பார்க்க அழகாக இருந்தது. பிறகு அவன் கண்கள் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டுவர சட்டென்று ஒரு இடத்தில் அவன் பார்வை கூர்மையாகியது இது அவள்தானா? இல்ல ஒருத்தர் மாறியே ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்வாங்களே ஒருவேளை அது மாதிரி இது வேற பெண்ணா? என்று அந்த பெண்ணின் முகத்தை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். அவன் இடத்திலிருந்து இருபதடி தொலைவில் தான் அவள் இருந்தாள். அவளுடைய அக்மார்க் மச்சம் மூக்கின் மேலும் மற்றும் கன்னத்தில் கீழே உள்ள சிறிய தழும்பும் அது வர்ஷினி தான் என்று அவன் மூளை அடித்துக் கூறியது.இவள் எப்படி இங்கே? இவளுக்கு திருமணமாகி பெங்களூர் சென்று விட்டதாக தானே அம்மா சொன்னார். பார்க்க ரொம்பவே மெலிந்து இருக்கா. கல்யாணம் ஆனதுக்கான எந்த வித அடையாளமும் அவளிடத்தில் இல்லையே என்று நினத்துக் கொண்டிருக்க, அங்கு வர்ஷினியின் தோழி மித்ரா, ஏ வர்ஷு கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு ஆளு நம்மலேயே பார்த்துக் கொண்டு இருக்காண்டி, ஆளு பார்க்க சும்மா கருஞ்சிறுத்தை போல இருக்காண்டி. என்னா உயரம், என்ன கம்பீரம், soo handsome என்று ஜொள்ளு விட அப்போதுதான் வர்ஷினி அவனை பார்த்தாள். ஆச்சரியம், அதிர்ச்சி ஒருங்கே சேர அது சங்கர் தானே? அவன் எப்படி இங்கு வந்தான் ?என்று மனதில் நினைத்தவாறு ஏ சீக்கிரம் வாடி, இங்கிருந்து போலாம் என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வர, கௌரியும் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
சிறிது தூரம் சென்றதும் வர்ஷினி திரும்பி பார்க்க, அவன் அவளை பின்தொடர்ந்து வருவதை கண்டு அங்கேயே நின்றுவிட்டாள். அவன் அருகில் வந்ததும் மித்ரா அவனை பார்த்து பார்த்த டீசெண்டா தெரியுறீங்க, எங்களை ஏன் சார் பின் தொடர்ந்து வரீங்க? நீங்க யாருங்க ?என்று கேட்க, அத உங்க தோழி கிட்ட கேளுங்க சொல்லுவாங்க என்று கௌரி கூறியதை கேட்ட வர்ஷினி அவனை நிமிர்ந்து பார்த்து, நீங்க யாருன்னே எனக்கு தெரியாது! எங்களை பின் தொடர்ந்து வருவது நல்லதுக்கு இல்லை. இடத்துக்கு ஏத்தமாதிரி நாகரிகமா நடந்துக்கோங்க!என்று கூறி தோழியை அழைத்துக்கொண்டு விறு விறு என்று நடந்து சென்றாள்.
கௌரி கண் இமைக்காது அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றுக் கொண்டிருந்தான் . என்னடா இது ? சோத்துள்ள பூசணிக்காயை மறைக்கிறதா சொல்லுவாங்க இவ மனுஷனையே மறைக்கிறாளே! இவளுக்கு என்ன தான் ஆச்சு? என் குட்டி குஷ்பூவா இது?ஆள் அடையாளமே தெரியாம மெலிந்து, நிறம் மாறி, குணம் மாறி இருக்கிறாளே என்று யோசித்துக் கொண்டே இருக்கையில், சந்தோஷ் அங்கே வந்தான்.
என்ன மக்களே! என் கதை உங்களுக்கு புடிச்சி இருக்கா? கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க! உங்க விமர்சனம் எனக்கு ரொம்ப முக்கியம். என்னை உற்சாகப்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், என்னுடைய குறைகளை திறுத்துவதற்கும் எனக்கு உதவியாய் இருக்கும். அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமோ?
