அத்தியாயம் – 2

அத்தியாயம் 2

       ஹரிஷ் வந்ததும் அவன் வாங்கி வந்ததை அவர்கள் ஷேர் செய்து சாப்பிட, அதன் பிறகு மலர்விழியும் அமைதியாகிவிட்டாள். ஆனந்தி ஹெட் ஃபோனில் பாட்டு கேட்க ஆரம்பிக்க,

   ஹரிஷ் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தான். மலர்விழி வெளியில் பார்க்கும் பொழுது சாதாரணமாக தெரிந்தாலும் உண்மையில் அவளது மனதிற்குள் ஒரு பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது.
   ஆம் அவள் அன்று அவளது மாமனிடம் காதலை சொன்ன பிறகு, வீட்டில் சொல்லி விடுவான் என்ற பயமெல்லாம் அவளுக்கு இல்லை. சொன்னால் சொல்லட்டும் என்று தான் இருந்தாள்.
      ஆனால் அவனோ அவளிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்து இருந்தான். அதுதான் அவளுக்கு அத்தனை வலியாக இருந்தது. சிறுவயதில் இருந்தே அவள் படிக்க வேண்டும் என்ற ஆசைப்படுட்டவன் அவன் தான். அவன் படிக்கவில்லை என்பதற்காக அவளை நன்கு படி என்று பலமுறை கூறி இருக்கிறான்.

      அவன் சொன்னதாலோ என்னவோ அவளும் கண்ணும் கருத்துமாக படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த பள்ளியிலே மூணாவது மாணவியாக வந்திருந்தாள். அந்த செய்தியை கேட்டு குடும்பமே கொண்டாடிக் கொண்டிருந்தது. இத்தனை நாளாக பேசாத தன் மாமன் கண்டிப்பாக இன்று தன்னிடம் வந்து பேசுவான் என்று அவளும் உள்ளுக்குள் சந்தோஷத்துடன் அவனுக்காக காத்திருக்க,

   ஆனால் கதிரோ வந்தான் தான் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவனது அக்கா ,மாமாவிடம் ரொம்ப “சந்தோஷம் மாமா “என்று கூறி அவர்களிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

     ஏனோ அன்று அனைவரும் உறங்கிய பிறகு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த தன் மாமனை பார்க்க மேலே சென்றவள். “என்னதான் மாமா நீ நினைச்சுட்டு இருக்க ” என்று அதிர்ந்து கூட பேசாதவள். அவனிடம் குரலை உயர்த்தி பேச, தன் இரு கைகளையும் காட்டியபடி அவளை கூர்ந்து பார்த்தவன்.
  
  ” என்ன எதைப் பத்தி கேட்கிற ” என்று பொறுமையாகவே கேட்க “ஏன் மாமா என்கிட்ட பேச மாட்டுற “என்றதும் பெருமூச்சு ஒன்றை விட்டவன்.
 
   ” இங்கேறு புள்ள ஆரு ஆரு எப்புடி நடந்துகுறாகளோ அதுகேத்த மாறி தேனே இருக்க முடியும். உன் மனசுக்குள்ள இப்படி ஒரு ஆசை வரதுக்கு நான் எந்த வகையில காரணமுன்னு நானே மண்டய பிச்சிட்டு திரியுதேன். “

   “ஏன் மாமா உன் மேல ஆசை பட எனக்கு உரிமை கிடையாதா?”
   
     ”  இங்கேரு ட்டி ஆசை, உரிமை அது இதுன்னுட்டு பேசிட்டு திரிஞ்ச உன்ன கொன்னே போட்டு புடுவேன்.  அத பத்தியெல்லாம் பேசுற வயசா ட்டி இது. “

   ” பின்ன வேற எந்த வயதில் பேசுவாங்களாம் “

   “அடி வாங்கிட்டு ஓடிறாத, அத்தக்கிம், மாமனுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சது. உனக்கு உடனே கண்ணாலத்த பண்ணி புடுவாக, அதனால தேன்  நானு நீ பண்றது எல்லாம் பொறுத்துட்டு அமைதியா இருக்கேன். வூட்ல சொன்னா உனக்கு தான்  ட்டி கஷ்டம். அந்த ஒரு காரணத்துக்காக தேன் வாய மூடிட்டு நிக்கேன். “

   ” அப்புடினா என் மேல உனக்கு காதலே வராத மாமா “

   “இந்தா  ட்டீ இத்தோட வாய மூடிட்டு போ ன்னு சொன்னேன். பள்ளிக்கோடத்துக்கு போற வயசுல உனக்கு காதல் கேக்குதாக்கும். “
  
    “அப்போ உனக்கு இது தான் பிரச்சனையா?  அப்பனா நான் ஸ்கூல் தான் முடிச்சுட்டேனே, இனிமே காலேஜ் காலேஜுக்கு தான போக போறேன். “

    ” மலரு நான் ரொம்ப  பொறுமையா பேசிட்டு இருக்கேன் ட்டி. என் பொறுமையை சோதிக்கிறதுக்குனே நீ பேசிட்டு இருக்கியா. இந்த அர்த்த ராத்திரில இப்படி நாம பேசுறது யாராவது பார்த்தா என்ன ட்டி ஆகுறது. தப்பா நினைக்க மாட்டாங்க. போ புள்ள போய் தூங்குற ஜோலிய பாரு. “

   “இதுக்கு மட்டும் பதில் சொல்லு மாமா. உனக்கு என் மேல  காதலே வராதா “

  ” வராது ட்டி போதுமா? இததானே கேட்க  ஆசைப்பட்ட நீ. என் வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க ட்டி அது உனக்கு தெரியுமா ” என்றதும் அவள் அதிர்ச்சியாக அவனை பார்க்க,

    அவனுக்கும் வேறு வழி இல்லை. இந்த பொய்யை கூறினால் தான் இவள் சரிப்பட்டு வருவாள் என்று நினைத்தானோ என்னவோ அதனால அவன் அடித்து விட,

  அவள் கண்களிலோ பொலபொலவென்று கண்ணீர். “சின்ன வயசுல இருந்து நீ மட்டும் தான் மாமா என்னோட உசுருன்னு வாழ்ந்துட்டு இருக்கேன். நீ இப்படி சொன்னா என்னால தாங்க முடியல ” என்று அவள் கண்ணீர் விடவும்.

  தன் அக்கா மகளின் கண்ணீரை பார்த்தவன். சிறிது கரைய தான் செய்தான். ” இங்க பாரு ட்டி உன் வயசு என்ன? என் வயசு என்ன?  நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து போகுமா சொல்லு ட்டி. இந்த வயசுல வர ஈர்ப்பு தாண்டி இது போக போக சரியா போகும் சரியா. ” என்று அவன் கூற,

   உடனே தன் கண்களை எல்லாம் துடைத்துக் கொண்டு அவனையே பார்த்தவள்.  ” சரி மாமா என் காதல் உனக்கு ஈர்ப்பா தெரியுதுல. இனிமே நீயே வந்து என்ன கூப்பிட்டா தான் நான் இந்த ஊருக்கு வருவேன். ” என்று மலர் கூறியதும் கதிர் நெற்றியை சுருக்கி ,

   “ஏட்டி எங்க போக போற “

  ” சென்னைக்கு படிக்கப் போறேன்” என்றதும்,
  ” நல்ல முடிவு ட்டி ரொம்ப ஓசன பண்ணி நல்ல முடிவா தாண்டி எடுத்துருக்க, இங்க இருந்தா கண்டிப்பா நீ உருப்பட மாட்ட, அங்க போய் படிக்கிற சோலிய மட்டும் பாரு சரியா. “

    “விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காத மாமா. அங்க போய்ட்டா நான் வரவே மாட்டேன். நீயே வந்து என்ன கூட்டிட்டு வந்தா தான் நான் வருவேன். அப்படி கூட்டிட்டு வந்தா மட்டும் தான் நான் இந்த ஊருக்கு வருவேன். ” என்று அவள் அத்தனை வீர ஆவேசமாக பேசுவதை ஏதோ சிறு பிள்ளை பேசுவது போலவே எடுத்துக் கொண்டவன்.

  ” சரி  ட்டி ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ அங்கனயே இருந்துக்கோ. நானெல்லாம் உன்னை கூப்பிட வருவேன்னுட்டு கனவுல கூட நினைச்சு பார்த்திராத ட்டி ” என்று நக்கலாக கூறியவன். அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் பேசாமல் கீழே இறங்கி சென்றுவிட,

     அத்தனை வலி, அத்தனை பாரத்தை மனதில் சுமந்தபடி தான் அவள் அந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தாள். அதெல்லாம் நினைத்தவளுக்கு விழியோரம் கண்ணீர் கசிய அதை யாரும் பாத்திடாதவாறு சுண்டிவிட்டவள்.

   ‘ நீ ஜெயிச்சுட்டல்ல மாமா, கடைசி வரை என்னை கூட்டிட்டு போக நீ வரலல்ல. கடைசி வரை உனக்கு என் மேல காதலும் வரலல. ஆனா என்னால மட்டும் ஏன்டா உன்ன இப்ப வரை மறக்கவே முடில ‘ என்று தனக்குள்ள ஏங்கியவள். மனதில் ஒரு சிறு சந்தோஷம் இருக்க தான் செய்தது.

   இத்தனை வருடம் கழித்து தன் மாமனை பார்க்க போகிறாள் அல்லவா. தன் மாமன் இத்தனை வருடம் கழித்து எப்படி இருப்பான் என்ற எண்ணம் அவளுக்குள் எழாமல் இருக்குமா? அதுவும்  அவளது ஊர் நெருங்க நெருங்க அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டும் அவன் எப்படி இருக்கிறான். தாடி வைத்திருப்பானா?  கண்டிப்பாக மீசை இருக்கும். அதில் ஆச்சரியம் இல்லை.

    ஏனென்றால் மீசை என்றால் அவனுக்கு பிடிக்கும் என்று ஒரு முறை கூற கேட்டிருக்கிறாள். தன்னை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்வான் முன்பு போல் கோபம் கொள்வானா? இல்லை தன்னை பார்த்தும் பார்க்காதது போல் சென்று விடுவானா? இத்தனை வருடமாகியும் அவனுக்கு தன் பேல் ஏன் காதல் வரவில்லை’  என்று யோசித்தவள். கண்களை மூடி தன்னை சமநிலைக்கு கொண்டு வந்து,

   தன் மாமன் நினைவில் இருந்து மீள அடுத்ததாக தன் அக்காவை நினைத்தாள். அக்கா எப்பொழுதும் இவளுக்கு செல்லம் தான். அவளுக்கு கல்யாணம் ஆகப் போகிறதா? என்ற நினைப்பில் புன்னகைத்தவள். மாப்பிள்ளை பேர மட்டும் சொல்லவே இல்லையே கடைசி வர வச்சுக்கிறேன்.

   ஆனா ஒரு க்ளு கொடுத்தா உனக்கு நல்லா தெரிஞ்சவங்க தான். சின்ன வயசுல இருந்து தெரியும்னு அது யாரா இருக்கும் என்று யோசித்தவள். யோசித்தவளுக்கு யாரும் புலப்படவில்லை. சரி போய் பார்ப்போம் என்ன தான் சர்ப்ரைஸ்ன்னு, இந்த அம்மா கூட சொல்ல மாட்டேன்னு சொல்லிடுச்சு’ என்று தன் வீட்டினர் பேசியதயே நினைத்தபடி வந்தவளுக்கு,

    ஊர் வந்ததே தெரியவில்லை. ஸ்டேஷனில் வண்டி நின்ற பிறகு பரபரப்பாக அனைவரும் இறங்க, அதன் பிறகு தான் தங்கள் ஊரின் ரயில்வே ஸ்டேஷனை பார்த்தாள்.

   ” அச்சச்சோ ஊர் வந்துருச்சா” என்று எழுந்தவள். ” ஹரிஷ் இதான் எங்க ஊர் “

  “அப்படியா அதான் உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன். நீ அமைதியாவே இருந்தியா சரி அடுத்த ஸ்டேஷன் போலன்று வெயிட் பண்ணேன் ” என்று கூறியபடி ஹரிஷ் தன்னுடைய பேக்கை எடுத்துக்கொள்ள,

     தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தியின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி இறங்கும்படி கூறியதும் அவளும் அரக்க பரக்க என இறங்க மூவரும் இறங்கினர்.

     இறங்கியதுமே மலர்விழி வீட்டில் வேலை பார்க்கும் செந்தில் அண்ணன் தான் நின்று கொண்டிருந்தார். அந்த அண்ணனை பார்த்ததும் ” ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க”

  “நல்லா இருக்கேன்  பாப்பா. நீங்க எப்புடி இருக்கீங்க. என்ன இவ்ளோ பெருசா வளர்ந்துட்டீங்க. “

  ” நீங்களும் தான் அண்ணா ஆள் அடையாளமே தெரியல. உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு கேள்விப்பட்டேன் கங்கிராஜுலேசன் “

  ” அட போ பாப்பா  நீ வரவே இல்ல. “

  ” அண்ணா நான்தான் அப்பா கிட்ட சொல்லிருந்தேனே, எனக்கு எக்ஸாம் நடந்துட்டு இருந்துச்சுன்னா. “

 ” சரி சரி படிக்கிற பிள்ளை அதனால விட்டுட்டேன். “

  ” எங்க அண்ணி “
    ” எல்லாரும் பெரிய வூட்ல தான் இருக்காக. நீங்க தான் இவ்ளோ லேட்டா வரீங்க. இன்னும் ரெண்டு மணி நேரத்துல நிச்சயம் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவாங்களாம். அதனால கூட இருந்து ஐயா தான் கூட்டிட்டு வர சொன்னாரு. “

  ” சரிண்ணா ஒன்னும் பிரச்சனை இல்ல . “

  ” நிச்சயதார்த்தம் பெரிய வூட்டுல வச்சிருக்காங்க பாப்பா. அதனால வீட்டுக்கு போய் துணிமணி எல்லாம் மாத்திட்டு அதுக்கப்புறம் உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க. “

  “ஏண்ணா அங்கயே சேஞ்ச் பண்ணிக்கலாமே” என்று நினைத்தவள்.  “அதுவும் சரிதான் ” என்று கூறியபடி மலர்.

  ” ஹான் இவங்க ரெண்டு பேரும் என்னோட ஃபிரண்ட்ஸ்” என்று ஆனந்தியையும், ஹரிஷையும் அறிமுகம் செய்து வைக்க,

  “வாங்க தம்பி, வா பாப்பா நல்லா இருக்கீங்களா. பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு “

  “எல்லாம் சிறப்பாக இருந்துச்சுண்ணா ” என்று ஆனந்தி கூற,

  ” சரி வாங்க ” என்று அவர்களை காருக்கு அழைத்து சென்றவர். நேராக மலர்விழி வீட்டுக்கு அழைத்துச் செல்ல,

    அங்கு யாரும் இல்லை. அனைவரும் பெரிய வீட்டில் தான் இருந்தனர். காரில் இருந்து இறங்கிய செந்தில் வீட்டின் உள்ளே நுழைந்து, அங்கிருந்து கவரை எடுத்து, மலர்விழி கையில் கொடுக்க அந்த மூணு கவரையும் பார்த்தவள்.

   புன்னகையுடன் “சரிண்ணா. ” என்று கூறிவிட்டு, ” இந்தாங்க இது ரெண்டும் உங்களுக்கு தான். “

  ” எங்களுக்கு மா”

” ஆமா அம்மாகிட்ட முன்னாடியே சொல்லி வச்சேன். “

 ” என்ன எப்படி? “

 “உங்க ரெண்டு பேருக்கும் எத்தனை தடவை கிஃப்ட் பண்ணி இருக்கேன். உங்க டிரஸ் சைஸ் கூட எனக்கு தெரியாதா என்ன? ” என்று கூறியதும் ஹரிஷ் புன்னகையுடன் அதை வாங்கிக் கொள்ள,

   ஆனந்தி ” உன்னோடத விட என்னோடது கிராண்டா இல்லனா . நான் எக்ஸ்சேஞ்ச் பண்ணிடுவேன்” என்று மிரட்டியபடி அவளிடம் இருந்து வாங்க,

  “நீ இப்படி சொல்வன்னு நல்லாவே தெரியும். அதனால ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் கேட்டேன். ” என்று புன்னகையுடன் கூறிய மலர்விழி. அதை ஓபன் செய்து பார்க்க,  

   அதில் ஆஃப் சரி தான் இருந்தது கிராண்டான ஆரி ஒர்க் செய்து,
  ” பரவாயில்லையே உங்க கிராமத்துல இவ்வளவு ட்ரெண்டிங்கான டிரஸ் கூட போடுவீங்களா? “

  ” இந்த ஊருக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி பேசாத, இதுக்கு பேரு ட்ரெண்டிங்கா? “

 ” பின்ன ஆரி ஒர்க் எல்லாம் பண்ணி இருக்காங்க. “

   ” என்னோட ஈஸ்வரி சித்தி ஆரி கத்துக்கிட்டாங்க. சோ வீட்ல ஏதாவது ஃபங்க்ஷன்னா அவங்க தான் எல்லாருக்கும் பிளவுஸ் ஸ்டிச்சிங் பர்ஃபெக்ட்டா பண்ணுவாங்க. “

 “ம்ம் சரி சரி “

” சீக்கிரம் கிளம்புங்க. ஹரிஷ் நீ அந்த ரூம்க்கு போய் மாத்திக்கோ. அது அப்பா ரூம் “

  ” ஓகே மலர் தேங்க் யூ “

  ” நீ வாடி ” என்று ஆனந்தியை அழைத்துக் கொண்டு அவளது அறைக்கு செல்ல, அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுதே அவளுக்கு பழைய ஞாபகங்கள் தான். அவள் அருகில் அவளது நண்பர்கள் இருந்ததால் அதை தூர தள்ளிவிட்டு கிளம்புவதில் குறியாக இருந்தாள்.

  ஆனால் இப்பொழுது அவளது அறைக்குள் நுழையவும். பலமாக அவளுக்கு பழைய ஞாபகங்கள் தாக்க சிறுவயதில் இருந்து வாழ்ந்த அழகான வாழ்க்கை அல்லவா? எப்படி மறக்கும்.

   அவளது அன்னை அவள் அறையை அவள் செல்லும் பொழுது எப்படி வைத்துவிட்டு சென்றாளோ அதேபோலவே பாதுகாத்து வைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் அவள் வைத்த இடத்திலே இருக்க, ஏனோ அந்த அறைக்குள் நுழைந்ததுமே அவளது கண்கள் சிறிது கலங்கி தான் போயின.

   ” என்னடி ஒரே ஃபீலிங்கா” என்று ஆனந்தியோ அவள் ஃபீலிங்கின் குறுக்கே வர,

  “முதல்ல போய் நீ கெளம்பு”

  “ஏய் நான் கை, கால், முகம் எல்லாம் கழுவிட்டு வந்துட்டேன். இன்னும் நீ இந்த ரூமயே சுத்தி சுத்தி என்ன பார்த்துட்டு இருக்க, நான் வந்தது கூட தெரியாம “

   ” ஒன்னு இல்ல சும்மா தான் “

  ” சரி நீ என்னவோ பண்ணு என் டிரஸ்ஸ எடு நான் மாத்துறேன் ” என்றதும்,

  மலர் ” அங்க தான் இருக்கு போ ” என்று கூறிவிட்டு,  கண்ணை சிமிட்டி தன் கண்ணீரை கட்டுப்படுத்தியவள். அவளும் பாத்ரூமுக்கு சென்று ரெஃபரஷ் செய்துவிட்டு வெளியே வர,

   ஆனந்தியோ தாவணியை கட்டி முடித்து இருந்தாள். ” ஏய் அழகா இருக்கடி. “

  ” ம்க்கும் அது எனக்கே தெரியும். நான் ரொம்ப அழகுன்னு. நீ மொதல்ல கட்டு என்னை விட அழகா இருக்கியா இல்ல கம்மியா இருக்கியான்னு பார்க்கணும் ” என்றதும்,

   தலையில் அடித்துக் கொண்ட மலர் “பிங்க்கும், எல்லோவும் கலந்த அந்த தாவணி பாவாடையை எடுத்து அவள் கட்ட ஆரம்பிக்க, வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல தான் இருந்தாள். பெண்களே பொறாமைப்படும் பேரழகி அவள்.

  இவர்கள் சரியாக கிளம்பி முடிக்கவும். வெளியே இருந்து செந்தில் அண்ணாவின் குரல் கேட்கவும்.

 “சரி சரி வா டி இல்லன்னா எங்க அம்மா என்ன பிச்சு எடுத்துருவாங்க. பாரு ஃபோன் மேல ஃபோன் வந்துட்டே இருக்கு ” என்று கூறியபடி ஆனந்தியை இழுத்துக்கொண்டு மலர் வெளியே வர,

   ஹரிஷோ அங்கு எந்த ஊஞ்சலில் ஃபோனை பார்த்தபடி அமர்ந்திருந்தான். வெளியே வந்தவனை பார்த்தவள்.

  ” உனக்கு ஃபிட்டா இருக்கா ஹரிஷ் “

 ” சூப்பரா இருக்கு தேங்க்யூ மலர் “

 ” எத்தனை தடவை தேங்க்யூ சொல்லுவ நமக்குள்ள தேங்க்யூ, சாரி சொல்லகூடாதுன்னு சொன்னமே மறந்துடுச்சா. “என்று அவள் கூறியபடி புன்னகைக்க இருவரும் புன்னகைத்தபடி வெளியே வர,

   அப்போதுதான் அங்கு தன் மாமனது வண்டி நிற்பதை பார்த்தாள். அதை பார்த்ததும் அப்படியே சட்டென்று நின்று விட, கார் அருகே சென்ற செந்தில் அண்ணனோ ” என்னாச்சும்மா ஏன் இப்படி அப்படியே நின்னுட்டீங்க ” என்று கேட்டதும்,

  ” அது இல்ல இது மாமா வண்டி தானே “

   ” ஆமாமா அவர்  பழைய வண்டி எப்பயாவது தான் எடுத்துட்டு வருவாரு. “

  ” ஓ இப்ப புது வண்டி கூட வாங்கிட்டாங்களோ ” என்று ஒரு மாதிரி குரலில் கூறியவள். எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

– தொடரும்

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
முத்த மழை
395 7 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page