அத்தியாயம் 20
தன்னுடைய கைப்பிடிக்குள் இத்தனை நேரமாக கட்டுண்டு கிடந்தது மித்ரா தான் என்று நினைத்துக் கொண்டு திரும்பிப் பார்க்க..
ஆனால் அங்கே அவன் கைப்பிடியில் நின்று கொண்டிருந்தது என்னவோ மாபெரும் தொழிலதிபரான வைபவ் தான்..!!
அவரைப் பார்த்ததும் இவனுக்கு தான் ஏகமாக அதிர்ச்சி உண்டானது..!!
இவர் எப்படி?? இவரை போய் நான்..?? என்ன நடக்குது இங்க?? என்று யோசித்துக் கொண்டு குனிந்து பார்க்க அவனுடைய கைகள் அவரின் கையை இன்னமும் இறுக்கமாக பிடித்திருந்தது..
” என்ன நெனச்சிட்டு இருக்கீங்க மிஸ்டர் தீரன் ?? ஏதோ பெரிய பெரிய பிசினஸ் டீலிங் எல்லாம் முடிச்சிருக்கீங்க நல்ல நிலைமையில் இப்போ உங்களோட கம்பெனி இருக்கு.. இந்த சமயத்தில் உங்க கூட பார்ட்னர்ஷிப் வச்சுக்கிட்டா எங்க கம்பெனி நல்லபடியாக வளருமே அப்படிங்கற காரணத்துக்காக தான் மீட்டிங் வந்தேன்.. ஆனால் வந்த இடத்தில் நீங்க இப்படி அநாகரிகமா நடந்துக்குறீங்க உங்களுக்கு என்ன ஆச்சு ?? இதை நான் கொஞ்சமும் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல.. ச்சே”, என்று கோபமாக திட்டி விட்டு சிவந்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறினார் வைபவ்.
” ஹலோ மிஸ்டர் தீரன்.. ஆர் யூ ஓகே?? உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? இல்ல ஹாஸ்பிடல் போலாமா ??நல்ல டாக்டர பாருங்க”, என்று பலரும் அறிவுரை கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்கள்.
என்ன நடக்குது இங்கே?? என்ன ஆச்சு?? எல்லாரும் இப்படி பேசுறாங்க?? இங்க தானே பக்கத்தில் மித்ரா நின்னுகிட்டு இருந்தா ?? நான் பார்த்தேனே என்னை பார்த்து அவளும் சிரிச்சாளே..?? என்று குழப்பமாக அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனுடைய தோளை தொட்டு மெதுவாக திருப்பினார் மேனேஜர்.
” சார் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ஏன் இப்படி நடந்துக்கிட்டீங்க இத்தனை வருஷத்தில் நான் உங்களை இந்த மாதிரி பார்த்ததே இல்லை”, என்று கூறினார்.
“ என்ன நடந்துச்சு நீங்களாவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க இங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்தாளே அவள் எங்க??”
“ பொண்ணா..?? என்ன சார் சொல்றீங்க ??நம்ம மீட்டிங்கிற்கு எந்த பொண்ணும் வரவே இல்ல.. வந்தவங்க எல்லாருமே நாற்பது ஐம்பது வயசுக்கு மேல உள்ளவங்க”
” என்ன சொல்ற?? டாமிட்..”, என்றான் அவன் கோபமாக.
” ஆமா சார்.. நம்ம மீட்டிங்கிற்கு எந்த பொண்ணும் வரல நீங்க தான் ஏதோ தவறாக புரிஞ்சிட்டு இருக்கீங்க.. அதுவும் இல்லாம எதுக்காக வைபவ் சார் கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்க?? இத கொஞ்சம் கூட யாரும் உங்க கிட்டருந்து எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. நல்லா தானே சார் இருந்தீங்க உடம்புக்கு எதுவும் முடியலையா ?? எதுக்காக வைபவ் சாரை கட்டி புடிச்சு முத்தம் கொடுத்து இந்த மாதிரி நடந்துக்கிட்டீங்க??”, என்று கேட்டார் குழப்பதுடன்.
“என்ன??!!”, என்று கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றான் தீரன்..!!
அப்படி என்றால்…
தான் கட்டியணைத்து முத்தமிட்டது மித்ராவை இல்லையா வைபவை தானா ??என்று நினைக்கும் பொழுதே அவனுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது, அவமானம் கொன்றது அவனை..!!
தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே மேஜை மீது தலை சாய்த்து அமர்ந்து விட்டான் தீரன்..
“என்ன காரியம் செய்துட்ட?? எல்லார் முன்பும் எப்படிப்பட்ட அவமானம் நிகழ்ந்து விட்டது?? இத்தனை வருஷமாக கட்டிக் காப்பாற்றிய மதிப்பு மரியாதை கௌரவம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டேன்.. இனிமே எந்த முகத்தை வச்சுக்கிட்டு எல்லாரையும் நான் பார்ப்பேன்.. பழையபடி கம்பீரமா பேசுவேன் கட்டளை இடுவேன்.. ?? முதல்ல என்னுடைய பேச்சை இவங்க எல்லாரும் மதிப்பாங்களா ?? இன்னைக்கு நடந்த விஷயத்தை பற்றி யோசிச்சாலே எனக்கு அவமானமா இருக்கு.. எல்லாத்துக்கும் காரணம் அந்த மித்ரா தான்.. அவளால தான் இவ்வளவும்.. அவளை பத்தி நெனச்சுக்கிட்டு ஆபீஸ் வந்ததால தான் எனக்கு இத்தனை பிரச்சனையும் நடந்திருக்கு அவளை நான் சும்மா விடமாட்டேன்.. வைபவ் எப்படி என்னோட கண்ணுக்கு மித்ராவா தெரிஞ்சாரோ எனக்கு ஒண்ணுமே புரியல.. என் கண்ணுக்கு எதுவும் கோளாறா ?? இல்ல அவளை நினைச்சுகிட்டு வந்ததால பாக்குற எல்லாரும் எனக்கு அவளை மாதிரியே தெரிஞ்சாங்களா?? அதனால இப்படி நடந்து கொண்டேனோ?? என்னதான் இருந்தாலும் இப்படியா பண்றது?? வைபவ் சார் என்ன நினைச்சாருன்னு தெரியல எல்லாரும் நம்மளை ரொம்ப கேவலமாக நினைச்சிருப்பாங்க இல்ல ??”,என்று தனக்குள்ளே மருகி போனான் அவன்.
” சார் ஆர் யூ ஓகே ஹாஸ்பிடல் போலாமா??”, என்று மெல்லிய குரலில் கேட்டார் மேனேஜர் பயந்து கொண்டு.
” யோவ்.. எனக்கு என்னய்யா ?? நான் நல்லா தான இருக்கேன்.. இன்னும் உயிரோடு தானே இருக்கேன்?? எனக்கு ஒன்னும் ஆகல நீ உன் வேலையை பார்த்துட்டு போ”, என்று அவரிடம் சம்பந்தமே இல்லாமல் எரிந்து விழுந்தான் அவன்.
என்னவோ தெரியலையே இந்த ஆளு எதுக்கு இப்படி எரிஞ்சு விழறான்?? சரியான பைத்தியமா இருக்கானே.. இன்னைக்கு பார்த்து இந்த ஆள் நடந்துக்குற முறையும் சரி இல்ல.. முதல்ல நம்ம இங்க இருந்து எஸ்கேப் ஆகறது தான் நல்லது..
கொஞ்ச நேரம் கழிச்சு வருவோம்.. இல்ல இல்ல.. எதுக்கும் நாளைக்கு வந்து பார்ப்போம் முடிஞ்சா ரெண்டு நாள் கழிச்சு வந்து இந்த ஆளை மீட் பண்ணுவோம்.. என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து மேனேஜர் விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடி விட்டார்..!!
“ஆ ஆ ஆ ஆ…..”, அந்த பில்டிங் மொத்தமும் அதிரும் வண்ணம் கத்தி தீர்த்தான் ஆகர்ஷதீரன்..!!
அலுவலகத்தில் உள்ள அனைவரும் அவனை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து வைத்தனர்.. அவன் போன பின்பு முதுகுக்கு பின்னாடி கிண்டல் செய்து சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டனர்.. இவை அனைத்தையும் கவனித்தும் கவனிக்காதது போல கண்டுகொள்ளாமல் அவன் வெளியே வந்தான்..
கார் பார்க்கிங் ஏரியா வந்தவன் வேகமாக காரை எடுத்துக்கொண்டு விமலா காம்ப்ளக்ஸ் நோக்கி சென்றான்..
நேற்று இதே இடத்துக்கு தானே வந்தாள்.. முதல் மாடி தானே?? கண்டிப்பா அங்கதான் இருக்கணும் இன்னைக்கு அவளை உண்டு இல்லைன்னு பண்ணுறேன் என்று நினைத்துக் கொண்டு அவன் வேகமாக அந்த கட்டடத்திற்குள் நுழைந்தான்..
இங்கே..
வேலைக்கு சேர்ந்த முதல் நாள் என்கிற காரணத்தாலும் அலுவலகத்திற்கு புதிதாய் வந்திருக்கும் காரணத்தாலும் அவளுக்கு சில விஷயங்களை பழக்கி விட்டான் அருண்.
எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.. எந்தெந்த பைல் ரிஜிஸ்டர் எல்லாம் எந்த இடத்தில் இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தான்.
ஏற்கனவே வேலை செய்திருந்த கம்பெனியில் பார்த்த வேலைதான் என்றாலும் புதிதாக ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டாள் அதை கற்று தருவதற்காக அருணும் அவள் அருகிலேயே அமர்ந்து அனைத்தையும் சொல்லிக் கொடுத்தான்..
வேக வேகமாக படிகள் வழியே ஏறி வந்தவன் முதல் வேலையாக தன் மனைவி மித்ராவை தான் அங்கே தேடினான்..
அனைத்து அறைகளையும் சல்லடை போட்டு தேடி கடந்து வந்தவன் கடைசியாக இருந்த டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்கள் ரூம் என்று போட்டிருந்த போர்டை பார்த்ததும் கண்டிப்பாக இங்கே இருக்க வாய்ப்பிருக்கு என்று நினைத்துக் கொண்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் புயல் வேகத்தில்..!!
அனுமதியின்றி யார் அது உள்ளே இத்தனை வேகமாக நுழைவது ?? என்று அனைவரும் சற்று அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தனர்..
அங்குள்ள முக்கால்வாசி பேருக்கு இவனை அடையாளம் தெரிந்திருந்த காரணத்தினால், எழுந்து நின்று மரியாதைக்கு வணக்கம் வைத்தனர்..
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்தக் கூட்டத்தில் அவள் எங்கே இருக்கிறாள் என்று அவனுடைய கண்கள் பரபரப்பாகத் தேடியது..
அங்கும் இங்கும் அலைமோதிய அவனுடைய விழிகளில் எப்படியோ அங்கு அமர்ந்து கொண்டிருந்த மித்ராவும் அருணும் தட்டுப்பட்டு விட்டார்கள்..
சாதாரணமாக அவன் விழிகளில் அவள் சிக்கியிருந்தால் கூட ஓரளவிற்கு தான் கோபப்பட்டு இருப்பானோ என்னவோ.. ஆனால் அவள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொண்டிருந்த அருணை பார்த்ததும் அவனுடைய கோபம் பல மடங்காக உயர்ந்தது..!!
அதும் அவள் அருகிலேயே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று அவளுடைய கைகளை உரசிய வண்ணம் அமர்ந்திருந்த தோரணையை பார்த்ததும் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கோபத்தீ பற்றிக் கொண்டு எரிந்தது அவனுக்கு..🔥🔥
அவன் பார்த்த பார்வையில் கண்களிலிருந்து தீப்பொறி ஒன்று தான் பறக்கவில்லை.. மற்றபடி அவனுடைய கோபம் பல மடங்காக உயர்ந்திருந்தது..!!
கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை நெருங்கியவன் ..
” மித்ரா..”, என்று அழுத்தம் திருத்தமாக அழைத்தான் அவளை..
பழக்கப்பட்ட குரல் தான் என்றாலும் இந்த குரல் எங்கே இங்கே ஒலிக்கிறது?? அதுவும் எப்படி இந்த குரல் இங்கே இருக்கிறது ?? என்கிற ஆச்சரியத்தில் நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா.
அவள் நினைத்தது போலவே அங்கே தன் கணவன் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் அவளுக்கு கோபம் ஒரு பக்கம்.. பயம் இன்னொரு பக்கமுமாக வந்தது..
புதிதாய் வேலைக்கு சேர்ந்திருக்கும் இந்த இடத்தில் வந்து என்னென்ன பிரச்சனை செய்யப் போகிறானோ இவன்?? என்கிற பயம் ஒரு பக்கம்..
இன்னொரு பக்கம் தன் நண்பனான அருணை ஏதாவது அவமானப்படுத்தி விடுவானோ?? ஏதாவது திட்டி விடுவானோ ??என்கிற அச்சமும் இருந்தது..
தேவையில்லாத வேலை இவனுக்கு எதுக்கு..?? இவன் வேலையை பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதானே எதுக்காக இங்கு வரவேண்டும் என்கிற கோபமும் இன்னொரு பக்கம் பொங்கி எழுந்தது அவளுக்கு..!!
“ உன்கிட்ட அத்தனை முறை சொல்லியும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்க??”
” பார்த்தா தெரியல.. வேலை பார்த்துட்டு இருக்கேன்”, என்றாள் துடுக்காக.
“ என்ன நீ வேலை பாக்குறியா?? என்ன சொல்ற நீ?? என்கிட்ட இந்த விஷயத்தை ஏன் முன்னாடியே சொல்லல ?? அப்போ நீ இங்க சம்பளத்துக்கு வேலை செய்றியா??”
பதில் சொல்லாமல் ஆமாம் என்பது போல் தலையாட்டினாள் அவள் சிறு அச்சத்துடன்.
அடுத்த நிமிடமே அவள் எதிர்பாராத நேரமாக பார்த்து அவளுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது பளாரென்று..!!
சிவகாசி பட்டாசு போல அவன் கொடுத்த அறை..
அந்த அறை முழுக்க கேட்டது..!!
அதில் மித்ரா மட்டுமில்லாமல் அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை திரும்பிப் பார்த்தனர்..!!
– தொடரும்..
