அத்தியாயம்-20

பவித்ரா அறையில் உள்ள பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்தவள்,  தங்கையை காணாமல் தேட கீழே சத்தம் கேட்டு வேகமாக ஓடி வந்தவள்,  கண்டது தங்கையை அடிக்க செல்லும் தந்தையை தான்.

வேகமாக ஓடி வந்து தந்தையை தடுத்தவள் “என்ன பண்றீங்க பா ? அபி ய போய் நீங்க அடிச்சிட்டு இருக்கீங்க? என்னப்பா ஆச்சு?”  என்றால்.

” பாரு பவி உன் தங்கச்சி படிக்க போன,  இடத்தில் எவன் கூடையோ அசிங்கம் பண்ணிட்டு இருக்கா அந்த கருமாந்திரம் இன்னிக்கு வீடு தேடி போஸ்ட் ல வந்திருக்கு!  பாரு நீயே உன் தங்கச்சியோட லட்சணம். எதா இருந்தாலும் அவளுக்கு வரிஞ்சு கட்டிட்டு பேசுவியே? இப்போ இதுக்கும் என்ன சொல்ல போற?”  என்றார்.

தற்பொழுது அவளது அம்மா “ஒவ்வொரு வாட்டியும் உனக்கு உங்க அப்பா எவ்வளவு செல்லம் கொடுக்கிறப்போ நான் திட்டினாலும் என்னைய திட்டுவாரு. உனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் அதுக்கு நீ இப்படித்தான் பண்ணுவியா?”  என்ற  அம்மாவும் அடிக்க, பவித்ரா தங்கை அருகில் வந்தவள் அம்மாவை நகர்த்திவிட்டு “போதும் நிறுத்துங்கமா அவகிட்ட முதல்ல என்ன விஷயம் என்று கேட்காமல் போட்டோவை நம்பி நீங்க பாட்டுக்கு தங்கச்சி அடிக்காதீங்க!  இந்த காலத்துல எப்படி வேணாலும் ஒரு போட்டோவ உருவாக்கலாம் அபி மேல நம்ம தான் நம்பிக்கை வச்சு கேக்கணும்!  முதல அவ கிட்ட கேட்டுப் பார்ப்போம். அதுக்கப்புறம் என்னன்னு முடிவு பண்ணிக்கலாம்!”  என்றவள் அபியின் கண்ணீரை துடைத்து விட்டு,  “அபிமா என்ன ஆச்சு?  என்னடா இதெல்லாம்?”  என்றால்.

“அக்கா”  என்று தேம்பியவள் அவளது நெஞ்சில் சாய்ந்து கொள்ள தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தியவள்,  அழுகை குறைந்த உடன் தன்னிலிருந்து பிரித்து “என்ன ஆச்சு என்னம்மா இதெல்லாம் யார் இப்படி பண்ணினா யாரோ உன்னைய வேணும்னே மாட்டிவிட்டு இருக்காங்களா?”  என்றால்  பவி.

அபியோ இல்லை என்று தலையாட்டி “இல்லக்கா நானும் இவரும் லவ் பண்றோம்!”  என்று மேலோட்டமாக சொன்னால் அனைத்து கதையும்.

” பாத்தியா? நாங்க சொன்னம்ல?”  என்று மீண்டும் அவள் தந்தை அடிக்க வர,

“அப்பா ஒரு நிமிஷம் !” என்றவள்

“என்ன அபி  இப்படி பண்ணுவ என்று நான் எதிர்பார்க்கல இப்பதான் ஃபர்ஸ்ட் இயர் காலேஜ் போய் இருக்கா இதெல்லாம் வெறும் ஈர்ப்பு தாண்டா?”  என்றால்.

” இல்ல அக்கா அவர் என்னை லவ் பண்றாரு அவர் ரொம்ப நல்லவரு இது ஏதோ தெரியாம நடந்த ஒரு விஷயம்! புகைப்படங்களை பார்த்து சொன்னவள், 

” மத்தபடி அவரே என்கிட்ட நெருங்க மாட்டார்!  அது பண்ணினது வேணா தப்புதான் ஒத்துக்கிறேன் அதுக்கு நீங்க என்ன வேணாலும் எனக்கு தண்டனை கொடுங்க!  ஆனா அவரை மட்டும் காதலிக்க கூடாதுன்னு சொல்லாதீங்க!”  என்றால்.

மீண்டும் அவளது அன்னை தலையில் இரண்டு அடி வைத்து “ஏன்டி இவ்வளவு நடந்தும் நீ அவனுக்காக என்கிட்ட பேசிட்டு இருக்க இதெல்லாம் காதலே கிடையாது படிக்கிற காலத்துல வர்ற ஈர்ப்பு தான்!  எல்லாத்தையும் ஒழுங்கா மூட்டை கட்டி வச்சிட்டு படிக்கிற வழிய பாரு!”  என்றார்.

அவளோ “இல்லம்மா அவர் நல்லவர் ப்ளீஸ்மா! புரிஞ்சுக்கோங்க”  என்று கெஞ்ச,

” நீ மட்டும் இப்படியே பண்ணிட்டு இருந்தா இனிமே நான் உன்னை காலேஜ் அனுப்ப மாட்டேன் எவனையாவது பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விடுவேன் ஞாபகம் வச்சுக்கோ!”  என்று கத்த “போதும் நிறுத்துங்கப்பா!”  என்று அந்த வீடு அதிரும் வண்ணம் இவள் கத்தினாள்.

தனது மகளின் இந்த புதிய அவதாரத்தில் அவளது தந்தையே சற்று ஆடி தான் போனார்.

பவித்ராவோ “அபி அப்பா அம்மா கிட்ட குரல் உயர்த்தி பேசாத!”  என்றால்  கோபமாக. 

“இல்லக்கா அவங்களோட கத்துவதை  நிறுத்தறதுக்காக தான் நான் அப்படி பண்ணினேன் முதலில் நான் சொல்றது ஒரு நிமிஷம் கேளுங்க அதுல இருக்கிறது வேணா உண்மைதான். ஆனால் தப்பான எந்த நோக்கமும்  இல்ல. ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிறது வெறும் சுத்தமான காதல் மட்டும் தான். இன்னொரு முக்கியமான விஷயம் நான் இன்னைக்கு உங்க முன்னாடி உயிரோடு நடமாடிட்டு இருக்கிறதுக்கு முதல் காரணம் அவர்தான்,  அவர் போட்ட பிச்சை தான் என்னோட இந்த உயிர்!”  என்றால்.

அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “என்ன உன்னோட காதல நல்லதா காமிக்கிறதுக்கு எங்ககிட்ட பொய் சொல்றியா?” என்றார் அவள் அம்மா.

அதில் விரக்தி சிரிப்பை உதிர்த்தவள் ‘நம்பலனா என் காலேஜ் படிக்கிறவங்க யாரு கிட்ட வேணாலும் நான் இப்ப சொல்ல போற விஷயத்தை நீங்க கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!  இல்லனா எங்களோட ப்ரொபஷர் கிட்ட கூட கேட்டுக்கோங்க!”  என்றவள், 

அவன் தன்னை நடன மேடையில் காப்பாற்றியதை பற்றி கூறி “அவர் மட்டும் அன்னிக்கு அந்த இடத்துக்கு வந்து என்னை காப்பாற்ற உன்னை இந்நேரம் படுத்த படுக்கையாக இருப்பேன்!  இல்லனா உயிரே போயிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்குள்ள அவ்வளவு கனமான லைட்டு அத அவரு ஒரு ஆளா தள்ளிவிட்டு கையை உடைத்துவிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்கு தான் தெரியும் ! அவரோட நண்பர்களுக்கும் தெரியும்!”  என்றவுடன் , 

“ஐயோ!”  என்று பதறிய பெற்றோர்கள் “இதையே முன்னாடியே நீ எங்க கிட்ட சொல்லல?”  என்று மீண்டும் அவளது அன்னை அழுது கொண்டே மகளை கட்டிப்பிடிக்க வர , அவரிடமிருந்து தள்ளி வந்து நின்றவள் “நீங்க இப்படி பதறுவீங்கன்னு தெரிஞ்சு தான் நான் அதை சொல்லல ஏன்னா எனக்கு தான் எதுவுமே ஆகலையே அதனாலதான் அது மட்டும் இல்லாம அது ஒரு ஆக்சிடென்ட் . அதுவா நடந்த விஷயம் சொல்லி உங்களை பதற வைக்க வேண்டாம் என்று தான் நானும் எதுவும் சொல்லல. ஆனா நீங்க என்கிட்ட முதல்ல கேட்டு இருந்திருக்கலாம் இப்படி உன்ன பத்தி வந்திருக்கே என்று .ஆனா எதுவுமே கேட்காமல் நீங்க பாட்டுக்கு அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க சரி நம்மளும் படிக்கப் போன இடத்துல காதல் பண்ணினது தப்புன்னு தான் அமைதியை எல்லாத்தையும் வாங்கிட்டு இருந்தேன் ஆனா ஒன்னு சொல்றேன் இந்த ஜென்மத்துல கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது எனக்கு அவர் கூட மட்டும்தான் என்னடா இப்பவே கல்யாணத்தை பத்தி பேசுறேன் மட்டும் நினைக்காதீங்க காதலிக்கிறவங்க சேர்வதற்கு தான் சேர்ந்து கடைசி வரைக்கும் வாழ்வதற்கு தான் லவ் பண்ணுவாங்க நான் அப்படித்தான் நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கேன் இந்த உயிர் அவர் போட்ட பிச்சை அவரும் என்ன நல்லா படிக்க சொல்லி இருக்காருன்னு தான் நான் இப்ப படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணி இருக்கேன்!  புரியுது நாங்க பண்ணினது தப்புதான் ஆனா இனிமே அந்த தப்பு நடக்காது நீங்க என்ன உறுதியா நம்பலாம்!  அதை மீறி நம்ப மாட்டீங்க அப்படின்னா உங்களுக்கு என் மேல நம்பிக்கை அவ்வளவு தான் நான் நினைச்சுக்குறேன்!”  என்றால். 

அந்த பெற்றோர்களுக்கும் தங்கள் மகள் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து இருக்கிறாள் என்று கேட்டவுடன் உள்ளுக்குள் ஏதேனோ எண்ணங்கள் தோன்ற அபியை பார்த்து அவளது தந்தை “அபி  சொல்றதெல்லாம் புரியுது ஆனாலும் அந்தப் பையனை பற்றி முழுசா தெரியாம எப்பிடிடா எங்களால உன்ன அவர் கூட பழகவிட முடியும்! இந்த வயசுக்கு படிப்பு தான் முக்கியம் என்றார் 

“ஏம்பா அப்படி சொல்றீங்க நீங்களும் அம்மாவும் காலேஜ் படிக்கிறப்போதானே காதலிச்சு இருந்தீங்க அதுவும் அப்பதான் ரெண்டு பேரும் வெளிப்படையா சொல்லிக்கிட்டீங்க ஸ்கூல் டேஸ்ல இருந்தே உங்க ரெண்டு பேருக்கும் லவ் விருப்பம் தானே. அதை வீட்டில் மறைத்து தெரியாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க அதை நான் தப்புன்னு சொல்லல உங்க நிலைமை அப்படி. ஆனால் நான் கண்டிப்பா உங்க கிட்ட என்னுடைய படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் சொல்லலாம் என்று தான் இருந்தேன். ஆனா அது இப்பவே உங்களுக்கு தெரிய வந்துருச்சு!” என்றவள் தனது அக்காவை கட்டிக் கொண்டு “தேங்க்ஸ்க்கா இந்த நிலைமையில் நீ என் மேல நம்பிக்கையோடு இருப்பதற்கு ஆனால் நான் தான் உன்னோட நம்பிக்கையை  ஒடச்சிட்டேன் மன்னிச்சிடு!”  என்றால் அழுது கொண்டே அபி.

 

“இதெல்லாம் இந்த வயசுல வரது தான் ஆனா நீ உன் மனச கட்டுப்பாடோடு வச்சுட்டு ஒழுங்கா படிச்சு பெரிய ஆள் ஆகணும். அப்படி மட்டும் ஏதாவது ஆகாமல் இருந்தது என்றால் கண்டிப்பா இந்த அக்கா உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன் ஞாபகம் வச்சுக்கோ!”  என்று செல்லமாக தனது தங்கையை கண்டிக்கவும் செய்தால் பவித்ரா. 

அவளும் “கண்டிப்பா கா இந்த வயசுல லவ் பண்றது தப்பு தான். எனக்கு தெரியும் ஆனா என்ன பண்றது நானும் ஆரம்பத்துல அவர் அக்சப்ட் பண்ணிக்கல ரொம்ப வெருப்ப காட்டினேன். ஆனா அதுக்கு அப்புறம் அவர் என்னைய டிஸ்டர்ப் பண்ணலனாலும் தூரத்தில் இருந்தே என்னை பார்த்துக் கொண்டே இருப்பார் .அப்போ எனக்கு என்னதான் துரத்தி அடிச்சாலும் ஒருத்தங்க விடாம அன்பு காமிச்சா நமக்கே ஒரு மாதிரி ஃபீல் ஆகும் தானே. அப்படித்தான் உணர்வுகள் ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் என்னைக்கு அவர் என்னைய காப்பாத்தினாரோ இன்னும் அது அதிகமாயிடுச்சு. நானும் என்ன பண்றது அதுக்கு அப்புறம் அவரோட பாசம் ஏங்குறது இதெல்லாம் பத்தி கேட்டதுக்கு அப்புறம் கண்டிப்பா அவருக்கு அன்பு காட்டணும் .அவரு முகத்துல சந்தோஷமான சிரிப்ப பாக்கணும்னு ஒரு ஆசை ஏற்பட்டது. அவர் குடும்பம் இருந்தாலும் அனாதையா தனியா இருக்காரு. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. அவர் மட்டும்  அன்றைக்கு என்ன காப்பாத்தலனா  இன்னிக்கு  சந்தோஷமா இருந்திருக்க முடியாது நீங்க மூணு பேருமே கஷ்டத்துல தான் இருந்து இருப்பீங்க கண்டிப்பா எங்களோட காதல் வெறும் இந்த இளமை ஹார்மோன்ஸ்னால ஏற்பட்ட ஈர்ப்பு இல்ல. அவருக்கு ஒரு பாசம் வேணும் அதை என்கிட்டே இருந்து எதிர்பார்க்கிறார். எனக்கு அவருக்கு துணையாய் இருக்கணும் என் மேல பாசம் காட்டுறவரை நானும் பாசமா பாத்துக்கணும்னு ஒரு ஆசை அவ்வளவுதான்?”  என்றால்.

கதிர்வேல் தனது மகளை பார்த்தவர் “சாரிமா நீயே சொல்லு திடீர்னு ஒரு போட்டோ இந்த மாதிரி ஒன்னு இப்படி வருதுன்னா ஒரு அப்பாவா பார்த்துட்டு எவ்வளவு கஷ்டமா இருக்கும்!  நம்பிக்கை அது இது இதெல்லாம் இரண்டாவது பட்சம் தான் ஃபர்ஸ்ட் அந்த சிச்சுவேஷன் ஒரு அதிர்ச்சியை கொடுக்கும் இல்லையா அதனால அப்படியே அப்பா நடந்துக்கிட்டேன் மன்னிச்சிடு!”  என்றவரை பார்த்த அபி 

“ஐயோ அப்பா நீங்க எதுக்காக மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க. அதெல்லாம் பெரிய வார்த்தைகள். நான் தான் மன்னிப்பு கேட்கணும் உங்களோட நம்பிக்கையை உடைத்து அதற்கு என்ன மன்னிச்சிருங்க ஆனாலும் அவரும் நல்லவர் பா. மத்த பாரன்ட்ஸ் நான் இவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புரிஞ்சுக்காம இருப்பாங்க ஆனா நீங்க ரெண்டு பேரும் புரிஞ்சுக்கிட்டீங்களே அதுவே எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம் எனக்கு உங்க நிலைமை புரியுதுப்பா சாரிப்பா என்றவள் அவன் குடும்பத்தை பற்றியும் அவனுடைய குடும்பம் நிலைமையையும் கூற 

“ஓ அவ்ளோ பெரிய பணக்காரங்களா இருந்தும் பார் அந்த பையன் பாசத்துக்காக எவ்வளவு ஏங்கி இருக்காரு !” என்றார் .

“ஆமாம்பா அதனாலதான் எனக்கு அவருடைய அன்பு நிராகரிக்க முடியல ஆரம்பத்துல எனக்கும் கஷ்டமா இருந்தது சொல்லப் போனால் அவர் விடாம பாலோ பண்ணி பண்ணின டார்ச்சர்ல தான்  நான் முன்னாடி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனதே, ஆனா அவரு பத்தின உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் என் மனசு அவருக்கு தேட ஆரம்பிச்சிடுச்சு. அதுக்கு அப்புறம் அவர் எனக்காக உயிரை கொடுத்து காப்பாத்தினதுக்கு அப்புறம் நான் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் எங்க ரெண்டு பேரையும் பிரிக்கறதுக்காக தான் யாரோ இந்த மாதிரி பண்ணி இருக்காங்க. அதனால நீங்க உங்க பொண்ண நம்பலாம் கண்டிப்பா இனிமேட்டு எந்த தப்பும் பண்ண மாட்டேன் பா பிராமஸ் !” என்றால். 

“அதெல்லாம் இருக்கட்டும் அதுக்காக நீ ரொம்ப அந்த பையனோட பழகுற வேலை வச்சுக்காத உங்க வயசு எல்லாம் தாண்டி தான் நாங்க வந்து இருக்கோம் இப்ப தப்புன்னு தெரியாது அப்புறம் பின்னாடி நீங்க தான் வருத்தப்படுவீங்க!”  என்றவர்

 “ஒருநாள் அந்த பையன கூட்டிட்டு வா!”  என்றார் கௌரி. அதைக் கேட்டு சந்தோஷம் அடைந்தவள் ஓடி சென்று தனது தாயை கட்டிக் கொண்டாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page