அத்தியாயம் 23
காலை 8 மணி..
வழக்கம்போல் எழுந்து குளித்து தயாராகி அலுவலகம் செல்லலாம் என்று நினைத்தாள் மித்ரா.
நேற்று இரவு நடந்த எதையுமே அவள் நினைவில் சேமித்து வைக்கவில்லையோ ?? எல்லாவற்றையும் மறந்து விட்டு வழக்கம் போல அலுவலகம் கிளம்புகிறாளே என்பது போல அவளை அதிசயமாக பார்த்தான் தீரன்..!!
அவனுடைய பார்வையை கண்டுகொள்ளாமல் அவள் பாட்டுக்கு ஜடையை பின்னி ரப்பர் பேண்ட் போட்டாள்..
நெற்றி வகிட்டில் பொட்டு வைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன்னை சரிபார்த்துக் கொண்டு அங்கிருந்த ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப முயன்றாள்.
வெங்காய தோல் நிறத்தில் வழவழப்பான கிரேப் சில்க் சேலையை உடுத்தியிருந்தவள் அவசர அவசரமாக அறையை விட்டு வெளியேற நினைத்தாள்.
எப்படியும் கிளம்பறதுக்கு முன்னாடி குறுக்கால வந்து நின்னு சண்டை போடுவான் எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு அவன் பேசுறத இந்த காதல் வாங்கி அந்த காதில் காற்றில் பறக்க விட்டுட்டு நம்ம பாட்டுக்கு வேலைக்கு கிளம்பி போய்கிட்டேயிருக்கணும் அப்பதான் இவன் கிட்ட வாங்கின கடனை சீக்கிரம் அடைக்க முடியும் , என்று எண்ணிக்கொண்டு வேலைக்கு கிளம்பினாள்.
அவள் எண்ணியது போலவே அவள் கிளம்பும் வரை அமைதியாக குறுகுறுக்கும் பார்வையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்.. வெளி வாசலை அவள் நெருங்கும் வேளையில் குறுக்கே வந்து நின்றான் தீரன்..!!
“ என்ன ?? என்ன வேணும் உங்களுக்கு??”
” நீதான்…………… நீதான்டி வேணும்
என்னை சுத்தி சுத்தி நீ வரணும் உன்னுடைய ஏக்கப் பார்வையும், காதல் மொழிகளும் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்.. உன்னுடைய விழிகள் எப்பவுமே என்னை தேடிக்கிட்டே இருக்கணும்.. உன்னுடைய முதல் தேடலும் நானா தான் இருக்கணும்.. இறுதி தேடலும் நானா தான் இருக்கணும்.. இன்னும் இப்படி ஏகப்பட்ட ஆசைகள் மனசுக்குள்ள இருக்கு இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா ??சொன்னால்தான் நீ ஏத்துப்பியா?? பாக்குறா பாரு மலை முழுங்கி மகாதேவி மாதிரி..”, என்று மனசுக்குள் கருவிக் கொண்டான் தீரன்.
” உங்க கிட்ட தான் கேட்கிறேன் மிஸ்டர் தீரன்.. என்ன வேணும் உங்களுக்கு??”, முகத்திற்கு முன்பாக சொடக்கு போட்டு கேள்வி கேட்டாள்.
“ எங்க கிளம்பிட்ட??”
“ நான் எங்க வேணா போவேன் அதையெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு போகணுமா என்ன?? இல்ல ஏதாவது ரிஜிஸ்டர்ல எழுதி கையெழுத்து போட்டு போகணுமா??”
“ நீ பண்ற வேலை எல்லாம் பார்த்தால் கூடிய சீக்கிரமே அந்த நடைமுறைகளை எல்லாம் கொண்டு வரணும் போல”
“ ஆல்ரெடி எனக்கு லேட்டாகிட்டு இருக்கு ப்ளீஸ் எனக்கு வழி விட முடியுமா??”
” அதெல்லாம் முடியாது நீ உள்ள போ.. நீ எங்க போறன்னு எனக்கு நல்லாவே தெரியும் மரியாதையா உள்ள போ.. நேத்துதான் அவ்வளவு தூரம் பேசினேன் இன்னமும் உனக்கு புரியலையா?? இல்ல நேத்து கிடைச்ச தண்டனை மறுபடியும் உனக்கு வேணுமா??”, அவளின் தலை முதல் கால் வரை கிறக்கமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேள்வி கேட்டான் அந்த கள்வன்.
அவன் பார்வை சொன்ன செய்தியே அவளுக்கு சங்கடத்தை உண்டு பண்ணியது..
நேற்றிரவு நடந்த சம்பவங்கள் கண் முன் நினைவிற்கு வர கூச்சம் தாங்காமல் இமை குடைகளை தாழ்த்தினாள் அவள்.
“ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் சரி உள்ள போ”
“ அதெல்லாம் முடியாது நான் கிளம்பியே தீருவேன்”
“ ஹலோ மேடம் நீங்க என்ன லூசா?? நேத்து நைட்டு நான் பேசின எதுவுமே உனக்கு ஞாபகம் இல்லையா..?? என் பேச்சை மீறி நீ நடந்தால் விளைவுகள் என்ன நடக்கும்னு உனக்கு மறந்து போயிடுச்சா??”
என்ன என்பது போல அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“ என்ன இன்னும் ஞாபகத்துக்கு வரலையா??”
அப்படி என்ன சொன்னான் நேற்று இரவு?? அவனுடைய கோபத்தை அப்பா மீது காட்டுவதாக சொன்னான் நான் தான் அதெல்லாம் வேண்டாம் அவருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது எதுவா இருந்தாலும் என்கிட்டே உங்களோட கோபத்தை வெளிப்படுத்துங்கள் என்று சொன்னேன் அதுக்கு பிறகு தான் எனக்கு தண்டனை கிடைத்ததே.. ஆனால் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??!! என்று யோசிக்க தொடங்கியது அவளுடைய மூளை.
“ இன்னமும் புரியலையா?? என்னுடைய கோபத்துக்கு மட்டும் இல்ல என்னுடைய பேச்சை நீ தட்டும் ஒவ்வொரு வேளையிலும் ஆபத்திற்கு உள்ளாகுவது உன்னுடைய அப்பா தான்.. இப்போ என்னுடைய பேச்சை மீறி நீ வேலைக்கு கிளம்பி போனா அதுக்கு பிறகு வரக்கூடிய விளைவுகளை நீ இல்ல உங்க அப்பா தான் சந்திப்பார் இதுக்கு ஓகேனா நீ தாராளமா கிளம்பு”
அகலமாக விரிந்த அவளுடைய விழிகள் அவனை எரிப்பது போல பார்த்துக் கொண்டிருந்தது..!!
” என்ன ஜென்மம் இவன் இப்படி பாடாய் படுத்துகிறானே வேலைக்கு போனால் தானே சம்பாதிக்க முடியும்.. சம்பாதித்தால் தானே இவனுடைய கடனை அடைக்க முடியும்.. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாதையை கண்டுபிடித்தால் அதற்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறானே இந்த படுபாவி.. இப்போ என்ன பண்றது??”, என்று மனதிற்குள் குழம்பிய வண்ணம் அமைதியாக நின்றிருந்தாள்..
“வேற வழியே இல்ல மறுபடியும் உன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்த இடத்திலேயே வச்சுட்டு உன் வேலையை மட்டும் பார்க்க ஆரம்பி வெளியே எங்கேயாவது போகணும்னு நினைச்சா என்கிட்ட அனுமதி கேளு நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன் எனக்கு தெரியாம நீ இந்த வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகவும் கூடாது.. எந்த ஒரு விஷயத்தையும் நீ செய்யவும் கூடாது நல்லா ஞாபகத்தில் வச்சுக்கோ..”,என்று கூறி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றான் அவன்.
அலுவலகம் கிளம்புவதற்காக வேகமாக கீழே இறங்கி வந்த தீரன் அடுப்படியில் வேலையாக இருந்த தன் அன்னையை அழைத்தான்.
“ அம்மா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”
“ சொல்லு..”
எப்பொழுதும் சொல்லுப்பா என்னப்பா என்று பாசமாக தன் மகனை அழைப்பவர் இன்று யாரிடமோ பேசுவது போல சொல்லு என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார் .
அதை அவனும் கவனிக்கத்தான் செய்தான்.
கண்டிப்பாக நேற்று அவளிடம் நான் நடந்து கொண்ட முறை அம்மாவிற்கு தெரிய வந்திருக்கும் அதனால் தான் அம்மாவிடம் இப்படி ஒரு மாற்றம் தென்படுகிறது ஆனால் என்ன செய்வது சில சமயம் என்னுடைய கண்ட்ரோலை மீறி நான் நடந்து கொள்கிறேன் அதற்கு காரணமும் அவள் தானே அவளை பார்த்தாலே என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியல.. அது கோபமாக இருந்தாலும் சரி உரிமையை நிலைநாட்டும் விஷயமாக இருந்தாலும் சரி.. சுய கட்டுப்பாட்டை இழந்து விடுகிறேன் அவள் விஷயத்தில் என்ன செய்வது?? , என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் பதில் எதுவும் கூறாமல் தன் அன்னையை அமைதியாக பார்த்தான்.
“அம்மா அது வந்து.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் மித்ராவை பற்றி தான் பேச போறேன் அதனால கொஞ்சம் கார்டன் பக்கம் போயிடலாமா??”, என்று கேட்டான் தயக்கத்துடன்.
உடனே மறுப்பு எதுவும் சொல்லாமல் சிறிய யோசனையுடன் தன் மகனை பின்தொடர்ந்து தோட்டத்திற்கு சென்றார்.
அங்கிருந்த கல்பெஞ்சின் மீது அமர்ந்து கொண்ட இருவரும் சிறிது நேரம் மௌனம் காத்தனர்.
“ அன்னைக்கு திடீர்னு என்கிட்ட வந்து மித்ரா நன்றி சொன்னா அது எதுக்காக அப்படின்னு தெரியல ஆனா கொஞ்ச நாள் கழிச்சு தான் அதை பத்தி சொன்னா.. அம்மா உங்கள பத்தி என்கிட்ட ஒரு விஷயம் சொன்னாங்க அதை கேட்டுட்டு நானே ஒரு நிமிஷம் உங்களை பற்றி நல்ல விதமா நினைச்சு நன்றி சொன்னேன் அப்படின்னு சொன்னா.. அதான் அப்படி என்ன என்னை பத்தி அவ கிட்ட சொன்னீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?? இதை நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான் தெரிஞ்சுக்கணும்னு எந்தவித கட்டாயமும் இல்லை தான்.. இருந்தாலும் கேக்கணும் போல இருந்தது அவள் என்னை பற்றி எதுவும் கேட்டாளா அப்படி என்ன விஷயம் பேசினீங்க என்னைப் பற்றி நீங்க இரண்டு பேரும் என்று நான் தெரிஞ்சுக்கலாமா??”
ஓஹோ கதை எப்படி போகிறதா?? அப்படி என்றால் அன்று நான் பேசியதை வைத்து தன் கணவரிடம் போய் நன்றி சொன்னாளா நல்ல விஷயம் தான் நடந்திருக்கிறது.. ஆனால் இந்த படுபாவி தன்னுடைய குணத்தால் கெடுத்துக்கிட்டானே.. ரெண்டு பேருக்கும் நடுவில் ஏதோ பிரச்சினை இருக்கு அப்படின்னு மட்டும் தெரியுது ஆனா என்னனு தெரியல அதையெல்லாம் கேட்கவும் முடியாது ஏன்னா இது புருஷன் பொண்டாட்டி சண்டை இன்னைக்கு அடிச்சுப்பாங்க நாளைக்கு சேர்ந்துப்பாங்க அதை எல்லாம் நம்ம கேட்க முடியாது.. என்ன பண்றது??
இப்போ இவனுக்கு இதைப்பற்றிய கவலைதான் வந்திருக்கிறது அது என்ன விஷயம்னு தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறான் நல்லவிதமாக நடந்து கொள்வானா அதுவும் கிடையாது அப்புறம் எதுக்கு??, என்று மனதிற்குள் தன் மகனையும் மருமகளையும் நினைத்து வருத்தப்பட்டார் வசுந்தரா.
“ என்னமா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன் நீங்க பதில் எதுவும் சொல்லாம ஏதோ யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்களே என்ன ஆச்சு??”
” அதுவா அது ஒன்னும் இல்ல.. அது….”, என்று அவர் திணறினார்.
“ என்னாச்சும்மா ஏன் இப்படி டென்ஷனா இருக்கீங்க??”
” டென்ஷன் எனக்கு இல்ல உனக்கு தான்.. இப்போவெல்லாம் தொட்டதுக்கெல்லாம் நீதானே டென்ஷன் ஆகிற நாங்க இல்லையே.. அவள் நன்றி சொன்னதற்கு காரணம் இருக்கிறது .. அவளுக்கு உடம்பு சரியில்லாத போது நான் தான் அவளை பார்த்துக்கொண்டதா தவறா நினைச்சுகிட்டு என்கிட்ட வந்து நன்றி சொன்னா.. அப்போதான் சொன்னேன், உன்னை விடிய விடிய கண் முழிச்சு பார்த்துக்கிட்டது நான் இல்ல உன்னுடைய புருஷன் தான்.. அவனுடைய அக்கறை தான் உன்னை குணப்படுத்தி இருக்குன்னு சொன்னேன் .. இதை கேட்டதும் அவள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் தென்பட்டது தெரியுமா அதை கண்ணெதிரே பார்த்தவள் நான்.. அந்த சந்தோஷத்தோடு வந்து உன்கிட்ட நன்றி சொல்லிருக்கா மனசார.. அதைக்கூட நீ உன்னுடைய கோபத்தால் கெடுத்துகிட்ட.. அதுவும் எனக்கு நல்லாவே தெரியும்..
ஒரே ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லட்டுமா.. உன்னுடைய நல்லதை நினைச்சு தான் நான் இதை சொல்றேன் ..உன்னோட வாழ்க்கைல நான் உனக்கு நல்லது பண்ணிருக்கேனா இல்லையான்னு எனக்கு தெரியல ஆனா நான் உனக்கு பண்ணியிருக்கிற ஒரே ஒரு நல்ல விஷயம் இந்த கல்யாணம் மட்டும் தான்..
ரொம்ப அருமையான பொண்ணுடா அவ அப்பேர்ப்பட்ட பெண்ணை இந்த உலகத்தில் நீ எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டாள்.. ரொம்ப அன்பான அமைதியான பொண்ணு.. யாரையும் வெறுக்க தெரியாதவள்.. ஆனால் கொஞ்ச நாளாக அவள் கண்ணில் வெறுப்புணர்ச்சியை பாக்குறேன்.. அதுக்கு காரணம்… “, என்று சொல்லியவர்.. கூர் விழிகளால் அவனை ஒரு பார்வை பார்த்தார்..!!
– தொடரும்..
