அத்தியாயம்- 25

பாகம் -25

எப்பொழுதும் அவளே பார்த்துக் கொள்வதற்கு இது கொஞ்சம் மாற்றமாகத் தான் இருக்கிறது. ‘கூட்டு குடும்பத்தில் இருந்துமே தனக்கு இதை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லையே ..,என்று தன்னை நொந்து கொள்கிறாள் மித்ரா…

‘ அதற்கு காரணம் தன்னுடைய சுயநலம்தான்.. ஆண் குழந்தை என்ற சுயநலம் தான் ..குழந்தைகளில் ஆண் என்ன பெண் என்ன எல்லாம் ஒன்றுதான் என்று எப்பொழுது தனக்கு புரிய போகிறதோ..அப்படி என்றால் என் மீது தான் எல்லா குற்றமும் தவறுமா ..அவங்க பேசுவதெல்லாம் நான் வேண்டுமென்றே வம்பு செய்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேனே ..,இப்பொழுதுதான் அவள் இதை எல்லாம் யோசிக்கவே ஆரம்பித்து இருக்கிறாள்.. இதுவும் கூட ஒரு நல்ல தொடக்கம்தான்..

நீண்ட நேரம் இந்த அறையில் இருந்து விட்டு தன் அறைக்கு செல்கிறாள் மித்ரா.. அரவிந்த் சொன்னானே தவிர கதவை தாழ் போடவில்லை. அவர்களை அனுப்பியதுமே அவனுடைய வழக்கமான குற்ற உணர்ச்சி ஒளிந்து இடந்த செல்லை தேட விடவில்லை. அதற்கெற்றாற் போல் அவனுக்கு உடம்பு அசதியாக இருக்கவும் படுத்தவன் தான் இண்டு மணி நேரமாகியும் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறான்..

மித்ரா , ‘ஆபீஸ் வொர்க் செய்து கொண்டிருக்கிறாரா :சத்தத்தையே காணோம்.., என்று மெதுவாக கதவை தள்ளி பார்க்கிறாள். தாழ் போடவில்லை என்றதும் தலையை மட்டும் உள்ளே விட்டு மெதுவாக எட்டிப் பார்க்கிறாள்..அறையே இருள் சூழ்ந்து போய் கிடக்கிறது.

அவளுக்கே தனியே வருவதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கூட எப்பொழுதும் இணைந்திருக்கும் அவளுடைய  இதயத்தை தாத்தா அறையிலேயே விட்டு விட்டு வருகிறாள். அவனுக்கு இன்னுமே அந்த அறையில் இருந்து வெளியே வருவதற்கு மனம் இல்லாமல், ” நீ போம்மா நான் இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறேன்..” என்று அனுப்பி விடுகிறான் ..

ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு அனுப்பி விடுவதற்கே மகனை ஊர் பயணம் அனுப்பியதை போல மனம் ஏங்குகிறது மித்ராவுக்கு ..

‘இதை எல்லாம் தான் கடந்து வரவேண்டும் ..,என்று எண்ணம் கொண்டவள், தான் செய்த ஒரு பெரிய தவறினால் தான் இப்படி எல்லாம் என் மனதில் தோன்றுகிறது என்று நினைக்கிறாள்..

நினைத்த உடனே, கடவுளே நான் ஏன் இப்படி எல்லாம் எண்ணுகிறேன்.. அதெல்லாம் நடந்து முடிந்த பழைய கெட்ட கனவு ..திரும்பவும் எனக்கு எதற்காக இப்படி நினைவுக்கு வருகிறதோ.., என்று தலையை தட்டிக் கொள்கிறாள்..

தனக்கு மட்டுமே தெரிந்த தன்னோடு முடிந்து போக போகிற அந்த ரகசியத்தை நினைக்கவே அவளுக்கு உள்ளம் பதறுகிறது.. சிறிது நேரம் அப்படியே ஹாலில் உட்கார்ந்து தன்னை சமன் செய்து கொள்கிறாள் ..

அப்படி என்றால் அரவிந்த் அவளை சந்தேகப்படுவதெல்லாம் உண்மைதானா.. ஆனால் அரவிந்த் தான் ஊரையே அலசி விசாரித்து பார்த்தானே..மித்ரா அப்படிப்பட்ட பெண் இல்லையே.. பின் என்னதான் தவறு செய்தாள்.. அது அவள் மனதை திறந்து வெளியில் சொன்னால் தான் நமக்கும் புரியுமோ..

மனம் கொஞ்சம் சமாதானம் ஆனதும் எழுந்து தன் அறையை நோக்கி வருகிறாள்..கணவன் என்ன செய்கிறான் என்பதற்காக மெதுவே அறையை எட்டி பார்த்ததுமே அவளுக்கு பயம் வந்து விடுகிறது.. ஒரே கும்மிருட்டில் மூழ்கிக் கிடக்கிறது அந்த அறை…

‘எங்கே போனாங்க இரண்டு பேரையும் எதற்கோ இங்கே இருந்து விரட்டி விட்டாங்க .இப்பொழுது ஆளையே காணோம்.., இருட்டில் சுவற்றை தடவிய படியே மின் விளக்கை போட்டதும் அதிர்ந்து போகிறாள்..

அத்தனை இருட்டிலும் அவன் தூங்கிக் கொண்டு இருக்கிறான் ..ஆனால் அவனைப் பார்த்தால் தூங்குபவன் போல தெரியவில்லை ..சுயநினைவே இல்லாமல் கையையும் காலையும் விரிய பரத்தி ஆ என வாயை பிளந்து படுத்து கிடக்கிறான்.. அவனுடைய அந்த உடல் மொழியை பார்த்ததுமே மித்ரா பதறி  அருகில் வந்து நெருங்கி பார்க்கிறாள்..

‘ஏன் என்ன ஆச்சு இப்படி எல்லாம் இவங்க செய்யவே மாட்டாங்களே..உடம்பு சரியில்லாமல் இருக்கவும் தான் கோபமா பேசினார்களோ.. நான் ஒரு அறிவு கெட்டவள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக அவர்களை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறேன் .., அவன் நெற்றியில் கை வைத்து பார்க்கிறாள்..

கையை வேகமாக இழுத்துக் கொள்கிறாள்.. அவன் நெற்றி நெருப்பாய் கொதிக்கிறது .இப்பொழுது தான் அவனுடைய உடல் மொழி புரிகிறது..

‘ ஓ அதனால் தான் பிரக்ஞையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போல. இரண்டு மணி நேரமானாலும் நான்தான் இன்னும் எட்டிப் பார்க்காமல் கிடக்கிறேன். என் குடும்பத்தை இனி நான் தான் சீர் செய்ய வேண்டும். எல்லா தவறும் என் மீது தான்.. நானே தவறு செய்து கொண்டு நானே இவங்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறேன்..,அவளுக்கு ஏனோ அழுகை வருகிறது..

வரவர மித்ராவுக்கு மனம் அதிகமாகத் தான் பேசுகிறது ..அதற்கு பதில் தான் அவளால் சொல்ல முடியவில்லை…

அவள் கையை வைத்ததுமே அரவிந்த் திடுக்கிட்டு கண் விழிக்கிறான் .. சிறு குழந்தையைப் போல காய்ச்சலினால்  ஒழுகும் வாயை துடைத்துக் கொண்டு பேசுகிறான் .

“நான் ரொம்ப நேரமா தூங்கி விட்டேனாடி..  பேசும் போதே அவன் குரல் நடுங்குவது கூட அவனுக்கு தெரியவில்லை..பாவம் அவனும் தான் என்ன செய்வான் ..மனதிற்குள் தேவையில்லாத பிரச்சினைகளைத் திணித்துக் கொண்டு அதை மறப்பதா, இல்லை. அப்படியே மறைப்பதாஎன்று இருப்பவனின் மனம் புழுங்கிப் போய் அதன் தாக்கத்தினால் உடம்பும் சரியில்லாமல் தான் போகிறது ..

“என்ன ஆச்சுங்க உடம்பு சரி இல்லையா.. ஏன் இப்படி அனலா கொதிக்குது.. என்கிட்ட சொன்னாதான் என்ன.. உடம்பு சரியில்லைன்னு என்னை விரட்டி விட்டு இப்படி  தனியே கிடந்து என்னத்தை சாதிக்க போறீங்க..”

வருத்தமாய் பேசுகிறாளே தவிர வேலைகளை பரபரப்பாய் கவனிக்கிறாள்..முதல் வேலையாய் ஈரத் துணியை பிழிந்து நெற்றியில் பதித்து விட்டு சூடாய் பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுக்கிறாள்..

” வேண்டாம் டி எனக்கு என்னமோ குமட்டல் வர மாதிரி இருக்கு.. ” என்று மறுக்கிறான்..

“இல்லைங்க வெறும் வயிற்றில் மாத்திரை போட்டால் சரி வராது.. கொஞ்சம் பாலை குடித்து விட்டு அதன் பிறகு மாத்திரை போடுங்க . “பிடிவாதமாய் பாலை குடிக்க வைத்து  மாத்திரை கொடுக்கவும் அப்படியே அவள் மடியில் படுத்து கிடக்கிறான் ..அவளும் பரிவுடன் தலைமுடியை கோதி விடுகிறாள்.. கொஞ்சம் வியர்த்து தலைமுடி ஈரமானதும் தான் மித்ரா நிம்மதி ஆகிறாள்..

“அப்பாடா ஜூரம் போயிட்டுங்க.. ஏங்க என்ன ஆச்சு. ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு கவலைப்படறீங்கங்க.. அதனால தான் உடம்பு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்கு.. தன்னை பற்றி எத்தனை துல்லியமாய் கணித்து வைத்திருக்கிறாள் என்று ஆச்சரியப் படுகிறான்..

ஆனாலும் அவன் வாய்க்கொழுப்பு சும்மா இருக்க மாட்டேன் என்று தான் சொல்கிறது.. ” என்ன செய்றது டி. நீதான் என்னை கவனிக்கவே மாட்டேன் என்கிறாயே ..இதோ இப்போது கூட என்னமோ அதிசயமாய் அந்த பயலை விட்டு பிரிந்து நான் என்ன செய்கிறேன் இந்த பார்க்க வந்திருக்கிறாய்.. இல்லா விட்டால் நான் ஜூரத்தில் அப்படியே போய் சேர்ந்தாலும் நீ கவலைப்பட்டு இருக்க மாட்டடி .. “

வழக்கமான மித்ரா என்றால் வம்பு செய்து கோபித்துக் கொண்டு எழுந்து சென்றிருப்பாள். இப்பொழுது அவளுடைய குற்ற உணர்ச்சியே அவளை துன்புறுத்துவதால் அரவிந்த் சொன்னதைக் கேட்டதும் அழுகைதான் வருகிறது ..

அழுத படியே, ” ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க ..நானும் என் தவறை இன்றுதான் புரிந்து கொண்டேன்.., என்று நடந்த அனைத்தையும் அப்படியே கூறுகிறாள் ..

“இதைத்தான் நான் ரொம்ப காலமாய் சொல்கிறேன்.. ஆனா நீ எங்க  கேட்கிற.. ” சொல்லி விட்டு சிரிக்கிறான்..இருவரும் இப்படி மனம் விட்டு பேசியே வெகு காலங்கள் ஆகின்றன ..

” ஆமா நீங்க சொல்கிற விதமாய் சொன்னால் நான் கேட்டு இருக்க மாட்டேனா.. கோபமாய் பேசினால்  எனக்கு பிடிக்காது என்று உங்களுக்கு தெரியும். ஆனாலும் நீங்கள் கோபமாய் மட்டும் தான் என்னிடம் பேசுகிறீர்கள்.. நான் பிறகு எப்படி கேட்பேன் .எங்களை ரொம்ப விட்டு வெளியே போக சொன்னது கூட இப்போதுமே என்னமோ ஒரு நல்ல நேரம் போல..  அதனால்தான் எனக்கே ஒரு மாற்றமாகத் தான் இருக்கிறது.. இத்தனை மணி நேரம் என் மகனை விட்டு நான் பிரிந்ததே இல்லைங்க.. இனிமேல் உங்களுக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் நான் நேரம் ஒதுக்கு வேங்க..”

” இப்படி செய்தால் நான் ஏன்டி உன்னிடம் வம்பு செய்து இருக்கப் போகிறேன்.இந்நேரம் நமக்கு இன்னொரு குழந்தையும் 
வந்திருக்கும் .. ” என்றதும் மித்ரா ஏனோ கோபம் கொள்ளாமல் வெட்கப்படுகிறாள்..

அவளும் அந்த தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறாள் .இத்தனை காலமாய் அடுத்த குழந்தை வந்தால் மகனை கவனிக்காமல் ஒதுக்கி விடுவோம் என்ற பயத்தில் அரவிந்துக்கு தெரியாமல் கர்ப்பத் தடைக்கான  மாத்திரைகளை உபயோகித்துக் கொண்டிருந்தாள் .இந்த மாதம் தான்,அதுவும் தன் மாமியாரிடம் ஒற்றைப் பிள்ளை உரிசோறைப் பற்றி பேசிய பிறகுதான் கொஞ்சம் தன்னை தர்சோதனை செய்து பார்க்கிறாள்..அவளுக்குமே எதிர்கால பயம் வந்து விடுகிறது .இவனை மட்டுமே நம்பி இருந்தால் சரி வராது என்று.. டாக்டர் நான்கு வருடங்களுக்கு மேல் போடக்கூடாது என்று எச்சரித்ததால் அதை நிறுத்தி இருந்தாள்.. இந்த முறை நாட்கள் தள்ளுகிறதா என்று பார்ப்போம் என்றுதான் ஆசைப்படுகிறாள்.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. அடுத்ததாய் ஒரு குழந்தை வந்தால் இவர்களின் வாழ்க்கை  சூழலும் அழகாய் மாறுமோ …

என்ன தான் முதல் நாள் காய்ச்சல் அடித்தாலும் மனைவி தன்னிடம் பிரியமாக இருக்கவும் மனம் தெளிந்து முகம் மலர்ந்து ஆபீசுக்கு போகிறான்.. அவனைப் பார்த்ததுமே நவீன் நொந்து கொள்கிறான்..

” என்னடா திரும்பவும் பிசாசு முருங்கை மரத்தில் எறி விட்டதா..முகம் மலர்ந்த தாமரையாக இருக்கிறது .. “

“ஏன்டா நான் சந்தோஷமா இருந்தா உனக்கு பிடிக்காதாடா..என்னை கிளப்பி விடுவதற்கு என்றே இருக்கிறாயா..”

“நீ இப்படிதான்டா சொல்வ ..இன்னும் இரண்டு நாள் சென்றதும் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வருவாய் பாரப்பு ..அப்போ உன்னை செருப்பாலே அடிக்கிறேன் .. “

” நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுதுடா. ஆனாலும் நான் சந்தோஷமாக இருக்கிறது பார்க்கவே எனக்கே நன்றாக இருக்கிறது ..அதனால என்ன இப்படியே விட்டுடு.. “

“எனக்கும் தான் நன்றாக இருக்கு. இரண்டு நாள் கழித்து வருவாய் பாரு. அப்ப பார்க்க எனக்கு பற்றிக் கொண்டு
வரும்..அப்பொழுது உன்னை என்ன செய்வது.. “

” அதை நினைத்தா தான்டா எனக்கும் பயமா இருக்கு .. “

இப்படி பேசும் இவனை என்னதான் செய்வது என்று தலையில் கை வைத்துக் கொள்கிறான் நவீன்..

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page