அத்தியாயம் 25
தீரனின் மனசாட்சி கேட்ட கேள்விகளாகட்டும் அல்லது அவனுடைய தாய் கேட்ட கேள்விகளாகட்டும்.. என்னதான் அவனுக்கு எல்லாம் ஞாபகத்திற்கு வந்தாலும், மித்ராவை அத்தனை அருகில் அந்த நிலா வெளிச்சத்தில் பார்த்ததும் அவன் தடுமாறி போனது என்னவோ நிஜம்தான்..!!
அனைத்து கட்டுப்பாடுகளையும் காட்டாற்று வெள்ளம் அடித்து செல்வது போல தகர்த்தெறிந்து விட்டு சென்றுவிட அவன் இப்பொழுது அவள் அருகே நெருங்கி சென்று அணைத்துக் கொண்டான்.
ஏற்கனவே குடிபோதையில் இருந்த காரணத்தினால் தான் என்ன செய்கிறோம் என்று அவனுக்கு புரியவில்லை..
அதுவும் அளவுக்கு அதிகமாக இன்று குடித்திருந்த காரணத்தினால் அவன் நிதானத்திலேயே இல்லை..
அவள் மீதிருந்த ஆசை, ஆழ்மனதில் புதைந்திருந்த அடக்க முடியாத இச்சைகள் என எல்லாம் கிளம்பி ஒரே நேரத்தில் வந்துவிட.. அவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை..
நெருக்கமாக அவளுடன் சில நிமிடங்களை கழித்தவன்.. பிறகு அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்து சிறிது நேரம் கண் மூடி படுத்திருந்தான்..
அதுவும் இரண்டு நிமிடம் தான்..
பிறகு அவளுடைய இதழ்களை நோக்கி குனிந்தவன்.. பூவுக்கு வலிக்காமல் தேன் எடுக்கும் வண்டு போல அவள் இதழ்களில் பழரசத்தை அருந்தினான்..!!
நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு தன் கணவனுடைய அணைப்பும் இதழ் முத்தமும் அவளை இம்சை செய்தது..
மெதுவாக அவனிடமிருந்து விடுபட முயன்றாள்..
ஆரம்பித்துவிட்டானா இவனுடைய லீலைகளை..??
இன்றும் எனக்கு உறக்கம் கிடையாது ஒரு நொடி கூட நம்மை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்கிறானே என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவள் அவனை பிடித்து தள்ள முயன்றாள்..
ஆனால் எதற்கும் அவன் இசைந்து கொடுக்கவில்லை மிகவும் வலிமையான அவனுடைய கரங்கள் அவளை வளைத்திருந்தது இறுக்கமாக..
கண்களை மூடிக்கொண்டு அசுர வேகத்தில் அவளின் கன்னத்திலும் கழுத்து வளைவிலும் இடையிலும் மாறி மாறி முத்தங்களை பதித்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்..
நேருக்கு நேராக அவளுடைய கண்களை ஒரே ஒரு நிமிடம் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
திடீரென்று அவன் விலகி வேகமாக தள்ளி அமரவும் அவளுக்கும் சற்று பயமாகவே இருந்தது.. அடுத்து என்ன செய்யப் போகிறானோ தெரியவில்லையே என்கிற அச்சம் ஏற்பட்டது..
ஆனால் அவன் முகத்தில் கோபமோ அல்லது ஏமாற்றமோ அல்லது குழப்பமோ எதுவும் இம்முறை தென்படவில்லை..
அதற்கு மாறாக, வலி நிரம்பிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது அவனுக்கு..!!
தாரைதாரையாக கண்ணீர் கொட்டவில்லை என்றாலும் இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கண்களிலிருந்து வழிந்ததை கண்டதும் அவளுக்கும் அதிர்ச்சியாகிவிட்டது..!!
எதற்காக இப்போது அழுகிறான் ??அழ வேண்டியது நான் தானே?? தினமும் இவன் தானே என்னை இம்சை பண்ணுகிறான்?? அழவேண்டிய ஆள் நான்.. ஆனால் இவன் அழுகிறானே??
இப்போது என்ன நடந்து விட்டது என்று அழுகிறான் நான் இவனை திட்டவில்லை, அடிக்கவில்லை.. அவனை கீழே பிடித்து தள்ள வேண்டும் என்று நினைத்தேன் தான் ஆனால் தள்ள முடியவில்லை.. அப்படி பார்த்தால் இவன் எதற்காக அழ வேண்டும் நான் எதுவும் பண்ணலையே?? என்று குழம்பி போனாள் மித்ரா.
இதுவரை அவன் முகத்தில் அவள் காணாத ஒரு உணர்வு அது..!!
அன்றும் இதே போல தான்.. அவள் கண்ணீர் வடிக்கவும் குற்ற உணர்ச்சியோடு விலகி சென்றான்..
இன்றும் அதே போல் விலகி சென்று விட்டான் ஆனால் அவனுடைய முகத்தில் குற்ற உணர்ச்சி இல்லை கோபம் இல்லை எதுவும் இல்லை ஆனால் வலி வேதனை மட்டும் நிரம்பி இருக்கிறது..
இதற்கு காரணம் என்னவோ??
ஒருவேளை தொழில் விஷயத்தில் ஏதாவது பிரச்சனையா??
ஆனால் அதற்கெல்லாம் கலங்கும் ஆள் இவன் இல்லையே.. எதிராளிகளை கலங்கடித்தது துவம்சம் செய்பவனாயிற்றே இவன்..!!
அப்படிப்பட்ட இரும்பு மனிதனை எது உருக்கியது??, என்று ஆச்சரியப்பட்டாள் பெண்ணவள்..!!
” என்னால முடியலடி.. இந்த அவஸ்தைய என்னால தாங்கிக்கவே முடியல இத்தனை வருஷத்தில் ஒரு முறை கூட எனக்கு இந்த மாதிரி நடந்ததே இல்லை.. மனசெல்லாம் வலிக்குதுடி.. எந்த பொண்ணு கிட்டயும் நான் மனசை பறி கொடுத்ததே கிடையாது ஏன் உன்னை பார்த்த பிறகு கூட என் மனம் உடனே உன்கிட்ட பறிபோய்டல.. என்னவோ ஒருவித ஈர்ப்பு உன்கிட்ட இருந்தது என்னவோ நிஜம்தான் மற்றபடி கண்டதும் காதலில் எனக்கு நம்பிக்கை கிடையாது.. உன்கூட பழகிய பிறகு, உன்னோடு நாட்களையும் நிமிடங்களையும் செலவழித்த பிறகு நான் உறுதியாக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுகிறேன்..
எனக்கு உன் மேல காதல் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது.. ஆனால் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்.. ❤️❤️
உன்னுடைய அனைத்து அன்பும் காதலும் எனக்கு வேணும்டி அளவில்லாமல் வேணும்.. வாழ்க்கை முழுக்க வேணும் கிடைச்சுக்கிட்டே இருக்கணும் உன்கிட்ட இருந்து.. ஆனால் நீ என்னை மனசார வெறுக்கிறியே.. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல.. அதைக்கூட சமாளித்து விடலாம் ஆனால் என்னை ஒதுக்கி வைத்து அந்த அருண் கிட்ட நீ பேசுவதை பார்க்கும் பொழுது உடம்பெல்லாம் பத்திகிட்டு எரியுது.. சத்தியமா என்னால முடியலடி என்னால் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது..
நீ யார்கிட்டயும் என்னை தவிர அதிகமா பேச கூடாதுன்னு நினைக்கிறேன்.. உன்னோட அண்ணன், தம்பி ,அக்கா ,தங்கை, அப்பா ஏன் உன்னுடைய நண்பர்கள் யார் கிட்டயுமே நீ அளவுக்கதிகமாக அன்போ அக்கறையோ பாசமோ காட்டினால் எனக்கு பிடிக்காது.. அது ஏன்னு எனக்கு தெரியல உன்னுடைய மொத்த அன்பும் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்..
இப்ப கூட உன்னை அடையனும்னு ஆசையோட பக்கத்துல வந்தேன் ஆனா என்னால முடியலடி உன்னுடைய விருப்பமில்லாமல் உன்னை நெருங்க கூடாதுன்னு இப்ப என் மனசுக்குள்ள ஏதோ ஒரு விஷயம் உறுதியா சொல்லிக்கிட்டே இருக்கு.. அதான்டி என்னால உன்னை இப்போ நெருங்க முடியல.. இந்த அவஸ்தை என்னை கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது..
இவள் என்ன அப்பேர்ப்பட்ட பேரழகியா?? இவ இல்லன்னா 100 பேரு அப்படின்னு உன்னை தூக்கி எறிஞ்சிட்டு என்னால போக முடியல.. உன்னை அவ்ளோ அசால்ட்டா கடந்து போக முடியலடி..
உனக்கு முன்னாடி நூறு பேர் என் வாழ்க்கையில் இருந்திருக்கலாம்.. ஆனால் இனி, எப்போதும்..என் வாழ்க்கையில் என்னைக்குமே என் மனசில் நிலைத்து நிற்கும் ஒரே பெண் நீ மட்டுமே .. ❤️❤️
இதை நானே நினைத்தாலும் என்னால மாத்திக்க முடியாது.. கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ பாய்சன் மாதிரி என்னை கொல்லுற மித்ரா.. உன்னுடைய அன்பு கிடைக்க என்ன பண்ணனும்னு சத்தியமா எனக்கு தெரியலடி”, என்று மனதிற்குள் புலம்பி கொண்டவன் அவளிடம் எதையும் பேசாமல் தன் மனதை வெளிப்படுத்தாமல் அமைதியாக அங்கிருந்து எழுந்து சென்றான்.
அவன் கண்களில் மின்னிய கண்ணீர் துளிகள் பொய் கிடையாது, அனைத்தும் நிஜம்தான்..
அவன் முகத்தில் தென்பட்ட சோகமும் நிஜம்தான்..
அத்தனை வேகமாக தன்னை ஆட்கொண்டவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை ஒரு நொடியில் தன்னை விட்டு பிரிந்து விட்டான்.. அதுவும் இத்தனை சோகமாக..!!
அதுதான் ஏன் என்று புரியவில்லை அவளுக்கு..!!
அவளிடமிருந்து விலகிச் சென்றவன் நேராக பால்கனிக்கு சென்று நின்று விட்டான்..
அவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் பால்கனிக்கு சென்றதும் இவளும் பின்னாடியே சென்றாள்.
என்னாச்சு இவனுக்கு?? ஏன் இப்படி இருக்கான் முகமே சரியில்லையே ஏதாவது பிரச்சனையா இல்ல உடம்பு எதுவும் சரியில்லையா?? எப்பவும் சண்டை போட்டுட்டு என்னை அதிகாரம் பண்ணுவானே.. ஆனா இன்னைக்கு எதுவுமே இல்லை..
அந்த முகத்தில் திமிர் ஆணவம் எதுவுமே இல்லையே சோகம் மட்டுமே இருக்கிறதே என்னவா இருக்கும்?? என்று அவனைப் பற்றி யோசித்து யோசித்து குழம்பியும் தவித்தும் போனாள்.
என்னதான் அவளுக்கு அவன் இம்சைகள் பல கொடுத்திருந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவனுடைய நினைவுகளும் அவனுடைய நடவடிக்கைகளும் அவளுடைய ஆழ்மனதில் பதிந்து போய்விட்டது போல ..
அதனால் தானோ என்னவோ.. அவளையும் அறியாமல் அவனை கொஞ்சம் கொஞ்சமாக நேசிக்க தொடங்கியிருந்தது அவளின் மனம் ..!!
லேசாக அவன் முகம் வாடினாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
என்ன காரணம் என்று தெரிந்து கொண்டு அவனுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று நினைத்தாள்..
அடி மீது அடிவைத்து அவனை நெருங்கி வந்தவள்..
” என்னாச்சு?? இங்க ஏன் வந்து நின்னுட்டிருக்கீங்க?? உடம்பு எதுவும் சரியில்லையா?? இல்ல எதுவும் பிரச்சனையா?? “, காற்றில் வரும் கீதமாய் அவளுடைய குரல் அவன் காதருகில் ஒலிக்க..
மெதுவாக அவளை திரும்பிப் பார்த்தான்..
நள்ளிரவில் நிலவின் ஒளியில் அவள் முகம் பிரகாசிக்க.. அவளின் விழிகள் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது..
என்னாயிற்று ஏதாவது பிரச்சனையா என்று கேட்கும் அவளுடைய இதழ்களையும் , கவலையோடு அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவளுடைய விழிகளையும் கண்ணிமைக்காமல் பார்த்தான்..
தனக்காக அவள் வருந்துகிறாளா?? தன்னை நினைத்து அவள் கவலைப்படுகிறாளா ?? என்று நினைத்து சந்தோஷப்பட்டது அவனுடைய உள்மனம்..
முதல்முறையாக தன்னை பற்றி அவள் யோசிக்கிறாளே என்கிற குதூகலம் அவனுக்கு அளவுக்கதிகமாக உண்டானது..
அவன் பதில் எதுவும் பேசாமல் இருக்கவும் உடனே அவனை நெருங்கி வந்தவள்.. அவனின் நெற்றியில் கை வைத்து தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் அடிக்கிறதா என்று..
உடனே அவளின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டான் அப்படியே.. தன்னை விட்டு விலகாமல் இருப்பதற்காக❤️❤️
இந்த நொடி , இந்த நிமிஷம் இப்படியே உறைந்து போய் விடாதா என்று அவனுடைய ஆழ்மனம் ஏங்கியது..!!
எத்தனை கொடுமை பண்ணியும் வெளியில் என்னை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் என்னை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறாளே.. அவள் நினைத்திருந்தால் டாக்டரிடம் என்னை பற்றி புகார் சொல்லிருக்கலாம் இவ்வளவு ஏன் அம்மாவிடம் என்னை பற்றி புகார் சொல்லி தினமும் வீட்டில் பிரச்சனை செய்திருக்கலாம் ஆனால் யாரிடமும் அவள் என்னை பற்றி சொல்லவில்லை.. இங்கு நடக்கும் விஷயங்களை அவராகவே பார்த்து புரிந்து கொண்டு அம்மா என்று என்னிடம் கேள்வி கேட்டார்.. மற்றபடி அவள் என்னை பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லையே..
ஏன்??!!
இத்தனை நடந்த பிறகும் என் முகம் லேசாக சுணங்கி விட்டது என்று.. இதோ, என் பின்னாடியே ஓடிவந்து எதுவும் பிரச்சனையா, உடம்பு சரியில்லையா என்று கேட்கிறாளே?? இவளுக்கு உண்மையிலேயே நல்ல குணம் தான் இல்லையா??
நான்தான் இவள் குணத்திற்கு முன்பாக தோற்றுப் போய் நிற்கிறேன்..
அடிக்கும் அடிக்கு தகுந்தாற்போல் எதிராளி மீண்டும் மீண்டும் அடித்தால் சண்டை வலுப்பெறும் சண்டை போட எண்ணம் வரும்..
ஆனால் இவள் என்னை ஒருமுறை கூட திருப்பி அடித்ததில்லை..
மாறாக என் மீது அக்கறை காட்டுகிறாளோ இல்லையோ பிழைத்துப் போகட்டும் என்பது போல ஒதுங்கி செல்கிறாள் பல இடங்களில் என்னை விட்டுக் கொடுக்காமல் என் கௌரவத்தை காப்பாற்றுகிறாள்.. இப்பொழுது கூட அக்கறையாக என் பின்னாடியே வந்து என்ன என்று கேட்கிறாள், சற்று முன்பு நான் கொடுத்த தொந்தரவுகளை கூட மறந்து..!!
என் மீது அக்கறையா அல்லது கணவன் என்கிற பயமா பக்தியா பாசமா?? ஒன்றும் புரியவில்லை..
நிச்சயமாக நான் செய்த கொடுமைகளுக்கு அவளுக்கு என் மீது பாசம் கருணை வர வாய்ப்பில்லை தான்..
இதெல்லாம் இல்லை என்றால் கூட பரவாயில்லை..
ஆனால்..
அவள் என்னை விரும்பினால் எப்படி இருக்கும் ?? அந்த உணர்வு எப்படி இருக்கும்?? அதை என்னால் உணர முடியுமா ?? உணரும் வாய்ப்பு கிடைக்குமா, இந்த ஜென்மத்தில்??
முதலில், அவள் என்னை விரும்புவாளா?? என்று அவன் மனம் சிறு பிள்ளையைப் போல ஏங்கியது அவளின் அன்பிற்காக..!!
முதல்முறையாக கண்களில் கண்ணீர் தேங்க ஏக்கத்தோடு அவளை ஏறிட்டுப் பார்த்தான் அந்த ஆறடி அரக்கன்..!!
– தொடரும்..
