அத்தியாயம்- 27

பாகம் 27

நவீனுக்கு அவனை பார்க்க வே பாவமாக இருக்கிறது.. அவன் அப்படி பதட்டமாக இருக்கிறான்..

“அரவிந்த் எதுவும் இருக்காது ..அப்படியே இருந்தாலும் நீதான் மன்னித்து ஏற்றுக் கொள்வதாக சொல்லி இருக்கிறாயே பின்ன என்னடா .. “

“இல்லடா நவீன் நான் உன்னிடம் சுலபமாக சொல்லி விட்டேனே தவிர என்னால் அத்தனை சுலபமாய் அவளை ஏற்றுக் கொள்ள முடியுமோ என்ன என்று தெரியவில்லை .. “

“அப்படி என்றால் அது மாதிரி சிந்திக்காதே .எதுவுமே இருக்காது என்று நினைத்துக் கொள்..பார் உனக்கு எப்படி படபடவென வியர்த்துக் கொட்டுகிறது என்று.. இவ்வளவு பதட்டமாக இருந்தால் உனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விடும்டா .எனக்கு உன்னை பார்க்கவே பயமாக இருக்கிறது.. தயவு செய்து கொஞ்சம் இலகுவாக இருடா..”

“நான் ஒரு நல்ல யோசனை சொல்கிறேன் கேட்கிறாயா..” என்றதும் அவன் நிமிர்ந்து நவீனின் முகத்தை பார்க்கிறான்..

” பேசாமல் எல்லா செல்களையும் கொண்டு போய் சாக்கடையில் விட்டு எறிந்து விட்டு வரவா .. “என்று கையில் எடுக்கிறான்..

” இல்லடா எனக்கு இந்த வயதிலேயே இப்படி ஒரு சந்தேகம் புத்தி இருக்கிறது. இன்னும் வயதாக வயதாக இன்னும் அதிகமாக அவளை தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விடுவேன்.. அவன் என்னுடைய மகன் இல்லை என்று எனக்கு ஒட்டாமல் போய் விடும் ..என் சந்தேகத்தை எப்படியாவது நான் தீர்த்தே ஆக வேண்டும் ..அதற்கு இது ஒன்று தான்டா வழி .. “பேசிக் கொண்டிருக்கும் போது அவனுக்கு போன் வருகிறது..கடவுளே அவனுக்கு நேரில் காட்சி அளித்ததை போல அப்படியே மனம் இளகி நெகிழ்ந்து போகிறான்..

நவீன் அவனுடைய பரவச உணர்வுகளை கண்டு பயந்து தான் போகிறான்.. ‘இவன் என்ன நொடிக்கு ஒரு முக எக்ஸ்பிரஷனை மாற்றிக் கொள்கிறான்.. என்னதான் ஆயிற்று இவனுக்கு.. ,என்று.

” என்னடா யார் போன் செய்கிறா.. உன் முகமே இவ்வளவு பிரைட்டா இருக்கு.. “என்று எட்டிப் பார்க்கிறான்.

வேறு யார் அவன் அருமை சகோதரன் ஆதித்யா அண்ணா தான்.. இதை ஒரு நல்ல சகுனமாகவே எடுத்துக் கொள்கிறான் அரவிந்த் .. நீண்ட நேரம் அவனிடம் ஆசையாக பேசி முடித்து விட்டு நிம்மதியாக பேசுகிறான்.

“நவீன் எனக்கு இப்பொழுது மனம் நல்ல தெளிவாக இருக்கிறது.. அதற்கேற்ற போல் இந்த மொபைலிலும் நான் தவறாக நினைக்கும் படியாக எதுவும் இருக்காது என்று நம்பிக்கை வைக்கிறேன்..
உடனே நம்முடைய வேலைகளை தொடங்கி விடுவோம் வா.. “என்று செல்லை எடுக்கிறான் .

அவனுக்கு சந்தேகம் எல்லாம் என்னவென்றால் புவனா சாவதற்கு முன்பு .”அதாவது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பொழுதிற்க்கும் போன் பேசுவாள்..நான் ஒரு முறை எரிச்சலாகி சண்டை போட்டேன்..நானும் கோபத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமான வார்த்தைகளை விட்டு விட்டேன் ..அதனால் கோபத்தில் போனை தூக்கி எறிந்து விட்டாள்.. எனக்கு அப்பொழுது  இரண்டு பேரும் வேறு ஏதாவது பேசி இருப்பாங்களா என்று தான் ஒரே சந்தேகம்.. அதுவும் இல்லாமல் எனக்கு அந்த புவனாவை கொஞ்சம் கூட பிடிக்காது.. “

 நவீனுக்கு இப்பொழுது தான் அந்த டவுட்டே வருகிறது ..சரிடா நீ சொல்வதைப் பார்த்தால் தங்கச்சி அதிகமா போன் தான் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்..சிம்மில்லாத செல்லில் என்னடா செய்ய முடியும் ..போன் நம்பரையும் பார்க்க முடியாது..ஒன்னும் செய்ய முடியாது.. இது சும்மா பொம்மை செல்லு தூக்கி எறி. “

“இருடா நவீன் எனக்கு ஒரு யோசனை வருகிறது. இதை நான் முயற்சித்து பார்க்கிறேன். “என்றவன் உடனே அந்த காரியத்தில் இறங்குகிறான்..

வாட்ஸாப்பை இன்ஸ்டால் செய்கிறான்..பழைய பேக்கப்பை ரீஸ்டோர் செய்கிறான் ..இப்பொழுது சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே வருகிறது.. முதல் எடுத்ததுமே புவனாவும் அவளும் பேசிக் கொள்வதை தான் எடுத்து பார்க்கிறான் .. ஏனென்றால் அவள் தானே அவன் சந்தேகம் கொள்ளும் இடத்தில் முதலில் இருக்கிறாள் ..

அதில் இருவருமே சாதாரணமாகத்தான் பேசிக் கொள்கிறார்கள்.. சண்டை நடந்த அதாவது இந்த செல் உடைந்ததற்கு முதல் நாள் உள்ள மெசேஜ்களை பார்க்கிறான் ..அதிலுமே சாதாரணமான பேச்சு வார்த்தைகளாககத் தான் இருக்கிறது ..

“என்னடா நான் இந்த செல்லை தான் பெருசா நம்பிக்கிட்டு இருந்தேன்.. இதில் எதுவுமே இல்லை.. “

அரவிந்த் வருத்தப் படுவதை பார்த்ததுமே நவீனுக்கு எரிச்சலாகிறது..

“டேய் நீ வேற எதையோ எதிர்பார்த்துகிட்டு தான்டா இப்படி செய்ற.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான்.. நீதான்டா கெட்டவன். மிச்சம் இருக்கிற எல்லா செல்லுமே இதே மாதிரி தான் இருக்கும்.  முட்டாள் உன்னுடைய சந்தேக புத்தியை தூக்கி ஓடுகின்ற உடைப்பில் விட்டெறி.. “

” இல்லடா  இரு அடுத்த செல்லையும் பார்த்து விடலாம் .. ” முதல் இரண்டு செல்லுமே சாதாரண செய்திகளும் ஹலோ குட் மார்னிங் ஹவ் ஆர் யூ என்றே  இருக்கிறது …அதிலும் முக்கியமாய் மித்ரா மகனின் கவனத்தில் இருப்பதாலேயே அவள் அம்மா வீட்டில் தங்கைகளிடம் கூட அதிகமாய் பேசவில்லை.. பேசும் நேரம் எல்லாம் போனில் தான்.. இப்பொழுது ஃபோன் பேசுவதே என்னால் கண்டுபிடிக்க முடியாது.. என்ன செய்வது டா நவீன் .. ” என்கிறான்..

“இந்த வேலையை செய்ய வேண்டும் என்று இறங்கி ஆயிட்டு ..அதனால் முழுக்க இதை செய்துதான் ஆக வேண்டும்..இன்னும் நான்கு செல்கள் தானே பாக்கி இருக்கிறது .அதை  இதே போல மதியம் இந்த அறைக்கு வந்து பார்த்துக் கொள்வோம்.. நம்ம எல்லா மொபைலையும் பார்த்து முடிக்கும் வரை இந்த அறையை காலி செய்ய வேண்டாம்.. ஹோட்டலில் சொல்லி விட்டு போவோம்.. ” என்று கிளம்புகிறார்கள்..

அரவிந்துக்கு மிச்ச செல்கள் இன்னும் இருக்கிறது என்று பதட்டமாகவும் இருக்கிறது .. அதே சமயம் ஆத்த இரண்டு செல்களிலும் அவள் மீது எந்த தவறும் இல்லை என மனதிற்கு சந்தோஷமாகவும் இருக்கிறது.

தான் சந்தேகப்பட்ட அந்த செல்லிலேயே எந்த விஷயங்களும் இல்லை ..ஆனால் புவனாவும் அவளும் போன் பேசினால் குழந்தையை பற்றி தான் பேசுவார்கள் என யோசிக்கிறான்..

‘இருக்காதா பின்னே ,தன்னுடைய தோழி., அதுவும்  தான் பிரசவம் பார்த்த குழந்தை அவன்  அதனால் புவனை அதிக உரிமை எடுத்துப் பேசிக் கொள்வாள் போல.. அந்த உரிமை தான் எனக்கு பிடிக்காமல் போயிருந்தது ..சரி ஆனது ஆகட்டும் ..இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. இன்னும் நான்கு செல்கள் பார்க்க வேண்டும் ..,என்னை மனதை தேற்றிக் கொள்கிறான்..அவன் கணக்கில் ஒரு செல்லை விட்டு விட்டது அவனுக்கு தெரியவில்லை..

செல் ரிப்பேர் பார்க்கும் கடைக்காரர் சரி செய்த பிறகு அவனிடம் நைச்சியமாக பேச்சுக் கொடுக்கிறார்.. “சார் இந்த செல்லை நீங்க வீட்டுக்கு உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளப் போகிறீர்களா..”

“இல்லைங்க சார் எங்க வீட்டுல ஏகப்பட்டது கிடக்கு.. இதை வேஸ்டா தான் போகும் ..திரும்ப கபோர்ட் அடி அடுக்கில் கொண்டு போய் தூக்கி எறிய வேண்டியதுதான்.. “

“உங்களுக்கு வேண்டாம் என்றால் பழைய விலைக்கு நாங்க மொபைல்கள் எடுத்துக் கொள்கிறோம்..  இது ரொம்ப ரிப்பேர் ஆகல .. நாங்க எப்பொழுதும் கொடுக்கும் செல்லை விட கொஞ்சம் கூடுதல் தொகை தருகிறோம்.. என்னிடமே விற்று விடுகிறீர்களா.. வேற எந்த கடைக்கும் போகாதீங்க .. “என்று சொல்லியே தான் ரிப்பேர் செய்து தருகிறார் ..அதனால் இரண்டு செல்களையும் திரும்ப வீட்டிற்கு கொண்டு போய் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும் ..மித்ரா பார்த்தால் அதற்கு வேறு ஏதாவது கேள்விகள் கேட்பாள்.. பிரச்சனை தான் ஆகும்  நின்று பயந்தவன் கடைக்காரரிடம் போய் கொடுத்து பணமும் வாங்கிக் கொள்கிறான்.. அவரிடம் முதலில் பணம் வேண்டாம் மொபைலை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதுமே அவர் சந்தேகமாய் பார்க்கிறார் .. இதற்கு மேல் எதற்கு கேள்வி கேட்க வேண்டும் என்று அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறான்..

‘எப்பொழுதுடா மறுநாள் ஆகும். எப்பொழுதடா மதியம் ஆகும். எப்பொழுதடா அறைக்கு போகலாம்.., என்று காத்துக் கிடக்கிறான் அரவிந்த்..

அதற்கு மேல் நவீன் , ‘இன்றைக்கு பொழுது விடியவே கூடாது.. இப்படியே இருக்கக் கூடாதா ..,என்று வேண்டிக் கொள்கிறான் ..

அந்த இரண்டு மொபைலிலும் எதுவும் இல்லை .. மிச்சம் இருக்கும் நான்கு செல்லிலும் ஏதாவது இருந்தால் இவன் கண்டிப்பாக அந்த பெண்ணை வீட்டை விட்டே விரட்டி விடுவான் ..அதற்கு காரணம் நானாகத்தான் இருக்க போகிறேன் ..,என்று குற்ற உணர்ச்சியாகிறது நவீனுக்கு..

நவீன் வேண்டிக் கொண்டது கடவுளின் காதில் விழுந்ததோ என்னவோ.. அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் உயிர் அவர்களிடமே இல்லை.இருவருமே பயத்துடனே அந்த மொபைல்களை ஆராய்ச்சி செய்கிறார்கள்..நான்கையும் ஆராய்ச்சி செய்து முடித்ததும் தான் நிம்மதியாகிறது..  அந்த நான்கு செல்களிலும் வழக்கமான பேச்சுகள் மட்டுமே இருக்கவும் இருவரும் நிம்மதியாகிறார்கள்..

எல்லா செல்லையும் அவன் கையில் கொடுத்து இந்த செல்லை எல்லாம் இனி நீ வீட்டில் வைத்துக் கொள்ளாதே..எங்காவது கொண்டு போய் தூர எறி இல்லா விட்டால் பாதி விலைக்கு விற்றுத் தொலை.. எதுவுமே இல்லை ..எதுவும் இல்லாத ஒரு விஷயத்திற்கு நீ ஆறு வருடங்களை வீணடித்து வைத்திருக்கிறாயேடா..”

” இல்லடா நவீன் ஐந்து வருடங்கள் தான்..”

” என்னடா சொல்ற. “

” என் பையன் பிறந்து அவனுக்கு ஐந்து வயது தான் ஆகிறது ..அப்படி என்றால் ஐந்து வருடங்கள் தானே. “

” இல்லை டா பிள்ளையை வயிற்றில் பத்து மாதங்கள் சுமக்க மாட்டாங்களா.. அதனால ஆறு வருடங்கள் தான் . “

இந்த கணக்கு இடிக்கிறது அரவிந்துக்கு.. “அப்படி என்றால் அவள் குழந்தை பெற்ற பிறகு தான் நான் அவளிடம் பிரச்சினை செய்து கொண்டு இருந்திருக்கிறேன் போலடா.. அந்த ஒரு வருட காலம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் தெரியுமா..”

” போடா பைத்தியக்காரா .. நிறைய பேர் பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காங்க.. நீ என்னவென்றால் குழந்தை பிறந்ததிலிருந்து பிரச்சனை செய்து இருந்திருக்கிறாய் .. நீ சொன்னது மாதிரி அந்த ஐந்து வருடங்களை திரும்பவும் வாங்க முடியுமா ..போன வாழ்க்கை போனது தானேடா நாயே..”

” இனிமேலாவது சந்தேகப்பட்டுக் கொண்டு இல்லாமல் தங்கச்சியுடனும் உன் பையனோடும் நிம்மதியாய் சந்தோஷமாய் வாழும் வழியை பாரு.. முதல்ல நானும் ஒரு நல்ல பெண்ணா பார்த்து சந்தோசமாய் வாழ்ற வழியை பார்க்கிறேன் ..உன்னாலயே எனக்கும் இந்த சந்தேகப் புத்தி வந்து எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவள் நல்லவள் இல்லையோ என்று தான் தோன்ற ஆரம்பித்து விட்டது.. போடா போ என் வாழ்க்கையை நாசமாக்கி விட்ட போடா..” என்று திட்டுகிறான்..

எந்த புற்றில் எந்த பாம்போ யார் கண்டது?

தொடரும்.

❤️ Loading reactions...
3 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page