அத்தியாயம் 27

காதலின் இனிமையோடு அவர்களின் நாட்கள் நகர்ந்தன. நதியாவின் காதல் தன் வாழ்வை அழகாக்கி இருப்பதாக மிதுன் அகமகிழ்ந்தான். அவன் சொல்லாத சொல்லிலும், இத்தனை நாட்களாகக் காட்டாத அன்பிலும் ஒளிந்திருக்கும் அந்தக் காதலை எண்ணி அவளோ பேரானந்தம் கொண்டாள்.

அறைக்குள் மட்டுமல்ல அந்த வீட்டிற்குள், பால்கனியில், அங்கிருக்கும் தோட்டத்தில், வீட்டிற்கு வெளியே, எங்கு சென்றாலும் நேரம் காலம் பாராமல் இருவரும் காதலில் திளைத்திருந்தனர். மிதுன் ஆபீஸுக்குச் சென்று முக்கியமான சில வேலைகளை மட்டும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுகிறான். நதியாவுடன் அவளது அன்பில், காதலில் இருக்கவே விரும்பியவன், அவளுக்கும் திகட்டத் திகட்டக் காதலை அள்ளித் தந்தான். 

மிதுன் இல்லாத பொழுதுகளில் நதியா தன் அம்மாவுடன் நேரத்தைச் செலவிட்டாள். சாந்தி இப்போது நடக்க ஆரம்பித்திருந்தார். 

காதலன் வந்து விட்டால், சிறுபொழுதும் அவளை அகலவிடாமல் எப்போதும் அவள் அருகிலேயேதான் இருப்பான். வீட்டில் இருப்பவர்களின் இறுக்கம் தளர்ந்திருக்க, எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது. இப்போதெல்லாம் எல்லோரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்துதான் உணவு உண்கின்றனர். 

ராதாவின் கோபம் குறைந்திருந்தது. அதற்குக் காரணம் மிதுன் முகத்தில் சில மாதங்களாகத் தொலைந்திருந்த மகிழ்ச்சியும், அமைதியும் இப்போது மீண்டு வந்திருப்பதுதான். அவனும் தன் தாயிடம் நதியா தன்னை விபத்திலிருந்து காப்பாற்றினாள் என்பதையும், ஏற்கனவே குழந்தை பெறும் காரணத்துக்காக மட்டுமே அவளைத் திருமணம் செய்ததாக கூறியிருந்தவன், தற்போது அவளையே தன் மனம் விரும்புகிறது என்றும் தெளிவாகச் சொல்லிவிட்டான். 

நிலவு உச்சிக்கு வந்திருந்த அந்த வேளையில், மிதுனும் நதியாவும் பால்கனியில் நின்று முழு நிலவைப் பார்த்து ரசித்திருந்தனர். அங்கே மின்மினிப் பூச்சிகள் வர, நதியா அதற்கருகே சென்று வியப்புடன் விழிவிரித்துப் பார்த்திருக்க, அதன் ஒளியில் ஒளிர்ந்த அவளது முக அழகில், அவள் தெற்றுப்பல் சிரிப்பில் மெய் மறந்தான்.

வேகமாக அவளுக்கருகில் சென்றவன், அவள் இடையைச் சுற்றி கை கோர்த்து, “யூ ஆர் அமேஸிங்” என்று அவளது இதழ்களை முத்தமிட நெருங்கியதும், சிவ பூஜையில் கரடியாக வந்துசேர்ந்தனர் சூர்யாவும், வைஷாலியும். 

“வர வர இந்த வீட்ல லவ்வர்ஸ் தொல்லை தாங்கல” சூர்யா கிண்டலாகப் பேசிட, “ஒருபக்கம் மித்து அண்ணா, நதியா அண்ணி இன்னொருபக்கம் தேவ் அண்ணா, ரூபி அண்ணி எப்போ பார்த்தாலும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. இந்த வீட்டுக்குள்ள ஒரு இடத்துக்குப் போக முடியல” சிறுபிள்ளை போலச் சிரித்தாள் வைஷு.

“பேசாம நாமளும் இவங்களை மாதிரியே யாரையாவது லவ் பண்ணி சீக்கிரம் கல்யாணம் முடிக்கலாம். இவங்களை கண்டுக்காம லவ் பண்ணிட்டு இருக்கலாம்ல” இருவரும் சேர்ந்து அண்ணனை கலாய்த்துக் கொண்டிருக்க, “முதல்ல ஒழுங்கா அரியர்ஸ் இல்லாம காலேஜ் முடிங்க. அப்புறம் கல்யாணம் பண்ணலாம்” மிதுன் அவர்களின் காதைப் பிடித்துத் திருகினான். 

“ஆஆ.. அண்ணா வலிக்குது” என்றவாறு அவர்கள் அங்கிருந்து ஓடியதும், இதையெல்லாம் குறுநகையோடு பார்த்திருந்தவளை அப்படியே தூக்கியபடி அறைக்குச் சென்றான். தனது அறைக்குள்ளிருந்து வெளியே வந்த ரூபிணி இதைப் பார்த்துவிட்டாள்.

இப்போதெல்லாம் அவளும் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. அவர்களின் நெருக்கம் கண்டு சிறு பயமும் கலக்கமும் அவளுக்கு வந்தது. ‘அவர்களுக்கு முன்பே தங்களுக்குத் திருமணம் நடந்திருந்ததால் சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு இங்கு மதிப்பும், நிலைத்த மரியாதையும் கிடைக்கும்’ என்ற எண்ணத்தில் இருக்கிறாள். 

ரூபிணி மிதுனின் மனைவியாகி, வீட்டின் மூத்த மருமகளாக, சமுதாயத்தில் அந்தஸ்தோடு இருக்க நினைத்திருந்தவள் தானே. அவள் எதிர்பார்த்தது நடக்காமல் போனதால் எல்லாவற்றிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பினாள்.

******************************************

அன்றிரவு ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த மிதுன், அறைக்குச் சென்றால் வழக்கம்போல நதியா நித்திரையில் இருந்தாள். அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு படுத்தவன், அவள் முகத்தையே பார்த்திருந்தான். 

மிதுனின் காதல் தந்த பூரிப்பில் அவள் கன்னங்கள் பூசியிருந்தாள். அவளது கொழு கொழு கன்னங்களும், அதன் நடுவே இருக்கும் பூவிதழும் அவனை இம்சிக்க அதில் லயித்திருந்தான்.

அவள் தூக்கத்தைக் கலைக்க வேண்டாம் என்ற காதலுக்கும், அவளது பூவிதழைப் பறிக்கும் ஆவலுக்கும் இடையே சிக்கித்தவித்தவன், கடைசியில் ஆவலே ஜெயித்திட தன்னிதழ் கொண்டு அந்தப் பூவிதழைக் கொய்தான். அவள் திடுக்கிட்டு விழித்திட, நான்தான் என்பது போல் கண்ணாலேயே ஜாடை செய்து அவளை அணைத்துக் கொண்டான். 

ஒரு நீண்ட முத்தத்தில் இருந்து விலகியவர்கள், வெட்கப்புன்னகை பூத்தனர். மிதுன் அவளிடம் ஒரு பரிசுப் பெட்டியைத் தர, “இப்போ எதுக்கு கிஃப்ட்? வேலண்டைன்ஸ் டே தான் முடிஞ்சிருச்சே” எனக் கேட்டவாறே அதைப் பிரிக்கத் தொடங்கினாள்.

“என் நதிமா என்கூட இருக்கிற எல்லா நாளும் எனக்கு காதலர் தினம் தான். என்னோட காதல் தினம் தான்” என்றவன், அந்த பரிசைப் பார்க்கும்போது அவள் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளைக் காண ஆவலோடு அவளைக் கவனித்திருந்தான்.

இதய வடிவில் ஒரு பெட்டியிருக்க, அதன் மேலே ஒரு ஆண் பொம்மையும், பெண் பொம்மையும் இருந்தன. அதிலிருக்கும் பொத்தானை அழுத்தியதும் பெண் பொம்மை நின்றிருக்க, மெல்லிய இசையோடு ஆண் பொம்மை அந்த பெட்டிக்குள் நகர்ந்து சுற்றிச் சுற்றி வந்து அந்தப் பெண்ணை முத்தமிடும். 

கண்ணிமைக்காமல் அதை வியந்து பார்த்திருந்தவள், ஒழுங்கற்ற அழகின் அடையாளமாய்த் தன் வரிசையற்ற முத்துப் பற்கள் தெரியச் சிரித்திட, மனமெங்கும் நிறைந்திருந்த மகிழ்ச்சியில் அவளையே இமைக்காமல் ரசித்திருந்தான் மிதுன்.

“நதிமா.. இந்த பொம்மையைப் பார்த்தியா. லவ்வர் பக்கத்துல வந்ததும் கிஸ் பண்ண தலையைத் தூக்குது. நீயும் இதே மாதிரிதான் நான் கிஸ் பண்றதுக்கு உன்கிட்ட வந்தா வேகமா தலையைத் தூக்கிட்டு வருவ. இதைப் பார்த்ததும் உன்னோட ஞாபகம் வந்தது, அதான் வாங்கிட்டு வந்தேன். அழகா இருக்குல்ல” அவன் ரசனையோடு சொன்னதும் நாணத்தில் செவ்வானாமாய் சிவந்தாள் பெண்ணவள். 

“நதிமா.. எப்போ பார்த்தாலும் சோம்பேறி மாதிரி தூங்குறியே. ஒருநாளாச்சும் என்னை மிஸ் பண்ணி, நான் ஆபீஸ்லருந்து வர்ற வரைக்கும் எனக்காகக் காத்துக்கிட்டு இருந்திருக்கியா?” செல்லக் கோபத்துடன் அவன் வினவிட, “என்னன்னு தெரியல மிதுனா, இப்போலாம் ரொம்ப டயர்டா இருக்கு, காலெல்லாம் வலிக்குது, தூக்கமாத்தான் வருது” சுணங்கிய குரலில் அவள் கூறியதும், ‘அதற்கு மூலக்காரணமே நான்தான்’ என நினைத்து வருந்தினான்.

அவன் காதலின் வேகத்தையும், இளமையின் தாபத்தையும் அவள் தாங்கிக் கொள்கிறாள். இருப்பினும் அவளது உடல் சோர்ந்து போகிறது. ஏதேதோ யோசனையில் இருந்தவன் எழுந்து குளித்துவர, இருவரும் இரவு உணவை முடித்தனர். 

“டாக்டரை வரச் சொல்லட்டுமா நதிமா” அக்கறையுடன் கேட்டவனைப் பார்த்துத் திகைத்தவள், “வேணாம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்று மெத்தையில் படுத்துக் கொள்ள, அவன் மீண்டும் அறையிலிருந்து வெளியே சென்றான்.

நதியா கால்களை நீட்டிப் படுத்திருக்க, சிறிது நேரம் கழித்து கையில் ஒரு ஹாட் வாட்டர் பேக்குடன் வந்தவன், கட்டிலுக்குக் கீழே முட்டிப் போட்டு அமர்ந்து, போர்வையை விலக்கி அந்த ஹாட் பேக்கை அவள் காலுக்கு அடியில் வைத்தபின் அவளது பாதங்களை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்தான். பதறிப்போய் எழுந்து அமர்ந்தவள், “மிதுனா என்ன பண்றீங்க? விடுங்க” என்று கால்களை இழுத்துக் கொண்டாள்.

“கொஞ்ச நேரம் மசாஜ் பண்ணா வலி குறைஞ்சிடும் நதிமா. குறையலனா நாளைக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம். நீ குடு” அவளது கால்களை இழுத்து மசாஜ் செய்தான்.

“ஆஆ.. வலிக்குதுடா.. மெதுவா பண்ணு” அவள் செல்லமாய் முணுமுணுக்க, “என்ன டாவா?” அவன் இதழோ‍ரம் புன்னகை அரும்பியது.

“ஆமா நீ மட்டும் என்னை டான்னு சொல்லுற. அப்போ நானும் உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன்” சிணுங்கல் மொழி பேசியவள், எழுந்து அவன் மடியில் அமர்ந்தாள்.

மிதுனின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பேரன்பை உணர்ந்தவளின் இதழ்கள் புன்னகைக்க, அவளது விழியோரம் கண்ணீர் கசிந்தது.

“மிதுனா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” அவன் காதலின் அழகை ரசித்தவள், அவனது முகமெங்கும் முத்தமிட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவன் தோளில் முகம் பதித்திருந்தவளின் விழிநீர் கன்னத்தைத் தாண்டி அவனது சட்டையை நனைக்க, “என்னாச்சுடா நதிமா.. கால் ரொம்ப வலிக்குதா?” என்றவன் அவள் கண்ணீரைத் துடைத்திட, 

“நீங்க என்கிட்ட எப்பவுமே இதே மாதிரி அன்பா இருப்பீங்களா? என்னோட அப்பாவும் என்மேல ரொம்பப் பிரியமா இருப்பாங்க, அவரை இழந்துட்டேன். இதெல்லாம் மாறிடக்கூடாதுன்னு பயமா இருக்கு” தானே அவனை விலக்கி வைக்கப்போவதை அறியாமல் கலங்கினாள்.

“நதிமா லிசன். என் வாழ்க்கை முடியுற வரை நான் உன்கூடத்தான் இருப்பேன். நீ எனக்கு மட்டுமே முழுசா சொந்தம். உன்னை நான் எங்கேயும் விடமாட்டேன். உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்” காதல் ததும்பப் பேசியவனை வியந்து பார்த்திருந்தாள்.

நதியாவுடன் அவன் வாழும் காதல் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தான் மிதுன். காதலோடு அவள் இதழையும், அவளுக்குச் சொந்தமான அனைத்தையும் மெல்லத் தன் வசப்படுத்தினான்.

அவள் முன்னழகில் தன் கண் ரேகைகளைப் பதித்தவன், அவளது இடைதனில் தனது கைரேகைகளைப் பதித்தான். அவளது அங்க வளைவுகளில் தனது இதழ் ரேகைகளைப் பதித்திட, அவளோ சிதற ஆரம்பித்தாள். 

சிதறிக் கிடந்தவளை மொத்தமாய் அள்ளி அவளுள் நுழைந்து கொண்டான். “மிதுனா.. மிதுனா..” அவள் சூடான மூச்சுகளும் முனகிட, அவன் போதையில் ஆண்மை முறுக்கேறி வேகமெடுத்தான். அவர்களது உடல்கள் மட்டுமல்ல, உயிரும் உயிரும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காதலில் உயிர்ப்புடன் சங்கமித்தன.

******************************************

அன்று நண்பகல் மிதுன் ஆபீஸிலிருந்து நதியாவிற்கு செல்பேசியில் அழைத்திட, அதை ஏற்றவள் “சொல்லுங்க மிதுனா” என்க, “நதிமா.. என்னோட லேப்டாப்பை அங்க வச்சுட்டு வந்துட்டேன். பாஸ்வேர்ட் போட்டு அதை ஓபன் பண்ணி, நான் சொல்ற ஃபைலை ஆபீஸ் மெயில் ஐடிக்கு சென்ட் பண்ணு” என்றான்.

“நான் வேணும்னா டிரைவர் கிட்ட லேப்டாப்பை கொடுத்து விடட்டுமா?” அவள் யோசனையைச் சொல்லிட,

“வேணாண்டா. ஒரு சின்ன ஒர்க் தான். அதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வந்துடுவேன்” அவன் பேசி முடிப்பதற்குள் சொன்ன வேலையைச் செய்திருந்தாள்.

“அனுப்பிட்டேன் மிதுனா. செக் பண்ணிக்கோங்க”

“ஹ்ம்ம். மெயில் ரிசீவ்டு. அப்புறம் நதிமா என்ன பண்ணுறீங்க?”

“ஒண்ணும் பண்ணல. சும்மா தான் இருக்கேன்”

“சும்மா இருக்கியா? இல்ல சும்மா பிட்டு படம் பார்க்குறியா?”

“அய்யோ.. நான் அதெல்லாம் பார்க்கமாட்டேன் மிதுனா”

“நீ தனியாப் பார்க்காத. நான் வீட்டுக்கு வந்ததும் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பார்க்கலாம். லவ் யூ டா நதிமா” சரசமாகப் பேசியவன் போனிலேயே அவளுக்கு முத்தமும் தந்தான்.

மிதுனுக்கு அருகிலிருந்த விஷ்ணு அதிர்ச்சியில் வாயைப் பொத்தி நின்றவாறு அவனைப் பார்த்திருக்க, “வாட்.. போ போய் மீட்டிங்குக்கு அரேஞ்ச் பண்ணு” என்று அதட்டலாக அவன் சொன்னதும் அங்கிருந்து வெளியே சென்றான்.

‘இதென்னடா புது ட்விஸ்ட்டா இருக்கு. பயங்கர லவ் போல. எப்படியோ நதியாவும் மிதுன் சாரும் நல்லா இருந்தா சரி’ விஷ்ணு அவர்கள் இருவரின் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனான்.

நதியா, மிதுன் சுட்டித்தனமாக பேசியதை நினைத்துச் சிரித்தவள், சட்டென லேப்டாப் முகப்புத்திரையில் ‘நதியா’ என்ற பெயரில் இருந்த ஃபைலை பார்த்துத் திகைத்தாள். அவள் அதைக் கிளிக் செய்திட, அவளது வீடியோக்கள் வந்தன. 

‘இதெல்லாம் என்னோட போன்ல மட்டுந்தான் இருக்கும். இவருக்கு எப்படி கிடைச்சது?!’ குழப்பத்திருந்தவள் அதிலிருந்த ஒரு பிடிஎப் ஃபைலை ஓபன் செய்து பார்த்தால், ராகுல் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயரில் நதியாவைப் பற்றிய மொத்த அறிக்கையும் இருந்தது. அதோடு அவளுடைய அடையாள ஆவணங்கள், வாங்கிய சான்றிதழ்கள், அவளது புகைப்படங்கள், அவளைப் பற்றிய முழு விவரங்களும் அதிலிருக்க உறைந்து போனாள்.

அவள் போன் பேசிய ஒலிப்பதிவுகளும் இருக்க, அதை ஒவ்வொன்றாகக் கேட்டவள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தாள்.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மோகம் தீர்க்கும் நதியவள்
5,925 177 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page