அத்தியாயம் – 3
அத்தியாயம் – 3
மலர்விழி காரில் ஏறி அமர்ந்ததும் ஆனந்தி குஷி ஆகி ஹரிஷ்க்கு அங்கிருந்த ஒவ்வொரு இடங்களையும் பற்றி கூறிக் கொண்டிருக்க, மலரோ அமைதியாக வந்தாள்.
ஆனந்தி பேசுவதை பார்த்த செந்தில் அண்ணனோ “பாப்பா நீயும் இந்த ஊர்ல தான் இருந்தியா ? “
” ஆமா அண்ணா உங்களுக்கு என்ன தெரிய வாய்ப்பு இல்ல. ஸ்கூல் இங்கதான் முடிச்சேன். அதுக்கப்புறம் அப்பாக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு. அதனால நாங்க சென்னைக்கு போயிட்டோம். “
“அப்படின்னா நீ இருக்குற தைரியத்துல தான் மலர் பாப்பாவும் வந்துச்சா”
” ம்ம் அப்படியும் சொல்லலாம் “என்று ஆனந்தி பதில் அளித்தபடி மலரை பார்க்க,
மலரோ தீவிர யோசனையில் இருந்தாள்.
“ஏண்டி ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த ஏரியா எல்லாம் பார்க்கிறோம். நீ என்ன இவ்வளவு சைலன்ட்டா வர, நம்ம ஹரீஸ்க்கு நம்ப ஊரோட அருமை பெருமை எல்லாம் சொல்ல வேண்டாமா?”
கதிரின் நினைவு அவளை பலமாக தாக்கியிருந்தது. அவனுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது தெரியும். ஆனால் வேறு யாராவது தன் மாமாவின் மனதில் வந்து விட்டார்களோ? அதனால்தான் இத்தனை நாளும் தன்னை தேடவில்லையோ? என்ற எண்ணம் இப்பொழுதுதான் அவளுக்கே உதித்தது. அந்த நினைப்பு வந்ததுமே மனது பாரமாகி போக, யோசனையோடு வந்து கொண்டிருந்தாள்.
ஆனந்தி அவளிடம் பேசி பேசி பார்த்துவிட்டு அமைதியாக வர ஹரிஷ் அந்த ஊரின் அழகை கண் குளிர பார்த்தபடி வந்தான். அடுத்த பத்து நிமிடத்தில் அந்த பெரிய வீட்டின் முன் வண்டி நிற்க, வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த பெரிய கேட்டின் உள்ளே பந்தல் எல்லாம் போட்டு இருந்தது.
கேட்டின் வெளியே வண்டியை நிறுத்தவும். மனம் படபடக்க மலரோ ஆனந்தியின் கையை இறுக்கிப்பிடிக்க ஆனந்திக்கு புரிந்து விட்டது. அதனால் அவள் கையை தட்டிக் கொடுத்த படியே இறங்கினாள்.
இந்த வீட்டின் முன் இறங்கியவளது கால்கள் எல்லாம் நடுங்கியது சத்தியமான உண்மை. அவளுக்கு நெஞ்சம் படப்படவென்று அடித்துக் கொள்ள, தன்னவனை காண போகிற ஆரவாரம் மனதுக்குள் எழுந்தது.
ஹரிஷ் அந்த வீட்டை பார்த்து “வாவ் பியூட்டிஃபுல்” என்று கூற,
ஆம் அந்த வீட்டில் கல்யாணம் நடக்கப்போவது என்பதால் பெயிண்ட் எல்லாம் அடித்திருந்தனர். அதுவும் அவளுக்கு பிடித்த கலரில் இருக்க கண்ணிமைக்காமல் ஒரு நொடி பார்த்தவள். அங்கிருந்த சொந்தங்களை பார்த்து அதன் பிறகு கண்ணை மூடி திறந்து தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு ஆனந்தியின் கைபிடித்தபடி அந்த வீட்டை நோக்கி நடக்க,
நண்டு, சிண்டு எல்லாம் வெளியே விளையாடிக் கொண்டிருக்க, உள்ளே தான் அத்தனை பேரும் இருந்தனர். ஒரு சில வெளி ஆட்கள் மட்டும் அங்கங்காங்கு போட்டிருந்த கதிரையில் அமர்ந்திருக்க, இவளை அங்கே இருப்பவர்கள் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதனால் அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.
வீட்டின் அருகே சென்றவள். உள்ளே செல்வதற்கு முன் அங்கிருந்த இடத்தை எல்லாம் சுற்றி பார்த்தபடி ” நீங்க உள்ள போங்க” என்று கூற,
ஆனந்தியும் சரி என்று “ஹரிஷ் வா” என்று உள்ளே அழைத்து செல்ல,
ஒரு வித மனபோராட்டத்தில் இருந்த மலர். அந்த வீட்டில் அடி எடுத்து வைக்கப் போக, அதற்குள் ” நீங்க வந்துட்டீங்களா? ” என்று கதிரின் குரல் கேட்டதும்,
அவளது ஒரு கால் தரையில் இருக்க இன்னொரு கால் – அந்தரத்தில் மிதக்க அப்படியே நின்று திரும்பி பார்த்தவள். தடுமாறி கீழே விழவும். மாடியில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து சொந்தங்களை வரவேற்பதற்கு வந்தவன்.
யாரோ கீழே விழ போகிறார்கள் என்று தாங்கி பிடிக்க, தாங்கி பிடித்த பிறகுதான் அது அவன் அக்கா மகள் மலர் என்பதையே பார்த்தான்.
இத்தனை வருடங்கள் கழித்து கதிரை பார்த்த அவளது கண்களோ அப்படியே அவனிடம் நிலை குத்தி நின்றது. அவனது பார்வையும் அவளை பார்த்து கண்கள் விரிந்தபடி நிற்க, இருவரும் ஒருவித இன்ப அதிர்ச்சியில் தான் இருந்தனர்.
” ஏலே கதிர் அங்க என்னடா பண்ற ” என்ற குரல் கேட்டதும் பட்டென அவளிடம் இருந்து விலகியவன். விலகிய பிறகும் அவனுக்கு பேச்சே வரவில்லை. ஆனால் அவள் மீதிருந்த பார்வையை சிறிதும் நகர்த்தாமல் அவன் பார்த்து கொண்டிருக்க,
ஆனால் அவளோ அவனுக்கு பின்னே வந்தவர்களை பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றாள். அதன் பிறகு அந்த நபர்கள் அவனின் அருகிலே வந்து “கதிர்” என்றதும் ,
“ஹான் வாங்க அத்தாச்சி. நல்லா இருக்கீகளா? ” என்று முயன்று மூச்சு வாங்க பேச,
“நான் நல்லா தான்ல இருக்கேன் உங்க அப்பனும், ஆத்தாளும் எங்க ? “
” உள்ள “
” சரி வால. உள்ள போய் பார்போம் ” என்று அவனை அவர்கள் அழைத்து செல்ல,
இவளோ கதிரை பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள். உள்ளே செல்பவனும் திரும்பி திரும்பி அவளையே பார்த்தபடி தான் உள்ளே சென்றான்.
அவன் சென்றதும் தன் நெஞ்சை பிடித்தபடி அங்கிருந்து தூணில் சாய்ந்தவள். தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வரவே முடியவில்லை.
அப்போது ஆனந்தியுடன் வெளியே வந்த அவளின் அன்னையை பார்த்த பிறகு தான் முயன்று ” அம்மா ” என்று அவள் அழைக்க போக,
” ஏன்டி வெளியவே நின்னு என்ன பண்ணிட்டு இருக்கவ, ஆனந்தி புள்ளயே உள்ள வந்துடுச்சு இன்னும் பத்து நிமுசத்துல நிச்சயம் பண்ணிபுடுவாக, நேத்தே வாடினா கேக்குறியா? “
“அம்மா இவ்வளவு நாள் கழிச்சு என்ன பாக்குற கொஞ்சாம திட்றியே?”
” உன்ன கொல்லாம விட்டாங்களேன் சந்தோஷ படு ” என்று ஆனந்தி கூறவும். ஆனந்தியை மலர் முறைக்க,
” நீதான் இந்த ஊருக்கு வரல. நாங்க அங்கன மாசத்துக்கு ஒருக்க வந்துட்டு தானடி இருக்கோம். சரி என்ன இம்புட்டு இளைச்சு போய் கிடக்க டி. ஒழுங்கா சாப்புடுதியா இல்லையா ? இங்க வாட்டின்னாலும் வரியா “
“சரி சரி என்ன திட்டுற படலம் முடிந்ததுனா நான் எங்க அப்பாவ மீட் பண்ணலாமா? “
“உங்க அப்பாரு இவ்வளவு நேரம் உன்ன தான் கேட்டுட்டே கிடந்தாரு. இப்பதான் ஒரு சோழியா மேல அனுப்பிவிட்டு இருக்கேன். நீ வா உன்ன தான் இங்க எல்லாம் தேடிட்டு இருக்காங்க. ” என்றதும் அவள் மனம் மீண்டும் படபடக்க,
அவள் அன்னை கைகளை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல,
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் கழுத்தை ஒட்டி தங்கச் செயின் மின்ன நெற்றியில் சந்தனக் கீற்று, அழகான மீசை அழகாக அதை முறுக்கிவிட்டபடி கம்பீரமாக இருந்தவனை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. ஹேர் ஸ்டைலை கூட மாற்றி இருக்கிறான்.
அவனின் அழகு இன்னும் தான் மெருகேறி இருந்தது. ஒருவிதமான வெட்கம் முகத்தில் ஒட்டிக்கொள்ள, தன்னவனை கண் கொண்டு பார்ப்பதற்காக அவள் அந்த வீட்டின் உள்ளே அடி எடுத்து வைக்க,
சொந்தங்களோ இவளை சூழ்ந்து கொண்டது. அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தவள். அங்கு தன்னுடைய தந்தை வரவும் ஓடி சென்று ” அப்பா ” என்று அவர் நெஞ்சில் சாய்ந்து கொள்ள,
” எப்படிடா கண்ணு இருக்க?”
” நல்லா இருக்கேன் பா. “
“உங்க அக்காவ பாக்கலையா நீ. “
“எங்க ஒரே டிராஃபிக்கா இருக்கு. இங்கயே என்ன எல்லாரும் வழி மறைச்சி நின்னா எப்படி. “
“சரி சரி இதோ மேடைக்கு கூட்டிட்டு வராங்க பாரு ” என்றதும் அப்போதுதான் சுடர் விழியை மேடைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
முகத்தில் புன்னகை மின்ன தன் அக்கா அருகே செல்வதற்காக அடி எடுத்து வைத்தவள். முகம் ஒரு நொடி கருத்து தான் போனது. ஏனென்றால் மேடையில் ஆல்ரெடி கதிர் நின்று கொண்டிருக்க, சுடர் விழி மேடையை நோக்கி செல்ல, அவளுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை.
“போடா ஏன் இங்க நிக்கிற ” என்றதும் அவளும் சரி என்று மேடை நோக்கி செல்ல,
சுடர் விழியோ மலரை பார்த்து மேடையில் இருந்து ஓடி வந்து விட்டாள். “மலரு ஏட்டி இவ்வளவு நேரம் நீ வராமயே போயிடுவேன்னு நான் நினைச்சி புட்டேன்” என்று ஓடி வந்து தன் தங்கையை கட்டிக் கொண்டு அவள் பேச ,
“நான் வராமல் எப்படிக்கா “என்று குறும்புடன் கூறியவள்.
” அழகா இருக்க கா ” கூறியபடி தன் கண்ணில் இருந்த மையை எடுத்து காதுக்கு பின்னே திருஷ்டி பொட்டு வைத்து விட்டவள்.
“எங்க மாம்ச காணோம் “என்று வேண்டுமென்றே தான் கேட்டாள்.
” ஏன் உன் கண்ணுக்கு தெரியலையா? அதோ அங்க தான் மேடையில நிக்கிறாரே ” என்று வெட்கத்துடன் சுடர் கூற,
மலருக்கே பேச்சே வரவில்லை அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்று விட்டாள்.
” ஏய் என்னடி சர்ப்ரைஸ் எப்படி இருக்கு. “
” கதி மா. கதிர் மாமா தான் மாப்பிள்ளையா ? ” என்று கூறும்பொழுது அவளது கண்கள் கலங்கியதோ,
சந்தோஷத்தில் இருந்த சுடர் விழியும் அதை கவனிக்கவில்லை. ” ஆமா மாமா தான். “
“ஏன் அக்கா என்கிட்ட சொல்லல. “
” உனக்கு இன்ப அதிர்ச்சியா இருக்கணும்னு நாங்க எல்லாரும் முடிவு பண்ணோம். “
” அதிர்ச்சி தான்க்கா இது. உண்மையாவே ரொம்ப பெரிய சர்ப்ரைஸ் என்னால லைஃப் லாங் இத மறக்க முடியாது. “என்று கூறியவளது பார்வை மேடையில் இருந்த கதிர் மீதுதான் இருந்தது. கதிரும் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி நீ போய் மாமா பக்கத்துல இருக்கா”
” சரி சரி “என்று கூறியவள். ” நீயு வா”
” இல்ல கா . நீ போ நான் இப்பதான் வந்தேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க “
“ஆனந்தி தானே “
” ஆமா ஹர்ஷயும் கூட்டிட்டு வந்து இருக்கேன் “
“அப்படியா சரி “. என்று கூறி அவள் மேடை ஏற, மணமக்களை சுற்றி பெரியவர்கள் கூட்டம் நிற்க, மலரோ ஒரு ஓரமாக சென்று தட்டு தடுமாறி ஒரு துாணை பிடித்தபடி நின்று விட்டாள்.
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக🎶
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக🎶
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்🎶
ஒ ஹோ உன்னை பிரித்திட 🎶
என்னை எரித்து நீ செல்🎶
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா🎶
ஒ ஹோ🎶
மேடையில் கதிரை பார்த்தவுடன் ஆனந்தி தான் பதறிப்போனாள். உடனே மலரை தேடி அவளது கண்களை அலைய விட்டவள். அங்கு ஓரமாய் நின்று கொண்டிருந்த மலரை பார்த்ததும், அவள் அருகே சென்று, ” மலரு ” என்றதும்,
” என்னால முடியல டி. நான் இந்த ரூம் உள்ள இருக்கேன். யார் வந்து கேட்டாலும், நான் ரெஸ்ட் ரூம் போயிருக்கேன் சொல்லிடு ” என்ற வார்த்தைகளை கோர்த்து கூறியவள்.
அங்கிருந்து அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை தாள் போட்டு கதறி கதறி அழுக ஆரம்பித்து விட்டாள்.
– தொடரும்
