அத்தியாயம் 30
கண்டிப்பாக இவன் இன்றும் வீட்டுக்கு வர வாய்ப்பில்லை நடு இரவில் தான் வரப்போகிறான் அப்புறம் எதற்காக கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்க வேண்டும்?? என்று எண்ணிக்கொண்டு படுத்துறங்க தொடங்கினாள் மித்ரா..!!
இரவு மணி பன்னிரண்டை நெருங்கியது..
சரியான தூக்கம் இல்லாமல் இடையில் கண்விழித்த மித்ரா சுற்றிலும் துலாவினாள் தன் கணவனை..
ஆனால் அவன் இன்னும் வரவில்லை வீட்டிற்கு..
மறுபடியும் காரணம் சொல்லிவிட்டு எங்கேயோ சென்றுவிட்டான் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள்..
தினம் தினம் காரணம் கூறிவிட்டு எங்கே செல்கிறான் ??
ஒருவேளை இவனுடைய இஷ்டத்திற்கு நான் வளைந்து கொடுக்கவில்லை இவனுடைய இச்சைகளை நான் நிறைவேற்றவில்லை என்று வெளியே ஹோட்டலில் தங்கி வேறு பெண்ணோடு.. என்று முழுதாக அவளுடைய மனம் யோசித்து முடிக்கும் முன்னமே..
” நீயாவே ஏதாவது கற்பனை பண்ணிக்காத உண்மை என்னன்னு தெரியாத பட்சத்தில் நீயாகவே கற்பனை செய்து கொண்டு யாரையும் குற்றம் சாட்ட முடியாது.. ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே வேலை இருந்திருந்தா?? அப்படி இல்லனாலும் உனக்கு என்ன வந்தது உனக்கு தான் அவனை பிடிக்காதே அவன் லேட்டா வந்தா என்ன?? சீக்கிரம் வந்தால் என்ன?? உனக்கு கவலை இல்லை.. சொல்லப்போனால் அவன் தாமதமாக வீட்டிற்கு வந்தால் உனக்கு தானே நல்லது.. இப்பொழுதெல்லாம் அவன் உன்னை தொல்லை பண்றதும் கிடையாது தள்ளி தான் இருக்கிறான்.. இதை நினைத்து நீ சந்தோஷம் தானே படணும் ஆனால் ஏன் கவலையா இருக்க??”, என்று அவளுடைய மனசாட்சி அவளை கேள்வி கேட்டது..
ஆனால் அதற்கு பதில் தான் அவளுக்கு தெரியவில்லை..
நிஜம்தான் கொஞ்ச நாளாகவே நான் நானாக இல்லை.. என்னை ஒரு மனுஷியா கூட மதிக்காம என்னுடைய விருப்பு வெறுப்புகளை பற்றி யோசிக்காமல் தன்னுடைய எண்ணம் தான் எல்லாம் தன்னுடைய இச்சைகள் நிறைவேறியே ஆகணும் என்கிற சுயநலத்தோடு இருக்கும் தீரனை திருமணம் செய்ததே எனக்கு பிடிக்கவில்லை முதல் விஷயமாக.. அப்பாவுடைய உடல் நலம் காரணமாக திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது இல்லை என்றால் இந்த முடிவிற்கு நான் வந்திருக்கவே மாட்டேன்.. ஆனால் கடந்த சில தினங்களாக அவன் என்னிடமிருந்து விலகி தான் இருக்கிறான் இதை நினைச்சு நான் சந்தோஷம்தான் பட்டிருக்கணும் நியாயமா பார்த்தா.. ஆனால் எனக்கு வருத்தமா இருக்கு ஏன்னு எனக்கே தெரியல..
ஒருவேளை என்னை அறியாமல் நான் அவனை விரும்ப தொடங்கி விட்டேனோ ??
அதனால் தான் அவன் என்னை கொஞ்சமாக பிரிந்து சென்றாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை போல??
இல்லை இல்லை.. அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை அந்த அரக்கனை போய் நான் காதலிப்பதா?? கனவில் கூட நடக்காது.. என்று தனக்கு தானே கூறி கொண்டவள்..
அடுத்த சில நிமிடங்களில், என்னமோ தெரியல ரெண்டு மூணு நாளா ஆள் ஒரு மார்க்கமா இருக்கான் அத பத்தி நான் ஏன் இவ்வளவு யோசிக்கணும்?? வரலன்னா சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டு தூங்க வேண்டியது தானே மித்ரா தேவையில்லாத கற்பனைகள் உனக்கு எதுக்கு?? என்று மீண்டும் தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டு கண்ணுறங்க முயற்சி செய்தாள்..
அதே நேரம் வீட்டின் வெளி வாசலில் கார் நுழையும் சத்தம் கேட்டது..!!
வந்து விட்டானா??
நிச்சயமாக இது அவனுடைய கார் சத்தம் தான்.. வழக்கம்போல 12 மணிக்கு வந்துட்டான்.. அப்படி எங்க தான் போறான் ஒன்னும் புரியல.. எழுந்து போய் என்ன பண்றான்னு பார்க்கலாமா என்று மனதிற்குள் தோன்றிய எண்ணத்தை தலையில் தட்டி தூங்க வைத்துவிட்டு , அவளும் திரும்பி படுத்து கொண்டாள்..
அறையின் கதவை திறந்து கொண்டு வேகமாக தீரன் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது.. ஆனால் அவள் திரும்பி கூட பார்க்கவில்லை இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்தாள்..
ஒருவேளை தன்னை எழுப்புவானோ அல்லது வழக்கம் போல் கட்டியணைத்து சில்மிஷ்ம் எதுவும் செய்வானோ??
இல்லையே.. கடந்த சில தினங்களாக அவன் என் அருகிலேயே வருவதில்லையே.. கண்டிப்பாக அப்படி செய்வதற்கு வாய்ப்பில்லை ஆனால் மனசுக்குள்ள குறுகுறுப்பா இருக்கே.. என்னவா இருக்கும் என்று உள்ளுக்குள் ஒரு வித படபடப்பும் யோசனையும் ஓடிக்கொண்டே இருக்க..
மெதுவாக ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள்..
அவனும் இவளை கண்டுகொள்ளாமல் வந்ததும் முதல் வேலையாக குளியலறைக்கு சென்று விட்டு உடைமாற்றி வந்தான்..
அவளை எழுப்பவும் இல்லை மொபைலை எடுத்து பார்க்கவும் இல்லை.. அவன் பாட்டுக்கு வந்தான், அவள் அருகில் படுத்தான் , போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு உறங்க செய்தான்..
இதுதான் நடந்தது..
இதை பார்த்ததும் அவளுக்குள் ஏதோ சொல்லொண்ணாத ஒரு ஏமாற்றம் உண்டானது..!!
தன்னுடைய பிறந்தநாள் தேதியை கண்டுபிடித்து தனக்கு ஒரு வாழ்த்து கூறுவானா என்று நப்பாசையோடு எதிர்பார்த்து காத்து இருந்ததோ அவளுடைய ஆழ்மனம்?? அதுவே அவளுக்கு தெரியவில்லை போல..
எந்த வாழ்த்தையும் கூறாமல் அவளிடம் பேசாமல் அமைதியாக படுத்துறங்க முயற்சி செய்ததும் அவளுக்கு கோபம் ஆதங்கம் வருத்தம் அழுகை ஏமாற்றம் என அனைத்தும் ஒரே நேரத்தில் பொங்கி எழுந்தது..
“வந்ததும் படுத்து தூங்குறான் பாரு தடிமாடு.. ஏதாவது பேசுகிறானா அவன் பாட்டுக்கு வர்றான் சாப்பிடுறான், தூங்குகிறான் கிளம்பி ஆபீஸ் போயிட்டே இருக்கான்.. இங்கே ஒருத்திய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கோமே அவ எப்படி இருக்கா, நல்லா இருக்காளா இல்லையா ??இன்னைக்கு அவளுக்கு பிறந்த நாளா?? இப்படி ஏதாவது யோசிக்கிறானா ??
அது சரி.. அவனுக்கு எப்படி என்னுடைய பிறந்தநாள் தெரியும்?? அவனுக்கும் எனக்கும் இடையிலான பேச்சு வார்த்தை தான் பன்னீர் தெளிப்பது போல எப்பவாவது தானே நடக்கிறது?? இந்த லட்சணத்தில் அவனுக்கு எப்படி என்னுடைய பிறந்தநாள் தெரியும்??
இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே இருந்தும் ஏன் கவலைப்படுற மித்ரா ?? தேவையில்லாமல் எதையும் யோசித்து எதிர்பார்த்து ஏமாந்து போகாத.. எல்லா பிறந்தநாள் போலவும் இந்த பிறந்த நாளும் உனக்கு வெறுமையாக தான் போகும் அதனால் நிம்மதியா எதையும் யோசிக்காமல் தூங்கு”, என்று மனதிற்குள் ஆறுதலை சொல்லிக்கொண்டு கண்கலங்க இமை கதவுகளை சாற்றிக் கொண்டாள்..!!
அதிகாலை ஐந்து மணி..
ஏனோ, அந்த நேரத்திற்கே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது..
எப்படியும் பக்கத்தில் தன் கணவன் இருக்க மாட்டான் அலுவலகம் கிளம்பி சென்றிருப்பான் என்று நினைத்துக் கொண்டே மெதுவாக திரும்பிப் பார்க்க.. அதிர்ச்சியடைந்தாள் மித்ரா..!!
காரணம், அங்கே அவளையே பார்த்தபடி அருகில் படுத்திருந்தான் தீரன்..!!
இப்படி பார்க்கிறான்??!!
எப்பவும் இந்த நேரத்துக்கு எழுந்து குளித்து அலுவலகம் கிளம்பி போயிடுவானே ஆனால் இன்னைக்கு எங்கேயும் போகாமல் பக்கத்தில் இருக்கான், அதுவும் நம்மளை இந்த பார்வை பார்க்கிறானே?? என்னவாக இருக்கும்?? என்று யோசித்து பயத்தில் தொண்டை குழியில் எச்சி முழுங்கினாள் அவள்..!!
கோழி முட்டை சைசுக்கு கண்கள் விரிவடைய அவனையே பார்த்திருந்தாள் அவள்..
ஒரு சில நிமிடங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர் கண்ணிமைக்காமல்..❤️❤️
எப்பொழுதும் அவனுடைய பார்வை அவளின் கழுத்துக்கு கீழே தான் செல்லும்..
உடலின் ஒவ்வொரு அங்கங்களையும் கண்களாலேயே வருடி செல்வான் கள்வன்..❤️❤️
ஆனால் இன்று, அவனுடைய கண்கள் கழுத்துக்கு கீழே செல்லவில்லை அவளுடைய கண்களிலேயே தேங்கிவிட்டது..!!
ஆழமான கடலில் முத்தெடுப்பது போல அவளுடைய கண்களை ஆழமாக துளைத்து கொண்டிருந்தான் தீரன்❤️❤️
மெதுவாக அவளின் அருகில் நெருங்கி வந்தவன் அவளை கட்டி அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்..❤️❤️
எதிர்பாராத நேரமாக பார்த்து நெருங்கி அருகில் வந்தவன் நெற்றியில் முத்தம் பதிக்க.. அவளுக்கு உடல் முழுக்க சிலிர்த்தது..!!
முதல்முறையாக அவள் உடலுக்குள் நிகழும் ஹார்மோன்கள் நடத்தும் போராட்டம் இது..!!
இதற்கு முன்பாக அவன் தொட்டதே இல்லை என்று கூற முடியாது.. தொட்டிருக்கிறான் தான் ,அணைத்து முத்தமிட்டிருக்கிறான் தான்..
ஆனால் அந்த அணைப்பிலும் முத்தத்திலும், அசுர வேகமும்.. தீராத தேடலும்.. காமமும் தான் இருந்தது.. !!
ஆனால் இப்பொழுது தன் கணவன் நெற்றியில் பதித்த முத்தத்தில் முதல்முறையாக அக்கறை அன்பு காதல் இவை எல்லாம் சேர்ந்த கலவையாக ஏதோ ஒன்றை அவள் உணர்ந்து கொண்டாள்..❤️❤️
அதனால்தான் என்னவோ அவனை அவள் தடுக்கவும் இல்லை , அவனிடமிருந்து அவள் தள்ளி போகவும் இல்லை..!!
அழுத்தமாக நெற்றியில் முத்தம் பதித்தவன் பிறகு அவளை மெல்ல விடுவித்தான்..
அழகிய கனவு பாதியில் கலைந்தது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது..
இத்தனை சீக்கிரத்தில் விடுவித்து விட்டானே ஏன்?? என்று வெட்கமே இல்லாமல் அவளுடைய ஆழ்மனம் அவனின் அன்பான அணைப்பிற்காக ஏங்க தொடங்கியது..!!
கேள்வியோடு அவனையே பார்த்திருந்தாள் பேதை..
கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து கபோர்டு நோக்கி சென்றான்.
குளிக்கப் போகிறான் போல என்று நினைத்துக் கொண்டு அவளும் மெல்ல எழுந்து அமர்ந்தாள்..
துணியை எடுத்துக்கொண்டு நேராக குளியலறை நோக்கி செல்லாமல் எதற்காக இவன் இப்பொழுது நம்மை நோக்கி வருகிறான் என்று குனிந்த வாக்கிலேயே கீழ்கண்ணால் அவனை நோட்டமிட்டாள் அவள்..
தரையில் அழுத்தமாக படிந்த அவனுடைய பாதங்கள், நேராக அவளை நோக்கித்தான் வந்தது..
எதற்காக இப்பொழுது அருகில் வருகிறான் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று பதட்டத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
மூச்சு முட்டும் அளவிற்கு அவள் அருகில் நெருங்கி வந்தவன்..
” இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மை டியர் மித்து”, என்று கரகரப்பான குரலில் கூறி அவளை ஒரு முறை அணைத்துக் கொண்டான்.
ஆச்சரியமும் அதிசயமுமாக அவனை நிமிர்ந்து பார்க்க.. அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்ட தொடங்கி விட்டது..!!
எப்படி இவனுக்கு என்னுடைய பிறந்தநாள் ஞாபகத்திற்கு வந்தது முதலில் இவனுக்கு என்னுடைய பிறந்தநாள் இன்று தான் என்று எப்படி தெரிந்தது?? என ஏகப்பட்ட கேள்விகள் அவள் மனதிற்குள் எழும்பியது ஆனால் அது எதுக்குமே அவளுக்கு இப்பொழுது பதில் தெரியாது..
” உன்னுடைய வாழ்க்கையில் இதுக்கு முன்னாடி நீ எத்தனை கஷ்டங்களை அனுபவிச்சிருக்க அப்படின்னு எனக்கு தெரியாது ஆனால் நான் கொஞ்ச நாளா உன்னை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன் என்னை மன்னிச்சுடு.. இனிமேல் அந்த மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. உன்னுடைய கண்களில் இப்பொழுதும் என்னை ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்க்கும் பார்வையை மட்டும் தான் எதிர்பார்க்கிறேன் நான் ,பயத்தை அல்ல.. அன்னைக்கு பயத்தோடு அருவருப்போடு நீ என்னை பார்த்த போது எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மித்து.. அப்படியே மனசு உடைஞ்சு போயிடுச்சு.. என்னால உன்னை விட்டு விலகவும் முடியல உன்னை நெருங்கவும் முடியல.. ஒரு வித அவஸ்தையா இருக்கு இது.. என்னால தாங்கிக்கவே முடியல அதனால தான் உன்கிட்ட இருந்து நான் விலகி விலகி போறேன்.. உன் பக்கத்துல வந்தாலே என்னுடைய கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுது இதயம் வேகமாக துடிக்குது இப்ப கூட என் இதயம் படபடன்னு அடிச்சிக்குது.. நீ வேணும்னா தொட்டுப் பாரு”, என்றவன் சட்டென்று அவளின் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்தான்..
லப்டப் லப்டப் லப்டப், என்று அதி வேகமாக குதிரையைப் போல ஓடிக் கொண்டிருந்தது அவனுடைய இதய துடிப்பு..!!
போதாத குறைக்கு அவன் நெற்றி முகம் கழுத்து என்று எல்லா பக்கமும் வேர்வை முத்துக்கள் வழிந்து ஓடியது அருவியாக..!!
நிஜமாகவே இவனுக்கு நம் அருகில் வந்தால் படபடப்பு உண்டாகிறதோ என்று அவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள்..!!
” கேக்குதா மித்து.. சத்தியமா என்னால முடியலடி.. எனக்கு ஏன் இப்படி ஆகிறது?? நான் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்?? எதுவுமே எனக்கு புரியல.. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன்.. என்னை விட்டு நீ விலகி சென்றால் மட்டும் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.. இப்பவும் அடிச்சு சொல்லுவேன் என்னை தவிர நீ வேறு யாரை நிமிர்ந்து பார்த்தாலும் எனக்கு கோபம் அளவுக்கதிகமாக வரத்தான் செய்யும் அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.. அதே சமயம் உன்னை இனிமேல் நான் காயப்படுத்தவும் மாட்டேன் அதுவும் உறுதியாக சொல்வேன்.. உனக்காக இதுவரைக்கும் நான் எதையுமே செஞ்சதில்லை முதல் முறையா உனக்காக ஒரு விஷயம் செய்யணும்னு நினைக்கிறேன்.. இதை நீ ஏத்துப்பியா அப்படின்னு எனக்கு தெரியல ஏத்துக்கிட்டா எனக்கு ரொம்பவே சந்தோஷம்”, என்று கூறியவன் அவள் கையில் அந்த பொருளை திணித்தான்..!!
அதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவனுடைய மித்து..❤️❤️
– தொடரும்..
