அத்தியாயம் 37
கீழிருந்த தன் அம்மா சத்தம் போடும் குரல் கேட்கவும் திடுக்கிட்டு போய் எழுந்தான் தீரன்..
கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தான்..
அம்மா ஒரு நாளும் இந்த மாதிரி சத்தம் போட்டு கூப்பிட்டதே இல்லையே அதுவும் பதட்டத்தோடு..!!
ஏதாவது பிரச்சனையா ?? கீழே எதுவும் விழுந்து விட்டார்களா?? அல்லது வேற ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லையே என்று கண்டதையும் யோசித்தவன் வேக வேகமாக படி இறங்கி கீழே வந்தான்..
” அம்மா அம்மா.. என்னம்மா ஆச்சு?? ஏன் இப்படி கத்தின ஏதாவது பிரச்சனையா?? இல்ல உனக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா??”, முகத்தில் பதட்டத்தோடு அக்கறையாக கேட்ட தன் மகனை பார்த்து பூரித்து போனார் வசுந்தரா.
அன்னையின் மீது அக்கறை இல்லாதவன் கிடையாது தான்.. ஆனால் ஒருமுறை கூட தன் மனதில் இருக்கும் பாசத்தை அவன் வெளிப்படையாக வெளி காட்டியதே கிடையாது..
பதட்டம் பயம் அக்கறை அன்பு இப்படி எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தாத பாறை முகம் கொண்டவன் தீரன்..
அப்படிப்பட்ட பாறையிலிருந்து இன்று நீர் கசிகிறது..!!
” ஒன்னுமில்ல ராஜா ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதனால தான் கூப்பிட்டேன்.. கொஞ்ச நேரம் இங்க வந்து உட்காரு..”, சோபாவில் அமைதியாக தலை குனிந்த வண்ணம் அமர்ந்திருக்கும் மித்ராவின் அருகில் உள்ள இருக்கையை காட்டினார்.
இவ என்ன இன்னும் ஆபீஸ் போகலையா?? அப்பவே கிளம்பி கீழே வந்தாளே என்னாச்சு ஒருவேளை அம்மாகிட்ட ஏதாவது சொல்லிட்டாளா?? அதனால் தான் அம்மா பேசணும்னு சொல்றாங்களா ?? என்று தனக்கு தானே பலதையும் யோசித்து குழம்பினான் அவன்.
“ உங்க ரெண்டு பேர் கிட்டயும் தான் இந்த விஷயத்தை பற்றி பேசணும்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்.. கல்யாணமான கொஞ்ச நாளிலேயே பக்கத்து வீட்டுக்காரங்க சொந்தக்காரங்க எல்லாரும் எதுவும் விசேஷம் இருக்கா இல்லையா அப்படின்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்கள பத்தி எல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.. கேக்குறவங்க கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க அவங்களுக்கு என்ன தெரியும்?? கேள்விகளை மட்டுமே கேட்க தெரியும்.. அடுத்தவங்க சூழ்நிலையை புரிஞ்சுக்குற தன்மை இங்கு யாருக்கும் கிடையாது.. அதனால தான் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்”
என்ன என்பது போல இருவரும் அவரையே பார்த்திருந்தனர்..
“ இந்த விஷயத்தை பற்றி நான் ஒருத்தர்கிட்ட மட்டும் பேசினால் சரி வராது உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசினால் தான் சரி வரும் அதனாலதான் வேலைக்கு கிளம்புறேன்னு சொன்ன மித்ராவை கூட கொஞ்ச நேரம் பேசணும் உட்காருமா அப்படின்னு சொல்லி உட்கார வச்சிருக்கேன்.. தீரன் நீயும் நல்லா கவனமா கேட்டுக்கோ இந்த விஷயத்தில் உங்களுக்கு ஈடுபாடு இல்லை என்றால் வேண்டாம் நிச்சயமாக இதில் நான் தலையிட மாட்டேன் ஆனால் என்னுடைய கருத்து இது”
” பரவாயில்ல என்னன்னு சொல்லுங்க அத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”, என்றாள் மித்ரா.
“ வந்து அது.. எப்படி சொல்றது.. எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல லேடி டாக்டர் இந்த ஊரிலேயே இருக்காங்க நீங்க ரெண்டு பேரும் போய் பார்த்துட்டு வர முடியுமா??”
” என்னமா பேசிட்டிருக்க ??என்ன பிரச்சனை இவளுக்கு இருக்குன்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும் தானே??.. தெரிஞ்சு தானே கல்யாணம் நடந்தது.. அதுக்குப் பிறகும் எதுக்காக டாக்டரை பார்க்க சொல்றீங்க??”, என்று கேட்டான் தீரன்.
“ எல்லாம் தெரிஞ்சுதான் செஞ்சோம் அதை நான் எதுவும் சொல்லல ஆனால் இப்பொழுது நான் டாக்டரை பார்க்க சொல்றதுக்கு காரணமிருக்கு.. எல்லாரும் கேள்வி கேக்குறாங்களே என்பதற்காக நான் இவளை டாக்டர பார்க்க சொல்லல.. ஒருவேளை டாக்டரை பார்த்த பிறகு இவளுக்கு இருக்கிற பிரச்சினை சரியாகி நம்ம குடும்பத்திற்கும் ஒரு வாரிசு வந்தால் அது சந்தோஷம் தானே?? என்னுடைய காலம் முடிந்த பிறகு உனக்கும் சரி உன் மனைவிக்கும் சரி அந்த குழந்தை ஒரு துணையாக இருக்கும் இல்லையா?? அதுக்காக தான் சொன்னேன்.. அக்கம் பக்கத்தில் உள்ளவங்க கேள்வி கேட்பதற்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது ரொம்ப நாளாகவே இந்த யோசனை என் மனசில் இருந்துட்டே தான் இருக்கு அதைத்தான் இப்ப சொன்னேன் இவளை அந்த டாக்டர்க்கிட்ட கூட்டிட்டு போயிட்டு வரியா ?? அவங்க ரொம்ப நல்ல கைராசியான டாக்டர் எப்பேர்பட்ட பிரச்சனையா இருந்தாலும் சரி பண்ணிடுவாங்க..”
” அத்தை நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது என் மேல உள்ள அக்கறையினால நீங்க சொல்றீங்க எல்லாம் சரிதான்.. ஆனால் ஏற்கனவே ட்ரீட்மென்ட் போயிட்டு தான் இருக்கு ஆல்ரெடி நான் பார்த்த டாக்டர் கொடுத்த மாத்திரை மருந்துகள் எல்லாத்தையும் சாப்பிட்டு தான் வரேன்.. முடிஞ்சளவு குணப்படுத்த தான் அவங்களும் பாக்குறாங்க எந்த அளவுக்கு ரிசல்ட் கொடுக்கும்னு தெரியல ஆனாலும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கோம்”, என்றாள் கனிவாக அவள்.
” நல்லதுதாம்மா ஆனால் இவங்க ரொம்பவே கைராசியான டாக்டர் ஒரே ஒரு முறை எனக்காக பார்த்துட்டு வர முடியுமா?? அப்படி உங்களுக்கு இதில் சுத்தமா விருப்பமில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் போக வேண்டாம் உங்க ரெண்டு பேருடைய விருப்பம் தான் எனக்கு முக்கியம். நீங்க ரெண்டு பேரும் கலந்து பேசிட்டு முடிவை சொல்லுங்க சரியா.. குழந்தை பிறந்தாலும் சரி பிறக்கலன்னாலும் சரி என்னைக்கும் நீ தான் என்னுடைய மருமகள் , மகளும் கூட.. உன் மேல இருந்த அக்கறையில் தான் நான் போய் பார்க்க சொன்னேன் தயவு செஞ்சு என்னை தப்பா எடுத்துக்காதம்மா..”, என்றவர் அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார்..
தீரன் மித்ரா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிறகு வசுந்தராவை பார்த்து முடிவாக ஒரே பதிலை இருவரும் கூறினார்கள்..
” சரிம்மா நாங்க போய் டாக்டரை பார்த்துட்டு வர்றோம்..”, என்றனர்.
” ரொம்ப சந்தோஷம் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. எதையும் நாம் அதிகமாக எதிர்பார்த்து போக வேண்டாம் எல்லாம் நல்லதுக்கே அப்படின்னு நினைச்சுட்டு போகணும் சரியா?? டாக்டர் என்ன சொன்னாலும் என்கிட்ட வந்து சொல்லணும் எந்த கவலையும் இல்லாமல் தைரியமா போயிட்டு வாங்க.. அவங்களோட ஹாஸ்பிடல் எங்க இருக்கு அப்படிங்கற விபரம் இந்த கார்டில் இருக்கு பத்திரமா அவளை கூட்டிட்டு போயிட்டு வா தீரா சரியா??”, என்று தன் மகனுக்கு அக்கறையோடு உத்தரவிட்டவர் அந்த விசிட்டிங் கார்டை எடுத்து அவன் கையில் திணித்தார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் கணவனும் மனைவியுமாக கிளம்பி காரில் சென்றனர் அந்த மருத்துவமனையை நோக்கி..!!
” வாங்க மித்ரா தீரன்..வசுந்தரா ஏற்கனவே சொல்லிருந்தாங்க நீங்க வருவீங்கன்னு உட்காருங்க”, என்றார் டாக்டர் சந்தோஷி.
” வணக்கம் டாக்டர்.. இவள் தான் என் மனைவி மித்ரா.. இவளுக்கு என்ன பிரச்சனை இருக்குன்னு ஏற்கனவே அம்மா உங்க கிட்ட தெளிவா சொல்லிருப்பாங்க இப்போ மறுபடியும் ஒருமுறை செக் பண்ணி பார்த்துக்கலாம்னு நினைச்சு தான் நாங்க இங்க வந்திருக்கோம்..”, என்றான்.
” புரியுது.. பொதுவா குழந்தைக்காக பார்க்க வர தம்பதிகள் கிட்ட நான் சொல்ற ஒரே விஷயம் என்னன்னா மன அழுத்தம் இல்லாம இருக்கணும் அவ்வளவுதான்.. நிம்மதியா சந்தோஷமா உங்க வாழ்க்கையை நீங்கள் நடத்தினாலே உங்களுக்கானது உங்களுக்கு கிடைக்கும்.. சரி இப்போ ரெண்டு பேருமே செக்கப் பண்ணிக்கோங்க ஏன்னா ரெண்டு பேருமே பரிசோதனை செய்துட்டாதான் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கு அதுக்கு என்ன தீர்வு அப்படிங்கறத நாம சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.. இவங்களுக்கு ஏற்கனவே என்ன பிரச்சனை இருக்குன்னு சொல்லிட்டாங்க இருந்தாலும் நீங்களும் ஒரு முறை டெஸ்ட் பண்ணி பாத்துருங்க.. எந்தவித பிரச்சனையும் இல்லை அப்படிங்கறத நாம் ஆரம்பத்திலேயே தெரிஞ்சுக்கிட்டோம்னா நம்மளுடைய ட்ரீட்மென்ட்டை ரொம்ப கிளியரா பிளான் பண்ணிக்கலாம்..”, என்றார் அவர்.
“ ஓகே டாக்டர் இதிலென்ன இருக்கு நானும் செக் பண்ணிடுறேன்..”
” ஓகே பக்கத்து பில்டிங்ல டாக்டர் ஜீவா இருப்பார் நீங்க அவர போய் பார்த்துட்டு வாங்க”, என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு மித்ராவை அழைத்துக் கொண்டு போய் தேவையான அனைத்து பரிசோதனைகளையும் அவர் செய்தார்..
ஏற்கனவே உடலிலிருக்கும் பிரச்சனையை நன்கு அறிந்திருந்த காரணத்தினால் என்ன ரிசல்ட் வருமோ என்றெல்லாம் அவள் பயப்படவில்லை எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள தானே வேண்டும் என்கிற மனநிலையில் தான் மித்து இருந்தாள்..
பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து சிறிது நேரம் காத்திருந்தாள்..
அதே நேரம் தீரனும் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு வந்திருக்க..
” ஓகே இரண்டு பேரும் டெஸ்ட்க்கு கொடுத்திருக்கீங்க ரிசல்ட் வர்றதுக்கு எப்படியும் கொஞ்ச நாள் ஆகும்.. அதனால் ஒரு ஃபோர் டேஸ் கழிச்சு இரண்டு பேரும் வாங்க பார்க்கலாம்.. கண்டிப்பா நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”, என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருவருக்கும் சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தார் டாக்டர் சந்தோஷி.
நேராக வீட்டிற்கு செல்லலாம் என்று காரை எடுத்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை இடையில் மனநிலை மாறி காபி ஷாப் செல்லலாம் என்று முடிவு எடுத்தான்..
கடவுளே, என் மனைவிக்கு எந்தவித பிரச்சனையும் இருக்கக் கூடாது அவள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஏற்கனவே இருந்த பிரச்சனையும் சரியாகி அவள் நார்மலாகியிருக்க வேண்டும்.. கூடிய சீக்கிரமே எனக்கும் அவளுக்கும் அழகான குழந்தை பிறந்து அவ சந்தோஷமா இருக்கணும்.. யாரும் என்னுடைய மனைவியை பார்த்து கேள்வி கேட்கும் நிலை வரக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் சரி எப்போதும் நான் அவளை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. குழந்தை பிறந்தாலும் பிறக்காவிட்டாலும் என்னைக்கும் அவள் தான் என்னுடைய முதல் குழந்தை..
விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து என்னுடைய அம்மாகிட்ட கூட நான் அதிகமா அன்பு காட்டியதே கிடையாது ஆனால் முதல்முறையாக இவள் கிட்ட மட்டும் தான் என்னுடைய அன்பு பாசம் காதல் எல்லாமே ஊற்றெடுத்துகிட்டு பொங்குது.. இதுக்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது.. இதுக்கு பேரு தான் காதல்னு எல்லாரும் சொல்றாங்கன்னா.. அப்ப நான் அவளை காதலிக்கிறேன்..❤️❤️
அவளை மட்டும் தான் காதலிக்கிறேன்.. ஐ லவ் யூ சோ மச் மித்து.. நீ என்னை வெறுத்து ஒதுக்கினாலும் ஒரு நாளும் உன்னை நான் வெறுக்க மாட்டேன்.. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னைக்கும் நான் உன்னை விரும்பி கொண்டே இருப்பேன்.. என் வாழ்வின் தொடக்கமும் நீதான் முடிவும் நீதான்❤️❤️, என்று மனதிற்குள் உறுதியாக நினைத்துக் கொண்ட தீரன் காதலோடு தன் மனைவியை திரும்பி பார்த்தான்..
அவளோ ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் இவன் புறம் திரும்பாமல்..
குறுநகை இதழில் பூக்க ரோட்டை பார்த்து வண்டியை ஓட்ட தொடங்கினான் அவன்..❤️❤️
– தொடரும்..
