அத்தியாயம் – 5
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் மாமா! இப்போ நீங்க அக்காவோட ஆளு. இனிமே என்னைத் தனியா பார்க்க முயற்சி பண்ணாதீங்க,” என்று ஆதங்கமாக கூறிய மலர் அவனைத் தாண்டி செல்ல முயன்றாள்.
ஆனால் கதிர் சட்டென்று அவள் வழியை மறித்து நின்றவன் அவளைத் தொடவில்லை. ஆனால் அவன் நின்ற விதத்தில் ஒரு ஆதிக்கம் இருந்தது. நிலவொளியில் அவனது கண்கள் சிவந்து தெரிய.
”ஏட்டி… 3 வருசம் கழிச்சு ஊருக்குள்ள காலடி எடுத்து வச்சுட்டு, ஏதோ சம்பந்தமே இல்லாதவ மாதிரி பேசிட்டுப் போற? உன் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?” – கதிர் குரலைத் தாழ்த்தி, ஒருவித அழுத்தத்தோடு கேட்டான்.
”உங்களுக்குத் தெரிஞ்சு இப்போ என்ன ஆகப்போகுது? அன்னைக்கு ‘ லவ் உன் மேல வரவே வராது ட்டி’ன்னு சொன்ன அதே வாய் தான இது . இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” மலர் அவன் மார்புக்கு நேரே நின்று கேட்க,
கதிர் பதில் சொல்லவில்லை. அவளை உறுத்து விழித்தபடியே மெல்ல நெருங்க, மலரோ அவன் நெருக்கம் தாங்காமல் பின்வாங்க முயல, பின்னாடி இருந்த சுவர் தடுத்து அதுவும் சதி செய்தது.
கதிர் அவளது இரு பக்கமும் சுவற்றில் கைகளை ஊன்றி அவளுக்கு சிறை போல எதிரில் நின்றவன். அவன் காதலாக பார்க்கவில்லை. ஆனால் அவனது நெருக்கம் அவளுக்கு ஆயிரம் கதைகளைச் சொன்னது.
மலரின் மூச்சுக்காற்று அவன் சட்டைப்பையில் இருந்த அந்த நிச்சயதார்த்த மோதிரத்தின் மேல் பட்டது. கதிர் குனிந்து அவளது முகத்தையே பார்த்தான்.
அவனது பார்வையில் கோபம் இருந்ததா? இல்லையா? என்று அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் அந்தப் பார்வையின் வீச்சில் மலர் அப்படியே நிலைகுலைந்து போனாள்.
”இங்க பாரு புள்ள சென்னைல நீ ஆரு கூட பழகுன, என்ன பண்னேங்கிறது எனக்குத் தேவையில்லாத விஷயம். ஆனா, என் கண்ணு முன்னாடி எவனோ ஒருத்தன் உன் கையைப் பிடிச்சுட்டுத் திரியுறதை என்னால ஏத்துக்கிட முடியாது. பார்த்துகிட்டும் இருக்க முடியாது.
ஒழுங்கா அந்தப் பயலை ஊருக்கு அனுப்பி வைக்கிற வழியைப் பாரு,” என்று அவன் அதிகாரத்தோடு சொன்னானே தவிர, அது பொறாமையினால் வந்த வார்த்தைகள் என்பதை அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
”அதுக்கு நீங்க ஆரு மாமா?” என்று மலர் எகிற,
கதிர் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்துவிட்டு, “நா ஆருங்கிறதை உன் மனசுக்கிட்டயே கேட்டுக்கோ டி” என்று மட்டும் சொல்லிவிட்டு அவளை விட்டு விலகினான்.
அவன் காதலைச் சொல்லவில்லை, ஆனால் அவன் காட்டிய அந்த உரிமை மலரை அப்படியே உறைய வைத்தது.
விடியற்காலையிலேயே ஊரே அருவியை நோக்கிப் புறப்பட்டது. ஜீப்பின் பின் சீட்டில் மலர்விழி, ஆனந்தி, ஹரிஷ் மூவரும் அமர்ந்து வர, கதிர் தன் பைக்கில் அவர்களுக்கு முன்னால் ‘கெத்தாக’ சென்றான்.
அருவியின் சத்தம் தூரத்திலேயே கேட்கத் தொடங்கியது.
“ஏய் மலரு இங்க பாருடி… நம்ம ஸ்கூல் படிக்கும்போது வந்த அதே அருவி. ஒரு மாற்றமும் இல்லல?” என்று ஆனந்தி உற்சாகமாகக் கத்தினாள்.
அருவிக்கு அருகில் சென்றதும், “மலர், இந்தத் தண்ணி விழுகுற வேகம் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு,” என்று ஹரிஷ் தயங்கினான்.
” டேய் ஹரிஷ் இதுக்கெல்லாம் பயப்புடுவியா நீ, இது எங்க ஊரு அருவி. இங்க பாரு நான் எப்படி போறேன்னு” என்று ஆனந்தி முந்திக்கொண்டு தண்ணீருக்குள் இறங்க,
மலர் ,ஹரிஷின் கையைப் பிடித்து மெதுவாகப் பாறைகள் மீது ஏற்றி அழைத்துச் சென்றாள்.
தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரின் நெஞ்சு ‘சுருக்’ என்றது. தன் கை பிடித்து ஏற வேண்டியவள். இன்று ஒரு அந்நியனுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதை அவனால் தாங்க முடியவில்லை. அவன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, அவர்களுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பாறையின் மேல் ஏறி அமர்ந்தான்.
தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் இடத்திற்கு ஹரிஷ் செல்ல முயல, ஒரு பாறையில் வழுக்கி அவன் விழப் போனான்.
” ஏய் ஹரிஷ்… பார்த்து” என்று மலர் சட்டென்று அவன் தோளைப் பற்றிக் கொள்ள,
ஆனந்தி அங்கிருந்து கிண்டலாக, “என்னடா… இங்கயே வழுக்கிட்டா எப்படி? இன்னும் எங்க ஊர்ல பார்க்க வேண்டிய இடம் எவ்வளவோ இருக்கு!” என்று சிரித்தாள்.
பாறையில் அமர்ந்திருந்த கதிரின் முகத்தில் தசைகள் துடித்தன. அவன் கையில் இருந்த சோப்பு டப்பாவை இறுக்கப் பிடித்தபடி கத்தினான்.
”ஏலே தம்பி… இது சிட்டி பார்க் இல்ல… பாறை வழுக்கும்! மெதுவா போ… இல்லன்னா அப்படியே தண்ணியில அடிச்சிட்டுப் போயிருவே!”
ஆனந்தி சட்டென்று கதிரைப் பார்த்துவிட்டு, மலரின் காதோரம் குசுகுசுத்தாள். “ஏய் மலரு… அங்க பாரு, உன் மாமன் கண்ணுல நெருப்பு எரியுது. ஹரிஷ் உன் கையைப் பிடிச்சது அவருக்குப் பிடிக்கல போல!”
மலர் கதிரை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் இப்போதும் அவளைப் பார்க்காதது போலத் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மலர் வேண்டுமென்றே ஹரிஷின் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, “பரவாயில்லை ஹரிஷ்… பயப்படாம வாங்க” என்று சொல்ல, கதிர் அப்படியே ஆக்ரோஷமாக அருவித் தண்ணீருக்குள் குதித்தான்.
விடியற்காலையிலேயே ஊரே அருவியை நோக்கிப் புறப்பட்டது. ஜீப்பின் பின் சீட்டில் மலர்விழி, ஆனந்தி, ஹரிஷ் மூவரும் அமர்ந்து வர, கதிர் தன் பைக்கில் அவர்களுக்கு முன்னால் ‘கெத்தாக’ச் சென்றான்.
அருவியின் சத்தம் தூரத்திலேயே கேட்கத் தொடங்கியது. “ஏய் மலரு! இங்க பாருடி… நம்ம ஸ்கூல் படிக்கும்போது வந்த அதே அருவி. ஒரு மாற்றமும் இல்லல?” என்று ஆனந்தி உற்சாகமாகக் கத்தினாள்.
அருவிக்கு அருகில் சென்றதும், “மலர், இந்தத் தண்ணி விழுகுற வேகம் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு,” என்று ஹரிஷ் தயங்கினான்.
”ஹரிஷ்… பயப்படாதீங்க, இது நம்ம ஊரு அருவி. இங்க பாருங்க நான் எப்படி போறேன்னு” என்று ஆனந்தி முந்திக்கொண்டு தண்ணீருக்குள் இறங்க, மலர் ஹரிஷின் கையைப் பிடித்து மெதுவாகப் பாறைகள் மீது ஏற்றி அழைத்துச் சென்றாள்.
தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரின் நெஞ்சு ‘சுருக்’ என்றது. தன் கை பிடித்து ஏற வேண்டியவள், இன்று ஒரு அந்நியனுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதை அவனால் தாங்க முடியவில்லை. அவன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, அவர்களுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய பாறையின் மேல் ஏறி அமர்ந்தான்.
தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் இடத்திற்கு ஹரிஷ் செல்ல முயல, ஒரு பாறையில் வழுக்கி அவன் விழப் போனான். “ஹரிஷ்… பார்த்து!” என்று மலர் சட்டென்று அவன் தோளைப் பற்றிக் கொள்ள, ஆனந்தி அங்கிருந்து கிண்டலாக, “என்ன ஹரிஷ்… இங்கயே வழுக்கிட்டா எப்படி? இன்னும் நம்ம ஊர்ல பார்க்க வேண்டிய இடம் எவ்வளவோ இருக்கு!” என்று சிரித்தாள்.
பாறையில் அமர்ந்திருந்த கதிரின் முகத்தில் தசைகள் துடித்தன. அவன் கையில் இருந்த சோப்பு டப்பாவை இறுக்கப் பிடித்தபடி கத்தினான்.
”ஏலே தம்பி… இது சிட்டி பார்க் இல்ல… பாறை வழுக்கும்! மெதுவா போ… இல்லன்னா அப்படியே தண்ணியில அடிச்சிட்டுப் போயிருவே!”
ஆனந்தி சட்டென்று கதிரைப் பார்த்துவிட்டு, மலரின் காதோரம் குசுகுசுத்தாள்.
“ஏய் மலரு… அங்க பாரு, உன் மாமன் கண்ணுல நெருப்பு எரியுது. ஹரிஷ் உன் கையைப் பிடிச்சது அவருக்குப் பிடிக்கல போலயே “
மலர் ,கதிரை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் இப்போதும் அவளைப் பார்க்காதது போலத் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மலர் வேண்டுமென்றே ஹரிஷின் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, “பரவாயில்லை ஹரிஷ்… பயப்படாம வாங்க” என்று சொல்ல, கதிர் அப்படியே ஆக்ரோஷமாக அருவித் தண்ணீருக்குள் தொப்பென்று குதித்தான்.
அருவியிலிருந்து திரும்பியதும், சுடர்விழி காட்டிய அந்தப் பாசம் மலர்விழியின் இதயத்தை ரணமாக்கியது. “என்னடி, தலையை ஒழுங்கா துவட்டாம அப்படியே நிக்கிற? ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது” என்று சுடர்விழி டவலால் மலரின் கூந்தலை வருடிக் கொடுக்க, மலரோ தன் அக்காவின் முகத்தைப் பார்க்க முடியாமல் தவித்தாள்.
ஏனென்றால், சுடர்விழி காதலாய் பார்க்கும் அதே கதிரைத்தான், மலர் தன் சுவாசமாய் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
அங்கே கதிர் வந்தான். அவன் சுடர்விழியைப் பார்க்கும் போதெல்லாம், மலரின் உள்ளுக்குள் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது. கதிர் எந்தத் தப்பும் செய்யவில்லை. அவன் எப்போதும் போலவே தன் கடமையைச் செய்யும் ஒரு பாசக்கார மாமனாகத்தான் இருக்கிறான். ஆனால் மலரின் காதலுக்குத்தான் இப்போ இடமில்லாமல் போய்விட்டது.
” ஏ புள்ள சுடரு… அந்தப் பத்திரிகையில ஒரு பேர் தப்பா இருக்குன்னு சொன்னாங்களே, அதை ஒரு வாட்டி பாரு வா” என்று கதிர் சொல்ல,
சுடர்விழி “தோ வரேன் மாமா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
சுடர்விழி போனதும், அந்த அறையில் மௌனம் குடிபுகுந்தது. கதிர் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மலர் அவனை வெறித்துப் பார்த்தாள்.
’ஏன் மாமா… உங்களுக்குத் தெரியாதா? நான் உங்களை எவ்வளவு நேசிச்சேன்னு? ஒரு வார்த்தை என்னைக் கேட்டுருக்கலாமே? இப்போ அக்காவுக்குப் புருஷனா வந்து நிக்கிறீங்களே… இதை எப்படி என் மனசு ஏத்துக்கும்?’ – மலர் மனதுக்குள் கதறினாள்.
கதிர் மெதுவாகத் திரும்பினான். மலரின் கண்களில் இருந்த அந்த ஏக்கத்தை அவன் கவனித்துவிட்டான். ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
”எதுக்கு மலரு இங்கேயே நின்னுட்டு இருக்க? ஹரிஷ் உன்னைத் தேடிட்டு இருந்தான். அவன்கூடப் போய் பேசு… இங்கேயே இருந்தா உனக்கு தான் கஷ்டம்” என்று கதிர் மிகவும் நிதானமாக, ஒரு அக்கறையுள்ள மாமனாகச் சொன்னான்.
”உங்களுக்கு என் கஷ்டத்தைப் பத்தி என்ன கவலை மாமா? என்னைத் தள்ளி விடணும்னு முடிவு பண்ணிட்டீங்க… அது ஹரிஷ் கூடவா இருந்தா என்ன, வேற யாரு கூட இருந்தா உங்களுக்கு என்ன?” என்று மலர் கோபத்துடனும் வலியுடனும் கேட்டாள்.
கதிர் சட்டென்று அவள் அருகில் வந்தான். அவனது நிழல் அவள் மேல் விழ, “நானும் உன்னைத் தள்ளி விடல மலரு… காலம்தான் நம்மள இப்படி ஒரு இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நீ இப்போ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உன் அக்காவுக்குத் தெரிஞ்சா அவ தாங்க மாட்டா. அவளுக்காகவாவது அமைதியா இரு” என்று அவன் சொல்லிவிட்டு நகர்ந்தபோது, அவனது குரலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்தது.
கதிர் எந்தத் தப்பும் செய்யவில்லை என்பதுதான் மலருக்குப் பெரிய வலியே. அவன் நல்லவனாக இருப்பதால் தான் அவளால் அவனை வெறுக்கவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை.
– தொடரும்
