அத்தியாயம் 5: இதயம் எழுதிய கவிதை
கொடைக்கானலின் காலைப் பொழுது இன்று சற்று வித்தியாசமாக இருந்தது. பனிமூட்டம் சற்று விலகி, ஊசி இலை மரங்களின் மீது சூரிய ஒளி வைரங்களைப் போலத் தெரிந்தது.
பணி விலகியது போல,ஆர்யனின் மனதும் யாழினி நோக்கி தெளிவாய் பயணிக்க துவங்கி இருந்தது.ஆர்யனின் மனதில் நேற்று அந்தப் பழைய தேவாலயத்தில் நடந்தவை மீண்டும் மீண்டும் நிழலாடின. யாழினியின் மௌனத்திற்குப் பின்னால் ஏதோ ஒரு மரண பயம் இருப்பதை அவனது உள்மனம் எச்சரித்துக் கொண்டே இருந்தது.
அவன் தனது பழைய டைரியை எடுத்தான். ஒரு காலத்தில் பாடல்களின் வரிகளால் நிறைந்திருந்த அந்தப் பக்கங்கள், இப்போது யாழினியைப் பற்றிய அவதானிப்புகளால் நிறைந்திருந்தன.
“அவள் பேசவில்லை… ஆனால் அவளது கண்கள் ஒரு பிரம்மாண்டமான நாவலைப் படிக்கின்றன. அவளது மௌனம் ஒரு நதியைப் போல அமைதியானது, ஆனால் ஆழமானது,அந்த ஆழத்தில் அவள் மறைத்து வைத்து இருக்கும் ரசசியம் பற்றிய உண்மையை விரைவில் கண்டறிய வேண்டும்“ என்று எழுதினான்.
அன்று மதியம், ஆர்யனின் நெருங்கிய நண்பனும் அவனது முன்னாள் இசை மேலாளருமான கௌதம் திடீரென்று கொடைக்கானலுக்கு வந்தான். ஆர்யன் புகழின் உச்சியில் இருந்தபோது அவனது நிழலாக இருந்தவன் கௌதம். ஆர்யனுக்குக் கேட்கும் திறன் போன பிறகு, அவன் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி வந்ததில் கௌதமுக்கு மிகுந்த வருத்தம்.அன்று துவங்கி இன்று அவரை ஆர்யன் அவனிடம் எந்த ஓரு தொடர்பும் வைத்து கொள்ளவில்லை
ஆவலாய் ஆர்யானை சந்திக்க வந்து இருந்தான் கெளதம் . கௌதம் ஆர்யனின் வீட்டிற்குள் நுழைந்தபோது, ஆர்யன் கிதாரை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு புதிய மெட்டை முயற்சித்துக் கொண்டிருந்தான்.
பல நாள் கழித்து ஆர்யனை பார்க்கும் அவன் மனதில் எழுந்த உச்சகத்தில் ஆற தழுவி கொள்ள எத்தனைத்த கால்களையும் தடுத்தது அவன் கண்ட காட்சி. .குரல் வலை இழந்தவன் எப்படி இருக்கிறானோ என்ற தயக்கத்தில் வந்தவன் கண் முன்,கிட்டாருடன் அமர்ந்து இருந்த ஆர்யன் பட்டான்
அவன் அருகே சென்ற கௌதம்,ஆர்யனின் தோளைத் தொட்டான். ஆர்யன் திடுக்கிட்டுத் திரும்பினான். நண்பனைப் பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது. அவர்கள் சைகை மற்றும் சில எழுத்துக்கள் மூலம் பேசிக்கொண்டனர்.
“ஆர்யன், நீ ஏன் இப்படித் தனிமையில இருக்க? உன்னோட ரசிகர்கள் உனக்காகக் காத்துட்டு இருக்காங்க. உனக்கு ட்ரீட்மென்ட் எடுக்க நல்ல டாக்டர்ஸை நான் கண்டுபிடிச்சிருக்கேன்,” என்று கௌதம் ஒரு தாளில் எழுதிக் காட்டினான்.
ஆர்யன் கசப்புடன் சிரித்தான். “எனக்கு இப்போ அந்த உலகத்து மேல ஆசை இல்லை கௌதம். இந்த மௌனம் எனக்குப் பழகிடுச்சு. இங்க நான் ஒருத்தரைப் பார்த்தேன்…” என்று சொல்லிக்கொண்டே ஜன்னல் வழியாக யாழினியின் வீட்டை நோக்கினான்.
அப்போது யாழினி தன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த கௌதமின் முகம் அப்படியே வெளுத்துப் போனது. அவனது கையில் இருந்த பேனா கீழே விழுந்தது.
“யா… யாழினி? இவ இங்க என்ன பண்றா?” என்று கௌதம் வாய்க்குள் முணுமுணுத்தான்.
ஆர்யனுக்குக் கேட்காது என்றாலும், கௌதமின் முக மாற்றத்தை வைத்து ஏதோ சரியில்லை என்று உணர்ந்தான்.
“உனக்கு அவளைத் தெரியுமா?” என்று ஆர்யன் சைகையில் கேட்டான்.
கௌதம் பதற்றத்துடன் ஆர்யனின் கையைப் பிடித்து இழுத்து உள்ளே அழைத்துச் சென்றான். ஒரு தாளில் வேகமாக எழுதினான்:
“ஆர்யன், இவள் சாதாரணப் பெண் இல்லை. இவள் பெயர் அஞ்சலி. இவள் ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட். ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு அமைச்சரோட ஊழல் வழக்கை அம்பலப்படுத்தப் போனப்போ, இவ கண் முன்னாடியே இவளோட அண்ணன் கொல்லப்பட்டான். அதுக்கப்புறம் இவ காணாமப் போயிட்டா. போலீஸ் இவளைத் தேடிக்கிட்டு இருக்காங்க. இவ கூடத் தங்குறது உனக்கு ஆபத்து!”
ஆர்யன் அந்த வரிகளைப் படித்தபோது அவனது இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
“யாழினி… அஞ்சலியா? அவளது மௌனம் ஊனம் அல்ல, அது அவளது கவசம்!“ உண்மையை மூளை உணர்த்திய போதும் நம்ப முடியாமல் பித்தம் பிடித்தது ஆரியனுக்கு
அதே நேரம், யாழினி ஆர்யனின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு தட்டில் சுடச்சுட அப்பம் இருந்தது. அவள் வாசலில் நின்றபோது, உள்ளே ஆர்யானுடன் கெளதம் பேசுவதை கண்ட அவளுக்கு உலகமே தலைகீழ் சுற்றியதை போல இருந்தது..ஓரு புறம் அதிர்ச்சி,மறுபுறம் ஆர்யனின் மாற்றம் என அனைத்துமே ஓரு நொடி புரியாமல்,அவள் கையில் இருந்த தட்டு நழுவி கீழே விழுந்தது.
அவள் பயத்தில் பின்வாங்கினாள். கௌதம் அவளைப் பார்த்ததை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்நாளை ஏட்டில் இருந்து அழிக்க விரும்பி முடியாமல் நின்றாள் பேதை. அவளது பழைய வாழ்க்கை அவளை மீண்டும் துரத்தி வருவதை போல உணர்ந்தாள்.
தட்டு தடுமாறி விழுந்ததும்,நடப்பதை நம்ப இயலாமல் தானும் தடுமாறி நின்றவளை,ஆர்யன் ஓடி வந்து பிடித்தான். அவளது கண்கள் பயத்தில் அலைபாய்ந்தன.
“யாழினி… பயப்படாத… நான் இருக்கேன்,” என்று அவன் கத்தினான். ஆனால் அவளுக்கு அவன் சொல்வது கேட்கவில்லை, அவளது உலகம் மீண்டும் இருண்டு கொண்டிருந்தது.
ஆர்யன் அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். அந்த அணைப்பில் ஒரு பாதுகாப்பை உணர்ந்த யாழினி, அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு விம்மி அழுது தீர்த்தாள். கௌதம் தூரத்தில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியும், இந்தக் காதல் இருவரையும் ஒரு மாபெரும் சுழலுக்குள் தள்ளப் போகிறது என்று.இதை தடுத்தே ஆக வேண்டும்,ஆர்யனை காக்க வேண்டும் என்று மட்டும் அவனின் மூளை அவனுக்கு உரைக்க உரைத்தது
அன்று இரவு, ஆர்யன் யாழினியின் வீட்டிற்குச் சென்றான். அவள் அழுது முடித்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் ஒரு காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.
“ஆர்யன், என் நிழல் உன்னைத் தீண்டக் கூடாது. என்னை விட்டுப் போய்விடு. நான் ஒரு மரணத்தைத் துரத்திக்கொண்டிருப்பவள். உனக்கு இசை இருக்கிறது, எனக்கு இடுகாடுதான் மிச்சம்.” கண்ணீரை கொண்டு எழுதி இருந்தாள் யாழினி
அந்த வார்த்தைகளை படித்தவனுக்கு கோவம் தலைக்கேர, ஆர்யன் அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போட்டான். அவளது முகத்தை நிமிர்த்தினான். அவளது நெற்றியில் ஒரு மென்மையான முத்தமிட்டான்.
“உன் மௌனத்தைப் புரிஞ்சுக்கிட்ட எனக்கு, உன் வலியையும் சுமக்கத் தெரியும் யாழினி. நீ அஞ்சலியா இருந்தாலும் சரி, யாழினியா இருந்தாலும் சரி… நீ என் ஆத்மா. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்தச் சத்தமில்லாத உலகத்துல ஜெயிக்கலாம்,” என்று அவன் சைகையில் சொன்னான்.
அவர்களின் காதல் இப்போது வெறும் ஈர்ப்பு அல்ல; அது ஒரு போராட்டமாக மாறியிருந்தது. அந்தப் பனி படர்ந்த இரவில், முதல் முறையாக யாழினி ஆர்யனின் தோளில் சாய்ந்து நிம்மதியாகக் கண்களை மூடினாள். ஆனால், மலை அடிவாரத்தில் அந்தச் சிவப்பு நிறக் காரின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வேட்டை தொடங்கிவிட்டது…
