அத்தியாயம் 6
சந்தோஷ், கௌரியிடம் வந்ததும் என்ன ஜி.எஸ். எப்படி இருக்கீங்க? என்று கேட்க, நல்லாயில்லைடா! என்று கௌரி பதிலுரைக்க, ஏன் பாஸ் என்னாச்சி? உடம்பு சரியில்லையா? தலைவலி, ஜுரம்மா, நான் போய் டேப்லெட் ஏதாவது வாங்கி வரவா! என்று அவன் எழுந்துக்கொள்ள, உட்காருடா! உடம்புக்கு ஒண்ணுமில்லை, மனசு தான் கஷ்டமா இருக்கு. நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும், செய்வியா? என்று கூற, காத்திருக்கிறேன் பாஸ், சொல்லுங்க, தங்கள் சித்தமே என் பாக்கியம்! என்று கூற, பத்தடி தள்ளி அந்த ஜன்னல் ஓரமா ஜீன்ஸ் ரெட் டீ ஷர்ட் போட்ட ஒரு பெண் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்கால்ல அவள்கிட்ட போய் நான் அவகிட்ட முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்லணும். அந்த பொண்ணா, அந்த பொண்ணு என்னோட டிபார்மென்ட்ல தான் இருக்கு. ஆனா பெயர் தெரியாது. ஏன் பாஸ் நீங்களே டைரக்ட்டா அவகிட்ட போய் பேசக்கூடாதா? ஓ, அந்த பொண்ணை லவ் பண்றிங்களா? நான் தூதுவனா போகணுமா? என்று சந்தோஷ் கேட்க, ஏன்டா! நீ வேறே! எக்கு தப்பா பேசி என்னை கடுப்பேத்திற! அந்த பொண்ணை எல்லாம் லவ் பண்ணலே, அந்த பொண்ணுகிட்ட, எனக்கு தெரிஞ்ச பொண்ணு பத்தி விசாரிக்கணும் என்று கூற, சந்தோஷ் ஒண்ணுமே புரியலையே பாஸ் என்று விழிக்க, கௌரி ,அவனிடம் தான் வர்ஷினி மீது வைத்த காதலையும் அன்று வர்ஷினியை பார்த்தது உட்பட அனைத்தையும் கூறி முடித்தான். முழுக் கதையையும் கேட்ட சந்தோஷ் பாஸ், நீங்க வேறே வேறே லெவல். தான் காதலிக்கிற பொண்ணு தன்னுடைய காதலை ஏத்துக்கொள்ளலனாலும் அவ நல்லா இருக்கனும், அவளுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறீங்களே நீங்க எங்கயோ போயிடீங்க பாஸ்! என்று சந்தோஷ் கூற, தன்னுடைய மன பாரத்தை எல்லாம் இறக்கி வைத்ததால் மனசு கொஞ்சம் லேசாகி விட பழைய கௌரி கொஞ்சம் எட்டி பார்த்தான். கௌரி கையை தன் தலைமேல் கும்மிட்டு யப்பா ராசா! ஏதோ ஒரு படத்தில சிரிப்பு போலீஸ் ஜனகராஜை அவர் செய்யிற அசட்டுத்தனமான செயலுக்கு எல்லாம் அவருக்கு கீழே வேலை பார்க்குற இன்னொரு போலீஸ் ஜனகராஜை உன்ன மாதிரி தான் பேசி பேசி ஏத்தி விடுவாரு, அதே மாதிரி என்னை காமெடியன்னா ஆக்கிடாதேப்பா! இந்த ரைட்டர் என்னை பெரிய ஹீரோ லெவெலுக்கு பில்ட்டப் எல்லாம் கொடுத்திருக்கு. அதை கெடுத்திடாதேடா! போ! போய் சொன்ன வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டு வா ராசா என்று கூற சந்தோஷ் இவராலேயே அந்த பொண்ண சமாளிக்க முடியல, நான் போய் என்ன பேசறது! என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே மித்ரா அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றான்.
அங்கு வந்ததும் ஹாய்! நான் சந்தோஷ், உங்க டிபார்ட்மெண்ட்லதான் நானும் இருக்கேன் என்று கை குலுக்க தன் கையை நீட்ட, மித்ரா அவனிடம், இருந்துக்க, எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல, என்று கூற, சந்தோஷ் ஆரம்பமே இப்படி இருக்கே, இந்த பொண்ணு கிட்ட நான் ப்ரெண்ட்ஆகி நம்ம பாஸ் கிட்ட பேச வைக்கிறதுக்கு குள்ள நான் ஒரு வழி ஆயிடுவேன் போலயே! என்று மனதினுள் நினைத்துக் கொண்டே நான் கை கொடுக்கிறேன், பதிலுக்கு நீங்க ஹலோ சொல்லி உங்க பேர சொல்ல மாட்டிங்களா? என்று கேட்க, நான் எதுக்கு என் பெயரை உங்க கிட்ட சொல்லணும் என்று மித்ரா கேட்க, பின்னே உங்களை எப்படி கூப்பிடறது? கோவக்காரி கோசலை ன்னா, சீ சீ அந்த பேரு நல்லா இல்லை, சிடுமூஞ்சி சின்னம்மா! இது ஓகே வா! என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, சார், நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க! தனியா உட்கார்ந்து இருக்கிற பொண்ணுகிட்ட வம்பு பண்றீங்க! அப்புறம் நான் வேற மாதிரி நடவடிக்கை எடுப்பேன் பார்த்துங்கோங்க! என்று கோபத்துடன் கூற, மேடம் ரிலாக்ஸ், ரிலாக்ஸ் இப்ப என்னமா ஆச்சு இங்க? உங்க பேரை தானே கேட்டேன், நான் என்னவோ உன்கிட்ட தப்பா நடந்திருக்கிற மாதிரி இந்த குதி குதிக்கிறீங்க! நான் என்ன சொல்லறேன் என்பதை கொஞ்சம் அமைதியா கேட்கலாமே என்று சந்தோஷ் கூற, நான் உங்களை முன்னே பின்னே பார்த்தது இல்ல, நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கணும்? அப்படி என்ன என்கிட்ட பேச வேண்டியது இருக்கு, அதுவும் முக்கியமான விஷயம் என்று கேட்க, சந்தோஷ் தன்னை முன்பக்கமும் பின்பக்கமும் திருப்பி காட்டி, இப்போ என்ன முன்ன பின்ன பாத்தாச்சு இல்ல, இப்போ நான் சொல்ல வந்ததை சொல்லவா? என்று கேட்க மித்ராவிற்கு சந்தோஷ் செய்வதை பார்த்ததும் சிரிப்பு வர ஆனால் அதை வெளியே காட்டாமல் உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு, வெளியே கோப முகத்துடன் ஷ் யப்பா, முடியல, சீக்கிரமா சொல்லவந்ததை சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுங்க என்றதும், என்னுடைய நண்பர் கௌரி சங்கர் நம் ஆஃபிஸில் தான் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கார். அவரு நீங்க கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி வர்ஷினி என்ற பெண்ணுடன் பேசறதை பார்த்திருக்காரு. அந்த பொண்ணுக்கு என் நண்பர் ரொம்ப வேண்டியவர். அந்த பொண்ணை பத்தின விவரம் தெரிஞ்சிக்க ஆசைப்படுறார். அவ்வளுவுதான் விஷயம் கோசலை, சாரி ! மேடம் என்று அவன் மேடத்தை அழுத்திக் கூற, மித்ரா, வர்ஷினி அன்னைக்கு யார்னே தெரியாது சொல்லிட்டு அவசரவசரமா நம்மையும் இழுத்திட்டு போனாலே, அந்த நபராத் தான் இருக்கும். அவரை பார்த்தா நல்லவர் போலத்தான் தெரியுது இரண்டு பேருக்கும் அப்படி என்ன உறவு இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, ஏன் அதை உங்க நண்பர் வந்து கேட்கமாட்டாரா? நீ என்ன ராமர் விடும் தூதோ! என்று கேட்க, அப்போ என்ன மறைமுகமா குரங்குனு சொல்றீங்க! இவ கிட்ட பாஸ்ச பேச வைக்க என்ன எல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்கு என்று மனதினுள் நினைத்துக் கொண்டு மேடம் நீங்க என்கிட்ட சொல்ல வேண்டாம், நான் என் நண்பரையே அழைத்துக் கொண்டு வரேன், அவர்கிட்டேயே சொல்லுங்க என்று கூறி சந்தோஷ் மீண்டும் கௌரியிடம் வந்தான்.
கௌரிக்கு அவனுடைய பக்கத்தில் சில பேர்கள் சத்தமாக தன்னுள் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்ததால், மித்ராவும் சந்தோஷும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது சரி வர கேட்கவில்லை.அதனால் சந்தோஷ் மீண்டும் கௌரியிடம் வந்ததும், சந்தோஷ் என்ன அந்த பொண்ணு ஏதாச்சும் சொன்னாளா? எங்கே என் வர்ஷினி இருக்காளாம்? என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க, பாஸ், பாஸ் கொஞ்சம் அமைதியாய் இருங்க! அந்த பொண்ணு வர்ஷினியை பத்தி உங்க கிட்ட தான் சொல்லுவாங்கலாம், அதனாலே நீங்களும் வாங்க, இரண்டும் பேரும் போய் பேசலாம் என்று அவனையும் கையோடு கூடிக்கொண்டு சந்தோஷ், மித்ரா இருக்கும் இடம் நோக்கி சென்றான்.
கௌரி வந்ததும் மித்ரா எழுந்துக் கொள்ள, ஹாய் மேடம், நான் தான் கௌரி சங்கர். அன்னைக்கு வர்ஷினியிடம் பேசும்போது என்னை பார்த்திருப்பீங்க, அன்னைக்கு நீங்க என்கிட்ட கோபமா பேசியதாலே என்னாலே எதுவுமே மேற்கொண்டு பேச முடியவில்லை. தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்க. நான் வர்ஷினிக்கு எந்த கெடுதலும் செய்ய வரல. எனக்கு சின்ன வயசிலிருந்தே வர்ஷினியை தெரியும். infact நான் அவளை காதலிச்சேன், இன்னும்மே காதலிக்கிறேன், இனிமேலும் காதலிப்பேன். அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சினு தெரியும். நான் அவ வாழ்க்கையை கெடுக்க வரல, அவ சந்தோஷமா இருக்கணும் தான் நான் ஆசைப்படுறேன். ஆனா அவளை பார்த்த சந்தோஷமா இருக்கிற மாதிரியே தெரியல.முன்னாடி இருந்த வர்ஷினிக்கும் இப்போ இருக்கிற வர்ஷினிக்கும் நிறைய மாற்றம் தெரியுது. அவளை பார்க்கவே எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவளுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கவும், அவளுக்கு ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா என்னாலே முயன்ற்து செய்யலாமேனு தான் உங்ககிட்ட பேச வந்தேன்.என்று கூறியதும், மித்ராவுக்கு கௌரி மேல் நல்ல எண்ணமும் மரியாதையும் உண்டாகியது.
தான் காதலிச்ச பொண்ணு தன்னை வேணாம்னு ஒதுக்கி தள்ளினாலும் அவ கஷ்டப்படுறதை தெரிஞ்சிகிட்டு அவளுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிற இந்த நல்ல மனசு யாருக்கு வரும். இவரை போய் நீ யாருன்னே தெரியலணு சொல்லிட்டாளே என்று நினைத்துக் கொண்டு சார், வர்ஷினியை எனக்கு ஒரு வருஷமாகத்தான் தெரியும். எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தான் அவ வீடு. அவ அவளோட அப்பா கூட தான் தங்கி இருக்கா. அவ அம்மா அண்மையில் தான் இறந்ததாக சொன்னா. கல்யாணம் ஆகி விவாகரத்தும் ஆயிடுச்சினு நினைக்கிறேன். எங்க அப்பா ஏரியா கவுன்சிலர்னாலே பள்ளி இறுதி படிப்பு முடிச்சி இருக்கேன், இடையிலே ஒரு வருடம் விட்டு போச்சு, என்னாலே கல்லூரியில் சேர முடியல, இப்போ எனக்கு கலலூரில சீட் வாங்கி தர முடியுமானு கேட்டாள். எங்க அப்பா அவருக்கு தெரிஞ்ச கல்லூரியில் சேர்த்து விட்டு இருக்கிறார். அது சம்பந்தமா எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவா. அப்பதான் நாங்க நெருங்கிய தோழிகள் ஆனோம். ரொம்ப நல்ல பொண்ணு வர்ஷினி சார். ஏன் அவளுக்கு டிவோர்ஸ் ஆச்சுன்னு தெரியலே. நானும் அவ மனசு கஷ்டப்படும்னு எதுவும் கேக்கலே. இவ்வளவு தான் சார் எனக்கு அவளை பத்தி தெரியும் என்று கூற கௌரி அப்படியே திகைத்து போய் நின்றான். என்னோட கௌரி எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா? அம்மாவை இழந்து, வாழ்க்கையை இழந்து, கேக்கவே எனக்கே மனசு பாரமா இருக்கே, அவ மனசு எப்படி எல்லாம் துடிச்சி இருக்கும். அவ நல்லா வாழறதானே நினச்சேன், கண்டிப்பா அவ கிட்ட பேசணும் ,அவளை மறுபடியும் பழைய சந்தோஷமான வர்ஷினியா மாத்தணும் என்று மனதில் நினைத்துக்கொண்டு ரொம்ப நன்றி மேடம் என்று கௌரி கூற, மேடம் எல்லாம் சொல்ல வேணாம், நான் உங்களைவிட சின்னப்பொண்ணு தான். என் பேரு மித்ரா. பேர சொல்லியே கூப்பிடுங்க! என்று கூறி புன்னகை புரிய, அங்கே ஒருத்தனுக்கு வயிற்றெரிச்சலில் புகை வந்துக்கொண்டிருந்தது. வேறு யாருக்கு! நம்ம சந்தோஷுக்கு தான். அடிப்பாவி! நான் பேரா கேட்ட என்ன வில்லன் ரேஞ்சுக்கு பேசி பேரை சொல்லல. இப்போ பாஸ் வந்ததும் கேக்காமலே பேர் சொல்ற இருடி, நீ என் டிபார்ட்மென்ட் தானே எனக்கும் ஒரு காலம் வரும், அப்போ உன்னை வச்சி செய்யறேன்! என்று மனதிற்குள் பொருமிக்கொண்டு அவளை பார்க்க அவளும் அவனை முறைத்தாள்.
நம் நாயகன் வர்ஷினியை சந்தித்தானா? அவளுக்கு ஏன் டிவோர்ஸ் ஆச்சு, அப்படி என்னதான் நடந்தது அவ வாழ்க்கையிலனு இனி வரும் அத்தியாயத்தில் பார்மோமா மக்களே!
