அத்தியாயம் 6

வெளியேறிய ராம் காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்ய அவரின் பின்னாடியே ஓடிவந்த ரதி முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்… அவள் அமர்ந்ததும் கார் சீறி பாய்ந்து கொண்டு கேட்டை தாண்டியது.

காயத்ரி பேச்சிக்கு ராமின் அம்மா கூட ஒன்றும் சொல்லவில்லை… அவருக்குமே காயத்ரி சொன்னது சரி தான் என்பது போல் இருந்தது போல… ராமின் மனம் அப்படி தான் நினைத்தது… அம்மா கூட நமக்காக பேசவில்லையே… ஒருவேளை ரதி சொன்னது போல எனக்குனு ஒரு பெண் இருந்தால் பேசியிருப்பாள் போல என்றே நினைத்தவருக்கு அனைவரும் இருந்தும் தனிமையின் கொடுமையை அனுபவிப்பது போல் இருந்தது.

அவர்களின் பயணம் அமைதியாகவே செல்ல ரதி மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து எந்த பாடல் நல்லா இருக்கு என்று மாற்றிக்கொண்டே வந்தாள்… ராமுக்கு அமைதி தான் இப்போது தேவை என்பது போல் இருக்க “இப்ப நீ என்ன பண்ண போற? அடுத்து நீ எனக்கு டென்ஷன் கொடுக்க போறியா?” என்று எரிந்து விழுந்தார்.

விழிகளை அகலமாக விரித்து “வாவ்… உனக்கு நீ வா போனு எல்லாம் பேச தெரியுமா? நான் கூட இவங்க அவங்க நீங்க அப்படின்னு என்னைய பேசினதும் நான் ஏதோ நீ ஒரு சாம்பாரா இருப்பியோன்னு நினைச்சிட்டேன்…” என்றாள்.

அவள் கூறியதை கேட்ட பிறகே தான் கோபமாக ரதியிடம் பேசியுள்ளோம் என்பதை உணர்ந்து ராம் தன்னை தானே சமன் செய்துக்கொண்டு “சாரி… வீட்ல அவங்க பேசினதுல கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்… அப்பறம் அவங்க சொன்னத எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க… அவங்க கொஞ்சம்…” என்று கூறும் போதே

“இட்ஸ் ஓகே… அவங்க எல்லாம் லூஸ் டாக் விடுறவங்கனு ஆள பாத்தாலே தெரியுது… அதுக்கெல்லாம் நான் ஒன்னும் நினைக்கில… ஆமாம் நீ எதுக்கு அந்த லேடி உன் வயசு பத்தி சொன்னதும் அவ்வளவு டென்ஷன் ஆகுற? வயசு ஏறுனா அது என்ன அவ்வளவு பெரிய குத்தமா?” என்று ரதி கேட்க

“இங்க அப்படி தான்… அதுவும் கல்யாணம் ஆகாம இருந்தா வயச பத்தி மட்டும் இல்ல இன்னம் வாய்க்கு வந்ததெல்லாம் கூட பேசுவாங்க…” என்றார் விரக்தியாக.

ராமின் விரக்தியை கண்ட ரதி அவரின் தோளில் தட்டி “உனக்கு என்ன குறைச்சல் மேன்? பார்க்க செம ஹேன்ஸமா இருக்க… இன்னம் நல்லா பார்த்தா அளவான கட்டு மஸ்த்தான உடம்போட செக்ஸியா தான் இருக்க… அப்பறம் என்ன? நீயும் செம்ம பிகர் தான்…” என்று ரதி கூற கூற ராமிற்கும் கூட வெட்கம் வந்தது போல.

இடதுகரத்தால் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டு அவர் பக்க கிளஸ்சை இறக்கி கதவில் வலதுகர முட்டியை வைத்து மடக்கி இருவிரல்களால் இதழை மறைத்தார்.

ரதியும் அவரை பார்த்தே இருந்தாள்… காற்றில் ஆடும் அவரின் கேசத்தை கண்டு “டை அடிப்பீங்களா?” என்று கேட்க

“ம்ஹூம்…” என்றவருக்கு மூச்சிவிட கூட சிரமமாக இருந்தது… இந்த பெண் இது போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டு என்னை என்ன செய்கிறாள்? என்றே காரை ஓட்டினார்.

“என்னது நீ டை கூட அடிக்க மாட்டீயா!!! வாவ் வாவ் செம்ம… அந்த லேடி சொன்ன வயசுல உள்ள ஆளு மாதிரியா நீ இந்த வயசுல இருக்க? செம்மையா இருக்க… இருவத்தியேழு முப்பது வயசு பிசினஸ் மேன் மாதிரி அழகா தான் இருக்க…” என்றவளின் வார்த்தையில் ராம் உண்மையில் விழுந்து தான் போனார்.

ஆனாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் “ஓகே ஓகே போதும்… ஐஸ் ரொம்ப ஓவரா போகுது… நீங்க எப்படி எல்லா நேரத்துக்கும் தகுந்த மாதிரி பேசுவீங்கன்னு உங்க டாடி சொல்லி நான் கேட்டு இருக்கேன்… சொல்லுங்க மேடத்துக்கு இப்ப என்ன வேணும்?” என்று கேட்க

“வெரி ஸ்மார்ட்… கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே… முதல்ல என்னைய ஒரு நல்ல துணி கடைக்கு கூட்டிட்டு போ… பாரு நான் உன் ஷர்ட் உன்னோட பாக்ஸரும் போட்டு இருக்கேன்… இத பாத்து தான் அந்த லேடி அவங்களுக்கு எல்லாம் பொண்ணுங்க இருக்காங்க… என்னைய பார்த்து கெட்டு போவாங்கனு எடுத்ததும் சொன்னது…” என்றாள்.

என்ன தான் இழுத்து மூடி புடவை கட்டி இருந்தாலும் அவங்க இப்படித்தான் பேசி இருப்பாங்க என்று நினைத்த ராம் “சாரி… நான் டிரஸ் பத்தி யோசிக்கல… முல்ல கடைக்கு போகலாம்…” என்று பெரிய ஷாப்பிங் மால் முன்னாடி நிறுத்தினார்.

கார் நின்றதும் ஒருவர் வந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு காரை பார்க் செய்ய செல்ல ரதியை அழைத்துக்கொண்டு கடைக்குள்ளே நுழைந்தார்.

“உங்களுக்கு என்ன வேணுமோ எடுத்துக்குங்க…” என்று ராம் கூறும் போதே

அவரின் கரத்தை நறுக்கென கிள்ளியே “நான் உன்னைய வா போனு தானே கூப்பிடுறேன்… நீ மட்டும் எதுக்கு நீங்க வாங்க போங்கன்னு சொல்லி என்னைய கிழவியா ஆக்க பாக்குற? ஒழுங்கா நீயும் என்னைய நீ வா போனு கூப்பிடு… அப்பதான் நான் போய் டிரஸ் வாங்கிட்டு வருவேன்… இல்லன்னா டெய்லியும் உன்னோட சட்டையும் உன்னோட பாக்ஸரையும் போட்டுக்கிட்டு தான் உன் வீட்டில் உன்னைய வாங்கி கட்டிக்க வைப்பேன்…” என்றதும் அதிர்ந்து ராம் அவளை பார்க்க

அவளோ “என்ன பார்க்குற? அப்படி போட்டா அந்த மூனு லேடிங்களும் திட்டும் தானே… எனக்கு நல்லா என்டர்டைனிங்கா தான் இருக்கும்… உனக்கு தான் பிரச்சனை சொல்லிட்டேன்…” என்றவள் அவளுக்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு இப்ப என்ன சொல்ற என்று கேட்பது போலவே கண்ணடித்து நின்றுவிட்டாள்.

ராமிற்கு தான் முகமெல்லாம் வியர்த்துவிட்டது… சுற்றி முற்றிலும் பார்த்தார் யாராவது அவள் கண்ணடித்ததை பார்த்து விட்டார்களா என்று… அந்தக் கடையில் வேலை பார்த்த அத்தனை பெண்களும் பார்த்து தான் இருந்தனர்… ஆனால் என்ன? ராம் பார்க்கும்பொழுது பார்க்காதது போலவே வேலை பார்ப்பதாக பாசாங்கு செய்தனர்.

அவர்கள் பாசாங்கு செய்கின்றனர் என்பதனை அறிந்த ராம் ரதியை முறைத்து “என்ன பண்ற? பப்ளிக் பிளேஸ்ல கண்ணடிக்கிறது எல்லாம் என்ன பழக்கம்?” என்று பற்களை கடித்துக்கொண்டு கேட்க

“பாருடா… நான் கண்ணடிச்சதும் சாருக்கு நீ வா போங்குற மரியாதை குறைந்த வார்த்தைகள் வந்துடுச்சு… ம்… இப்பதான் நீ என்னோட வேவ் லெந்துக்கு வந்து இருக்க…” என்று கூறியே ஆடையை பார்க்க சென்றாள்.

ராமுக்கோ “என்னடா இப்புடி உன் பொண்ண வளர்த்து வச்சிருக்க?” என்று நண்பனிடம் கேட்பதாக நினைக்க மட்டும் தான் முடிந்தது… நண்பனை போலவே இவனை வம்பு செய்வதில் ரதி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தாள்.

அதை அறிந்துக்கொண்ட ராமும் எதுவும் நடவாதது போலவே ரதியின் பின்னாடியே போனார்.

ரதி எடுத்த ஆடைகளை எல்லாம் ராம் தனி அறையில் தொலைக்காட்சியிலோ அல்லது மொபைலில் பார்க்க கூட கூச்சப்படுவது போன்ற ஆடைகளை தான் எடுத்தாள்… ஒருவேளை உள்ள போடுறது போல என்றே நினைத்து

“நான் கொஞ்சம் வெளிய இருக்கேன்… நீ வாங்கிக்கிட்டு வந்துடுறியா?” என்று கேட்க

“ஏன்? என்ன ஆச்சி? இங்கையே இரு… அடுத்த தடவை எல்லாம் எனக்கு நீ தான இதயெல்லாம் வாங்கணும்… நல்லா எல்லாத்தோட பிராண்டையும் பார்த்துக்கோ… அப்ப தான் வாங்க ஈசியா இருக்கும்…” என்று கூறி அவள் எடுத்த ஆடைகளை எல்லாம் போட்டு பார்க்கும் அறைக்குள்ளே நுழைந்துக்கொண்டாள்.

ராமுக்கோ அவள் சொல்லி சென்ற வார்த்தைகளே செவியில் விழுந்துக்கொண்டு இருந்தது… “என்ன சொல்றா? எல்லாம் புரிஞ்சி தான் சொல்றாளா? நான் ஏன் இதெல்லாம் வாங்கணும்? அவள கூட்டிக்கிட்டு வந்தா அவளே இதெல்லாம் வாங்கிக்க மாட்டாளா?” என்றே நினைத்துக்கொண்டு நின்றவர் முன் வந்து நின்ற ரதியை கண்டவர் நெஞ்சி அடைக்காதது தான் மிச்சம்.

பாய்ந்துக்கொண்டு சென்று அவளின் முன் நின்றார் யாரும் அவளை பார்த்துவிட கூடாது என்று… அவளோ அதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் “என்ன ராம் இது ஓகேவா? கொஞ்சம் பெருசா இருக்குற மாதிரி இருக்குல…” என்றவளின் மேலும் கீழும் மட்டும் மறைத்தது போல் இருக்கும் அவளை பார்க்க கூட முடியாமல் பார்வையை திருப்பி

“என்ன கண்றாவி டிரஸ்… இதெல்லாம்மா ட்ரையல் பாத்துட்டு வந்து எப்படி இருக்குன்னு கேப்ப?” என்று கேட்க

“ஏன் ராம் நான் போட்டுருக்க டிரஸ் நல்லா இல்லையா? இது நல்லா தானே இருக்கு… இந்த மாதிரி டிரஸ் தான் போட எனக்கு கம்ஃபோர்ட்டபிள்லா இருக்கும்…” என்றவளை அதிகம் அதட்டக் கூட அவரால் முடியவில்லை.

ஆகையால் “ரதி… போடுற ட்ரெஸ் அடுத்தவங்க கண்ண உருத்தக்கூடாதும்மா…” என்று கொஞ்சலாக சொல்ல

“ஏன் ராம் உன் கண்ணுக்கு நான் போட்டு இருக்குற டிரஸ் உருத்துதா? இந்த டிரஸ்ஸ போட்டா என்னைய தப்பா பாக்க தோணுதா? நான் தப்பான பொண்ணு மாதிரி இருக்கா?” என்று அவள் அப்பாவி பிள்ளை போலவே கேட்க

“என்ன திருப்பி நம்மளையே கேக்குறா?” என்று கொஞ்சம் ஜெர்க் அடித்தாலும் தன்னை சமன் செய்தே “ரதிம்மா இந்த டிரஸ்ஸ நீ ரூம்ல போட்டுக்கலாம்… ஏன் என் முன்னாடி போட்டுக்கலாம்… ஆனால் வெளிய வேணாம்… இன்னம் அழகழகான மாடர்ன் டிரஸ் எல்லாம் இருக்குல்ல… அதை பாரேன்…” என்று தன்மையாக கூற

முகத்தை ஒரு வெட்டு வெட்டியே “எந்த மாதிரி டிரஸ் போட்டாலும் என்னைய பத்திரமா பாத்துக்குற பொறுப்பு உன்னுதானே… நீதானே என்னுடைய கார்டியன்… என்னைய இந்த மாதிரி டிரஸ் போட்டா பத்திரமா பாத்துக்க மாட்டியா?” என்று கேட்டே அறையின் உள்ளே நுழைந்து கதவை அடைத்தாள்.

அவளை இனி உயிரில் வைத்து பாதுகாக்க போகும் ராமும் “இந்த உலகத்திலேயே எனக்கு இருக்கிற முதலும் கடைசியுமான முக்கிய வேலையே உன்னைய பத்திரமா பாத்துக்கிறது மட்டும் தான்… அதுக்கப்புறம் தான் மத்த எந்த வேலையா இருந்தாலும்…” என்று சொல்ல

“பொய் சொல்லாதடா…” என்று பட்டென வார்த்தை ரதியிடம் இருந்து வந்தது.

ராமிற்கு உரிமையாக அவள் கொள்ளும் கோபம் பிடித்தது… சின்ன புன்னகையுடனே அவள் இருந்த அறையின் கதவின் மீது கை வைத்தே

“உன்கிட்ட யாரையும் வர விடாம என்னால தடுக்க முடியும்… ஆனால் நீ இந்த மாதிரி டிரஸ் போட்டா பார்க்குறவன் பார்வையை என்னால தடுக்க முடியாது… பயந்து பார்க்கலனு நம்ப முன்னாடி நடித்தாலும் தனியா உன்னைய நினைச்சாங்கனா…” என்று சொல்லும் போதே

“போதும் போதும் உன்னோட எக்ஸ்பிளநேஷன நீயே வச்சிக்கோ…” என்று உள்ளிருந்தே கத்தினாள்.

ரதி வருவாள்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page