அத்தியாயம் 6

காலையில் அலுவலகம் செல்லாமல் மூச்சு வாங்க மகனின் அறைக்கு ஓடினார் சங்கர். 

 

அஸ்வந்த்தின் அறை கதவு எப்பொழுதும் திறந்து தான் இருக்கும். அவனின் அறை கதவை வேகமாக தள்ளி திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். 

 

டேய் அஸ்வந்த் என்று அமர்ந்திருக்கும் அவனின் கால்களை பற்றி அழுதார். 

 

அஸ்வந்த் சோர்வான முகத்துடன் தன் தந்தையை பார்த்தான். அவரின் அழுகை அவனுக்கு சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

மகன் என்னவென்று கேட்க மாட்டான் என்று தெரிந்த சங்கர், உன் அம்மா…..  உன் அம்மா என்று மூச்சை இழுத்து பிடித்து கண்ணீர் வடித்தார். 

 

அம்மாக்கு என்னாச்சு? பதட்டத்தில் எழுந்து நின்றான். அவன் பெற்ற “முத்து”  தந்தையின் குரலிலும் தாத்தாவின் குரலிலும் கேட்டதில் வீல் என்று அழுதது. 

 

பேரனின் அழுகை காதில் விழுந்தாலும் தான் நினைத்ததை முடிக்க சித்தம் கொண்டு, ” உன் அம்மா விஷம் சாப்பிட்டா டா ” என்று கதறினார் சங்கர் . 

 

ஆனால் ஏன்? என்றான் அஸ்வந்த். 

 

என் பொண்டாட்டி மேல யாருக்கும் பாசமோ அக்கறையோ இல்லை என்று புலம்பிய சங்கர், ” பாரு நானும் உன்னோடவே வரேன் டி ” என்று சத்தமாக அழுது கொண்டு அறையை விட்டு நகரும் நொடி, 

 

சரோஜா அக்கா என்ற குரல் கேட்டது. வேறு யார் நம் நாயகன் தான் தன் வீட்டில் வேலை செய்யும் நம் சரோஜா அக்காவை அழைத்தான். 

 

நாற்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்மணியும் ” தம்பி ” என்று அழுது கொண்டு வர, 

 

“என் பையன் அழுறான் அவனை கொஞ்சம் கவனிங்க ” என்று கூறிவிட்டு தந்தைக்கு முன் பாய்ந்து அறையை விட்டு சென்றான். 

 

அங்கு சோபாவில் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் மூச்சுக்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார். பாரிஜாதம். 

 

“ஐயோ பாரு” என்று மனைவியின் நிலை எண்ணி கதறினார் அந்த தந்தை. 

 

அம்மா அம்மா என்று சத்தமாக தாயை தட்டி எழுப்பிய அஸ்வந்த்,”  சீக்கிரம் போய் கார் டோர் ஓபன் பண்ணுங்க ப்பா ” என்று கூறிவிட்டு தாயை இரு கைகளாலும் தூக்கி சாக்கு மூட்டையை போல் தோளில் போட்டான். 

 

சங்கர் வேகமாக கார் டோர் ஓபன் செய்ய தாயை அதில் மெதுவாக படுக்க வைத்தவன், அவனே காரை ஓட்ட தயாராகினான்.

 

கார் சாலையில் சீறி கொண்டு சென்றது. 

 

சங்கர் மருத்துவமனை வரும் வரை கதறி கொண்டே வந்தார். 

 

கார் வேகமாக பிரேக் அடித்து நின்றது. சங்கர் தன் நெஞ்சில் கை வைத்தார். 

 

ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி வந்த அஸ்வந்த் பூ குவியல் போய் தாயை மறுபடி அள்ளினான். 

 

செவிலியர்கள் மூச்சுக்கு சிரமப்படும் பாரிஜாதத்திற்கு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டி இழுத்து சென்றனர். 

 

என்னாச்சு என்று கேட்டாள் ஒரு செவிலி. 

 

விஷம் சாப்பிட்டாங்க என்றான் அஸ்வந்த். 

 

என்னது என்று அதிர்ந்த செவிலி இது போலீஸ் கேஸ் சார் என்றாள். 

 

நீங்க ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க. நான் பார்த்துக்கறேன் என்றான் அஸ்வந்த். 

 

சங்கர் செவிலியை பார்த்து ஒரு கண்ணை அடித்தார். 

 

செவிலி சீரியசாக முகத்தை வைத்து வேகமாக சென்றாள். 

 

வேகமாக சீஃப் டாக்டர் சென்றார்.

 

அஸ்வந்த் மற்றும் சங்கர் இருவரும் வெளியில் காத்திருந்தனர். 

 

அந்த கண்ணாடி கதவை திறந்து கொண்டு வந்தாள் மற்றொரு செவிலி. 

 

சார் பேசன்ட் டிரீட்மென்ட் செய்ய ஒத்துழைக்க மாட்டிக்கிறாங்க என்றாள். 

 

எங்க அம்மா பேசுறாங்களா? என்று கேட்டான் அஸ்வந்த். 

 

ஆமா சார். ஆனால் ட்ரீட்மென்ட் செய்ய ஒத்துழைக்க மாட்டிக்கிறாங்க என்றாள். 

 

அஸ்வந்த் யாரு? என்று வேகமாக வந்தாள் மற்றொரு செவிலி. 

 

நான் தாங்க என்றான் அஸ்வந்த். 

 

சார் உங்க அம்மா உங்ககிட்டே பேசணும்னு சொல்லுறாங்க. ப்ளீஸ் வாங்க. அப்பறமா தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றாள். 

 

அஸ்வந்த் அந்த கண்ணாடி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். 

 

பாரிஜாதம் மூச்சுக்கு சிரமப்பட்டு அஸ்வந்தை பார்த்து கண்களை மூடி திறந்தார். 

 

அஸ்வந்த் தாயின் அருகில் சென்று அவர் கைகளை பற்றி ” உங்களுக்கு ஒன்னும் ஆகாது மா. நான் இருக்கேன். நீங்க ப்ளீஸ் கோஆப்பரேட் பண்ணுங்க ” என்றான். 

 

மூக்கில் மாட்டப்பட்டிருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்டிய பாரிஜாதம், “எனக்கு வாழ விருப்பம் இல்லை பா ” என்றார். 

 

அந்த நொடி அஸ்வந்த்தின் கண்களில் இருந்து நீர் கொட்டியது. 

தன் மனைவி சுகன்யா பெட்டில் படுத்து பேசுவது போல் கற்பனை வந்தது. 

 

மருத்துவர் ஓரமாக நின்று இருந்தார். 

 

இல்லை சுகி ” நான் இருக்கேன் டி உனக்கு ” ஒன்னும் ஆகாது டி என்றான். 

 

அந்த தாயின் மனமோ ரணமாக இருந்தது. 

 

சார் சீக்கிரம் என்ன விஷம்ணு கண்டுபுடிச்சா தான் அதுக்கேற்ற ட்ரீட்மென்ட் பண்ணலாம் என்றாள் செவிலி. 

 

இப்பொழுது அஸ்வந்த்தின் கண்களில் பாரிஜாதம் தெரிந்தார். அஸ்வந்த் நிகழ் உலகுக்கு வந்தான். 

 

ஏன் மா இப்படி பேசுறீங்க? அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு? வாழ விருப்பம் இல்லைனு சொல்லுறீங்க. 

 

என்ன பிரச்சனையா? அந்த நிலையிலும் உதட்டில் புன்னகையை வைத்த பாரிஜாதம் ” என் பையன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே! ” என்று கண்ணீர் வடித்தார். 

 

“அது முடிஞ்சு போச்சு ம்மா  ” என்று விரக்தியான குரலில் கூறினான். 

 

இல்லை ப்பா நீ நினச்சா உன்னோட வாழ்க்கையை புதுப்பிச்சிக்க முடியும் என்றார் பாரிஜாதம். 

 

தாய் கூறும் வார்த்தை புரியாமல் இருக்க அவன் ஒன்னும் சிறுவன் இல்லையே. அவனின் கண்கள் ரத்த சிவப்பாக மாறியது. 

 

பாரிஜாதம் எச்சில் விழுங்கினார். அம்மா சொல்லுறதை கேட்பியா ப்பா இன்னொரு கல்யாணம்.. என்று அவர் வாய் திறக்க, 

 

முடியாது என்றான் சத்தமாக. 

 

என்ன சார் இது? உறவுகளுக்கு மரியாதை கொடுத்து தான் நாங்க உங்கள உள்ள அனுமதிச்சோம். நீங்க என்னனா ஒரு உயிர் கடைசி நேரத்துல கேட்குறதை கூட நிறைவேற்ற மாட்டிக்கிறீங்க என்றார் மருத்துவர். 

 

நான் இப்படியே போயிடுறேன் ப்பா என்றார் பாரிஜாதம். 

 

ஏன் மா? என்றவன் கண்களை இறுக மூடினான். அவனின் கண்களுக்குள் சுகன்யா வட்டம் அடித்தாள் . 

 

கண்களை திறந்தான் தாயின் இந்த நிலையை அவனால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை. தனக்காக தான் இப்படி ஒரு நிலைக்கு வந்தாரா என்று மனம் வேறு கசிந்தது.  

 

” சரி ” என்று கூறி விட்டு கண்ணாடி கதவை திறந்து வெளியே சென்றான். 

 

பாரிஜாதம் முகத்தில் பூக்கள் மலர்ந்தன. 

 

அறை மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார். 

 

சங்கர் கலங்கிய கண்களோடு மருத்துவரின் அருகில் செல்ல ” ஷி இஸ் சேஃப் ” என்றார் மருத்துவர். 

 

தேங்க் யூ சார் என்று அவரின் கைகளை பற்றினார் சங்கர். 

 

நீங்க வாங்க என்று சங்கரை அழைத்து கொண்டு சென்றார் மருத்துவர். 

 

அம்மா பொழச்சிட்டாங்க. அதுவே போதும். அம்மாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டு அப்பறமா பேசிப்போம் என்று நினைத்தான் அஸ்வந்த். 

 

தாய் சிகிட்சைக்கு ஒப்பு கொள்வதற்காக மட்டுமே ” சரி ” என்று கூறினான் அஸ்வந்த். 

 

****

 

ரொம்ப தேங்க்ஸ் சார் என்றார் சங்கர். 

 

இட்ஸ் ஓகே. நீங்க ரொம்ப பிரஷர் பண்ணதால தான் நான் ஒத்துக்கிட்டேன். அதுவும் தப்பு பண்ற மாதிரி எனக்கு தோணுனதால தான் நான் எதும் பேசாமல் என்னோட  நர்ஸ்ஸை பேச விட்டேன் என்றார் மருத்துவர். 

 

நீங்க எங்களுக்கு ரொம்ப பெரிய நல்லது பண்ணிருக்கீங்க சார். நானும் என்னோட மனைவியும் அதை எப்பவும் மறக்க மாட்டோம் என்று கூறி விட்டு சென்றார் சங்கர். 

 

என்னாச்சு ப்பா. அம்மா ஓகே தான என்று கேட்டான் அஸ்வந்த். 

 

ஓகே தான் ப்பா. 

 

அப்போ ஏன் டாக்டர் உங்கள தனியா கூப்பிட்டு போனாரு ? 

 

அம்மா நார்மல் ஆக ரெண்டு நாள் ஆகுமாம். அப்பறம் தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்களாம் என்றார். 

 

அம்மாவை பார்க்கலாமா அப்பா? 

 

ஆமா டா. ஆனால் ஒவ்வொருத்தரையா போக சொன்னாங்க என்று பொய்யை கூறி விட்டு ” நான் போய் பார்க்குறேன் டா” என்று சோகமாக முகத்தை வைத்து சென்றார் சங்கர்.

****

 

கணவரை பார்த்த பாரிஜாதம்” என்னங்க அவன் ஓகே சொல்லிட்டான் ” என்று துள்ளளோடு கூறினார். 

 

சங்கர் மனைவியின்  காதருகில் குனிந்தார். ஏதோ ரகசியம் தான் கூற வருகிறார் நம் கணவன் என்று நினைத்த பாரிஜாதம் அவரின் காதுகளை தீட்டினார். 

 

உன் பையன் குளிக்காம நாறிட்டு தான் ரூம்ல இருப்பானு நினச்சேன்  டி. ஆனால் டெய்லி குளிக்க தான் செய்யுறான் போல. ரூம் தான் டேர்ட்டியா இருக்குது என்றார். 

 

ஏகத்துக்கும் தன் கணவரை முறைத்து வைத்தார் பாரிஜாதம். 

 

ரொம்ப ஓவரா பேசாதீங்க என்று கணவரை மிரட்டி வைத்தார். 

 

மனைவியின்  மிரட்டலில் சிரித்தார் சங்கர். பாரிஜாதமும் சேர்ந்து சிரித்தார். 

 

இருவரும் கைகளை மடக்கி வைத்து ஒன்றாக இடித்து கொண்டு ” சக்ஸஸ் ” என்றனர். 

 

*****

 

இரண்டு நாட்கள் கழித்து பாரிஜாதத்தை வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

 

தாயின் தோள்களை பிடித்து அழைத்து வந்தான் அஸ்வந்த். 

 

நான் சோபால இருக்கேன் பா என்று அமர்ந்தார் பாரிஜாதம். 

 

தாயை அமர வைத்தவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் சுவற்றை பார்த்து கண்ணீர் வடித்தான். 

 

சுகன்யா அஸ்வந்த் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம்  சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.

 

அதை பார்த்தவனின் மனம் தன் மனைவியிடம் சென்றது. அவளின் கன்னக்குழியில் விழுந்து கிடந்த நினைவு வந்தது. அவளின் கன்னங்களை கிள்ள ஆசையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவன் நினைத்தாலும் அவள் வர மாட்டாளே!  என்று எண்ணியவனின் விழிகளில் இருந்து நீர் பெருக்கெடுத்தது. 

 

அவனின் விழி நீரை பார்த்த பெற்றவர் இருவரும் ஆடி போனர். 

 

அவனின் விழிநீரை கண்ட பாரிஜாதம் துடித்து போனார். மகனை தனியாக விட்டால் காலத்துக்கும் துடித்து விடுவானே என்று உள்ளுக்குள் கதறினார். 

 

நாளைக்கு பொண்ணு பார்க்க போவோம் என்றார் பாரிஜாதம். மகன் கோபப்பட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவன் உடைந்து அழுவதை அவரால் பார்க்க முடியவில்லை. மகனை சுய நினைவுக்கு இழுத்து வந்தார் அந்த தாய். 

 

நான் ஹாஸ்பிடல்ல வச்சி சொன்னது சும்மா தான். நீங்க நல்ல படியா குணம் ஆகணும்னு நினைச்சி தான் பொய் சொன்னேன் அம்மா என்றான் அஸ்வந்த. 

 

தாய் தந்தை இருவரும் அரண்டு போயினர் அவனது வார்த்தையில். 

 

தொடரும். 

 

நீங்க ஸ்மைலி கொடுத்தா தான் friends எனக்கு தெரியும் என்னோட ஸ்டோரி எத்தனை பேருக்கு புடிச்சிருக்குனு. மறக்காமல் ஸ்மைலியும் கமெண்டும் பண்ணுங்க. 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
867 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page