அத்தியாயம் 7
மூவரும் பேசிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைய எத்தனித்த சரஸ்வதியின் காதுகளில் ரஞ்சித் சொன்னது தெளிவாக கேட்டு விட அப்படியே அதிர்ந்து நின்றார் சரஸ்வதி.
“ரஞ்சித் என்ன சொல்ற தெளிவா சொல்லு எனக்கு புரியல?” என்று விதுரன் சொல்ல, ” இப்ப டைவர்ஸ் கேஸ்க்கு அப்ளை பண்ணுனால் ஆறு மாசம் உங்க ரெண்டு பேரையும் சேர்ந்து வாழ சொல்லுவாங்க! ஆனால் நீ நெனச்சால் ஆறு நாள்ல கூட அவளை வீட்டை விட்டு அனுப்பலாம்” என்று ரஞ்சித் சொல்ல அதிர்ச்சியாக பார்த்தான் விதுரன்.
“எப்படி” என்று ஆர்வமாக மனுஷா கேட்க, “நீங்க கொடுக்கிற மெண்டல் டார்ச்சர்ல அவளே விதுரனோட வாழ முடியாதுன்னு சொல்லி இந்த வீட்டை விட்டு கிளம்பி போகணும்!” என்று கூறினான் ரஞ்சித்.
“மெண்டல் டார்ச்சரா?” என்று மனிஷா சந்தேகமாய் கேட்க , ” மெண்டல் டார்ச்சரா கொடுத்துட்டா போச்சு!” என்று சிரித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்திருந்த விதுரன் எழுந்தான்.
விதுரன் சொன்னதை கேட்ட ரஞ்சித்தின் மனம் குத்தாட்டம் போட ஆரம்பித்தது.
‘என்னோட சேர்ந்து வாழ புடிக்கலைன்னு நீ அவனை கல்யாணம் பண்ணுன பிரதிக்ஷா , எப்படி அவனோட நீ சேர்ந்து வாழ்கிறேன்னு நான் பாக்குறேன்!
ஏற்கனவே நீ என்கிட்ட மோதுனால தான் உன்னைய கல்யாணம் பண்ணி என் கைக்குள் அடக்கி வச்சு உன்னைய பழி வாங்கலாம்னு நினைச்சேன்.ஆனால் நீ தெரிஞ்சோ தெரியாமையோ என்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட, ஆனாலும் நீ எங்க போனாலும் என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாது! உனக்கு வில்லன் நான் தான் ‘ என்று மனதில் வன்மமாக நினைத்தான் ரஞ்சித்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த அனைத்தையும் கேட்டு சரஸ்வதி அதிர்ச்சியடைந்தாலும், தன் அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் எதுவும் தெரியாதது போல் அறைக்குள்ளே நுழைய, மூவரும் சரஸ்வதியை பார்த்தனர்.
ரஞ்சித் மட்டும் சரஸ்வதியை பார்த்து குறுநகை புரிந்தான். சரஸ்வதியும் ரஞ்சித்தின் புன்னகையை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல்,
“இங்க பாரு விதுரா, நீ என்ன முடிவு எடுத்து இருக்கேன்னு எனக்கு தெரியாது, என்னோட முடிவு என்னன்னு சொல்றேன். அதைக் கேளு, கேஸ் எதுவும் கொடுக்க வேண்டாம்! கொஞ்ச நாள் அமைதியா இரு. அதுக்கு அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம் அவசரப்பட்டு எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்யாத! பிரச்சனை இன்னும் பெருசாகிரும்!” என்று சரஸ்வதி சொல்ல யோசிப்பதை போல காட்டினான் விதுரன்.
“எனக்கு அவளைப் பார்த்தாலே புடிக்கல, இப்ப கூட அவளை வீட்டை விட்டு அனுப்புவதற்கு எனக்கு ஏதாவது வழி கிடைச்சா உடனே அனுப்பி விடுவேன். ஆனால் நீங்க இவ்வளவு சொல்றதால நான் பொறுமையா இருக்கேன். அவ மேல எந்த கேசும் கொடுக்கல.ஆனால் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணுவேன்! அதை மட்டும் நீங்க தடுக்க கூடாது!” என்று விடாப்பிடியாக கூறினான் விதுரன்.
இப்போதைக்கு இது போதும் என்று சரஸ்வதிக்கும் தோன்ற, ” உன் இஷ்டம் போல நீ செய். ஆனால் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு செய்!” என்று சரஸ்வதி கூறினார்.
“சரி ரஞ்சித், நீ ரெண்டு பேரும் மியூச்சுவலா பிரியறதுக்கு டாக்குமெண்ட் ரெடி பண்ணி கொண்டு வா நான் அவகிட்ட சைன் வாங்குறேன். நீ கோர்ட்டுல டாக்குமெண்ட்ட சப்மிட் பண்ணிட்டு என்ன செய்யனுமோ அதை செய்!” என்று விதுரன் கூற சரி என்று தலையசைத்தான் ரஞ்சித்.
விதுரன் சொல்லவும் ரஞ்சித் சரஸ்வதியை பார்த்து குருநகை புரிந்தான். பேசி முடித்துவிட்டு இறங்கி வந்த விதுரன் அங்கு நின்ற அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அவன் அறைக்குள் சொல்ல அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
“சரி அம்பிகா மருமகள எவ்வளவுநேரம் இப்படியே நிக்க வச்சுக்கிட்டு இருப்பியா?” என்று சரஸ்வதி கேட்க,” “மன்னிச்சிரு சரசு இங்கே நடந்த பிரச்சனையில் என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே நின்னுட்டேன்!” என்று கூறினார் அம்பிகா.
“டிராவல் பண்ணிட்டு வந்தது ரொம்ப டயர்டா இருக்கும், நீ வந்து ரெஸ்ட் எடும்மா!” என்று சொல்லிக்கொண்டு அம்பிகா பிரதிக்ஷாவை அழைத்துக் கொண்டு போனார். திடீரென்று ரேணு பிரதிக்ஷாவின் அருகில் வந்து,
“அண்ணி உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம்! என்னோட அண்ணியா என் வீட்டிலேயே உங்கள பார்ப்பேன்னு நினைச்சு கூட பாக்கல!” என்று சொல்லிவிட்டு பிரதிக்ஷாவின் அருகிலேயே நடந்து அவளின் அறைக்கு சென்றாள் ரேணு.
ரேணுவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்த பிரதிக்ஷா “எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?” என்று பிரதிக்ஷா கேட்க, ” சொல்லுங்க அண்ணி என்ன சந்தேகம் அண்ணி ” என்று கேட்டாள் ரேணு.
“உங்க அண்ணனோட கல்யாணம் நீங்க இல்லாம நடந்துட்டு, உங்களுக்கு வருத்தம் இல்லையா? அதுவும் எங்க கல்யாணம் எந்த சூழ்நிலையில நடந்துச்சுன்னு தெரிஞ்சும் நீயும் உங்க அம்மாவும் எப்படி அமைதியா இருக்கீங்க?” என்று கேட்க,சிரித்தாள் ரேணு.
“என்னாச்சு சிரிக்கிற பதில் சொல்லு!” என்று பிரதிக்ஷா கேட்க, ” அண்ணி உங்கள எங்களுக்கு நல்லா தெரியும்! உங்களை நிறைய வாட்டி நானும் அம்மாவும் பார்த்து இருக்கோம்! உங்களுக்குத்தான் எங்களை தெரிவதற்கு வாய்ப்பு இல்லை!” என்று ரேணு கூற அதிர்ச்சியானாள் பிரதிக்ஷா.
“என்னைய தெரியுமா? என்ன சொல்ற!” என்று பிரதிக்ஷா கேட்க, ” ஆமாம் அண்ணி உங்களை எங்களுக்கு தெரியும்!” என்று கூறினாள் ரேணு.
“அதான் எப்படி தெரியும்னு கேட்டேன்?” என்று பிரதிக்ஷா ஆர்வமாக கேட்க , ” அதை இப்ப சொல்ல மாட்டோம் நேரம் வரும்போது சொல்லுவோம்! அவசரப்படாதீங்க இப்பயே தெரிஞ்சுட்டா அதுல சுவாரசியம் இருக்காது!” என்று சொல்லிவிட்டு கண்ணடித்தாள் ரேணு.
இவர்கள் இருவரும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்தனர் லட்சுமியும் ரம்யாவும்!
அவர்கள் இருவரும் ரேணுவை பார்த்து தயங்கி நிற்கவும் அதை புரிந்து கொண்ட ரேணு, ” சரி நீங்க பேசுங்க, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வந்துடறேன் அண்ணி!” என்று சொல்லிவிட்டு நாகரிகமாக வெளியில் சென்றாள் ரேணு.
ரேணுவின் நடவடிக்கைகள் எல்லாம் பிரதிக்ஷாவிற்கு பிடித்து விட்டது.
“பிரதிக்ஷா எனக்கு என்னமோ பயமா இருக்கு!” என்று லட்சுமி சொல்ல,
“அம்மா பயப்படாதீங்க எல்லாத்தையும் பாத்துக்கலாம்! பொய் சொல்லி கல்யாணம் பண்ணனும்னு நான் முடிவெடுக்கும் போதே இவ்வளவு பிரச்சனைகளும் வரும்னு தெரிஞ்சு தான் பண்ணுனேன். பிரச்சனைகளை எல்லாம் எப்படி ஃபேஸ் பண்றதுன்னு எனக்கு தெரியும் என்னை பத்தி நீங்க கவலைப்படாதீங்க, எல்லா பிரச்சனையும் நான் பாத்துக்குறேன்!” என்று தைரியமாக கூறினாள் பிரதிக்ஷா.
“நீ தைரியமா பேசுறத பாத்தா சந்தோசமா தான் இருக்கு. ஆனாலும் நீ பண்றது தப்புன்னும் தெரிஞ்சு உன்னை தடுக்காம விட்டுட்டேனும் பயமா இருக்கு, விருப்பம் இல்லாத கல்யாணத்த பண்ணி நான் என் வாழ்க்கையில கஷ்டப்பட்ட மாதிரி நீயும் கஷ்டப்பட்டுட கூடாதுன்னு நினைச்சு தான் நீ பண்ணுனதை பார்த்துட்டு அமைதியா இருந்துட்டேன், ஆனால் உனக்கு புடிச்ச வாழ்க்கையின்னு நீ நினைக்கிற வாழ்க்கையே உன் நிம்மதி சந்தோசம் எல்லாத்தையும் அபகரிச்சுருமோன்னு எனக்கு பயமா இருக்கு!” என்று கண் கலங்கினார் லட்சுமி.
” கவலைப்படாதீங்க!” என்று சொல்லிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தார் அம்பிகா.
“என்ன சம்பந்தி, கண்ணெல்லாம் கலங்கி இருக்கீங்க! நாங்க இருக்கும்போது நீங்க கண் கலங்கலாமா! கவலைப்படாதீங்க ரேணு எப்படியோ அப்படித்தான் எனக்கு பிரதிக்சாவும், எல்லா சூழ்நிலையிலும் பிரதிக்ஷா கூட இருந்து கண்டிப்பா அவளை நல்லபடியா பார்த்துக்கொள்வேன் நீங்க நம்புங்க!” என்று சொல்ல லட்சுமிக்கு நம்பிக்கை பிறந்தது.அம்பிகாவின் வார்த்தை லட்சுமிக்கு புது தைரியத்தை கொடுத்தது.
“சம்மந்தி அப்பா இல்லாத பொண்ணு நிறைய கஷ்டத்தை அனுபவிச்சுட்டா சரி அவளோட கல்யாண வாழ்க்கையாவது நல்லபடியா அமையனும்னு நினைச்சேன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமா இப்படி ஒன்னும் நடந்திருச்சு, மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப கோவக்காரர் மாதிரி தெரியுது. உங்களை நம்பி தான் என் மகளை விட்டுட்டு போறேன் நீங்க நல்லபடியா பார்த்துக்கோங்க!”என்று சொல்ல,
“கவலைப்படாதீங்க சம்பந்தி விதுரன் வெளி தோற்றத்தில் தான் வெரப்பா இருப்பான்! அவன் மனசு குழந்தை மாதிரி யாரையும் மனசு நோகுற மாதிரி கூட பேசக்கூடாதுனு நினைப்பான். கூடிய சீக்கிரத்துல ஒருத்தரு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சந்தோசமா நல்லபடியா வாழ்வாங்க. நீங்க எதை நினைச்சு கவலைப்படாதீங்க!”என்று லட்சுமிக்கு ஆறுதல் கூறினார் அம்பிகா.
இருவரும் பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தார் பிரதிக்ஷாவின் சித்தப்பா.
“சரி,அண்ணி போட்டது போட்டபடி அப்படியே இருக்கு! கல்யாண வேலை தொடங்கினதிலிருந்து கம்பெனி வேலைகள் எல்லாம் பெண்டிங்ல தான் இருந்துச்சு! இப்ப கூட ஒரு முக்கியமான வேலை இருக்கு, நம்ம கிளம்புவோமா?” என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்தார் பிரதிக்ஷாவின் சித்தப்பா,
“போவோம் தம்பி” என்று லட்சுமியும் சொல்ல “இங்க பாரு பிரதிக்ஷா நடந்தது நடந்து போச்சு இப்படி நடக்கும்னு நம்ம யாரும் எதிர்பார்க்கல! நீதான் மாப்பிள்ளையோட மனச மாத்தி மாப்பிள்ளையோட சேர்ந்து வாழணும்! மாப்பிள்ளை டைவர்ஸ்ன்னும் பேசிகிட்டு இருக்காரு எக்காரணத்தை கொண்டு டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிராத!” என்று எச்சரித்தார்.
எப்போதும் கோபமாகவும் எரிச்சலோடும் பேசும் சித்தப்பா இன்று பிரதிக்ஷாவின் வாழ்க்கையின் மேல் அக்கறை உள்ளவராக பேசியது பிரதிக்ஷாவிற்கு வியப்பை ஏற்படுத்தியது.
சித்தப்பாவின் எண்ணத்தைப் பற்றி அறியாத அளவிற்கு அவள் ஒன்றும் சிறு பிள்ளை இல்லையே!. அதனால் கடமைக்காக சரி என்பதை போல் தலையசைத்தாள் பிரதிக்ஷா.
“இங்க பாருடி விதுரனை எதுக்கு கல்யாணம் பண்ணுனேன்னு எனக்கு தெரியும்! உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்னு நினைச்சு தான் நீ சொன்ன திட்டத்துக்கு நான் சம்மதிச்சேன். ஆனால் நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டியோனு எனக்கு தோணுது. இங்க நடக்குற பிரச்சினைகளை எல்லாத்தையும் பார்த்தா பயமா இருக்கு. நீ தைரியமான பொண்ணு எனக்கு தெரியும். அதனாலதான் நானும்அமைதியா இருக்கேன். இல்லைனா இங்க இருந்து உன்னைய கூட்டிட்டு போயிருவேன். இது நீ ஆசைப்பட்ட வாழ்க்கை, அதனால நீ இங்கே நடக்கிற எல்லா பிரச்சனைகளையும் தாண்டி விதுரன் மனசுல இடம் புடிச்சு அவரோட கண்டிப்பா சேர்ந்து வாழுவனும் நான்நம்புறேன்,
உனக்கு தெரியும் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல அதனால என்னைய ஆஸ்திரேலியா வந்து கம்பெனிய பாத்துக்க சொல்லி இருக்காரு! இன்னும் ரெண்டு நாள்ல ஆஸ்திரேலிய போறேன். நீ என்ன பண்றன்னு அப்பப்ப எனக்கு தகவல் சொல்லு. என்னால முடிஞ்ச உதவிய உனக்கு செய்றேன். பார்த்து இருந்துக்க! நாங்க போயிட்டு வர்றோம்!” என்று சொல்லிவிட்டு அவளை இறுக்கமாக கட்டி பிடித்தாள் ரம்யா.
பிரதிக்ஷாவின் உறவினர்கள் அனைவரும் சரஸ்வதி அம்பிகாவிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி அவர்களின் வீட்டிற்கு செல்லவும் அவர்களை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் பிரதிக்ஷா.
“அதான் எல்லாரும் போயிட்டாங்களே ஏன் இன்னும் நடிச்சுக்கிட்டு இருக்க?” என்ற குரல் கேட்க , ‘யாரா இருக்கும்’ என்று அதிர்ந்து குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள் பிரதிக்ஷா.
