அவன் நினைத்ததை போலவே சீக்கிரமே மித்ராவுக்கு உடம்பு தெளிந்து விடுகிறது..
தனியாக நின்று கையில் குழந்தையை கையில் வாங்கப் போகும் போதுதான் ‘அடடா அம்மா அப்பாவிடம் கூட சொல்லாமல் இவளை அழைத்து வந்தேனே.. இந்நேரம் தேடி தவித்து இருப்பார்கள்.. என்ன என்று புரியாமல் கவலைப்பட்டு இருப்பார்கள்.. உடனே போன் செய்கிறேன் .., அப்பாவுக்கு கால் செய்கிறான் ..
அருகிலேயே அவரது குரல் கேட்பதைப் போல தோன்றுகிறது அவனுக்கு.. நிமிர்ந்து பார்க்கிறான் எதிரே அவர்.. “என்னடா எங்க இருக்க ..எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்ல முடியலையா..
நாங்கள் எல்லாரும் உனக்கு அந்நியமாய் போய் விட்டோமா.. ” என்று திட்டுகிறார் ..
“இல்லப்பா எனக்கு அவள் அலறுன அலறல்ல பயம் வந்துட்டு ..அதனாலதான் உடனே அழைத்து வந்து விட்டேன் ..நல்ல வேலையா வந்த நேரத்திற்கு குழந்தை பிறந்து விட்டது தெரியுமா..”
“அதுதான் தெரியுமேடா .. “என்றதும் குழம்பி பார்க்கிறான்.. அவர்களைக் கண்டதும் தான் மனம் நிம்மதியாகிறது ..இவனை பெற்றவர்களும் மித்ராவை பெற்றவர்களும் பதைப்புடன் அவன் அருகில் வந்து நிற்கிறார்கள்..
அப்பாவை கேள்வியாய் நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவரே பதில் சொல்கிறார்.. ” கழுதை கெட்டா குட்டிச் சுவரு ..இந்த நேரம் போயா நீ தேனிலவு சுற்றுலா போகப் போகிறாய்.. மருமகளுக்கு நிறை மாத சமயம்.. நீ வேற எங்க வரப்போகிறாய்..இந்த ஹாஸ்பிடலில் தான் இருப்பாய்
என்று நாங்களாகவே வந்து விட்டோம்.. “
அதற்குள் புவனாவே சிரித்த முகமாய் குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறாள்.. அவன் குழந்தையை வாங்க கையேந்துவதற்குள் கயல் அவன் கையை தட்டி விட்டு, ” ஆளைப் பாரேன், முதல் முதலாய் குழந்தையை வாங்கப் போகும் போது வெறும் கையை நீட்டுகிறான்.. நீ நகருடா உனக்கு ஒன்றும் தெரியாது ..ஏதோ என் மருமகளை அவசரமாய் கொண்டு வந்து சேர்த்தாய்..அதோடு உன் வேலை முடிந்தது.. இனிமேல் நீ ஒதுங்கிக் கொள் ..நானும் என் அண்ணியும் பார்த்துக் கொள்கிறோம்.. அண்ணி அதை எடுங்க..” என்றதும் அரவிந்த் கொஞ்சம் பயமாக பார்க்கிறான்.. எதை எடுக்க சொல்கிறார்கள் என்று..
மீனு அதை எடுத்ததும் தான் பயம் நீங்கி சந்தோஷமாக ஆகிறது.. அட்டா என்ன இருந்தாலும் வயதில் மூத்தவர்கள் மூத்தவர்கள் தான்.. வேகமாய் ஓடி வந்தேனே தவிர எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை .. “
வெண் பட்டுத் துணியை கயலின் கைகளில் விரித்துக் கொடுத்து விட்டு கொஞ்சம் விலகி நின்ற மீனுவையும் கூப்பிட்டு , “அண்ணி இந்த பயல் எனக்கு மட்டும் சொந்தம் கிடையாது.. உங்களுக்கும் தான்.. நாம் இருவரும் சேர்ந்து வாங்கிக் கொள்வோம் வாங்க .. ” என்றதும் மீனுவுக்கு கண்களில் நீர் துளிர்க்கிறது .
பக்கத்து வீட்டுப் பெண் சொன்ன கதைகளை வைத்து சம்மந்தி என்பவர் மோசமானவர் என்று தவறான பிம்பத்தை மனதில் வைத்துக் கொண்டிருந்தவருக்கு கயல் இப்படி சொன்னதுமே கண் கலங்கி விடுகிறது.. அவரது கையை ஆதுரமாய் பற்றிக் கொள்கிறார்..
” நீங்கள் வாங்குங்க அண்ணி.. முதல்ல உங்களுக்கு தான் இவன் பேரன் .. “
“இல்ல உங்களுக்கும் தான் இவன் பேரன்.. நம்ம இரண்டு பேரும் சேர்த்து வாங்கி கொள்வோம் .. “என்று இருவரும் வாங்கிக் கொண்டு குழந்தையை கொஞ்சி மகிழ்கிறார்கள்..நெருங்கி பார்த்தவனை, “அடேய் நீ போய் அவளைப் பாரு ..அதன் பிறகு உன் மகனிடம் வரலாம் .. “என்று விரட்டி விடுகிறார்..
யாருமே பெற்றவளை பற்றி எப்படி இருக்கிறாள் என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.. புதுவரவை ஆவலோடு கொஞ்சி மகிழ்கிறார்கள்..அவனுக்கு மித்ராவை பார்க்க ஆசைதான்.. ஆனால் புவனா சொல்லாமல் எங்கே போவது.. அவள் முகத்தை பார்க்கிறான் ..
“அண்ணா அவள் நன்றாக இருக்கிறாள் போய் பாருங்க .. “என்று சொன்னதுமே சிட்டாய் பறக்கிறான்..சோர்ந்து துவண்டு போய் கிடக்கும் மித்ராவை பார்த்ததுமே அழுது விடுகிறான்..
இவ்வளவு நேரம், ‘ அவள் சொன்னது மாதிரியே ஆண் குழந்தையை பெற்று விட்டாள்..அடுத்ததாய் எனக்கு துணையாய் ஒரு மகளை பெற்றெடுக்க வேண்டும் ..,என்று எண்ணியவன் அவளைப் பார்த்ததுமே இப்படி பேசுகிறான்..
அழுத படியே, ” என் தங்கமே என்னால தானடி உனக்கு இவ்வளவு கஷ்டம்.. நமக்கு இவன் ஒருத்தன் போதும் ..இனிமேல் வேற பிள்ளைகளே வேண்டாம்..நீ கதறிய கதறல் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டு இருக்குதுடி..”
அவளோ சோர்வாக இருந்தாலும் சிரித்த படியே பதில் சொல்கிறாள்.. “பெண்கள் என்றால் இப்படித்தாங்க ..இந்த வலியை எல்லாம் நாங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும் ..அதற்காக ஒரே பிள்ளையோடு விட்டால் அவன் தறுதலையாக போய் விடுவான்.. அவனுக்கு துணையாய் இன்னும் இரண்டாவது பெற்க வேண்டாமா..” என்றதும் ஆ என வாயைப் பிளக்கிறான்..
மித்ரா இப்படி சொன்னதும் தான் அவனுக்கு மனமே நிம்மதியாகிறது.. எங்கே தான் சொன்னதை கேட்டு தனக்கு துணை இல்லாமல் செய்து விடுவாளோ என்ற பயத்துடன் தான் பேசினான்..
“எனக்கு ஒன்றும் இல்லடி.. நான் உன் கஷ்டத்தை பார்ப்பவன் மட்டும்தான்.. நீ தானே இதை அனுபவிப்பவள் ..அதற்காக தான் சொன்னேன் .. “
” பரவாயில்லைங்க என் அம்மா இல்லையா.. எத்தனை பிள்ளைகள் பெற்றெடுத்து இன்னமும் நன்றாக தானே இருக்கிறது.. “பயந்து கிடந்தவனுக்கு மித்ரா தைரியம் கொடுக்கிறாள்..
மனைவியை பார்த்து விட்டு மகிழ்ச்சியாய் வெளியே வந்தவன் மகனையும் பார்ப்பதற்கு வெளியே வருகிறான் கயலோ அவனை விட்டேனா என்கிறார்..அவனைக் கண்டதும் பேரக் குழந்தையை காட்டாமல் மகனை திட்டுகிறார் ..
“ஏன்டா அவளுக்கு வலி வந்து விட்டது என்று ஒரு வார்த்தை என்னிடம் சொன்னாயா ..சும்மா எங்கேயோ ரவுண்டு போறீங்க என்று நினைத்துக் கொண்டே இருந்தால் இங்கே வந்து பிள்ளையையும் பெற்று விட்டாயே.. இப்படியாடா இருப்ப..எனக்கு இருந்தது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.. அதுவும் இப்படி என்னை விட்டுப் போகுதே .. “என்று புலம்பத் தொடங்குகிறார்..
“அய்யய்ய அம்மா சும்மா புலம்புவதை நிறுத்து ..எனக்கு கையும் ஓடலை..காலும் ஓடலை அதனால பழக்கப்பட்ட இடமா இங்கு அழைத்து வந்து விட்டேன்.. இப்பொழுது என்ன அதுதான் எல்லாருமே வந்து விட்டீர்களே.. இதுல வேற என் பிள்ளையையே என்கிட்ட காட்ட மாட்டேன் என்கிறீங்க.. நீங்களே அவனை நல்ல படியா வளர்த்துக் கொள்ளுங்கள் ..நான் என் மனைவியோடு போய் அடுத்த குழந்தை அதுவும் நான் ஆசைப்பட்ட பெண் குழந்தையை பெற்க முயற்சி செய்கிறேன் .. “என்றதும் சம்மந்திகள் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் ..
“அடேய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா.. அவ பச்சை உடம்புக்காரி ..போய் ஏதாவது செய்து அடுத்த மாசமே மாசம் ஆகி விடப்போகிறா .. கொஞ்ச நாள் போகட்டும்.. இந்தா உன் மகனோட மொகரை பாத்துக்க .. “என்று காட்டுகிறார் ..
நல்ல அழகாய் நல்ல நிறமாய் சுருள் முடியாய் பார்ப்பதற்கு திருத்தமாய் இருக்கிறான் குழந்தை..
” ஏன்மா எனக்கும் சுருள் முடியில்ல. அவளுக்கும் சுருள் முடியில்ல.. இவனுக்கு மட்டும் எங்க இருந்தம்மா இந்த முடி வந்தது.. ” என்று மகனின் தலையை செல்லமாய் கலைத்து விடுகிறான் ..அவனை தொட்டதுமே சிணுங்கிக் கொண்டு அழத் தொடங்குகிறான் ..
“ஏன்டா சும்மா இருந்த பிள்ளையை அழவிடுகிற ..உன்னுடைய கொள்ளு தாத்தாவோட தாத்தாவுக்கு தலை முடி இப்படித்தான் இருக்குமாம் .. “
” அது சரி நான் , அப்பா பார்க்காத கொள்ளு தாத்தாவோட தாத்தா முடி தான்னு நான் எப்படி நம்புவது .. “
“இப்ப என்னடா என்ன சொல்ல வருகிறாய்.. ” என்று கயல் மிரட்டுகிறார்..
” இல்லம்மா சும்மா ஜாலியா விளையாடுகிறேன்..”
அடுத்த மூன்று நாட்களும் எல்லாருமே ஹாஸ்பிடல்லில் தான் குடி இருக்கிறார்கள்.. மித்ராவுக்கும் அதற்குள் உடம்பு நார்மல் ஆகி விடுகிறது குழந்தையை தானாகவே கவனித்துக் கொள்ளும் அளவிற்கு தெளிந்து விடுகிறாள் ..
அரவிந்துக்கு வியப்பாக இருக்கிறது. “என்னடி இது..இவ்வளவு சீக்கிரமா சரியாகி விட்ட ..அம்மா கூட என்னமோ சொன்னது ..பச்சை உடம்புக்காரி அவளை எதுவும் தொந்தரவு கொடுத்து விடாதே என்று ..நீ நன்றாக தான்டி இருக்க ..இந்த சூட்டோடு சூடாக நம்ம அடுத்ததாய் என் மகளை பெற்று விடுவோமாடி..”
மித்ரா அவனை செல்லமாய் அடிக்கிறாள்.. “அதெல்லாம் சும்மா என் பிள்ளையைப் பற்றி சந்தோஷத்தில் தெளிவாக இருப்பதைப் போல இருக்கிறது ..எனக்கும் தான் உடம்பு முடியவில்லை ..அவன் அழுதால் மனம் கேட்க மாட்டேன் என்கிறது..அதனால் தான் பிடிவாதமாய் எழுந்து தாய்ப்பால் கொடுக்கிறேன்..அதைப் பார்த்து தான் நீங்கள் தெளிந்து விட்டதாக எண்ணிக் கொள்கிறீர்கள்.. வேற ஒன்றுமில்லை.. “
” நான் கூட உனக்கு உடம்பு நன்றாக ஆகி விட்டது என்று நினைத்தேன்டி..”
” யாருங்க சொன்னது சுகப்பிரசவம் என்று .. ஏங்கப்பா உயிரே போகும் பிரசவம் பெயர் வைத்திருக்க வேண்டும் .. அவன் வெளியே வருவதற்குள் எனக்கு உயிரே போய் விட்டது தெரியுமா..எனக்கு அடுத்த பிள்ளை எல்லாம் வேண்டாம்பா சாமி..”
” ஏன்டி மாத்தி மாத்தி இப்படி பேசுற.. உன்னை நான் எப்படி நம்புவது ..கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் பாப்பா பெத்துக்கலாம்னு சொன்ன ..இப்ப அதுக்குள்ள வேண்டாம்னு சொல்ற.. “
” நீங்க இப்படி வந்து தொந்தரவு கொடுத்தா நான் இப்படித்தான் சொல்வேன். நானாக என் அருகில் கூப்பிடும் வரை நீங்கள் என்கிட்ட நெருங்கக் கூடாது என்ன புரிகிறதா..” என்று மிரட்டுகிறாள்..
“எனக்கும் மனசாட்சி இருக்கிறது ..நானும் மனுஷன் தான்டி எனக்கும் உன்னோட நிலை புரியும் தான். நான் சும்மா கிண்டலுக்கு பேசுகிறேன் ..என்னமோ என்ன வெறி பிடித்தவன் மாதிரி நினைத்துக் கொண்டு பேசுகிறாயே.. ” அவன் கோபிப்பதை கண்டதும் மித்ரா அமைதியாகி விடுகிறாள்..
கோபித்துக் கொண்டவன் மனைவிக்கு உடம்பு முடியாததால் இப்படி பேசுகிறாள் என்று புரிந்து கொள்ளவும் அவளிடம் உடனே மன்னிப்பும் கேட்டு விடுகிறான்.. அவளும் அதே நேரம் அவனிடம் சாரி கேட்கவும் இருவரும் சிரித்து விடுகிறார்கள்..
“நாம இரண்டு பேரும் புரியாத மாதிரி பேசியதால் தாங்க வம்பு வருகிறது.. இனிமேல் இப்படி பேசக்கூடாதுங்க..”
அவன் புரிந்ததாய் தலையாட்டுகிறான் ..
தொடரும்.
