அத்தியாயம்-9

ஓம்…. ஓம் … ஓம்..ஓம் நமசிவாயா ஓம்.. நமசிவாயா

தங்க நிலாவினை அணிந்தவா

தங்க நிலாவினை அணிந்தவா

ஆடுகிறேன் பூர்ணோதயா அருளில்லையா

ஓம்..ஓம் நமசிவாயா

ஓம் நமசிவாயா நமச்சிவாய 

ஓம் நமச்சிவாய 

என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்க அதற்கு ஏற்ப ஒரு சீனியர் மாணவி பரதநாட்டிய நடனம் ஆடி கொண்டிருந்தால் அவளைப் பார்த்து அபியும் நடனம் ஆடினாள். 

ஆம் அவள் வீட்டில் நடனமாட பர்மிஷன் வாங்கியவுடன் மறுநாளே வகுப்பு ஆசிரியரிடம் கூறிவிட்டு  இன்சார்ஜ் எந்த மேம் என்று கேட்டு பிபிஏ டிபார்ட்மெண்ட் ஜானகி மேம் என்று அவரும் கூறினார். 

உடனே அந்த ஸ்டாப் ரூமுக்கு வந்து ஆசிரியரை தேட அவரோ இல்லாமல் மூன்றாம் ஆண்டு பிபிஏ வகுப்பில் இருப்பதாக வேறு ஒரு ஆசிரியர் கூற

 அதை கேட்டு அதிர்ந்தவள் போகலாமா வேண்டாமா என்று யோசனை செய்து வேறு வழி இல்லை சென்று தான் ஆக வேண்டும் என்று அந்த வகுப்பில் அனுமதி கேட்டு உள் நுழைந்து அந்த ஆசிரியரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வகுப்பாசிரியர் அனுப்பினார் என்று கூறி விவரத்தை சொல்ல 

அவரும் ஒப்புக்கொண்டு நாளை தன்னை வந்து ஆடிட்டோரியத்தில் பார்க்குமாறு கூறி விட அவளும் சரி என்று மறுநாள் ஆசிரியரிடம் தகவல் சொல்லிவிட்டு வந்துவிட்டாள். 

இவள் வருவதற்கு முன்பே சீனியர் மாணவர்கள் பாடலை தேர்ந்தெடுத்து நான்கு பேர் பிராக்டிசை ஆரம்பித்து இருந்தனர். 

 ஜானகி ஆசிரியரும் இவர்களை பார்க்க வந்தவர் சிறிது நேரம் அவர்களுக்கு சில ஸ்டெப்புகள் சொல்லிக் கொடுத்துவிட்டு அப்பொழுது சரியாக வருகைப் பதிவு வகுப்பில் கொடுத்துவிட்டு அபியும் ஆடிட்டோரியம் வந்து சேர்ந்தாள். 

அவளை மற்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் “இந்த பொன்னையும்  நடனத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் முதலாம் ஆண்டு மாணவி அதனால்  கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்! பொறுமையாக சொல்லிக் கொடுத்தால் போதும் !” என்று அறிவுரை கூறிவிட்டு அவர் சென்றுவிட இரண்டு மூன்று நாட்களாக அவளும் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறாள். 

ஆரம்பத்தில் சற்று கூச்சம் கொண்டு தடுமாறினாலும் போகப்போக மாணவர் சீனியர் மாணவர்கள் பேசுவதில் சகஜமாகி நன்றாக ஆட ஆரம்பித்தால். 

சிறுவயதில் அவள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாள் அதன் பிறகு வளர வளர படிப்பு முக்கியம் என்று அதை பாதியில் நிறுத்தி விட ஆனால் அவளுக்கு அந்த நாட்டியத்தின் மேலிருந்த ஆசை  அவ்வப்பொழுது அவள் வீட்டில் ஆடி பார்ப்பதால் அவளுக்கு தற்பொழுது சிரமம் இல்லாமல் அவர்கள் சொல்லிக் கொடுக்கும் ஸ்டெப்புகளை சீக்கிரமாக கற்றுக் கொண்டாள். 

வழக்கம் போல் தான் நம் ஹீரோவும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இவள் ஆடுவதை பார்க்க வந்து விடுவான்.

 அன்று அவள் இவர்கள் வகுப்பிற்கு வந்ததே அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்க அவள் ஆடுகிறாள் என்று தெரிந்ததும் ஒரு பக்கம் சந்தோஷம் ஏற்பட்டாலும் , தனது அபி ஆடுவதை மற்ற மாணவர்களும் பார்த்த ரசிப்பதா என்று ஒரு காதலனுக்கே உரிய பொசசிவ்னசும் எழுந்து கொண்டது.

 ஆனால் அவள் சிறகடித்து பறக்க வேண்டும் என்று நினைத்தவன் தனது அபியை பற்றி நான்கு பேர் பெருமையாக பேசினால் தனக்கு தானே பெருமை என்று நினைத்துக் கொண்டு அவனும் தினமும் அவளை தொல்லை செய்யாத வகையில் அவள் ஆடும் நடனத்தை ரசிப்பான். 

அப்படித்தான் நான்காவது நாள் காலையும் அவள் நடனமாடிக் கொண்டிருக்க அப்பொழுது என்று அங்கே விஜயம் செய்தால் ஆராத்யா. 

அன்று வகுப்பிற்கு இவள் வந்த பொழுதே அந்த ஆசிரியரிடம் விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டவள் அவளை ஆட விடாமல் செய்து அழ வைக்க வேண்டும் என்று நினைத்தவள் அவள் நன்கு கற்றுக்கொண்டு கடைசி நேரத்தில் ஆட முடியாமல் கஷ்டப்படும் நிலையை பார்த்து சந்தோஷம் பட வேண்டும் என்று நினைத்தவள் அதற்கான தக்க சமயத்திற்கு காத்திருக்க இன்னும் மூன்று நாட்களில் பங்க்ஷன் இருக்கையில் இன்று காலை ஸ்டேஜ்  மேல் பக்கம் எக்ஸ்ட்ரா மின் விளக்குகள் பொருத்தும் வேலை நடந்து கொண்டிருக்க அதை பார்த்தவள் மனதிற்குள் நொடி பொழுதில் ஒரு திட்டமானது உதயம் கொண்டது. 

உடனே யாரும் கவனிக்காத நேரம் அந்த மின் விளக்குகள் பொருத்தும் வேலை பார்ப்பதில் ஒரு பையனை தனியாக அழைத்தவள் அவனிடம் சிறிது பணத்தை கொடுத்து காதில் ஏதோ விஷயத்தை கூற அவனும் அதைக் கேட்டு அரண்டவன் பணத்தை மீண்டும் இவளிடமே கொடுக்க இன்னும் ஐந்தாயிரம் பணத்தை அதன் மீதே வைத்தவள் “யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது ! நீ நான் சொன்னதை மட்டும் செய் இது ஆக்சிடென்ட் மாதிரி தான் எல்லாருக்கும் தெரியும்!  கண்டிப்பாக உன் பேர் இதுல அடிபடாது!”  என்று அவள் உறுதியளித்தாள். 

 அப்பொழுதும் அவன் மறுக்க உடனே தன்னுடைய மொபைலில் இருந்த தனது அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி” நான் மினிஸ்டர் உடைய மகள் நான் சொன்னால் நம்ப மாட்டியா?  உனக்கு எந்த பிரச்சினையும் வராது !” என்று அவனுக்கு தைரியம் கொடுத்தால். 

அதன் பிறகு என்ன அவனும் பணத்திற்கு ஆசைப்பட்டு இன்னும் அவளிடம் அதிக பணம் கேட்க “நான் சொன்ன வேலையை  நல்லபடியா முடி கண்டிப்பாக நீ கேட்டதை விட இரண்டு மடங்கு பணம் உனக்கு வரும்!”  என்றால். 

அதற்கு அவனும் ஒத்துக்கொண்டு வேலையை பார்க்க சென்றான். 

அவனும் தனது சகாக்களுடன் மேலே மின்விளக்குகள் இணைக்கும் வேலைகளை செய்து முடித்தவன் கீழே இறங்க உடனே மாணவர்களை நிற்க வைத்து லைட்டிங் எஃபெக்ட் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய 

பரதநாட்டியம் தான் முதலில் ஆடப்போகிறவர்கள் என்பதால் அவர்களை நிற்க வைத்து நன்றாக இருக்கிறதா என பார்க்க 

ஆனால் அப்பொழுது எதுவும் ஆகவில்லை அவளுக்கு எந்த அடியும் படவில்லை. 

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர்களும் லைட்டை மாற்றி மாற்றி ஆடுவதற்கு ஏற்ப போட்டு பார்க்க எதுவும் ஆகாததால் அங்கே நின்று கொண்டிருந்தவனை பார்த்து கோபமான ஆராத்ய அவனிடம் சென்று “என்னாச்சு நான் அவ கால்ல விழனும்னு சொன்னேனே ஏன் இன்னும் விழாமல் இருக்கு என்ன என்கிட்ட காசு வாங்கிட்டு ஏமாத்திரியா?”  என்று கடிந்து கொண்டால். 

அவனோ “மேடம் இப்பவே உடனே நடந்ததுனா கண்டிப்பா எங்கள தான் கூப்பிட்டு திட்டுவாங்க!  எனக்கு வேலைக்கு பிரச்சனையாகிடும் அதேபோல இன்னிக்கு நடந்ததுன்னா மறுபடியும் அதை சரி பண்ணிடுவாங்க ! ஒருவேளை அந்த பொண்ணு மேல படாம விடுறதுக்கு வாய்ப்பு இருக்கு. நீங்க நினைச்சது நடக்காது இப்போ எல்லாம் நல்லாதான் இருக்கும் மறுபடியும் நாளைக்கு லைட்டு போட்டு பாப்பாங்க அப்படியே பண்ணலன்னாலும் நீங்க தான் மினிஸ்டரோட பொண்ணாச்சே, உங்க இன்ஃப்ளூன்ஸா பயன்படுத்தி லைட்டு போட்டு பார்க்க வைங்க. அப்போ கண்டிப்பா இவங்க ஆட்ற  வைப்ரேஷன்ல அது விழும். நான் சொல்றேன் அது கண்டிப்பா நடக்கும் நீங்க வேணா அது நடந்ததுக்கு அப்பறம் எனக்கு காசு கொடுங்க!”  என்றான். 

அதைக் கேட்ட முறைத்த ஆராத்யா “இந்த விளக்கமெல்லாம் எனக்கு தேவையில்ல!  இப்ப உடனே அது நடக்கணும்!”  என்றால் கோபமாக. 

” இல்ல மேடம் அது மட்டும் முடியாது.  இப்போ நாங்க கீழ இறங்கிட்டோம் ஏதாவது பிரச்சனைனா தான் மறுபடியும் மேலே ஏறி வேலை பார்க்க முடியும் நீங்க என்ன நம்புங்க இந்த ஃபீல்டுல எத்தனையோ தடவை இந்த மாதிரி விஷயங்கள் நடந்திருக்கு மாட்டின அப்போ எங்களுக்கே எதுவுமே கண்டுபிடிக்க முடியாது ஒரு சில நேரம் அதிர்வு தாங்காமல் விளக்குகள் இந்த மாதிரி கீழே விழுந்து இருக்கு இப்போ நான் அதுக்கு ஏத்த மாதிரி விழனும் என்பதற்காகவே செட் பண்ணி வச்சிருக்கேன் அதனால நீங்க பதட்டப்படாமல் இருங்க கண்டிப்பா நீங்க எதிர்பார்க்கிற விஷயம் நடக்கும் !” என்று அவன் ஆணித்தரமாக கூறியதால்

 அவனுக்கு மேலும் சில பணத்தை கொடுத்தவள் “நீ சொன்னது மட்டும் நடந்தால் ரொம்ப சந்தோஷம்! எதுக்கு இவ்வளவு பணம் கொடுக்கிறேன் என இந்த விஷயம் நம்மள தாண்டி யாருக்கும் தெரியக்கூடாது அதையும் மீறி வெளியே போச்சுன்னா உன் உயிருக்கு உத்திரவாதம் இல்ல அதையும் மனசுல நல்லா பதிய வச்சுக்கோ!”  என்றவள் அவனுடைய கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டு சென்றால்.

 அவனும் தனக்கு அதிக பணம் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான்!  தனக்கு எதிராக சதி நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாத அபி உணவு இடைவேளைக்காக தனது தோழிகள் தன்னை பார்க்க வந்திருப்பதை பார்த்து சிரித்து விட்டு அவர்களுடன் மதிய உணவு இருந்த சென்றால். 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த கரணுக்கும் தன்னவளுக்கு ஆபத்து வருவது தெரியாமல் இருந்தது.…

எப்படி அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க போகிறார்கள் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page