திருக்குறள்
பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல்.
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
அத்யாயம் 11
வீட்டிற்கு வந்த இவருக்கும் அவர்களின் நிலையில் அவர்களால் இயல்பாக இருக்க முடியவில்லை. படுக்கையில் படுத்த அவளுக்கு அவன் நினைவுதான். திருமணம் நிச்சயம் செய்தார்கள். இருப்பினும் அவன் தான் தனக்கானவா? அவள் மனதில் இப்போது ஒரு சந்தேகம். ரவியுடன் இருக்கும் போது ஏதோ ஒரு உணர்வு அவளுக்கு வரத்தான் செய்கிறது. பிடித்தம், மகிழ்ச்சி எந்த காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் ஒரு பாதுகாப்பு உணர்வு வருகிறது. திருமணத்திற்கு அடிப்படை இந்த உணர்வு தான் . இதற்கு அடுத்த நிலையில் தான் காதல் வரும். இங்கு தன்னுடைய அறையில் தனியாக படுத்து கிடக்கும் இவன் நிலை தான் பாவம். அவள் மட்டுமல்ல. எந்த பெண்ணையும் நினைத்துப் பார்க்க என்னதான் தகுதி இருக்கிறது. அன்று இவன் தந்தைக்கு உடல் நலமில்லாத போதிலிருந்து அவனுடைய பழைய நினைவுகள் அவனை அளக்கழித்தது. அடுத்து என்ன ? பிளாஷ் பேக் என்று நீங்கள் எண்ணியிருந்தால்.. கொசுவர்த்தி சுருள் இப்போது வராது. எப்போது வரும்? அவருக்கு கல்யாணம் நடக்கணும். பொண்டாட்டி அணைச்சு ஆறுதல் சொல்லணும். இது எல்லாம் போட்டாதானே அது காதல் கதை! போதும் போதும். இr
தையே தான் ரொம்ப வருஷமா பிளேடு போடுற. கொஞ்சமாவது வாலிப வயசை அனுபவி . இல்லை என்னையாவது எங்கையாவது ஊர் மேய விடு. கதறியது வேறு யாரோ இல்லை. அவன் மனம் தான் . சரி சரி கவலை வேண்டாம். ஆத்தர்வந்துட்டேன் .அவர் ஃபோன் அழைத்தது .
வந்தனா என்றய பெயர் வரவும் இவனுக்கு தன்னையும் அறியாமல் ஏதோ ஒரு சிறு பூரிப்பு. “சொல்லுங்க வந்தனா ” அந்த இனம் புரியாத மகிழ்ச்சியை அவளிடம் காட்டி விடக் கூடாது .கடினமாய் தன்னை அடக்கிக் கொண்டான். “ஒன்னும் இல்ல சார். சும்மா தான்.” “வந்தனா!” அவன் குரல் மிகவும் மிருதுவாக இருந்தது. கடுமையான டீச்சர்ஸ் ரெண்டு பேரும் டோன் மாறி பேசறாங்க. “ம் !” “என்னாச்சு தங்கம் ?” இது என்ன உரிமை! “அந்த குரலும் வார்த்தைகளும் அவளை என்ன செய்ததோ தெரியவில்லை. நடந்த விஷயங்களை சொல்லி விட்டாள். நான் இந்த இடத்தில சொல்ல வேண்டிய இல்லையில்லை நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இங்கே ரவி நல்லவன். அதனால் அவளின் நிலையைப் புரிந்து கொள்வான். சில ஆண்கள் பெண்களின் இதுப் போன்ற நிலையில் அவர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு அவர்களின் உடலையும் மனதையும் சித்ரவதை செய்கிறார்கள். நல்லவங்களா இருந்தாலும் சரி, கெட்டவங்க இருந்தாலும் சரி, நம்முடைய வீட்டு விஷயங்கள் வெளி ஆண்களுக்கு தெரியாமல் இருப்பதே நலம். நாம் யாரையும் நம்பி பரிசோதனை செய்ய முடியாது.
விஷயங்களை அவள் சொல்ல அதை முழுவதுமாக கேட்டுக் கொண்டான். “ரொம்ப கஷ்டமா இருக்கு ரவி.”
மேடம் அந்த சார் என்ற வார்த்தை எங்க? மோர் குடிக்க கிளம்பி இருக்கலாம். “வந்தனா ” “ம்!” “அழறியா ?” மௌனம். கண்களில் வந்த அழுகையைத் துடைத்துக் கொண்டாள் . “கண்ணை துடைச்சுகிட்டயா?” அவன்தான். “ம்!” “ஒனக்கு ஒரு விஷயம் சொல்லவா?” நீ அழணுமா அழு. ஆனா நீ கண்ணீர் சிந்தற அளவுக்கு அவர் ஒர்த் தானா?” “அப்டின்னா?” “கல்யாணத்துக்கு உனக்கு காஸ்டலியா புடவை எடுத்தா அது உன் மேல இருக்கற காதலாகிடுமா?” “காதல் அதுக்குள்ள வருமா தெரியல. ஆனா என் மேல ஆசை இல்லாம எப்படி அவரு அவங்க வீடு பெரியவங்க கிட்ட அப்படி போல்டா பேச முடியும்?” “அது ஏன் ஒரு விதமான இன்வெஸ்ட்மெண்டா இருக்கக் கூடாது?” “நீங்க சொல்வது புரியல.” “நீ பைனான்ஸ் படிச்சவ. இதுக்கு மேல நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அவருக்கு உன் மேல உண்மையாகவே ஆசை இருந்திருந்தா இந்த நிச்சயத்தை நிறுத்த விட்டுருப்பாரா ?” “ம் ! இந்த ஆங்கிளில் நாங்க யாருமே யோசிக்கலை. ” “யோசிக்கணும் வந்தன. எல்லா விதங்களிலும் யோசிக்கணும்.” “ரொம்ப அனுபவமோ ?” “ஆமா ! நிறைய அனுபவம் இருக்கு ” பெரு மூச்சு விட்டான். “உங்க சொந்த அனுபவமா?”ஏதாவது காதல் தோல்வி இருந்திருக்குமோ நொடியில் ஏதோ ஒரு பயம் அவளுக்கு. “எனக்கு இல்ல வந்தன. கீர்த்திக்கு ” “கீர்த்திகா?” “ஆமா. அதைப் பத்தி அப்புறம் சொல்லறேன். இப்ப நீ மனசை போட்டு குழப்பிக்காம தூங்கு. கடவுள் உனக்கு நல்லது தான் செய்திருக்கார். இஉனக்கு அவர் கூட திருமணம் நடந்து அதுக்கு அப்புறம் அந்த மாமா செத்திருந்தா? கடவுள் எப்ப ஆன் சூட்ச போட்டு அனுப்பறாரோ அப்பவே ஆப் சூட்ச ரெடியாதான் வைச்சுருப்பார். இதை அவங்க யாராலயும் புரிஞ்சுக்க முடியாது. அந்த மாதிரி ஒரு இடத்துல நீ கல்யாணம் செய்துகிட்டு போய் எப்ப என்ன நடந்தாலும் உங்களை தான் காரணம் சொல்லுவாங்க. உனக்கு இதை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பார். “
அவனின்உரிமை பிடித்தது.வேகமாக வந்து விழுந்த வார்த்தைக்கு அவள் மன்னிப்பு சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா?
இங்கே அன்றய இரவில் ரவியிடம் பேசியவளுக்கு மனதில் ஒரு மாதிரி சொல்ல முடியாத சந்தோஷம். நடக்க இருந்த திருமணம் நின்று விட்டது. அதற்கு அவர் ஆறுதல் சொன்னார். வேறு என்ன? ‘வேற எதைப் பத்தியும் யோசிக்காதடீ. பாவம் அவரு. இந்த தோஷம் அவருக்கு வேணாம். அவர் சந்தோஷமா இருக்கட்டும்.’ அவர் புறம் திரும்பிய மனதை திருப்பிக் கொண்டு இவள் படுத்து உறங்கினாள் .
அவளின் ஒற்றை விழிப்பு பார்வையும், இதழ் ஒற்றலும் தான் அவனுக்கு சந்தோஷம். அதை விடவும் அவனுக்கு அவள் மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுக்க முடியும். அவள் மட்டுமே கொடுக்கப் போகும் அந்த சந்தோஷத்திற்கு அந்த செவ்வாய் தோஷம் கூட சரண்டர் ஆகி விடலாம்…
இங்கே ஒருக்களித்துப் படுத்திருந்த ரவியின் மனமோ வேறு யோசித்தது. இந்த பொண்ணுங்க வாழ்க்கை தான் என்ன? இங்க நம்ம கீர்த்தி. அங்க அவ? தன்னுடைய தங்கையின் வாழ்க்கை போலவே அங்கே அவள் வாழ்க்கைக்கும் ஒரு விடியல் வரட்டும்., அதற்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்ய வேண்டும் என்று விடியலுக்காக காத்திருந்தான் ரவி. அவளுக்கு விடியலில், விடியல் தரப் போவதே தானே தான் என்பதேத் தெரியாமல். வெகு நேரம் புரண்டு படுத்தவனுக்கு மறு நாள் காலையில் வந்தனாவிடமிருந்து அழைப்பு.
“சார்! அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல.”
“எந்த ஆச்பிடல்?”
கேட்டுக் கொண்டவன் காலையில் தங்கையுடன் வந்து விட்டான். இன்று சனிக் கிழமைதான். இருவருக்குமே அலுவலகம் செல்ல வேண்டியது இல்ல.
மகள் வாழ்க்கையை எண்ணிக் கொண்டே படுத்தவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. மருந்தின் உதவியில் உறங்கியிருந்தவர், கண் முழித்துக் கொண்டார்.
“என்னப்பா இது?”
“ஒன்னும் இல்லடா. ஏதோ கவலை?”
சில அறிவுரைகளுடன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். கை நிறைய மாத்திரைகள், மனம் நிறைய கவலை.
அழுதுக் கொண்டே இருந்த லலிதாவை பிடிவாதமாக தோளில் சாய்த்துக் கொண்டாள் கீர்த்தி.
வேண்டாம் என்று மறுத்தவர்களுக்கு அடமாய் காபியும் பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்தார்கள் ரவியும் கீர்த்தியும் .
“கார்த்திக் சார் ” கீர்த்திதான் காபியை நீட்டினாள்.
“அவன் முகம் கவலையில் அப்பிக் கிடந்தது. எப்போதுமே கலகலப்பாக இருப்பவன். அவன் உதட்டில் ஒரு புன்னகை இருக்கும். இப்போது அது எங்கோ வாகிங் சென்றுவிட்டது போல. அவனைப் பார்க்க கீர்த்திக்குமே சங்கடமாகத் தான் இருந்தது.
யாருக்கும் சமைக்கும் மன நிலை இல்லை. கீர்த்தி தான் வந்தனாவை உடன் வைத்துக் கொண்டு அவர்களுக்கு சமைத்துக் கொடுத்தாள் .
“எதுக்கு கீர்திம்மா நீ செஞ்சுக்கிட்டு ?”சொல்லிக் கொண்டே உள்ளே வந்து விட்டார் லலிதா.
சமையல் முடிந்து விடவும்,
“அண்ணா ஆச்சு” வந்து நின்றாள் கீர்த்தி.
“ரொம்ப தேங்க்ஸ் ரவி. இந்த உதவிய நான் எப்பவும் மறக்கவே மாட்டேன்.”
கார்த்தி கை குலுக்கினான். “தேங்க்ஸ் கீர்த்தி.” அமைதியாக முறுவலித்தாள் .
“இதெல்லாம் ஒரு விஷயமா கார்த்திக். எப்ப எந்த உதவி வேண்டுமென்றாலும் யோசிக்கவே யோசிக்காத வந்தனா . உடனே கால் பண்ணுங்க. பெரிசா இல்லாட்டியும் ஏதோ எங்களால் முடிந்த உதவியை செய்ய முயற்சி செய்யறோம் என்றான் ரவி.
ஒரு சிறு யோசனையுடனே ரவி, கார்த்திக்கிடம் ரவி கேட்டான். கார்த்திக் உங்க தங்கச்சி வந்தனாவை எங்க வீடு மருமகளா அனுப்பறீங்களா ?ரவி இன்னும் கார்த்தியின் கையை விடவில்லை.
“ரவி!” அதிர்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது.
“தப்பா நினைக்காதீங்க கார்த்திக். இதே மாதிரி விஷயத்தை நாங்களும் கடந்து வந்துருக்கோம். உங்க அப்பாவை இந்த சமயத்துல இப்படி பாக்கும்போது எனக்கு எங்க அப்பா நினைவு வருது. எங்க அப்பாவை அந்த சமயத்துல நாங்க இழந்துட்டோம்.” சொன்னபோது அவன் கண்கள் குளம் காட்டியது.
கீர்த்தியோ தன்னுடைய கண்களில் வந்த நீரை உள்ளிக்க முயற்சி செய்து தொற்றுப் போனாள் .
அப்போது ரவி கீர்த்தி இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கு முகம் காட்டாமல் திருப்பிக் கொண்டாள் கீர்த்தி .
அந்த சமயத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்து சொல்றோம் என்று மட்டும் சொன்னார்கள். அடுத்த சில நாட்களில் , அப்பாவுக்கு இப்போது உடல் நம் பரவாயில்லை . தந்தையிடம் இதைப் பற்றி சொன்னபோது இதே மாதிரி விஷயம்னா என்ன விஷயம் என்று கேட்டதற்கு யாரிடமும் பதில் இல்லை.
ரவியும் வந்தனாவுக்கு ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக் கொண்டார்கள். இருவருக்குமே மனம் விட்டுப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன .
“இந்த விஷயத்தை எப்படிக் கேட்பது என்று வந்தனாவுக்கு சங்கடமாக இருந்தது. எப்படி அவளிடம் ஆரம்பிக்க என்று ரவிக்கு சிந்தனையாக இருந்தது .
வந்தனா கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் ரவி நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.
லேலக் நிற குருதியில் அட்டகாசமாக இருந்தவளை ரசிக்கும் மன நிலையில் அப்போது அவன் இல்லை. இருப்பினும் அடர் நீல சட்டையில் அம்சமாக இருந்தவனை அவள் ரசித்தாள். அவள் அப்பட்டமாக சைட் அடித்தது எல்லாம் அவனுக்கு பாவம் புரியவில்லை போலும். காபி மஃகை எடுத்து லேசாக உரிய தொடங்கியவளிடம் முதலில் ஒரு சின்ன புன்னகையை சிந்தி விட்டு பிறகு ஆரம்பித்தான்.
அவர்கள் ஏதோ பேசட்டும்.. அதுவரை துடிக்கும் இதயம் …
