அத்யாயம் -20

அத்யாயம் -20

திருக்குறள்

 

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

காமத்துப் பால் அதிகாரம் புணர்ச்சி விதும்பல் குறள் எண் -1290

 

வீட்டில் அன்னையின் அறிவுரைப் படி சோறு சமைக்கும்போது சுட்டுகிட்டேன் என்று பொய் கூறி நிற்கிறாள் நம் சின்னப் பொண்ணு.

 

“எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது நல்லவர்கள் தான். நல்லவர் ஆவது ம் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.”பொய் சொல்ல தெரியாத சின்னப்பொண்ணுக்கு பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது அவள் அன்னை. இந்த வாதம் 
நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மற்றது படிப்பவர்கள் சாய்ஸ் தான்.

 

அவளை முறைத்தவன் மீண்டும் தனது முதலுதவி பெட்டியை எடுத்து அவளுக்கு கையில் ஒரு கிரீமை தடவி விட்டான் . எரிந்தது .

“ஆ!” ரொம்ப எரியுது என்று கையை உதறினாள் அவள். இப்போது அவள் உள்ளங்கையை பிடித்து அவன் லேசாக அதில் ஊதினான் . இப்போது அவளுக்கு எரிச்சல் கொஞ்சம் மட்டுது போல இருந்தது. சில் என்ற காற்று அவன் ஊதும் போது அவளுக்கு உடல் சிலிர்த்தது . கிளுக்கிச் சிரித்தாள் . அதை பார்த்து லேசாக புன்னகைத்தவன்,

சின்ன பொண்ணு, “ஆர் யூ ஆல்ரைட் இப்ப பரவாயில்லையா எரிதா?” என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய பெட்டியை எடுத்தது வைத்தான் அவன் .

“இல்ல! இப்ப எரியல” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள் .

“ம் ! குட் கேர்ள் .” என்றான் ராஜா

” நீங்க முதல்ல ஒரு வார்த்தை சொன்னீங்களே அது?”

“கங்கிராஜுலேஷன்ஸ் “

“ம் ! அது தான் உங்களுக்கும்.”

ஒரு நொடி அவள் சொல்வது அவனுக்குப் புரியவில்லை என்றாலும் அடுத்த நொடி சிரித்து விட்டான். பிறகு ஒரு காகிதம் எடுத்து ஆங்கிலத்தில் எழுதி பொனிடிக் ஓசையுடன் அதை எப்படி உச்சரிக்க வேணும் என்று சொல்லிக் கொடுத்தான்.

அடுத்த நாள் இது என்ன? அவன் புத்தகத்தில் இருந்த நாலெட்ஜ் என்ற வார்த்தை .

அதற்கு அடுத்த நாள் இந்த சிந்தெடிக் அதற்கு அடுத்த நாள் பேஸ் , பேஸ்(phase) ஒரே உச்சரிப்பில் வரும் வேறு வேறு வார்த்தைகள் என்று சொல்லிக் கொடுத்தான்.

“ராஜா இது எனக்கு வரவே மாட்டேங்குது” பதினோராம் வாய்ப்பாடு படிக்க வரவில்லையாம் அவளுக்கு. ‘நான் உன் வயசுலே மேல இருபது கீழ இருபது படிச்சு முடிச்சுட்டேன். நீ இப்பதான் பத்தே தாண்டி இருக்கியா?”

அதட்டலாக அவன் கேட்டதும் உதடு பிதுக்கி அழத் தயாரானாள் சின்ன பொண்ணு.

“சரி அழாத. நான் உன்ன ஒண்ணுமே சொல்லலியே. அதுக்குள்ள அழ ஆரம்பிச்சுட்ட?”

அதட்டினாலும் காட்டிய சாக்லேட் ஆசையில் மறு நாளே 15 வரை படித்து விட்டாள். பிறகு வந்த பதினாறு பதினேழு வாய்ப்பாடு மனப்பாடம் செய்ய சற்று சிரமாகத் தான் இருந்தது. இருந்தாலும் அவனின் ஊக்கம் தரும் சொற்கள் அவளுக்கு  கஷ்டங்களை மறக்கடித்து.

“நீ இப்ப எவ்ளோ மார்க் வாங்கற?”
சொன்னவளுக்கு அவன் டார்கெட் வைத்தான்.

“நீ மட்டும் இந்த டார்கெட் ரீச் பண்ணிட்டா நீ என்ன கேட்டாலும் நான் வாங்கித் தருவேன்.”

“கண்டிப்பா?”

“கண்டிப்பா செய்வேன்.”

“அம்மா சத்தியம் ?” கை நீட்டியவளுக்கு “காட் ப்ராமிஸ்” என்று தன்னுடைய கையை வைத்து அழுத்தினான்.

அவள் கேட்கப் போகும் பரிசு மிக அதிகம் தான். அப்படி என்றால் அதற்கு ஏற்ப உழைக்க வேணுமே?

இரவெல்லாம் படித்தாள் .

தூக்கம் சொக்கும். அன்னை எழுந்து இரவில் தேநீர் கொடுப்பாள். தேநீர் என்றால் டாடா கோல்ட் அல்லது அதிமதுரம் பாட்டி சொல்லும் டீ எல்லாம் எல்லாம் இல்லை. லேசாக வெள்ளை நிறம் வர பால் கலந்த ஒரு சூடு தண்ணீர் . அது போதும் . வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால் இலட்சியத்தை நோக்கி ஓடுவது தானே இயல்பு.

அவள் இயல்பாக இருந்தாள் .

அதாவது, தன்னுடைய  இயல்பை வேறு இயல்பாக மாற்றிக் கொண்டாள். விளையாட்டுத் தனம் சுட்டித் தனம் பேச்சு எல்லாம் எங்கோ சென்று விட்டது.

படிப்பில் மட்டுமே அவளுக்கு கவனம் இருந்தது. தூங்கும் போதும் அறிவியலும், சமூக அறிவியலும் அவள் மண்டையில் வட்டமடித்தது. வட்டத்துக்குள் வந்த விட்டமும், அருகில் வந்த சதுரமும் கூட ஜோடிப் போட்டு ஆடின. ஆமாம் அவள் ஒன்றும் சின்னப் பொண்ணு இல்லையே . ஐந்தாம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டாளே . ஆறாம் வகுப்பு வந்து விட்டாள். ஐந்தாம் வகுப்பு நான்காம் வகுப்பு பிள்ளைகளுக்கு அக்கா என்ற போஸ்டிங் வந்து விட்டது. கேட்கவும் வேண்டுமா?

சூர்யா சொன்னதை விடவும் அதிக மதிப்பெண்களுடன் வந்து நின்றாள். அவனுக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான மதிப்பெண்களை விடவும் அதிகமாகவே வந்தது.

அவன் இவளுக்கு இனிப்பு கொடுக்க அதையே அவள் இவனுக்குக் கொடுத்தாள்.

“என்ன சின்ன பொண்ணு ரிசல்ட் வந்துருச்சா? பாஸா?” புருவம் உயர்த்தினான். தன்னுடைய மதிப்பெண்களை காட்டினாள்.

பொதுவா அதுக்குள்ள மார்க்ஸ் கொடுக்க மாட்டேங்களே சந்தேகத்துடன் கேட்டாலும் அவளின் மதிப்பெண்கள் அவனை ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்த வைத்தது. அவன் தொண்ணூற்று இரண்டு சதவீதம் வாங்கி இருந்தாள் . அவன் சொன்னது என்பது சதவீதம் தான். அவள் வாங்கியது தொன்னூற்று இரண்டு சதவீதம்.

“அமேஸிங். “கை குலுக்கினான்.

“சொல்லு உனக்கு என்ன கிப்ட் வேணும் ?”

“எங்க ஊருக்கு ஒரு கிணறு வெட்டி தரீங்களா?”

அவள் கண்களில் இருந்தது என்ன?

துடிக்கும் இதயம் ……. 

 

அவள் கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளிடம் அமர்ந்து நிதானமாகப் பேசினான். அவன் இப்போது கல்லூரிக்குப் போக போகிறான். என்றாலும் இத்தனை பெரிய முடிவு அவன் இதுவரை எடுத்ததில்லை. அவன் இப்போது பதினெட்டு வயது ஆகாத பிள்ளையாக முடிவெடுக்க வேண்டுமா? அல்லது அந்த ஓர் மக்கள் நம்பும் ராஜாவாக இருக்க வேண்டுமா? அவளின் கஷ்டங்கள் வார்த்தைககளாக வந்த போது ராஜாவாக முடிவெடுத்தான். அவளின் உள்ளங்காலை எடுத்துக் பார்த்தான். காய்த்துப் போய் இருந்தது. அவள் பாதம் மட்டும் இல்லை. அங்கே வேலை செய்யும் பெண்களின் பாதங்களை அவன் கண்கள் சுற்றி சுற்றி வந்தது.

அது ஏன் ? நீ எதை தேடுகிறாயோ இந்த பிரபஞ்சம் உனக்கு அதைக் காட்டும். சரிதானே. நான் ஒரு பென்ஸ் கார் வாங்க விரும்பினால் என்னுடைய கண்கள் பெப்சி தேடுமும். பிறகு என் கண்களில் அடிக்கடி பென்ஸ் விழும். இது வெறும் உதாரணம் மட்டும் தான்.

இத்தனை வருடங்களாக தனக்குத் தெரியாத கண்ணில் படாத விஷயங்களை அவனுக்கு அவன் கண்கள் காட்டும் .

மக்களின் நிலைப் புரிந்தது. அவள் கேட்ட்டபடி கிணறு வெட்டிக் கொடுத்தான்.

“இப்ப எதுக்கு இந்த ஊதாரித்தனம்?” சித்தப்பாவின் குரலில் இருந்த வெறுப்பு அவனுக்குத் தெரியவில்லை. அக்கறை என்று நினைத்துக் கொண்டான்.

“என்ன சித்தப்பா நீங்க. எவ்ளவோ செலவு செய்யறோம். இது என்ன பெரிய விஷயம் “

கட்டளையாக அவன் வார்த்தை வரவில்லை என்றாலும் அது கட்டளை தான். பிடிக்காமல் செய்து கொடுத்தார். அவன் இன்னும் ஊருக்குப் போகவில்லையே . வேறு வழி ?”அவன் சொன்னதை அவள் செய்தாள் . அதற்கு ஏற்ற பரிசை வாங்கி கொண்டாள் .

கெட்டதில் நல்லதாக, தப்பு தப்பு நல்லதில் நல்லதாக அவன் சின்னப் பொண்ணுவின் பெயரை சொல்லவில்லை. சொல்லி இருந்தால் கிணறு வெட்டி தண்ணீர் வருவதற்கு முன் அவளுக்கு பால் தான். யாருக்குமே அது சின்னப்ப பொண்ணு சொல்லித்தான் நடந்தது என்பது தெரியும். பெற்றவர்களுக்குத் தெரிந்தபோது பயத்தில் தந்தை அவளை அடி வெளுத்து விட்டார்.

அன்னை தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

“ஏண்டி எங்களுக்கு இருக்கறது நீ ஒருத்தி தானே. அந்த அம்மாவுக்குத் தெரிந்தா உசுரோட விட மாட்டாங்க. எதுவா இருந்தாலும். எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாமில்லை.”

“அம்மா அழுவாதம்மா. நான் போய் அய்யாகிட்ட வேண்டாம்ன்னு சொல்லிடறேன் “

“சரி யாருக்கும் தெரியாம பார்த்துக்க கண்ணு “

இரவில் அன்னை மகளை எங்கும் விட்டு வாடாமல் தன்னுடைய மார்பில் கட்டிக்க கொண்டு தூங்கினாள் . அவளால் முடிந்தால் தன்னுடைய இதயக் கூட்டுக்குள் இந்த வளர்ப்பு மகளை சுருட்டி வைத்துக் கொள்வார். அது தான் முடியாதே.

அன்னையின் இதய துடிப்பைக் கேட்டவள், அம்மா அழாதீங்கங்கம்மா என்று கண்களை துடைத்து விட்டாள் . அவளுக்கும் அழுகை வந்தது. அவள் கேட்டப் பரிசு பெரிய விஷயமாக இருந்தாலும் அவள் உழைத்து விட்டுதான் பலனை எதிர்பார்த்தாள் . விவசாயிக்கு வானின் மழை பெரிய விஷயம்தான். ஆனால் அந்த மேகங்களுக்கு அது அத்தனை பெரிய விஷயம் இல்லையே. கோடியில் பணம் புரளும் அந்த ஜமீன் குடும்பத்துக்கு ஒரு கிணறு வெட்டுவது பெரிய விஷயம் இல்லையே.

அவள் மறு நாள் சூர்யாவை பார்க்க முடியவில்லை. ஆனால் ஆட்கள் வந்து பூஜை போட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

கிணறு அதிலிருந்து வந்த தண்ணீர் அவர்களின் கஷ்டங்களுக்கு விடிவு இல்லை. அந்த ஆற்றுப் பகுதியை சுத்தம் செய்து மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அது மட்டும்தான் தீர்வு. அதை பற்றி எல்லாம் அப்போது சூர்யா யோசிக்கவில்லை.

“ராஜா! மேற்கொண்டு என்ன படிக்கனுன்னு மட்டும் நீங்க பாருங்க. ஊரு விஷயத்தை நான் கவனிச்சுக்கறேன். நீங்க கவலை இல்லாமல் சுத்த வேண்டிய வயசு ” சொல்லிக் கொண்டே புது பைக்கின் பில்லை கொடுத்தார் . சித்தப்பாவின் அன்பில் மகிழ்ந்துப் போனான் சூர்யா.

இதோ கிணறு வெட்டினான். எந்த பூதமும் வரவில்லை .   பிறகு பெங்களூரில் இருந்த ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பு சேர்ந்து கொண்டான் . முதல் வருடம் இதே போல விடுமுறைக்கு வந்து விடுமுறை நாட்களை கழித்து விட்டுச் சென்றார் பிறகு இரண்டாம் வருடம் .

அவனுக்கு கல்லூரி இரண்டாம் ஆண்டில்  மதிப்பெண் குறைந்துப் போனது. .

“நீங்க கவலைப் படாதீங்க ராஜா. நீங்கதான் ரொம்ப நல்லா படிப்பீங்களே. இந்த முறை இல்லன்னா என்ன? அடுத்த முறை நிறைய மார்க் வாங்குங்க.”

அந்தக் குழந்தை, குழந்தைத் தனமாக பேசுவது அவனுக்கு சிரிப்பாக வந்தது .அநேகமாக இது எல்லாம் அவள் அன்னை அல்லது தந்தை அவளிடம் சொல்லி இருக்கலாம். சின்ன பிள்ளை அவளின் உள்ளங்கையில் அடங்காத அவன் முகம் ஏந்தி ஆறுதல் சொன்னாள் . பிஞ்சு கைதான். காய்த்துப் போயிருந்தது. பல வேலைகள் செய்வேன் என்று அந்த பிஞ்சு விரல்கள் அவனுக்கு சொன்னது . எத்தனையோ வேலைகள் செய்தாலும் தாமரை அவளைப் போன்ற பெண்களுக்கு இருந்த முக்கியமான வேலை ஊரிலிருந்து சற்று தள்ளி இருக்கும் அந்த ஒற்றைக் கிணற்றில் சென்று தண்ணீர் எடுப்பதுதான் . பெரிய பெண்கள் செல்லும் போது தாமரை போன்ற பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும் . அவரவருக்கு வேண்டிய நீரை அவர்களே தான் கிணற்றிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் . அதிலேயே அவளைப் போன்ற குழந்தைகளுக்கு சீக்கிரமாக கை காய்த்து போய்விட்டது .

இங்கே அவனுடைய முகத்தை கையில் ஏந்தி கொண்டு இருக்கும் அந்த சிறு பிள்ளையிடம்,

“கல்லூரிப் படிப்பு அங்கே வாங்கும் மதிப்பெண்கள் எத்தனை முக்கியம் என்பதை இவளிடம் எப்படி சொல்லுவது?” சொன்னான். விளக்கினான். அவளும் ஏதோ புரிந்தும் புரியாமலும் தலையாட்டினாள் .

“நீங்களே ராஜா . நீங்க யாரைப் பார்த்து பயப்படணும்?”

அன்று அவள் சொன்னது சிறப் பிள்ளைத்தனமாக இருந்தாலும் அவனுக்கு அந்த வார்த்தைகள் ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. அவள என்றுமே அவள் சூர்யாவை எந்த நிலைமையிலும் தோற்றுப் போக விட்டதே இல்லை. அதை அவன் புரிந்துக் கொள்ளும் நாளில் வாழ்க்கையில் தோற்றுப் போனவனாக இருக்கப் போகிறான் .

துடிக்கும் இதயம் …

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page