திருக்குறள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -15
அத்யாயம் -5
இங்கே கார்த்திக்கிடம் வந்தனா தன்னுடைய மன ஓட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் .
சிறு வயதில் இருந்தே எதையும் வீட்டில் மறைக்கத் தெரியாமல் இருந்த வந்தனாவுக்கு இந்த திருமண விஷயத்தில் பெரியவர்களின் நடவடிக்கை புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.
தோஷ ஜாதகத்துடன் பிறந்தது அவள் தவறா? எதற்காக அன்னையும் தந்தையும் ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வரன் வரும்பொழுது தன்னிடம் இப்படி கோபப்பட வேண்டும்? முதலில் எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அரவணைப்பாக இருந்தது அவள் அண்ணா தான். பின் வந்த நாட்களில் பெற்றோரின் எண்ணப் போக்கு அவளுக்கே விரக்தியாக மாறி விட்டது. .
சிறுவயதில் எல்லாம் அவள் அண்ணா அண்ணா என்று அவன் பின்னாலேயே தான் சுற்றிக் கொண்டிருந்தாள் . வயது வரவும் ஏனோ தானாகவே ஒரு ஒதுக்கம் அவனிடம் வர ஆரம்பித்துவிட்டது .பிறகு வந்த ஆண்டுகளில் வந்த வயது முதிர்ச்சியோ அல்லது மனமுதிர்ச்சியோ ஏதோ ஒன்று அவனிடம் அவளை செலுத்தியது . இப்போது எல்லாம் எல்லாவற்றுக்கும் அவளுக்கு அண்ணா தான் .
அண்ணா தங்கை சம்பாஷனை இதோ ….
“எனக்கு எங்க அண்ணா கல்யாணம் நடக்கும்? நீ பேசாம உனக்கு புடிச்ச பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கும் ஒரு நல்ல பிரண்டு கிடைச்ச மாதிரி இருக்கும் “
“ஏன் இப்படி நெகட்டிவா பேசற?”
“இல்லண்ணா! இன்னிக்கு ஒரு படம் பார்த்தேன். அதுல ஸ்னேகா மேடம் தான் ஹீரோயின் ” என்று ஆரம்பித்தவளுக்கு
“பிரகாஷ் ராஜ் தான் ஹீரோ. உன் சமையல் அறையில் . உன்ன யாரு அந்த படமெல்லாம் பாக்க சொன்னா?” என்று சொல்லி முடித்தான் அண்ணன் .
“படம் எவ்ளோ நல்ல கான்செப்ட் தெரியுமா ?”
“அதெல்லாம் சரி தான். எல்லா படத்தையும் நம்ம வாழ்க்கையோட ஒப்பிட்டுப் பாக்க கூடாது குட்டிமா” வளர்ந்த குட்டிப்பெண்ணின் தலையை லேசாக ஆட்டினான் அவள் அண்ணன் .
பதில் எதுவும் பேசாமல் அண்ணாவின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் . அவளுக்கு கவலையாக இருக்கும் நேரம் எல்லாம் அவனின் இதயத்தின் ஓசை தான் அவளுக்கு சமாதானம் செய்யும் .
ஒரு நாள் இவளின் இதய ஓசை வேறு யாரோ ஒருவருக்கு மனக் கவலைகளை போக்க தான் போகிறது . இவளின் இதய ஓசை மட்டுமல்ல இவளின் குழந்தையும் இதய ஓசையும் கூட தான் ….
“துடிக்கும் இதயம் உன்னோடுதான்” வந்தனாவுக்கு சொல்ல ஆள் வரும்….
“எனக்கு அப்டி ஒன்னும் ஒடனே கல்யாணம் பண்ணிக்க ஆசை எல்லாம் இல்லண்ணா . ஆனா எங்க உங்க எல்லாருக்கும் பாரமா இங்கேயே உக்காந்துருவேனோன்னு பயமா இருக்கு.” என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்து விட்டு மீண்டும் அவனின் நெஞ்சத்தில் தான் தஞ்சமானாள் அவளின் கவலையைப் போக்கிக் கொள்ள .
“ரொம்ப ஓவரா யோசிக்காத. உனக்குன்னு பிறந்தவர் கண்டிப்பா உன்னத் தேடி வருவாரு.
=====================================================================
வாங்க நாம சூர்யாவோட காரில் பிரயாணிக்கலாம் ……….
இட்லியும் தக்காளி சட்னியும் மனம் வீசிக் கொண்டிருந்தது. ஏசி தேவைப் படவில்லை. இன்னும் சூரியன் வந்திருக்கவில்லை. வெளியில் நல்ல குளிர் இருந்தாலும், செய்கின்ற உடற்பயிற்சியின் உதவியால் இவனுக்கு அப்படி ஒன்னும் பெரியதாக எல்லாம் குளிர் வாட்டி எடுக்கவில்லை . அந்த சில்லென்ற காற்று உடலுக்கு இதமாக இருந்தது.
இதோ NH 181ல் பிரயாணம் செய்து காரமடை வந்து விட்டான். அவன் இதற்கு முன்பு சில நேரம் இங்கு வந்திருக்கிறான். அருகில் இருக்கும் சத்தியமங்கலம் நீர்வீழ்ச்சிக்கு வந்திருக்கிறான். அவன் எப்பபோது முதன் முதலில் இங்கு வந்தான்?
பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டில் இருந்த போது நண்பர்கள் அவன் வீட்டில் தங்கிய நாளில் வந்தான். பிறகு ?
“என்னடி! முதலிரவு முடிஞ்சாலும் பொதுவா ஆம்பிளைங்க தான் பொண்ணுங்களை விட மாட்டாங்க. இங்க நீ என்னடி இப்படி என்னையே விடாம கொஞ்சிகிட்டு இருக்க?”
“ஏன் புடிக்கலையா ?”
” புடிக்காதவங்க தான் இப்படி இருப்பாங்களா ?
“ஒரு போர்வைக்குள் இருவரும் “
சொல்லியவனின் முகம் பார்த்து சிவந்த முகத்தை அவன் நெஞ்சில் சாய்ந்து மறைத்துக் கொண்டாள் .
“ஜில்லு!”
மௌனம்..
“ஜில்லு !”
“ம் ! லேசான முனகல் ..
“உனக்கு ஒரு கிப்ட் தரட்டுமா ?”
“ம்!” அவள் மேலே சாய்ந்து அருகில் டேபிள் மீது இருந்த ஒரு நகைப் பெட்டியைத் திறந்தான். அதில் ஏதேதோ முட்டி மோதி இன்ப அவஸ்தையைக் கொடுத்தது. அதை எல்லாம் கண்டுகொள்வதாய் இல்லை இருவரும். அதில் அழகான கோமேதக கல்லினால் செய்யப் பட்ட ஒரு நெக்லஸ் இருந்தது.
அதை பார்த்த அவள் முகம் சுருங்கி விட்டது.
“போட்டுக் காட்டுடி “
ஆர்வமாக மின்னிய அவன் முகத்தைப் பார்த்தவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
“இது அனிதாவுக்காக செய்தது இல்ல. என்னோட பொண்டாட்டிக்காக செய்தது . நீதானே என் பொண்டாட்டி . பிறந்த மேனியா என்னோட தாலி மட்டும் உன் கழுத்துல.. எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? கூடவே சேர்த்து இதுவும் போட்டுக்கடி .. ப்ளீஸ் !”
குறைத்துக் கொண்ட குரலில், அவள் முகத்தை கைகளில் தாங்கி கண் பார்த்து சொன்னான்.
மறுக்க முடியாமல் அவனுக்காக அதை அவள் அணிந்துக் கொண்டாள். அவளுக்காகவே செய்தது. அத்தனை அழகுசேர்த்தது அவளுக்கு. களைந்த தலை. நெற்றியில் ஈஷிய குங்குமம் அவன் கடித்ததில் உண்டான சில முத்திரைகள் .. காதில் கம்மல் இல்லை. சோர்ந்து தெரிந்து முகம். எல்லாம் கடந்து அவள் அத்தனை அழகாக இருந்தாள் .
“நல்லா இருக்கா ?” கேட்டவள் குரலில் பெரிய உற்சாகம் இல்லை .
“பேரழகி டீ நீ ” சொன்னவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க , “அழகாக இருந்தாலும் இப்ப உனக்கு வேணாம். “அணிவித்தவனே அவிழ்த்து வைத்து விட்டு அவளை அணைத்துக் கொண்டான் .
பாவம் அது என்ன தொந்தரவோ !
அவனுக்காகவே அவனை ஏற்றுக் கொண்டவள் அவனிடத்தில் அவளைக் கொடுக்க தயாராகி விட்டாள், மீண்டும் மீண்டும்.
“தேங்க்ஸ் ஜில்லு”
“எதுக்கு?
“அது … நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா ?”
“ம் ! நானும்தான் “
“ஏண்டி! என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட?”
“இன்னும் எத்தனை வருஷம் இதே கேள்வியை கேப்பீங்க?
வளர்ந்த குழந்தை அவளின் கன்னம் உரச சிணுங்கியது.
அவனின் முகம் எங்கும் முத்தம் வைத்தவள் அவன் உதட்டிற்கு வருவாள் என்று எதிர்பார்க்க அவளோ அந்த தழும்பில் தான் மீண்டும் மீண்டும் முத்தம் வைத்து அவனை முகம் சிவக்க வைத்தாள்.
“இப்ப என்ன உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியணும் அவ்வளவுதானா?”
“ம்!”
“சொன்னா எனக்கு என்ன கிடைக்கும்?”
“முதல்ல சொல்லு . அப்புறம் என்ன வேணுன்னாலும்., என்னையே வேணுன்னாலும் தருவேன்.”
இப்போது படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டாள் . அவனின் கன்னங்களை தாங்கி அவள் சொன்ன பதில் ..
” நான் உங்களை கல்யாணம் செய்ததுக்குக் காரணம்.,” நீங்க யார் முன்னாடியும் தலை குனிஞ்சு நிக்கக் கூடாதுன்னு தான் .”
அவன் எததனை முறை கேட்டாலும் இதே பதில். அவன் புதியது போலவே கேட்பான். அவளும் புதியது போலவே பதில் சொல்லி அவனிடமிருந்து பரிசுகள் வாங்கிக் கொள்வாள் . அவள் வாயால் கேட்ட பதிலுக்கு அவனும் வாயால் தான் பதில் சொல்லுவான். அவனின் சூடான மூச்சுக் காற்று அவளுக்கு ஊக்கப் பரிசு
“எதுக்குடி எனக்காக இவ்ளோ யோசிக்கற?”
“நீங்க தான் என் சாமி “
“மத்தவங்களை எப்படி வேலைக்கு எடுத்தேனோ அதே மாதிரி தான் நீயும் நான் ஒன்னும் சாமி எல்லாம் இல்லடி. “
“நீங்க கொடுத்த வேலை சம்பளம் இது எல்லாம் இல்ல. இது வேற. தெரியாதா உங்களுக்கு ?”
அவனுக்குத் தெரியும். ஒரு பெண்ணுக்கு காதல் என்பது எப்படி வரும். யாருக்கும் தெரியாது. குழந்தையாகவே தன்னை பார்த்துக் கொண்டவன், ஒரு நாள் அவளை பெரிய பெண்ணாக பார்க்க ஆரம்பித்தான்.
“சின்னப் பொண்ணு எங்க ஆளைக் காணும்?” கல்லூரி முதல் ஆண்டில் அடி எடுத்து வைத்தவன் கண்கள் அவளைத் தான் தேடியது.
“அவ பெரிய பொண்ணு ஆகிடா ஐயா. இனிமே கொஞ்ச நாளைக்கு அவர் வெளில வர மாட்டா.”
“ஓ ! சரி. “நகர்ந்தவனை சின்னப் பெண்ணின் அன்னையின் குறல் நிறுத்தியது.
“ஐயா !”
“என்ன வேண்டும் ?”
“அது பிள்ளைக்கு நாளை கழிச்சு சடங்கு செய்யணும் . அதுதான் என்று அவள் லேசாக தலை சொறியவும்…
” சரி! நீங்க ரெண்டு நாளைக்கு லீவு எடுத்துக்கோங்க. ” என்று அதிகாரமாக இல்லாமல் ஆனால் கட்டளையாக வந்தது அவன் குரல்.
சித்தியின் கையால் பெரிய தட்டில் சீர் வந்தது. மன நிறைவோடு சென்றாள் சின்னப் பெண்ணின் அன்னை. அதற்கு ஒரு பெரிய காரணமும் உண்டு .
இன்று பார்க்கும் இந்த சின்னப் பொண்ணு வேறு யாரோ இல்லை. சூர்யாவின் சொந்த அத்தைப் பெண் தான் அவள். இவர்கள் ராஜ குடும்பம் தான். ஆனால் சூர்யாவின் அத்தை விரும்பியது அங்கே வேலை செய்த தோட்டக்காரனை. யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டு மாலையும் கழுத்துமாக வந்து ன்றவளை ஒதுக்க மனமில்லாத அண்ணன் அவளை ஏற்றுக் கொண்டான். அண்ணாவே சொன்ன பிறகு வேறு என்ன செய்வது என்று தம்பி திவாகரனும் அவன் மனைவியும் அமைதியாக இருந்தாலும் மனதிற்குள் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும் திருமணமாகி வந்தவர்களுக்கு சித்தியே ஆரத்தி எடுத்து திலகமிடும்போது அவளுக்கு வந்த ஆத்திரம் அத்தனை எளிதில் அளவிட முடியாதது. வெறி வெறி அனைவரையும் பழி வாங்க வேண்டும் என்ற வெறியை பல்லைக் கடித்து முழுங்கிக் கொண்டு அவர்களுக்கு திலகமிட்டாள் .
“ஒரு கீழ் ஜாதி பய, வீட்டு வேலைக்காரன் இந்த வீட்டுக்கு மாப்பில்ளையா ?திவாகரனும் அவன் மனைவியும் சண்டை போட்டாலும் அண்ணன் தங்கை என்று ஒரே நேரத்தில் இருவரின் கண்ணீரும் அந்நேரத்திற்கு அவரின் வாயை அடைத்து விட்டது. அந்த நேரத்திற்கு அவர்கள் வாயை மூடிக் கொண்டாலும் மனதில் ஒரு வேறு ஏதோ எண்ணம் அல்லது திட்டம் இருந்துக் கொண்டே தான் இருந்தது.
மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. தருமர் சூதாட்டம் ஆட சகுனியா காரணம்? இல்லை அவரின் அடி மனதில் இருந்த ஆசை தான் காரணம். தருமரின் adi மனதில் இருக்கும் அக்சையைவெளியில் கொண்டு வந்தது தான் சகுனி. அதே கதை தான் இங்கும் …
துடிக்கும் இதயம் …
