அந்த முதல் வெட்கமும் அந்த முதல் நெருக்கமும்.

உன்னை தூங்க தானே சொன்னேன். நீ ஏன் அங்க போய் நிக்கிற?..

போய் தூங்கு.

உன்ன தான் சொல்றேன். போ…

இப்படி எல்லாம் விக்ரம் கிட்ட நிலா சொல்லிக்கிட்டு அந்த இடத்துல அவளால அந்த சங்கடத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்,

அவள் மனதுக்குள் நினைக்கும் அந்த பூரிப்பை வெளிக்காட்டவும் முடியாமல், சில தடைகளோடு பல தயக்கங்களோடு அவனை ஏரெடுத்து பார்க்க முடியாதவளாய், இப்போ கூட தூங்கு என்று சொல்றதுக்கு முக்கிய காரணம் அவனுக்காக இல்ல அவளுக்காக அந்த சங்கடத்தில் இருந்து அவளை காப்பாத்திக்க,

இது ஒரு விதமான வெட்கம். இதிலிருந்து வெளியே வர முடியல, அதுக்காக அவன் மேல இருக்கிற பயம்னு சொல்ல முடியாது அவன் மேல இருக்கிற ஆசைன்னும் சொல்ல முடியாது. இந்த சொல்ல முடியாத உணர்வுக்குள்ள  சிக்கி அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் அவளை முதல் படியை எடுத்து வைத்தாள்.

ஒரு ஒரு எட்டிற்கும் ஒவ்வொரு வித பதட்டம்.

இதயம் ஏனோ அவளை கேட்காமலே இரு மடங்கு துடிக்கின்றது.

மறுபடியும் அந்த பார்வை தனக்கு வேண்டும் என்ற ஆசை,

ஆனாலும் பெண்மை தடுக்கின்றது.

என்ன ஆச்சு?..

ரொம்ப நேரமா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்பாமல் நிக்கிற,

என்று சொல்லிக் கொண்டேன் அவன் அருகில் போய் நிற்க,

அவனால் எதுவும் பேச முடியல, அவள் கேட்டதுக்கு கூட பதில் சொல்ல முடியாமல் அந்த இரும்பு கம்பியை தன் இரும்பு கரங்களால் அழுத்தி பிடித்து படி தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவனாக அவனுக்கு அவனாக தன் உணர்வுகளை சிறைப்படுத்திக் கொண்டான்.

 

அந்த வீட்டுக்குள்ளே

அந்த நேரம் காற்றே கூட மெதுவா நகர்ந்தது.

 

நிலா வெளி பக்கமா நின்றுக்கிட்டிருந்தாள்.

வெளியே பார்த்துக்கிட்டே இருக்கிற மாதிரி தான்…

ஆனா அவள் கவனம் வெளியில இல்ல.

 

அவள் முழுசா உணர்ந்தது

தன் அருகில் நிக்கிற அவன் இருப்பை.

 

திரும்பிப் பார்க்கணும்னு மனசு சொன்னது.

ஆனா கண்கள் கேட்கல.

 

“என்ன ஆச்சு உனக்கு?”ன்னு தன்னையே திட்டிக்கிட்டாள்.

இதுக்கு முன்னாடி

ஒரு ஆண் இப்படி அருகில் இருந்ததில்லை.

 

விக்ரம்…

அவன் பேசணும்னு நினைச்சான்.

ஒரு சாதாரண வார்த்தை கூட அவனுடைய வாயில இருந்து வரல, தொண்டை குழி வரைக்கும் வந்து தத்தளித்துக் கொண்டிருக்கின்றது அந்த வார்த்தைகள்…

 

ஆனா குரல் வரவே இல்லை.

 

அவள் திரும்பினா,

அவள் கண்கள் தன்னோட கண்கள்ல மாட்டிடுமோன்னு

அவன் பயந்தான்.

 

அந்த பயம் புதுசு.

அந்த பயமே இனிமை.

 

இருவருக்கும் நடுவுல

ஒரு பெரிய மௌனம்.

ஆனா அந்த மௌனம் காலி இல்ல.

அது நிறைய உணர்ச்சியால நிரம்பி இருந்தது.

 

நிலா மெதுவா தலையை திருப்பினாள்.

முழுசா இல்லை.

சிறு ஓரமாக.

 

அதே நேரத்துல

விக்ரமும் அவளை பார்த்தான்.

 

ஒரு நொடிக்கு…

ரெண்டு கண்களும் மோதிச்சு. அங்கு ஏதோ ஒரு மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது போல ஒரு உணர்வு.

 

அந்த நொடி

ரெண்டு பேருக்கும்

இதயம் அடிக்கற சத்தம்

காதுக்கே கேட்ட மாதிரி இருந்தது.

 

நிலா உடனே கண்ணை திருப்பினாள்.

கன்னங்கள் தானா சூடாயின.

 

விக்ரம் சின்ன புன்னகையோடு சிரிச்சான்.

அவளுக்கு தெரியாம.,

 

“நீ… ஓகே தானே என்று?”

அவன் கேட்டது கிட்டத்தட்ட ஒரு கிசுகிசு மாதிரி.

 

அவள் பதில் சொல்லவே இல்லை.

ஆனா “இல்ல”ன்னு தலையசைத்தாள்.

 

அந்த சின்ன அசைவு

அவனுக்கு போதும்.

 

நானும்… என்று அவன் சொல்ல ஆரம்பிச்சு நிறுத்திட்டான்.

 

அவள் திரும்பி பார்த்தாள்.

“நானும்?”ன்னு ஏதோ சொல்ல வந்தீங்க அப்படின்னா கேட்காமலேயே அவள் கண்கள் கேட்டது.

 

“எதுவும் இல்ல.”

அவன் சொல்லி உதடுகளை உள் எழுத்து சிரிக்க முடியாதவன் போல அடக்கிக் கொண்டு சின்னதாக சிரிக்க ஆரம்பித்தான்.

இப்போ இருவரும்

பேசிக்கிட்டிருக்காங்க.

ஆனா பேசாம.

 

வார்த்தைகள் இல்ல.

ஆனா உணர்வு இருந்தது.

 

அந்த முதல் வெட்கம்.

அந்த முதல் நெருக்கம்.

அந்த முதல் “இது என்ன?”ன்னு

புரியாத சந்தோஷம்.

 

காதல் உணர்வு என்ற அணைக்க அவங்க ரெண்டு பேருமே அத பத்தி சொல்லிக்கவே இல்ல

ஆனா இருவருக்கும்

அது வந்துடுச்சுன்னு

அந்த சின்ன சின்ன வெட்கமும்,சிரிப்பும் பார்க்க ஏங்கும் அந்த கண்கள் ஆனா பார்க்க இயலாதவர்களாக தவிக்கும் அந்த தவிப்பு இது அனைத்தும் சேர்ந்து அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன இருக்கு என்று புரிய வச்சுட்டு போச்சு.

 

 

ரெண்டு பேருமே

பேயங்கரமா பெருமூச்சு விட்டுக்கிட்டே இருந்தாங்க ஏதோ பல மையிலு தூரம் நடந்தது போல.

அது சோர்வால இல்ல.

சொல்ல முடியாததை அடக்கி வைத்திருக்கிற தவிப்பால.

 

விக்ரம் ஒரு ஸ்டெப் முன்னாடி வந்தான்.

அதே நேரம் நிலாவும்

அறியாமலே ஒரு ஸ்டெப் அவன் பக்கம் நகர்ந்தாள்.

 

இது திட்டமில்லை.

இது முடிவு இல்லை.

இது மனசு தானா எடுத்த ஒரு பாதை.

 

அவர்களுக்குள்ள இடைவெளி

மெல்ல மெல்ல குறைய ஆரம்பிச்சது.

அந்த குறையும் இடைவெளியோடு

இதயத் துடிப்பு மட்டும்

அதிகமா கேட்டது.

 

நிலாவின் கைகள்

அவளுக்கே தெரியாம துடிக்க ஆரம்பிச்சது.

விரல்கள் சின்ன சின்ன நடுக்கத்தோடு

அவன் விரல்களை பற்ற வேண்டும் என்ற ஆசையோடு இன்னும் நெருங்க வேண்டும் என்ற தவிப்போடு அவள் விரல்கள் துடிதுடிக்க ,

விக்ரமும் மனதில் கட்டுப்பாடுகள் அளவுக்கு அதிகமாக இருக்கு ஆனால்…

அவன் கைகள் அவன் கட்டுப்பாட்டில் இல்ல.

ஒரு இஞ்சு தூரம்…

அவ்வளவுதான்

அவளுடைய கையை தொடுவதற்கு.

 

பிடிச்சுக்கலாமா?

என்ற கேள்வி

அவனுடைய உதடுகள்ல இல்லை.

அவனுடைய விரல்கள்ல இருந்தது.

 

நிலாவுக்கும் புரிந்தது.

அந்த விரல்கள்

அவளுடைய விரல்களை தேடிக்கிட்டிருக்குன்னு.

 

பிடிக்க ஆசை.

ஆனா அதுக்கு முன்னாடி

ஒரு நொடித் தயக்கம்.

 

அந்த தயக்கம் பயம் இல்ல.

அந்த தருணம் மாறிடுமோன்னு ஒரு அச்சம்.

 

அவள் சுவாசம் இன்னும் வேகமா.

அவன் சுவாசம் அவளோட rhythm-க்கு சேர்ந்தது.

 

இப்போ ரெண்டு பேரும்

ஒரே முடிவுக்கு வந்த மாதிரி.

 

மெல்ல…

மிக மெல்ல…

அந்த விரல்கள்

ஒன்றை ஒன்று நோக்கி நகர்ந்தது.

 

அந்த ஒரு தொடுதல்

நடக்கப்போற அந்த நொடிக்கு முன்—

 

கீழே…

வீட்டுக்கு முன்னாடி

ஒரு சத்தம்.

 

திடீர்னு…

ஒருத்தன் கீழ நின்னு சார் உங்க கிட்ட பேசணும் ப்ளீஸ் சார் ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி கேட்டுட்டு ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான்.

 

அந்த சத்தம்

காற்றை மட்டும் கிழிக்கல.

அந்த தருணத்தையும் கிழிச்சுட்டு போச்சு.

 

ரெண்டு பேருமே ஒரே நேரத்துல

பால்கனி ரெயிலிங்கை பிடிச்சுக்கிட்டு

கீழே எட்டி பார்த்தாங்க.

 

இதயம் இன்னும் அடிச்சுக்கிட்டே இருந்தது.

விரல்கள் இன்னும் துடிச்சுக்கிட்டே இருந்தது.

 

ஆனா

அந்த தொடுதல் மட்டும்

நடக்கல.

 

அந்த நடக்காத தொடுதலே

அவங்க ரெண்டு பேருக்குள்ள

முதல் காதல் நினைவா மாறிச்சு

கீழே நின்றபடி

“விக்ரம் சார்… உங்கள்கிட்ட பேசணும் சார்.

நிலா… உங்ககிட்டேயும் பேசணும்.”

 

அந்த குரல் கேட்ட நொடியில்,

பால்கனியில் இருந்த காற்று திடீர்னு நின்ற மாதிரி தோணிச்சு.

 

“எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க…”

கையை எடுத்து கும்பிட்டபடி

தினேஷ் ரொம்ப பாவமா நின்றுக் கொண்டிருந்தான்.

 

மேலே…

நிலாவும் விக்ரமும் ஒருவருக்கு ஒருவருடைய முகத்தை பார்த்துட்டு 

ஒரே நேரத்துல கீழே பார்த்தாங்க.

 

கொஞ்சம் முன்னாடி வரை

ஒரே மூச்சு, ஒரே துடிப்பு,

ஒரே நெருக்கம்.

 

இப்போ…

அந்த உலகம் திடீர்னு உடைந்து

வெளி உலகம் உள்ளே புகுந்த மாதிரி ஒரு சின்ன இடைவெளியோடு.

 

“இருங்க…

நாங்கள் கீழே வர்றோம்.”

விக்ரம் சொன்னதும்,

அந்த குரல் எப்போதும் போல தைரியமா இருந்தாலும்,

அதுக்குள்ள இருந்த உணர்வு

அவனுக்கே புரிஞ்சுது.

 

நிலா அவனைப் பார்த்தாள்.

ஒரு வார்த்தை கூட பேசல.

விக்ரம் மனசுக்குள்ள தினேஷை பார்த்தால் அவள் மனம் என்ன ஆகும் என்று தெரியலையே .. இப்படி அவன் யோசித்தபடி அவள் முகத்தை பார்க்கும் போது ஆனா அங்கே அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை அவள் தைரியமாகவே தினேஷை பார்த்தாள் . மறுபடியும் விக்ரமை ஒரு பார்வை பார்த்தாள் அந்த பார்வைக்கான அர்த்தம் …

நீங்க இருக்கீங்கன்னு சொல்லுற மாதிரி அந்த ஒரு பார்வை.

 

ரெண்டு பேரும்

ஒன்றுக்கொன்று கொஞ்சம் இடைவெளி வச்சுக்கிட்டு

படிக்கட்டில் இறங்கினார்கள்.

 

அந்த இடைவெளி…

சில நிமிஷங்களுக்கு முன்னாடி

இவ்வளவு பெருசா இருந்ததில்லை.

 

கீழே வந்ததும்—

 

“என்ன தினேஷ்?

இங்கே எதுக்காக வந்திருக்க?”

விக்ரம் கேட்டான்.

 

அதான் எல்லாம்

ஆபீஸிலேயே பேசிட்டேன். இது எங்க பிரைவேட் ஏரியா,

இங்கே எதுக்காக நீ வந்த என்று கோபமாக அவன் கேட்க,

 

தினேஷ் தலையை குனிந்தபடியே இருந்தான்.

 

“இல்ல சார்…

நான் உங்ககிட்ட தான் பேசணும்.”

 

குரல் நடுங்கியது.

 

“ஐம் சாரி சார்.

நான் அந்த மாதிரி நடந்திருக்கக் கூடாது. நான் இப்படி கேவலமா நடந்துக்கிட்டது வெளியில நாலு பேருக்கு தெரிஞ்சா நம்ம கம்பெனியோட பேரு கெட்ட பேரா மாறியிருக்கும்.” என்றெல்லாம் அவன் சொல்ல,

நிலா எதுவும் சொல்லாம நின்றிருந்தாள்.

அவளுடைய கைகள்

முன்பே போல

மெல்ல இறுக்கமா ஒன்றோடொன்று சேர்ந்தது.

 

நிலா … நீங்களும் இந்த விஷயம் வெளியில தெரியாம

பார்த்துக்கிட்டீங்க…

அதுவே பெரிய விஷயம்.

நிலா நினைச்சிருந்தா கம்ப்ளைண்ட் கூட கொடுத்திருக்கலாம்.

 

ஆனா நிலாவும் எதுவும் பண்ணல.

ஐம் சாரி நிலா…

 

அந்த மன்னிப்பு

உயர்ந்த குரலா இல்ல. ரொம்ப உணர்ந்துதான் அவன் இப்படி மன்னிப்பு கேட்டான் இவ்வளவு தூரம் வந்து…

என் கூட இருந்தவங்க 

என்னைக் குழப்பிட்டாங்க.

அதனால தான்

நான் இந்த மாதிரி பண்ணிட்டேன் என்று சொல்லிக் கொண்டு

அவன் கண்ணை தூக்கி

ரெண்டு பேரையும் பார்த்தான்.

 

“மன்னிப்பு கேக்கணும்னு தான்

நான் வந்தேன்.”

 

அந்த நொடியில்

விக்ரம் நிலாவைப் பார்த்தான். நிலாவுடைய மனசு மன்னிச்சது போல அவளுடைய முகமே அங்கே சொல்லியது. அவளுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கிடைத்தது போல அவள் ரொம்ப தீர்க்கமாக நின்று கொண்டிருக்க,

 

அவள் முகத்தில் பார்த்த அந்த அமைதி அவள் என்ன யோசிக்கிறாள் என்று அவனுக்கு புரிய வச்சது.

ஏதாச்சும் சொல்லு நிலான்னு அவன் ரொம்ப பாவமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு அவன் கேட்க,

இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் என்று எனக்கு தெரியாது. ஆனா இனிமே பழைய மாதிரி நான் இருக்க மாட்டேன் தினேஷ்.

முன்னாடி மாதிரி இருந்தா நிச்சயமா நான் இது எல்லாத்தையும் மறந்து இருப்பேன் மன்னிச்சிருப்பேன். உன்னால நான் எவ்வளவு ஏச்சு பேச்சு வாங்கினேன் என்று உனக்கு தெரியாது.

உன்னால என் கூட சேர்ந்து இவரும் அவமானப்பட்டு நிற்கிறார்.

இது உனக்கு புரிஞ்சு உன் மனசார நீ என்கிட்ட மன்னிப்பு கேட்டிருந்தேன் நான் உன்னை மன்னிச்சிடுறேன்.

அதுவே..

சும்மா பேருக்கு கேக்கணும்னு நினைச்சா, உன் வாழ்க்கையில் நீ இன்னும் நிறைய அனுபவிப்ப, போய்ட்டுவா தினேஷ் இப்படி சொன்னதும் அதுக்கு அவன் நான் மனசார தான் கேட்கிறேன் என்னை மன்னித்துவிடு என்று சொல்லி அவன் கையெடுத்து கும்பிட,

அதான் நீ மனசார கேட்டிருந்தா உன்னை மன்னித்துவிடுகிறேன் என்று சொன்னேனே… அதில் பதில் இருக்கு இப்படி அவள் சொல்ல தினேஷ் சரி நான் கிளம்புறேன்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்ப,

அவன் போற வரைக்கும் அவங்க கேட் டை பார்த்துக்கொண்டே இருக்க,

 ஆர் யூ ஓகே,

அவன பார்த்ததும் நீ மறுபடியும் சங்கடப்பட போறேன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். பரவாயில்லை, இவ்வளவு தெளிவா பேசி அனுப்பிட்டேன்னு சொல்ல அவள் எதுவுமே சொல்லாம வேகமாக அவனை இறுக்கி கட்டி அணைத்து அழுக ஆரம்பித்தாள்.

அந்த அழுகை காண காரணம்…

நான் அவமானப்பட்ட நேரங்களில்…

என் கைகளை விடாமல், அதே நேரத்தில்

எனக்காக என்னை பேச வைத்த ஒரு உன்னதமான மனிதன்.

என்னை நானே திரும்பி பார்க்கிறேன் என்னுள் நான் யார் என்று?…

இப்படி எல்லாம் நினைத்தபடி அவளுடைய அழுகையில் ஆயிரம் காரணங்களோடு,

ஏதோ ஒரு நிம்மதியில், உன்னதமான ஒரு கருவறையை எட்டிய உணர்வுகளோடு அவனை கட்டி அணைத்து பயங்கரமாக அழுதாள்.

அவளுடைய அழுகைக்ககாண காரணம் என்ன?..

இப்படி இருவரும் கட்டி அணைத்து நிற்பதை, அவனுடைய வாசலில் நின்றபடி ஒருவர் மிகவும் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

இனி என்ன நடக்குதுன்னு நாளைக்கு பாக்கலாம்.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page