அம்மாவின் குணம்

அவன் உடைந்து அழுதுட்டு இருந்த அந்த நேரத்துல…

காலிங் பெல் சத்தம் கேட்டுச்சு. அவன் எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு, இரு நிலா நான் பார்த்துட்டு வரேன்னு சொல்லி கீழே போனான்.

கதவை திறந்ததுமே… ஆபீஸ் மேனேஜர், என்ன தினேஷ்?..

எதுக்கு மறுபடியும் வந்து இருக்க?..

சார் நான் இதை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். உங்க அம்மா தான் சார் குடுக்க சொன்னாங்க.

நேத்து நைட்டு திடீர்னு வந்தாங்க என் வீட்டுக்கு வந்துட்டாங்க சார் என்னன்னு தெரியல,

எனக்கு ஒன்னும் புரியல,

உங்களுக்கு எப்படி என்னோட வீடு தெரியும் மேம் அப்படின்னு கேட்டேன்.

அவங்க எதுவும் சொல்லாம காலையில நீ ஆபீஸ்க்கு போறதுக்கு முன்னாடி இது என்னோட பையன் கிட்ட குடுத்துடுனு சொல்லிட்டு போயிட்டாங்க.

எனக்கு ஒன்னும் புரியல,

ஏதும் முக்கியமான envelope ah ?….

சரி நீங்க எதுக்கு வெளியே நிக்கிறீங்க உள்ள வாங்க நம்ம பேசிக்கலாம் அப்படின்னு கூப்பிட்டு இருந்தேன்.

அவங்க வரல,

ரொம்ப சோகமா இருந்தாங்க. இப்படி எல்லாம் சொல்லும்போது அதுக்கு இப்ப என்ன?….

அவங்கள பத்தி எதுக்கு என்கிட்ட இப்போ கதை கதையா சொல்லிட்டு இருக்க?…. அவங்க ஏதும் உன்கிட்ட சொல்ல சொன்னாங்களா என்று கேட்கும் போது,

. அது இல்ல சார்..

அதாவது…

இப்படி அவன் யோசிக்க படியே அவங்க வந்த நேரம் ராத்திரி 12:45 அதனால தான் சார் எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு.

அவங்களுடைய பேஸ் எதுவுமே சரியா இல்ல… முகம் ரொம்ப சோகமா இருந்துச்சு. பயங்கரமா வீங்கி போய் தான் இருந்துச்சு.

நான் எவ்வளவோ சமாதானப்படுத்தி வீட்டுல தங்க வைக்கலாம்னு முயற்சி பண்ணேன். ஆனா அவங்க கிளம்பிட்டாங்க.

அவங்க கிளம்பும்போது நான் அவங்க கார் வரைக்கும் கூடவே போனேன். உள்ள நிறைய லக்கேஜ் எல்லாம் இருந்துச்சு சார் இப்படி சொன்னதுமே,

அவன் அந்த கவரை வாங்கி பிரித்து படித்தான்.

என் அன்பு மகனே…

உனக்கு பிடிக்காத உன்னை பெற்றெடுத்த தாய் எழுதிக் கொள்வது.

உங்க அப்பா நல்ல பணக்காரர் வசதியானவர் தான். நாங்க காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால் அவர் பிசினஸ்ல அவ்வளவு தெளிவா இல்லாம நிறைய பணங்களை இழக்க ஆரம்பிச்சாரு. இதனால அவருக்கு அளவுக்கு  அதிகமான கெட்ட பெயர் வந்துச்சு .

போர்டு மெம்பர்ஸ் எல்லாரும் நம்மளுடைய shares ah வாங்க திட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க.

கிட்டத்தட்ட எல்லாம் முடியப் போற சூழ்நிலை.

வேற யாராவது ஒரு ஆளு பதவியில் இருந்தே ஆகணும் என்ற கட்டாயம்.

என்ன செய்யன்னு தெரியல,

எனக்கு அதுல நிறைய நாலேட்ஜ் இருக்கு ஆனா நான் சொன்னா அவர் கேட்க மாட்டாரு.. சொல்லியும் பார்த்து கேட்காமல் என்ன அவமானப்படுத்தினார்.

உங்க தாத்தாவுக்கு வயசு ஆயிடுச்சு அதனால அவர் அந்த ஷேர்மேன் போஸ்டிங்க்கு போய் உட்கார முடியாது. நம்ம சார்பில் யாராவது திறமையான ஒரு ஆளை நியமிக்கணும்.

யாரை நியமிக்கணும்னு தெரியாம குழம்பியதும் நான் தான் உங்க அப்பா கிட்ட நான் போறேன்னு சொல்லி பிரச்சனை பண்ணி தான் உள்ள நுழைஞ்சேன்.

உன்ன பெத்து கொடுத்துட்டு தான் போனேன்.

கொஞ்சம் இல்ல அளவுக்கு அதிகமான கடன். எல்லாத்தையும் நான் ஒரு ஆளாக போராடி தான் இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்தேன்.

ஒரு பொண்ணு தான என்று சொல்லி என்ன அவமானப்படுத்தாத இடமில்லை.

சின்ன கேப் கிடைச்சாலும் கூட என் மானத்துக்கு அங்க பாதுகாப்பு கிடையாது.

உங்க அப்பா அதுக்கு அடுத்து ஆபீஸ் பக்கம் வரத நிப்பாட்டிட்டாரு. எவ்வளவு கூப்பிட்டு பார்த்தேன் உன்னை காரணம் சொல்லி அவர் அப்படியே குடிக்க ஆரம்பிச்சுட்டாரு.

தினமும் சண்டை தான்…

எங்க அம்மா கிட்ட நான் தான் சொல்லி உன் சித்தியை இங்கே வர வச்சேன்.

நாட்கள் போக போக என்னால உன்னை பார்க்க முடியாமல் போயிடுச்சு. அந்த பக்கம் விட்டா மறுபடியும் பழைய படி போயிடுமோ என்ற பயத்திலேயே நான் ஓட ஆரம்பிச்சேன்.

நான்தான் இப்ப நல்லா கொண்டு வந்துட்டேன்ல இதுக்கு அடுத்து நீங்க போய் பாத்துக்கோங்க உங்க அப்பா கிட்ட நான் சொல்லாத நாளில்லை அவருக்கு ஒரு விதமான ஈகோ… அது எப்படி வெளிகாட்டுன்னு தெரியாம உன்னைய காரணம் காட்டியே என்ன மட்டம் தட்ட ஆரம்பிச்சாரு.

நான் வீட்டிலேயே இருக்கிறேன் நீங்க போய் வேலையை பாருங்கன்னு சொன்னாலும் நீ ஏற்கனவே என்னை அப்படித்தான் கேவலப்படுத்தினேன் இனிமேல் என்னால இந்த கேவலத்துக்குள் நுழைய முடியாது என்று மறுபடியும் என்னென்னமோ சொல்லுவார்.

அப்படியே நாட்கள் நகர் ஆரம்பிச்சது.

உனக்கு என்னை விட என் தங்கச்சியை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது.

சத்தியமா எனக்கு அவள் மேல பயங்கர கோபம். அது மட்டும் இல்ல உங்க அப்பா சொல்றது மட்டும் தான் அவள் நம்புவா, நிறைய தடவை சொல்லி இருக்கேன் மாமா கிட்ட இந்த மாதிரி பேசி நீயாவது கொஞ்சம் சரி பண்ணு என்று…

ஆனா அவள் என் மேல குற்றம் சொல்லுவா..

அது இன்னும் எனக்கு கோபத்தை அதிகப்படுத்துச்சு. அவன் நினைத்து இருந்தால் உங்க அப்பாவை சரி பண்ணி இருக்கான் உங்க அப்பாவுக்கும் அவ மேல நல்ல மரியாதை.

 

வேண்டும் என்றே தான் நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசி அந்த கோவத்துலயாவது உங்க ஆபிஸ் வருவார் என்று பார்த்தேன். ஆனா கடைசி வரைக்கும் நடக்கவே இல்ல.

அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனது என்னுடைய கார்.  இங்கே கிட்டயும் சண்டை போட்டுட்டு நான் கோபமாக போயிட்டேன் எப்போதும் நான் யூஸ் பண்ற கார் இங்கேயேதான் இருந்துச்சு.

நான் வேற ஒரு கார்ல தான் இங்க இருந்து போனேன்.

ஆனா ஏற்கனவே எனக்கு பிசினஸ்ல நிறைய பிரஷர். ஒரு சில காண்ட்ராக்ட் எடுத்ததுனால என் மேல எக்கச்சக்கமான கோபத்தில் நிறைய பேர் இருந்தாங்க.

அதுல யாரோ தான் அந்த மாதிரி பண்ணாங்க…

நல்லா குடிச்சேன். உன்னை ஹாஸ்பிடல் வந்து பார்க்காத அளவுக்கு குடிச்சேன்.

ஆனா என்ன செய்ய?…

என் மனசுக்குள்ள இருக்கிற pain எல்லாம் வெளிய வர ஆரம்பிச்சது.

முதல்ல அழுதுட்டா இருந்தேன். அடுத்து போக போக அவ்வளவு திட்டினேன் உங்க அப்பாவையும் திட்டினேன். எல்லாரும் என் தலையில் சுமையை சுமக்க வச்சிட்டு போயிட்டீங்களே என்று…

நான் சொல்லப்போனால் அந்த கொலையை நான் தான் பண்ண மாதிரி கணக்கு அன்னைக்கு மட்டும் நான் எப்போதும் போற கார்ல சுத்திட்டு இருந்திருந்தா நான் தான் செத்து போயிருப்பேன்.

ஆனா…

கோபத்துல நான் வேற கார்ல ஏறி போனதுதான் மிகப்பெரிய தப்பு. இப்ப வரைக்கும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள்ள இருக்கு. நீ மட்டும் என் பிள்ளை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு இல்ல அதனால தான் டி என் சாபம் பளிச்சு நீ இப்படி செத்து போயிட்டேன்னு சொன்னேன் உங்க சித்தியோட போட்டோவை பார்த்து…

 

இப்படி கேவலமா நினைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஒரு பெண்ணாக நான் எவ்வளவு வேதனைகளை கடந்து வந்திருக்கிறேன்.

எனக்கு கை கொடுத்து உதவ இங்கே யாருமே இல்ல… என்னை அவங்க கிட்ட இருந்து விலக்கி வைக்க தான் முயற்சி பண்ணினார்கள்.

இதெல்லாம் நினைத்து நினைத்துதான் நான் தினமும் நொந்து போய் கோபத்துல அழுக ஆரம்பிச்சேன் கோவத்துல கத்த ஆரம்பிச்சேன்.

இது எல்லாத்துக்கும் காரணம். ஏதோ ஒரு இயலாமை. என்னோட குழந்தையை என் கையால ஏந்தி வளர்க்க முடியலையே என்று…

அதனாலதான் உன்கிட்ட யாரு பழகினாலும் என்னால இருக்க முடியல. இப்போது கூட இந்த ஆபீஸ்ல வேலை பார்த்த அந்த பொண்ணு அவளை உன் கூட பார்த்ததும் எனக்கு பயங்கர கோபம் வந்துச்சு.

நீயும் என்னை கண்டபடி திட்டி அனுப்பிட்டேன் வீட்டுக்கு போய் தனியா உட்கார்ந்து யோசிக்கும் போது…

உனக்குன்னு ஒரு வாழ்க்கை வரும்போது அதை நான் தடுக்கிற மாதிரி எனக்கு தெரியுது.

ஆபீஸ் பொறுப்பு எல்லாத்தையும் நீயே பார்த்துக்கோ இனிமேல் நான் வரமாட்டேன். ஆன்மிகமாக நான் ஊர் சுத்த போறேன். எங்க எனக்கு முக்தி கிடைக்குதோ அங்கேயே கிடைக்கட்டும்.

எப்பவாவது நான் திரும்பி வரும்போது உன்னோடு கோபம் குறைஞ்சிருந்தா என்ன நீ அம்மான்னு கூப்பிடு…

நிச்சயமா நான் திரும்பி வருவேன். இதே குணத்தோட இல்ல…

ரொம்ப அமைதியான உன்னோட சித்தி போல..

இப்படிக்கு என் கையால் பாலூட்டாத என் ரத்த உறவே..

இப்படி எழுதி இருந்தது.

அதை பார்த்ததும் அவனுக்கு பயங்கரமாக கண் கலங்க ஆரம்பித்தது. யோசித்துப் பார்க்கும்போது தான் தெரிஞ்சது. அதை சித்தி உடைய கார் இல்ல அது அம்மாவுடைய பழைய கார் என்று…

கீழே போன இன்னும் காணவில்லை என்று அவள் கீழே வந்து பார்க்கும்போது தினேஷ் தூரமாக போயிட்டு இருந்தான்.

கொஞ்சம் கோபமாக கீழே இறங்கி வர இங்கே லெட்டர் படிச்சுக்கிட்டு கண்ணீரோடு கைகால் எல்லாம் நடுங்கற மாதிரி நின்று கொண்டிருந்த விக்ரம பார்த்ததும் விக்ரம் என்ன ஆச்சு?…

அது தினேஷ் தானே…

இப்படி கேட்டுக் கொண்டே பக்கத்தில் வரும் பொழுது அவன் அந்த கடிதத்தை கொடுத்தான். இப்போதுதான் பேசிட்டு இருந்தேன்.

அதுக்குள்ளேயே எங்க அம்மா ட்ராமாவை ஆரம்பிச்சுட்டாங்க இப்படி சொல்லும் போது,

அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக அந்த கடிதத்தை படித்தாள்.

விக்ரம் இதில் இருக்கிறது உண்மைதான் அவங்க ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்காங்க அது உங்களுக்கு தெரியலையா?…

அது எப்படி சொல்ற?…

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. கொலையும் பண்ணிட்டு இப்படி லெட்டர் எழுதி கொடுத்துட்டு போனா நான் எல்லாத்தையும் மறந்துடுவேன் என்னவோ இவங்களை யாரும் கொலை பண்ண வந்ததா சொல்றாங்க,

இவங்கள கொலை பண்ற அளவுக்கு இங்கே எதிரி யார் இருக்காங்க?….

ஏன் இருக்க கூடாது?..

இப்போ ரீசண்டா ஒரு பெரிய கவர்மெண்ட் ப்ராஜெக்ட் எடுத்தாங்க அது தெரியுமா?..

  நீங்க ஆபீஸ் பக்கம் வந்து இருந்தா தெரிஞ்சிருக்கும்.

அப்போ ஒரு நாள் அந்த ஆர்டர் நமக்கு கிடைத்ததுமே நிறைய பேர் ஆபீஸ் குள்ள வந்து பயங்கரமா கலாட்டா பண்ணினார்கள்…

இது ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் வரும்போது அது நமக்கு தான் கிடைச்சிருக்கு.

ஒரு ஒன்ற வருஷத்துக்கு முன்னாடி…

அப்போ மேடம் தான் அதை சைன் பண்ணி காண்ட்ராக்ட்ல ஓகே பண்ண போனாங்க…

அப்படி போன இடத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்னாடியே அவங்க ஹஸ்பண்ட் இறந்து போனதா சொன்னாங்க…

இல்லனா அவங்க தான் இறந்து இருக்கணும்னு எல்லாரும் பேசிகிட்டாங்க. இதுவே எனக்கு ஆபீஸ்ல அன்னைக்கு கலவரம் பண்ணவங்க எல்லாரையும் பார்த்ததுக்கு அப்புறம் தான் அது உண்மைன்னு தெரிஞ்சது.

அந்த வேலை வேணாம் அங்கிருந்து கிளம்பி வந்துடலாம்னு நான் நினைச்சேன்..

ஆனா அவங்க ரொம்ப போல்டா இருந்தாங்க.

எனக்கு அது கொஞ்சம் இன்ஸ்பிரேஷனாவே இருந்துச்சு. அவங்க சொல்றது பொய்யில்லைன்னு நினைக்கிறேன் இந்த கடிதத்தை பாரேன் உன் மேல இருக்கிற ஆசை உன் மேலே இருக்கிற பாசம் சில ஏக்கங்கள் எல்லாத்தையும் கண்ணீரோடு எழுதி இருக்காங்க,

 

இப்போ உங்களுடைய கோபம் குறையாமல் இருக்கலாம். காலம் அதை மாற்றும். சில விஷயங்கள் உங்களுக்கு தெரியாத இப்ப தெரியப்படுத்தி இருக்கு.

அதனால,

பொறுமையா யோசிங்க…. நிச்சயமா அவங்களோட நிலைமை உங்களுக்கு புரியும். ஒரு வேலை தப்பு செய்யாம அவங்க தப்பு செஞ்சதா உங்க மனசுல பதிஞ்சு போயிருந்தா அதைவிட மிகப்பெரிய தப்பு வேற எதுவுமே இல்லையே..

இப்போ உங்க சித்தியும் அப்பாவுமே உங்க அம்மாவுடைய பாசம் உங்களுக்கு கிடைக்கலைன்னு தானே எப்போதும் சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப அவங்க பாசம் உங்களுக்கு முழுசா கிடைக்கப்போகுது ஆனா நீங்க ஏன் தள்ளி நிக்குறீங்க இப்படி நீங்க தள்ளி நிக்கறத பாத்தா அவங்க ஆத்மா சாந்தி அடையுமா?…

உங்களுக்கு எல்லா உறவு வேணும் நினைச்சது அவங்க ரெண்டு பேர் தானே,

இப்படி எல்லாம் சொல்ல…

அவன் எதுவும் சொல்லல,

அமைதியாக போனான். என்ன விக்ரம் எதுவும் பேசாம போறீங்க?..

எனக்கு கொஞ்சம் டைம் வேணும் நீ சொன்ன மாதிரி எனக்கு காலம் பதில் சொல்லணும் இல்ல…

நிச்சயமா என்னோட அம்மா மேல இருக்கிற எண்ணம் எனக்கு மாறுவதற்கு கொஞ்சமாவது ஸ்பேஸ் வேணும்னு சொன்னான்.

இதை கேட்டதுமே நிலா..

நிச்சயமா,

பொறுமையா உட்கார்ந்து யோசிங்க, உங்களுக்கு எப்போ என்கிட்ட பேசணும்னு தோணுதோ அப்ப மனச விட்டு பேசுங்க இப்படி அவள் சொல்ல,

அவன் வேகமாக வந்து அவளை இறுக்கி கட்டி அணைத்தான்.

நீ என்கூட இரு…

அதுதான் எனக்கு மிகப்பெரிய ஆறுதல். இல்லன்னா என்னோட மனசு குழப்பமாக இருக்கும் இப்படி சொல்லிக் கொண்டு அவளுடைய கைகளை இருக்கு பிடித்துக் கொண்டாள் அந்த பிடிப்பு இப்போது அவனுக்கு அரணாக இருந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page