அலை – 3
யவனவிஹாரம் என்பது யவனர்கள் தங்கி வாழ்ந்த பகுதி
ஆனால் அது யவனர்கள் மட்டும் இருந்த வீதி அல்ல.அந்த இடத்தில் எப்போதும் தமிழர்களும் கலந்து இருப்பார்கள்
வீனஸ்ஸின் இடுப்பில் வாள், தோளில் கவசம், கண்களில் அதித சோர்வுடன் யவனவிஹாரத்தில் நுழைந்தான்.
வீனஸை விஹாரத்தின் வீதியின் வாயிலிலேயே திராட்சை மதுவின் வாசனையும், வெளிநாட்டு வாசனையும்,புதிதாக இறக்கப்பட்ட சாமான்களின் மணமும் வரவேற்றது
மாலுமி வீனஸ் இதோ வந்துவிட்டோம் சிறிய ரோமா பகுதிக்கு என்றார்.
சோர்வுடன் இருந்தாலும் வீனஸ் நன்றாக புரிகிறது இதோ நமது நாட்டின் பழமையான திராட்சைரசத்தின் நெடி என்றான் நாசியை நுகர்ந்து கொண்டே..
சங்ககால யவனர்கள் (கிரேக்க, யவனர்கள்) தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களது விலங்குகளையும் இந்த பயணத்திற்கும் இங்கே கொண்டு வருவார்கள்.
எராவும் சந்தோசமாக “ந்ஹ்ஹ்… ஹும்ம்நீ என்ற கணைப்பு கனைத்தான்.
வீனஸ் எராவின் கழுத்தை தடவினான்.
“இன்றைக்கு உனக்கு ஓய்வு, நண்பா,” என்றான் மெதுவாக.
மாலை நேரத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டதும், இந்த வீதிகள் ஒரு திருவிழா நகர்வலம் போல ஒளியும் வாசனையும் மனித கூட்டமும் கலந்து பிரகாசித்தன.
மாலுமி இங்கே எராக்கு உணவு எங்கே கிடைக்கும் என்று கேட்டான்.
உடனே எரா உதட்டை அசைத்து மெதுவாக கடித்து சப்தம் இட்டது.கூடவே தலையை நீட்டி மணம் பிடித்தது.
மாலுமி ஹாஹாஹா…. என்ற மிகப் பெரிய சிரிப்புடன் சரிதான் நம்மைவிட எராக்குத்தான் பசி அதிகம் போல, நம் வயிற்றுக்கு இப்போது உணவு இல்லை இல்லையா என்று கேட்டுக் கொண்டே
எராவிடம் எரா எங்களுக்கும் கொஞ்சம் உணவு தருவாயா என்று கேட்டார்.
தலையை “ற்ற்ஹ்…” முகத்தை திரும்பி விலகியது எரா.
பார்ரா…. உன் பசிதான் உனக்கு முக்கியமா, எங்களுக்கு பசி இல்லையா என்று ஆதங்கத்துடன் எராவை கேட்டார் மாலுமி.
அதை கேட்டதும் எரரவின் முகம் கனிந்து தோளில் தலையை வைத்தது.மாலுமிக்கு இந்த அன்பின்மொழியை கண்டு திணறினான்.மிகவும் பரிவுடன் எரா நீ முதலில் பசியாறி விட்டு சொல் பிறகே நான் உண்பேன் என்றான்.
வீனஸ் பெருமிதத்துடன் ஏராவின் தாடையை தடவி முத்தம் ஒன்றை பரிசளித்தான்.ஏராவிற்கு மகிழ்ச்சி தாங்காமல் மெல்ல உடம்பை மேலும் கீழும் நாட்டியம் ஆடினான்.
பெரிய துறைமுக நகரங்கள் மற்றும் நகரங்களிலும், யவனவிஹாரங்கள் போன்ற இடங்களில் குதிரைகளுக்கு தனியாக தீவனம் விற்கும் கடைகளும் இருந்தன. போர்வீரர்கள் தங்கள் குதிரைக்கான தானியத்தை சாக்குப் பைகளில் வாங்கிச் செல்வதும் வழக்கம்.
அந்நாளில் குதிரைகள் பெரும்பாலும் போருக்கும், தூதுப்பணிக்கும், வணிகப் பயணத்திற்கும் பயன்படுத்தப்பட்டதால், அவற்றுக்கு பலம் தரும் உணவுகள் கொடுக்கப்பட்டன. முக்கியமாக புல், வைக்கோல், தானியங்கள் (வரகு, திணை, யவரம்( பார்லி ) கொடுக்கப்பட்டன.
சில சமயம் நனைத்த தானிய கலவையும், உலர் பச்சைப்பயிர் இலைகளும் வழங்கப்பட்டன. நீர் மிகவும் முக்கியமானது பயண இடைவெளிகளில் குளம், ஆறு, துறைமுக நீர்நிலைகள் அருகே நிறுத்தி குடிக்கச் செய்தனர்.
தெருவில் உணவு கடைகள் நீளமாக இருந்தன.தீவனக் கடையின் முன் நின்றனர் ஏராவின் முழு பசியை ஆற்றிவிட்டு அடுத்து இருக்கும் உணவு விடுதிக்கு மாலுமி கூட்டிச் சென்றான்.
மண் பாத்திரத்தில் நீராவி எழுந்தது.
இது என்ன? என்று கேட்டான் வீனஸ்.இது திணை கூழ் சூடாக குடிங்க உடம்பு பலம் பெறும் என்றாள் கடைக்கார பெண்.
வீனஸ் தயக்கத்துடன் ஒரு குடுவை எடுத்தான். மாலுமி வீனஸ் குடித்து முடிப்பதற்குள் கடகடவென குடித்து முடித்து யப்பா என்ற சப்தத்துடன் இன்னொரு குடுவை குடிக்க ஆரம்பித்தார்.
வீனஸ் இதற்கு முன் தமிழரின் உணவுகளை ருசி பார்க்காததால் மெதுவாக குடிக்க ஆரம்பித்தான் என்ன ருசி கூடவே மாலுமி எண்ணெயில் பொரித்த கடல் மீன்களையும் சாப்பிடுவதை பார்த்த வீனஸ் அதே முறையில் சாப்பிட்டான்.
ஆஹா…. ஆஹா….இது… மென்மை…புளித்த காரசுவை என்றான் ஆச்சரியமாக.
மாலுமி இப்போ தெரிகிறதா நான் சொன்னது உண்மை என்று என்றான்.
வீனஸ் ஆம் மாலுமி எகிப்து பாரசிக நாடுகளில் இல்லாத சுவை இங்கே இருக்கிறது என்றவனின் முகமும், காதும் ரோஜா வண்ணத்தில் சிவந்து போனது.
இருவரும் நன்றாக உணவருந்தி விட்டு யவனவிஹாரம் வந்தார்கள்.
யவனவிஹாரத்தில் தங்கியிருந்த யவன வணிகர்கள், போர்வீரர்கள், பயணிகளுக்காக உறங்குவதற்கு தனியான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. விருந்தினர் மாளிகைகள் மற்றும் வணிகத் தங்குமிடங்களில் காற்றோட்டம் உள்ள அறைகள், மர மேடைகள் அல்லது உயர்த்தப்பட்ட படுக்கை மேடைகள் இருந்தன. அவற்றின் மீது மிருக தோல் விரிப்பு அல்லது நெய்த புல் பாய்கள் விரிக்கப்பட்டு படுக்கையாக பயன்படுத்தப்பட்டது.
செல்வந்த வணிகர்களுக்கான அறைகளில் மென்மையான தலையணை, திரை மறைப்பு, எண்ணெய் விளக்கு, தனி பொருள் வைக்கும் பெட்டி போன்ற வசதிகளும் இருந்தன.
பொதுப் பயணிகளுக்கான தங்குமிடங்களில் பெரிய மண்டபம் போல கூட்டு உறக்க இடம் அமைக்கப்பட்டு, வரிசையாக கோரைபுல் பாய்கள் போடப்பட்டன.
குதிரை மற்றும் வண்டிகளுக்காக அருகிலேயே கொட்டகைகள் இருந்ததால், பயணிகள் தங்கள் விலங்குகளை பார்த்துக்கொண்டே அமைதியாக உறங்க முடிந்தது.
வீனஸ், ஏராவுக்கு தண்ணீர் காட்டி கொட்டிலில் கட்டிவிட்டு ஓய்வெடு என்று கூறிவிட்டு மாலுமியுடன் போர்வீரர்கள் தங்மிடம் வந்தார்கள். இருவருக்குமே உடலின் அசதியும், வலியும் வாட்டியதால் தங்களது படுக்கையில் அசந்தனர். நித்திரை உடனே இருவரையும் ஆட்கொண்டது.
காலை சூரியன் கொற்கை துறைமுகத்தின் நீலக் கடலில் ஒளி வீசி, வெள்ளை மணல் கரைகளை மினுமினுக்க வைத்தது. யவனவிஹாரில் உள்ள சந்தைகள், வீதிகள் உயிரோட்டத்துடன் இருந்தன. கடலோர துறைமுகத்தின அருகாமையில் இருந்ததால் காலை முதலே வணிகச் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
வீனஸ் இந்த சப்தங்களை கேட்டே கண்களை திறந்தான். மாலுமி வீனஸ் நான் கப்பலுக்கு செல்கிறேன். நீ நகரத்திற்கு சென்று அரசரை எப்போது காணலாம் என்று தெரிந்து விட்டு வா. உனது பொருட்கள் கப்பலில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
கொற்கை நகரின் அனுமதிசின்னமான பாண்டியமன்னரின் இரட்டை மீன் சின்னம் கொண்ட அரச முத்திரை,நாணயத்தை கொடுத்து, பத்திரமாக வைத்துக் கொள், இரவு சந்திப்போம் என்று கூறிச்சென்றான்.
பெரிய கப்பல்களில் புதிதாக வர்த்தக பொருட்களை, மெதுவாக இறக்கியதைச் சுற்றி, யவன,தமிழ் வணிகர்கள் சந்தைவீதிகளில்
சுறுசுறுப்பாக வாங்கி கொண்டிருந்தனர்.
விற்பனையாளர்களின் கூக்குரல்களும் அகலமான மண் வீதிகளின் இருபுறமும் கடைகள் அமைத்து, யவனரும் தமிழரும் இணைந்து வியாபாரம் செய்தனர். உணவுப் பொருள் கடைகளில் திணை கூழ், அரிசி உணவு, மீன் வறுவல், உப்பு ஊறுகாய், பழங்கள், தேன், பனைச்சாறு, திராட்சை பானம், ரொட்டி, பன்னீர் போன்ற யவன உணவுகளும் கிடைத்தன. சில கடைகளில் சூடாக புகை எழுந்து கொண்டே இருந்தது.
பயணிகள், போர்வீரர்கள், மாலுமிகள் நின்று உணவருந்தினர். வீதிகளில் யவனர்கள் கண்ணாடி மணிகள், ரொட்டி, திராட்சை பானைகள் விற்பனை செய்தனர்.
அடுத்த வீதிகளில் தமிழர்கள் மிளகு, திணை கூழ், மீன் குழம்பு விற்பனை செய்தனர்.யவனர்களும்,தமிழர்களும் மாறுபட்ட வண்ணங்களும் மணங்களும் கலந்த வாழ்க்கையைத் வாழ்ந்தனர்.
வீனஸ் தனது காலை கடன்களை முடித்துக் கொண்டு எராவுடன் நடந்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார்கள் இருவரும்.
தெருக்கள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தன.
வீதிகள் எங்கும் மிளகும் மசாலா நிறைந்த கடைகளும், கண்ணாடி முத்து கடைகளும் ஒன்றிணைந்து யவனவீதியில் உயிர் ஊட்டியது.வெளிநாட்டு நாணயங்கள் மின்னின.
பல மொழிகள் கலந்து பேசப்பட்டது
வீதியில் தமிழக வியாபாரி கூவினான்
புதிய சரக்கு! கடல் கடந்த பொருள்!
மிளகு மூட்டைகள்,ஏலக்காய், இலவங்கப்பட்டை,பட்டுத் துணி
பொன் நகைகள்,சங்கு வளையல்கள் வாங்க வாங்க என்றழைத்தான்.
வீனஸ் தமிழக வியாபாரயிடம் கேட்டான்.,இவை தான் யவன நாட்டுக்குப் போகும் பொருள்களா?
இவ்வளவும் வாங்குவார்களா யவனர்கள் என்றான் சந்தேகமாக?
வியாபாரி தம்பி குறுமிளகுக்கு யவனர்கள் பொன்னை தருகிறார்கள் என்றான்.
அப்போது ஒரு யவன பெண் வந்து வியாபாரியிடம் கேட்டாள்,
இந்த மசாலா நன்கு காரமா?என்றாள்
காரம் மட்டும் இல்லை அம்மா நாவில் நிற்கும் என்றார்
வியாபாரி வீனஸை பார்த்து அய்யா, நீங்க யவனநாட்டு நாட்டுப் போர்வீரனா என்றார்.
வீனஸ் சிரித்தான், ஆம் ஐயா என்று கூறிவிட்டு நகரத்திற்கு போகும் வழி கேட்டான்.நீங்கள் இந்த வீதியின் கடைசி வரை சென்று இடது புறம் பெரிய மண்பாதையும்,பெரிய வயல்வெளிகளையும் கடந்து சென்றால் நகரத்திற்கு செல்லலாம் என்றார்.
தொலைதூரத்தில் கப்பல் ஒன்றின் சப்தம் துறைமுகத்தில் கேட்டது, துறைமுகத்தின் அருகே தூசிபடலம் மேல் எழுந்தது,இலங்கைக்கும், மன்னார்வளைகுடா, என்று நிறைய
கப்பல்கள் கொற்கைக்கு வரவும் போகவும் செய்தன.
வீனஸ் இங்கே வாட்களை விட, வணிகமே வலிமையானதாக இருக்கிறது என்று மனதில் நினைத்தான்.
எரா மெதுவாக அடி எடுத்து வைத்தது.
மண்சாலை நீளமாக விரிந்தது. இருபுறமும் அடர்ந்த புளியமரங்களின் வேர்கள் மண்ணைத் தழுவி, அதன் கிளைகள் வானத்தைத் தொடும் போல பரந்து நிழலை கொடுத்தது.
பலமாக வீசிய காற்றினால் இலைகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு சலசலத்தது அது இயற்கையின் இசை போலக் கேட்டது.
குதிரைகளின் குளம்படியும் ,மாட்டு வண்டி சக்கரங்களின் அடையாளமும் வழி நெடுகிலும் இருந்தன.
மண்சாலையின் முடிவில் பரந்த வயல்வெளிகளில் பெண்கள் கூடி பச்சை நெல் நாற்றுகளை நட்டனர். கால்கள் மண்ணில் பாதி புதைந்தபடி, கைகள் ஒரே தாளத்தில் அசைந்தபடியும் . அவர்கள் பாடிய நாட்டுப்புற பாடல் காற்றில் மிதந்தது.
நீர்வாய்க்காலில் மெதுவாக ஓடும் நீர் சூரிய ஒளியைத் துண்டு, துண்டுகளாக உடைத்து கண்ணை பறித்து மின்னியது.
வாய்க்காலின் கரையில் இரண்டு சிறுவர்கள் மீன் பிடித்தனர். மூங்கில் கழியில் சணல்கயறு கட்டி, அமைதியாக நீரை நோக்கி காத்திருந்தனர், அவர்களின் அருகே வெள்ளைக்காகங்கள் மீனுக்காக காத்திருந்தன.
மற்றொருகரை வயலில் உழவர் ஒருவர் காளைகள் இழுக்கும் கலப்பை மண்ணைத் திருப்ப, செம்மண்ணிலிருந்து ஈரமான மண்வாசனை காற்றோடு கலந்து வந்தது.
வீனஸின் மனதில் சந்தேகம் ஒன்று உதித்தது. ஒரு வேளை இந்த பயணம் நமக்கு எதாவது கொடுக்குமோ என்ற நினைவு வந்தது.
ஆட்டு மந்தைகளை ஒட்டிக் கொண்டு ஒருவன் நடந்தான். தோளில் வில்லை, கையில் கொய் அரிவாள்( கொடுக்கி) ஒன்றும் வைத்திருந்தான்,கருப்பும், வெள்ளையும் கலந்த ஆடுகளின் மேமே சப்த்த்திலும், உடம்பின் அசைவிழும், அவை கழுத்தில் கட்டிய மணிகள் கிண் கிண் என ஒலியெழுப்பியது
கூந்தலில் குருந்தப்பூ சூடிக்கொண்டு ஓய்யாரமாக தயிர்காரி ஒருவள் மண் குடுவை ஒன்றை தோளிலிலும், மற்றொன்றை இடுப்பில் வைத்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டே
பசுந்தயிர் அம்மா, தணிந்த தயிர் அய்யா, தயிர் வேணுமா தயிர் என்று வயல்வெளிகளில் பணிசெய்பவரை கேட்டுக் கொண்டே நடந்தாள்.
பசுந்தயிரின் வாசனை வீனஸையும், எராவின் நாசியையும் தொட்டது, வீனஸ் தயிர்காரியிடம் இரண்டு பானை தயிரை குடித்தான், அவ்வ் என்ற களைப்பு போக பசிஆறிய ஏப்பத்தில் புதிய உணர்வு பொங்கியது.
இரண்டு யவன நாணயங்களை தயிர்காரியிடம் கொடுத்து விட்டு நகரத்தை நோக்கி சென்றான்.
ரோமில் இல்லாத பழமையும், வளமையும் கொற்கையில் இருந்ததை நினைத்து வியந்தான்.வீனஸ்சுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. ஏன் எராவிற்கே இது புதியது.
அலை வருடும்….
