அலை கடல் பெண்ணவள்

அலை 27

 

 

“நீ சாதாரண குழந்தை இல்லை…மயூரி,

நீ எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். நீ இந்திரனின் பெண் ஒரு குழந்தையாக பூமிக்குத் தந்தார்கள் அது நீதான்.மயூரி அதிர்ச்சியில் பார்த்தாள்.இந்த ஏழு தேவமங்கையரின் கோபம் குறையவே இந்த பூஜை என்றாள் ரதிமஞ்சரி.

 

மயூரி தலையை குலுக்கி விட்டு நீரில் தனது முகத்தைப்  மறுமுறையும் பார்த்தாள்.

அந்த பிரதிபலிப்பு  தன்னுடையதல்ல போலிருந்தது.

அவள் மெதுவாக சொன்னாள்.

“நான்… இதையும் முன்பே பார்த்திருக்கிறேன்…”குளத்து  நீரில் அலை எழுந்தது.

அந்த அலையின் உள்ளே வேறு காலம்.கடற்கரை.பாறை கோட்டை.அங்கு வெண்கல கவசம் அணிந்த யவன வீரன்.நீலக் கண்கள்.காயமடைந்த தோளில் கட்டுப் பட்டை.அவன் சிரித்து சொல்கிறான்

“மயூரி… நான் திரும்பி வருவேன்.மயூரியின் மார்பு இறுகியது.

“அவன்… அவன் யார்?” என்று அம்பையைப் பற்றிக்கொண்டாள்.

அம்பை மெதுவாகக் கூறினாள் “உன் பூர்வஜென்மத்தின் உயிர்.

கடலுக்கு அப்பால் இருந்து வந்த யவனப் படை வீரன்.

உன்னை காப்பாற்றி உன்னையே காதலித்தவன்.

 

இதயம் படபடக்க மயூரி தலையை குலுக்கினாள் அங்கிருந்த அம்பையும் குவளைலயும் என்னவாயிற்று என்றனர்.

மயூரி முகம் வெளுத்து ஓன்றும் இல்லை என்றாள். சரி சரி வா போகலாம் என்று இருவரும் மயூரிகயின் கைகளை பற்றி அழைத்துச் சென்றனர்.

மயூரிக்கு தான் கண்டது உண்மையா என்ன இது என்ன, இனி நடக்க போவது என்ன என்ற அச்சத்துடன் எப்போதடா வீனஸை பார்பேன் என்று பரிதவித்தாள்.

சொல்ல முடியாத வலியுடன் கூடிய அலைபுறுதல் எழுந்தது. இதயம் சுக்கு நூறாக உடைந்தது போல இருந்தது.

ரதிமஞ்சரி மயூரியை பார்த்து ஏன் மகளே என்னனவாயிற்று என்று தலையை தடவினார் பரிவுடன்.

ஒன்றும் இல்லை அம்மா சோர்வாக இருக்கிறது கடல்காற்று ஏதோ செய்து விட்டது என்றாள்.

ஆம் மயூரி இதோ செல்லலாம் என்றவள் சப்தகன்னியரை மறுமுறை வழிபட்டு செல்லலாயினர்.

மயூரி ஏதோ சப்தம் கேடடது போல திரும்பினாள் அங்கே சப்த கன்னியரும் தேவலோக மங்கையர்கள் போல உயிர்தெழுந்து புன்னகை புரிந்து போல பிரம்மை ஏற்பட்டது.அச்சத்துடன் தோணியல் ஏறினாள் மயூரி. தோணி கொற்கை ஆழியில் அழகாக தாலாட்டி சென்றது. அம்பையின் மடியில் தலைசாய்த்து இருந்தாள். குவளை மயூரியின் தலையை வருடிக் கொண்டிருந்தாள்.

……

 

நிலச்சோறு விழாவில் துகிலனின் குடும்பமும் சிங்கனின் குடும்பமும ஓன்று சேர்நது நிலாச்சோறை வீனஸிற்கு போதும போதும் என்ற அளவில் ஊட்டி மகிழ்ந்தனர்.

வீனஸ்  தாயின் ஆரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததால் இவர்களின் அன்பில் திளைத்து களித்தான்.

 

தூரத்தில் தெரிந்த முல்லையின் அழகை பௌர்ணமி இரவின் வெளிசத்தில் பருகி கொண்டிருந்தான்.

சிங்கன் சோகமான உருவமாக இருந்த வீனஸிடம் இங்கே நம் பெண்கள் இல்லை அவர்கள் சப்தகன்னியர் தீவிவுக்கு சென்று இருக்கிறார்கள்.நாம் பிகரிவு துயரில் இருக்கிறோம்.

 

அதோ அங்கே பாருங்கள் காமன் கணையை எவ்வாறு எய்திக் கொண்டிருக்கிறான் நமது நண்பன் என்றான்.

வீனஸ் சிரித்துக் கொண்டே பாவம் சிறியவன் விடுங்கள் அவனாவது களிப்புடன் இருக்கட்டும் என்றான்.

துகிலன் நண்பா இதற்கே நீ இப்படி எரிகிறாய் நான் ஊங்கள் இருவரில் பாதிஅளவுகூட காதல் களியாடவில்லை என்றான் நமட்டுச்சிரிப்புடன்.

புன்னை மரத்தடியில் என்ன, தன்பெருநை ஆற்று உள் படுகையில் என்ன அப்பப்பா இப்படிப்பட்ட களியாட்டம் காமனுக்கே தெரியாது என்றான்.

அதை கேடட இருவருமே அதிர்ந்தனர். ஐய்யோ இந்த மதிநுட்பக்காரனுக்கு மேனி எங்கும் இந்திரகண்கள் என்று கூறினான் சிங்கன்.

அது என்ன கதை என்றான் வீனஸ்.சொல்கிறேன் கேளுங்கள் என்றவுடன் ஐய்யோ நானும் கேட்க்க வேண்டும். சொல்லு சிங்கா என்று ஆர்வமுடன் சிஙகனை நோக்கினான்.

வானவீதியில் வெண்மதி நகர்ந்து வந்து அந்த கதையினை கேட்டது. சிங்கன் சொல்ல ஆரம்பித்தான்.

 

பண்டைய காலங்களில், வானத்தில் ஒளிரும் தெய்வங்களலும் முனிவர்கலும் நிறைந்த உலகம் இருந்தது. பிரம்மா, அழகின் மூலப்பொருட்களிலிருந்தே அகல்யாவைப் படைத்தார். நிச்சயமாக இது பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. பிரம்மா அவளை தூய இதயம் கொண்ட கௌதம முனிவருக்கு மணம் செய்து கொடுத்தார்

அந்த உலகில் வானராஜா இந்திரன் வாழ்ந்தான். அழகு, சக்தி, செல்வம் அனைத்தும் இருந்தாலும், அவன் உள்ளம் காமத்தின் பசியால் எப்போதுமே உலாவிக் கொண்டிருந்தான்.எந்த பெண்களை பார்த்தாலும் காமம் உற்றான்.

ஆனால் கடவுள்களின் ராஜாவான இந்திரன் அகல்யாவை துரத்திக்கொண்டே இருந்தான்.

இந்திரன் அடிக்கடி கௌதமரின் ஆசிரமத்திற்கு அருகில் வெவ்வேறு தோற்றங்களில் வந்து, அகல்யாவின் உருவத்தையும்  பார்த்து மகிழ்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

 

முனிவரின் தினசரி பழக்கவழக்கங்களையும் அவன் கவனித்துக் கொண்டே வந்தான்.மேலும் முனிவர் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் தனது ஆசிரமத்தை விட்டு வெளியேறி, குளித்து, பிரார்த்தனை செய்ய ஆற்றில் இரண்டு மணி நேரம் இருப்பதைக் கவனித்தான். காதல் வேதனையைத் தாங்க முடியாமல், இந்திரன் தந்திரமாகத் தன் இதயப் பெண்ணை அடைய முடிவு செய்தான்.

ஒரு நாள், வழக்கமான நேரத்தில் முனிவர் புறப்படும் வரை காத்திருக்க முடியாமல், இந்திரன் சேவல் குரலை ஏற்று, முனிவரை எழுப்பினான். முனிவர் காலை வேளை வந்துவிட்டதாக நினைத்து ஆற்றுக்குச் சென்றார். இப்போது இந்திரன் முனிவரின் உருவத்தை எடுத்து, குடிசைக்குள் நுழைந்து, அகல்யாவை காமபடுத்தினான். அவள் தன் கணவனுக்கு இன்று காமன் அம்பை எய்து விட்டான் என்று தன்னை இழந்தாள்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவளை மகிழ்விக்கும் மனிதன் ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை உணர்ந்தாள்.ஆனால் அவளால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை.

 

இந்த நேரத்தில் கௌதமர் திரும்பி வந்தார், உள்ளுணர்வாக ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தார், படுக்கையில் இருந்த தம்பதியினரை ஆச்சரியப்படுத்தினார். அகல்யா வெட்கத்தாலும் வருத்தத்தாலும் ஒதுங்கி நின்றார்.

இந்திரன் ஒரு பூனையின் வடிவத்தை (பதுங்கி உள்ளே அல்லது வெளியே செல்வதற்கு மிகவும் எளிதான விலங்கு வடிவம்) எடுத்து நழுவ முயன்றான். முனிவர் பூனையிலிருந்து பெண்ணைப் பார்த்தார், ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக. அவர் பூனையை இருந்த இடத்தில் சிறை செய்தார்.

 

பூனையே, உன்னை நான் அறிவேன்.பெண் மீதான உன் வெறியே உன் வீழ்ச்சி. உன் உடல் ஆயிரம் பெண் குறிகளால் மூடப்பட்டிருக்கட்டும் என்று சாபம் இட்டார்.

அப்போதுதான் எல்லா உலகங்களிலும், உன் மனதில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் எப்போதும் புரிந்துகொள்ள முடியும்.” இந்திரனின் உடலின் ஒவ்வொரு அங்குலமும் பெண் உறுப்பைக் காட்டியபோது , ​​இந்த வார்த்தைகள் அவன் உதடுகளிலிருந்து வெளியேறியிருக்கவே இல்லை .

இந்திரனின் பிம்பம் முதலில் அனைத்து உலகங்களிலும் ஒரு நகைச்சுவையாக மாறியது, ஆனால் பின்னர் குறிப்பிடத்தக்க துயரமாக மாறியது. இந்திரன் இருளிலும் தனிமையிலும் இருந்தான், யார் முன்பும் ஒருபோதும் தோன்ற முடியவில்லை. பல்வேறு உலகங்களில் இந்திரனது பல்வேறு கடமைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், இது அனைத்து கடவுள்களுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது, 

இந்திரன் பிரம்மனிடம் சென்று கௌதமரிடம் சாப விமோசனம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.பிரம்ம தேவனும் முனிவரிடம் இந்திரனை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டான்.

முனிவரின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. 

பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி ,சாபத்தை  மாற்றாமல் “இந்திரனின் அம்சங்களில் ஆயிரம் சேர்த்தல்கள் கண்களாக மாறட்டும்”  என்றார்.

அதவது ஆயிரம் பெண் உறுப்புகள் அனைத்தும் ஆயிரம் கண்கள்ளாக மாறட்டும் என்றார்.இதுவே இந்திரனை”ஆயிரம் கண்கள் கொண்ட கடவுள்” என்று கூறினார்கள்.. இந்திரனுக்கு சஹாஷ்ட்ராக்ஷம் இருப்பதாக பல முறை கூறப்படுவதற்கான காரணம் இதுதான். அவரது மோசமான குணத்தால்தான் அவருக்கு இந்த சாபம் வந்தது.இந்த கதையும் வந்ததது.

இந்திரனின் ஆயிரம் கண்ணில் இருந்து எதுமே தப்பி செல்ல முடியாது என்பதைதான் நான் துகிலனை சொன்னேன் என்றான் சிங்கன்.

இந்த கதையை கேட்ட துகிலன் அப்போ நான் என்ன இந்திரன் மாதிரி காமத்தில் திரிகிறேனா என்றான் கோபமாக.

சிங்கன் நான் அப்படி சொல்லவில்லை இந்திரனின் ஆயிரம் கண்களிலிருந்து தப்பி செல்ல முடியாதது போல உன் கண்களிலிருந்தும் எதுமே தப்பி செல்ல முடியாது என்று உன் மதிநுட்பத்தை கூறினேன் என்றான வருத்தமாக.

துகிலனுக்கே ஒரு மாதிரி இருந்தது அய்யோ நான் தவறாக நினைத்து விட்டேன் சிங்கா என்னை மன்னித்து விடு என்றான்.

அப்போது தூரத்தில் குதிரைகளின் குளம்பொலி கேட்டது.என்ன அது என்று மூவரும் அந்த சலசலப்பின் திசை நோக்கி நகர்ந்தனர்.

யவன மாலுமியும் கூடவே ஒரு யவன வீரனும் நின்றிருந்தனர்.

வீனஸ் படபடப்பாக மாலுமியின் அருகே சென்றதும் மாலுமி வீனஸ் நீ இங்கே இருக்கிறாயா உன்னை தேடிக் கொண்டு இதோ இந்த யவனவீரன் வந்து இருக்கிறான் என்றான்.

அந்த யவனவீரன் கைகளில் இருநத ஓலைபெட்டியை நீட்டினான். அதை பிரித்து படித்தவனுக்கு பரபரப்பு எழுந்தது.

சிங்கன், துகிலன் ஏன் மாலுமயே என்னவாயிற்று ஏன் இந்த அவசரம் என்றார்கள் ஒரு சேர.

வீனஸ் எதையோ யோசனை செய்து கொண்டே ஓன்றும் இல்லை நான் உடனே யவனதேசம் போக வேண்டும மிகவும் அவசரம். அரசரின் ஆணை என்றான் போர்வீரன் திமிகர்தலுடன்.

வீனஸ் மாலுமியிடம் எப்போது கப்பல் யவன தேசத்திற்கு செல்லும் என்றான். மாலுமி நாளை மறுநாள் கப்பல் செல்ல ஆயத்தமாகும் என்றான்.வீனஸ் மாலுமியிடம் இந்த யவனவீரரை நீங்கள் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் நாளை கப்பலுக்கு வந்து ஈன் பொருட்களை அரண்மனைலயில் சேர்த்து விட்டு கப்பல் வருகிறேன என்றான்.

 

மாலுமி அப்படியே ஆகட்டும் நான் பயணத்திற்கு ஆயத்தமாகிறேன் என்றார். மாலுமி சிங்கனிடமும் துகிலனிடமும் விடை பெற்று நகர்ந்தார்கள்.

துகிலனும் சிங்கனும் வீனஸ் பிரிவையை நினைத்து வருந்தினர். துகிலன் வீனஸை கட்டிக் கொண்டு சோகமானான்.

வீனஸ் ஏன் துகிலா நான் போனால் வழரமாட்டேனா என்ன உன் திருமணத்திற்கும் சிங்கன் திருமணத்திற்கும் யவன பொருட்களை பரிசாக கொண்டு வருவேன் என்றான்.

சிங்கனுக்கு கண்கள் கலங்கியது. வீனஸ் சிங்கா நாளை எனக்கு நிறைய பணிகள் இருக்கிறது அரசர் இல்லாததால் அமைரிடம் பரிசிலை கொடுக்க வேண்டும்.

 

அம்பையிடமும் மயூரியிடமும் விடை பெற வேண்டும் என்றான் அப்படியே ஆகட்டும் என்றான் சிங்கன்.வீனஸ் நான் வாழ்ந்த பொக்கிஷ நாட்கள் உங்களுடனும் இந்த கொற்கை நகரம் தன்பெருநை ஆறு வேங்குழல்நாதன், நாயகி எல்லாமே என் இதயத்தில் செதுக்கிக் கொண்டேன் என்றான் கலங்கிய இதயத்துடன்.

 

அலை வருடும்….

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page