அவனே என் உலகம்

அவள் கிளம்பும்போது, அந்த வீட்டுக்குள்ள எதுவும் சத்தமில்லை.

காற்றுக்கூட மெதுவா நகர்ற மாதிரி.

விக்ரம் ஆழ்ந்த தூக்கத்துல இருந்தான். இரவு முழுக்க அவளை கட்டிப் பிடிச்சிருந்த கை, இப்போ தலையணைக்குள்ள மடங்கி கிடந்தது.

 

அவள் அவனோட முகத்தை ஒரு தடவை, இன்னொரு தடவை பார்த்துக்கிட்டே இருந்தா.

இந்த முகம் இனிமே அவளுக்கு இல்ல.

அந்த உண்மைதான் மார்புக்குள்ள எதையோ கிழிச்சு போட்ட மாதிரி வலிச்சது.

 

மெதுவா முன்னாடி குனிஞ்சு, அவனோட நெற்றியில ஒரு முத்தம்.

அது விடைபெறும் முத்தம்னு அவளுக்கே தெரியல.

ஆனா அவன் மூச்சை கவனிச்சிட்டு, இன்னொரு நிமிஷம் அங்கே நின்னிருந்தா, தன்னை மீறி அழுகை வெடிச்சுரும் பயத்துல, பேக்கை தூக்கிக்கிட்டு கதவைத் திறந்து, சத்தமில்லாம வெளியே ஓடிட்டா.

 

படிக்கட்டுல இறங்கும்போதே, கால்கள் அவளுக்கு சொந்தமில்லாத மாதிரி இருந்தது.

ஒரு வாழ்க்கை… அவன் இல்லாம ஒரு வாழ்க்கை…

அது அவளால கற்பனை கூட பண்ண முடியலை.

ஒரு நாளாக இருந்தாலும் அது என்னுடைய நாளாக இருந்துச்சு. ஒரு நாளில் எப்படி காதல் வந்து படுக்கையை எட்டிப் பிடிக்கும் என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியல,

ஆனா அதுவே என் விடை தெரியாத வாழ்க்கையா மாறப்போகுது.

 

ஆனா, “நான் எடுத்த முடிவு சரிதான்”ன்னு அவளே அவளுக்கு சொல்லிக்கிட்டே வந்தா.

அசிங்கமா நினைச்சிருப்பானோ, கேவலமா பார்த்திருப்பானோ அந்த பயம் தான் அவளை ஓடவச்சது.

கையில ஒரே ஒரு பேக். கொடி நடையாக பைத்தியம் பிடிச்சவள் போல நடந்து வந்தா, எங்க போறதுன்னு தெரியலை,

அவள் மனசெல்லாம் ஏங்குற ஒரே ஒரு இடம் அவளுடைய வீடு.

 

நேரா அவளோட அப்பார்ட்மெண்ட் 

அதே கேட் அங்கே காவலுக்கு இருந்த அதை வாட்ச்மேன் தூங்கி வழிந்து கொண்டிருக்க ,

ஆனா அவள் உள்ளே நுழையற தைரியம் மட்டும் இல்ல.

 

அங்கே நின்னுக்கிட்டிருக்கும்போது, கோவில்ல நல்ல கூட்டம் பரவாயில்ல எப்படியோ சாமியை பார்த்தாச்சு. இப்பதான் மனசு கொஞ்சம் சாந்தமா இருக்குன்னு ஒரு சத்தம் தூரத்திலிருந்து கேட்டது.

திரும்பிப் பார்த்தா…

அப்பா, அம்மா, தங்கச்சி மூணு பேரும் சேர்ந்து வர்றாங்க.

 

அவள் ஒரு விநாடி யோசிக்கல.

அப்பாவைப் பார்த்ததும், ஓடிப் போய், அவரோட கைய பிடிச்சுக்கிட்டா.

 

அப்பா… ப்ளீஸ்… என்ன மன்னிச்சிருங்க. நான் எந்த தப்பும் பண்ணலை. என்ன வீட்டுக்குள்ளே ஏத்துக்கங்க… ப்ளீஸ் அப்பா…

 

அவள் குரல் உடைந்தது.

வார்த்தைகள் அழுகையோட சேர்ந்து வெளியே வந்தது.

 

அப்பா அவள் கைய தள்ளிவிட்டார்.

சீ… கருமம் தொடாத, புனிதமான கோவிலுக்கு போயிட்டு வந்திருக்கிறோம். உன்ன மாதிரி தீட்டுப்பட்ட நாயுடைய கையை என் மேல படவே கூடாது.

 

உன்னை பார்த்தாலே தெரியலையா. நீ மானம் இழந்துட்டு வந்திருக்கன்னு,

அவர் குரல் குளிர்ந்திருந்தது.

இத்தனை நாளா கண்ணுக்குத் தெரியாம நடந்துக்கிட்டீங்கன்னு நினைச்சேன். இப்போ கண்ணுக்கு தெரியுற மாதிரி நடந்துருச்சு.

பார்த்தேன்…. நீயும் அவனும் ஒரு வீட்டில் கட்டி பிடிச்சிட்டு நின்றத,

அத பாத்துட்டு தான் தலையை மூடிகிட்டு இன்னைக்கு கோவிலுக்கு போய் சாமியை கும்பிட்டு வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம்.

அசிங்கம் புடிச்ச நாயே என்று சொல்லிட்டு,

கீழ காரி எச்சிலை துப்பினார்

 

அவர் அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தார்.

அந்த பார்வை அவளுக்கு உடம்பெல்லாம் தீப்பிடிச்ச மாதிரி இருந்தது.

 

உன் உடம்பை பார். எங்கெங்க காயம் இருக்கு பாரு, வெறி பிடித்த நாய்களா ,

இப்படி அவர் திட்டும் போது 

அப்பா… அப்படி எல்லாம் இல்லப்பா … என்று அவள் சொல்ல வரும்போது 

அவர் சத்தம் உயர்ந்தது.

எப்படி எல்லாம் இல்லை?… கையை பாரு, உன் கழுத்தைப் பாரு உன் உதட்டை பாரு ஒரு அப்பனா இதையெல்லாம் நான் பார்த்து சொல்லனுமா என்ன?… உன் முகத்தில் எத்தனை காயம் இருக்கு நீ எண்ணி சொல்றதுதான் என்னோட வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கியா?….

என் வீட்லயும் ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு இருக்கு அதனால வாய பொத்திகிட்டு போறேன். நீ எல்லாம்…

எப்படிப்பட்ட ஜென்மம் என்று தெரியல,

இது எல்லாம் என்ன? நல்ல வீட்டுப் பொண்ணா இருக்க வேண்டிய நீ, இப்படி கேவலமா…

 

அம்மா முகத்தைத் திருப்பிக்கிட்டாங்க.

தங்கச்சி மௌனமா நின்னா.

 

இனிமே நீ என் பொண்ணே இல்லை,

அப்பா சொன்ன அந்த வார்த்தை, அவளோட உள்ளத்துல எதையோ சாகடிச்சது.

ஒழுங்கா வெளியில போ.

உன்னை நான் இங்க பார்த்தேன் அவ்வளவுதான் இப்படி சொல்லிட்டு அவர் அங்கிருந்து போனார்.

அம்மாவும் ஒரு வார்த்தை கூட பேசாம திரும்பிப் போனாங்க.

 

அவள் அங்கேயே நின்னுக்கிட்டே அழுதாள்.

கதறி அழுகணும் போல தோணுது நான் அப்படி பண்ணல நீ அப்பா சட்டையை படிக்கணும்னு தோணுது .. ஆனா அதெல்லாம் நடந்துருச்சு , இனி எந்த முகத்தோட நான் அவர்கிட்ட இல்லை என்று சாதிக்கிறது ?… இப்படி நினைத்து அவள் தன் முகத்தை மூடி  அழுதாள் 

அழுகை சத்தம் கூட வெளியே வராம, மார்புக்குள்ளே அடங்கிப் போச்சு.

 

அப்போ தங்கச்சி மட்டும் முன்னாடி வந்தா.

 

என்னக்கா… என்ன ஆச்சு?

அவள் குரல் கொஞ்சம் மென்மையா இருந்தது.

 

நிலா அவளை பார்த்தா.

அந்த பார்வையில கோபம் இல்ல.

வலி மட்டும்.

 

நீதானே… அன்றைக்கு எனக்கு டிரஸ் மாற்றி கொடுத்த,

அவள் மெதுவா கேட்டா.

அம்மா போட்ட பட்டு சேலையை எடுத்து வச்சுட்டு, நீ அந்த மாடர்ன் சேலையை போட்டே. அன்றைக்கு நடந்ததுதான் இப்படி எல்லாம்… நீ ஏன் அப்படி செஞ்சே?

நான் செய்யலைன்னு மட்டும் பொய் சொல்லாதே…

அம்மா அப்படி செய்யலன்னு நேத்து தான் எனக்கே தெரிஞ்சது . பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தால் நீ எதை கட்டிட்டு வந்து இருக்கான்னு கேட்டாங்க ?..

இதுக்கெல்லாம் நீதான் காரணம் ..

தங்கச்சி ஒரு நிமிஷம் அமைதியா இருந்தா.

பிறகு நேரடியா சொன்னா.

 

ஆமாம் அக்கா. உன்னை எனக்கு பிடிக்கலை.

உன்ன வச்சி எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க , நீ மட்டும் எப்படி பட்டிக்காடு மாதிரி இல்லாம இருக்க உங்க அக்கா மாதிரி இல்லாம இருக்கேன்னு சொல்லி கேக்குறாங்க இப்படி அவள் ஒரு தீர்க்கமான பதிலோடு அவளிடம் சொல்லும் போது 

அவள் முகமும் அவள் சொன்ன அந்த வார்த்தை கூர்மையா இருந்தது.

உன்னோட அலங்காரம் பிடிக்கலை. நீயும் பிடிக்கலை.

உன்னால நான் ஏன் அவமானப்படனும்?… நீ ஏன் எனக்கு இடைஞ்சலாக இருக்க, இப்படி எல்லாம் கேட்கும் போது,

 

நிலா கண்களை இறுக்கிக்கிட்டா.

 

நீ நல்லவள்தான். அதை நான் மறுக்கலை,

தங்கச்சி தொடர்ந்தா.

ஆனா நீ எப்போதும் அப்பாவுக்கு அடங்கலா இருக்க. அவர் பேசுறதுக்கெல்லாம் நீ தலையாட்டுறதைப் பார்த்தாலே எனக்கு கோபம் வரும். உன்னையே தலையில தூக்கி வச்சு ஆடுற மாதிரி அவர் நடக்குறது எனக்கு பிடிக்கலை.

 

அவள் மூச்சை இழுத்துக்கிட்டா.

 

அதனால தான்… உனக்கு அப்படி செஞ்சேன். இப்படி செஞ்சேன். நீயே ரெண்டு விஷயம் சேர்த்துக்கோ. நான் பண்ணினது எல்லாம் தெரிஞ்சே பண்ணினது.

நான் ஒன்னும் உன்னை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என்பதற்காக அப்படி பண்ணல, நீ மாடர்ன் சாரீல வரும்போது அப்பா உன்னை பார்த்து உன் மேலேயும் கோபப்படனும் மட்டும்தான் நினைத்தேன்

 

அந்த வார்த்தைகள் முடிந்ததும்,

அவள் தன் மூச்சை இழுத்து சுவாசித்தாள்.

தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டிருந்த அந்த அழுகையை துரத்தி விட்டு தன்னோட தங்கச்சி கிட்ட,

கீதா, நீ சொல்றதெல்லாம் சரிதான். நான் ஏன் இப்படி இருக்கேன்?..

2000 ரூபாயை அப்பா எடுத்துக்கிட்டு நம்மள டிரஸ் வாங்க கூட்டிட்டு போவாரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் என்று சொல்லி…

அப்போ நீ 1500 ரூபாய்க்கு பில் போடுவ, என்னோட 500 ரூபாய்க்கு சேர்த்து..

நான் உன்கிட்ட சண்டை போடாமல் என் தங்கச்சி தானே என்று சொல்லி விட்டுக்கொடுப்பேன். அப்போ எனக்கு இருக்கிற அந்த 500 ரூபாய்ல எனக்கு அங்கு என்ன கிடைக்குதோ அதைத்தான் எடுத்தேன்.

இது ஒரு விஷயத்தில் மட்டும் கிடையாது.

எதுக்காக நீ மேக்கப் திங்ஸ் வாங்காம இருக்க ஏன் எதுவுமே போடாம இருக்கன்னு நீ என்கிட்ட கேட்பதற்கு பதில் நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, என்னுடைய எல்லா பிரவிலேஜியும் உனக்காக நான் விட்டுக் கொடுத்தேன் வேற ஒன்னும் இல்ல,

 

100 ரூபாய் நைட்டிய போட்டுக்கிட்டு நான் மேக்கப் போட்டுட்டு நிக்க முடியாது. அதே போல பத்தாயிரம் ரூபாய் டிரஸ் போட்டுக்கிட்டு நான் மேக்கப் போடாம நிக்க முடியாது. நான் என்ன டிரஸ் போட்டிருக்கேனோ அதுக்கு தகுந்த மாதிரி தான் என்னை நான் தயார் படுத்திக்கிட்டேன் அது உனக்கு அசிங்கமா இருந்துச்சுன்னா என்னோட விட்டுக் கொடுக்கிற தன்மையும் என் தங்கச்சிக்காக நான் செஞ்ச பாசமும் உனக்கு தெரியாம போச்சுன்னா உன்ன விட கேவலமானவ இந்த உலகத்திலேயே இல்லை. சுயநலவாதி,

இப்படி பயங்கர கோபமாக பேசிக்கிட்டே அங்கேயே உடைந்து போனாள். அம்மா ஒரு வார்த்தை கூட பேசல என்னை நாலு அடி அடித்து இருக்கலாமே… அப்போ என்னை எல்லாருமே கேவலமா தானே நினைக்கிறாங்க என்னை பெத்தவங்களே…

அப்போ விக்ரம் நினைச்சா என்ன தப்பு?… அவரு நினைச்சிருவாரு என்ற பயத்துல நான் அவரை விட்டுட்டு ஓடி வந்து இருக்கேன்.

ஆனா இவங்க எல்லாரும் அப்படி நினைச்சுட்டு தான் இருக்காங்க ஆனா நான் இவங்கள தேடி வந்து இருக்கேன்.

எனக்கென்று…

 

இந்த உலகத்துல, சொந்தமா இருந்தது… என்னோட விக்ரம் மட்டும் தான் .

இப்படி அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவள் பின்னாடி மூச்சு வாங்கிக் கொண்டு ஒருவன் ஓடி வந்து பக்கத்தில் நின்றான்.

கீதா அவனை அதிர்ந்து போய் பார்க்க…

நிலா….

இப்படி சொல்லி கொண்டே வேகமாக அவள் கைகளைப் பிடித்து அவன் இறுக்கி அணைத்துக் கொண்டான் முழு காதலோடு..

கீதாவிற்கு பொறாமையாக இருந்தது அவன் செய்த செயல்,

இவளுக்கு இப்படிப்பட்ட ஒருத்தரா?…

அந்த மாதிரி அவள் யோசித்தபடி அவங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரியாக பார்க்க,

நீ எதுக்கு இப்ப இங்க வந்திருக்க என்கிட்ட சொல்லாம?..

என்கிட்ட சொல்லி இருந்தா நானே கூட்டிட்டு வந்து இருப்பேன்.

ஆனா நீ எதுக்கு எல்லா டிரஸ்ஸையும் எடுத்துட்டு போன எனக்கு அதுல தான் பயம் வந்துருச்சு.

நீ ஏன் இப்ப அழுதுட்டு இருக்க?..

உன்னை எல்லாரும் கஷ்டப்படுத்துவாங்க நீ இங்கே நிக்காத வா,

எக்காரணத்திற்காகவும் நீ அழுகவே கூடாது.

உன்ன நான் அழுகவும் விட மாட்டேன் இப்படி சொல்லி அவனுடைய இரு உள்ளங்கைகளுக்குள் அவளுடைய முகத்தை புதைத்துக் கொண்டு அவன் விரல்களால் அவள் கண்ணீரைத் துடைத்தபடியே முழு காதலோடு அவள் கண்களை பார்த்தபடி நிற்கும் போது,

என்னடா?…

என்ன ஆச்சு?…

ஏன் எந்த பதிலும் சொல்லாம இருக்க?…

நிலாமா.. வா, இப்படி சொல்லிக்கிட்டு அவள் தோளில் கை போட்டுக்கொண்டு அங்கிருந்து அவன் அழைத்துச் சென்றான்.

அவள் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல அவன் வருவான் என்று…

கீதா ரொம்ப கோபமாக அவங்க ரெண்டு பேரையும் பயங்கர பொறாமையோடு பார்த்துக் கொண்டிருக்க,

அப்போ நிலா ஒரே ஒரு நிமிஷம் என்று சொல்லிட்டு,

கீதா… உனக்காக நான் எவ்வளவு விட்டுக் கொடுத்து இருக்கேன். ஆனா உனக்கு எதுவுமே புரியல, உனக்கு சரியான படிப்பு வரல, சரியான வேலை கிடைக்கல, நீ இவ்வளவு மேக்கப் போட்டும் உன்னை யாரும் லவ் பண்ணல, வீட்ல நல்ல பொண்ணா தான் இருக்க ஆனாலும் ஒரு அப்பாவுக்கு நீ நல்ல மகளாக இதுவரைக்கும் நடந்து கொண்டது இல்லை,

நீ சொன்ன அதே பட்டிக்காடு முகத்தோட இருந்த நான் நல்லா படிச்சேன். எனக்கு படிப்பு வந்துச்சு.

பெரிய கம்பெனியில் வேலை கிடைச்சது.

இப்போ நான் மட்டுமே உலகம் நினைக்கிற எனக்கு ஒரு முழு காதல் கிடைச்சிருக்கு.

மிகப்பெரிய வரம் கிடைச்ச மாதிரி இருக்கு.

அது மட்டும் இல்ல நான் வேலை பார்த்த கம்பெனியோட ஓனரே அவர் தான்.

இப்போ நீ சொல்லு… உன்ன விட நான் எந்த வகையில் குறைந்து போயிட்டேன் என்று,

குத்தி காட்டுற மாதிரி இருந்தாலும்,

பவுடர் போட்டு அழகாக இருப்போம் என்று அர்த்தம் இல்லை. என் அப்பா காசை நான் அளிக்காமல் இருந்தேன் என்ற திருப்தியோடு நான் போறேன்…

இப்படி சொல்லிக்கிட்டு அவள் விக்ரம் உடைய கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவனை உலகம் என்று அவனோடு நடந்து சென்றாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page