அவளை மறக்கத்தான்

பாகம். 3.. 

3. அவளை  மறக்கத்தான்

அம்மாவிடம் பேசுவதற்காக புத்தக காட்சியை விட்டு வெளியே வந்தவளை நோக்கி யாரோ ஓடி வருவது போல் இருக்க , யாரென்று ஜெனி பார்க்க, 

ஒரு வினாடியில் அவன் தினேஷ் என்று அறிந்ததும், பரவசமானாள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இறக்கை கட்டி பறந்தது.

 கோடையில் மழை  பெய்தால், எப்படி அதன் வரவை  எண்ணிபூமி த்தாய் புன்னகை பூப்பாளோ, அது போல் ஏக்கம் நிறைந்த அவள் உள்ளம் உவகை பூண்டது.

அதை மறைத்துக் கொண்டு தன்னை நோக்கி ஓடி வந்தவனை பார்த்தாள்.

 

மூச்சு வாங்க ஓடி வந்தவன் கையில் புத்தக பை இருந்தது.

 

தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ளாமலே,அவளிடம்  “மே..ட…ம் நீ…ங்…ங்..க   உங்க புத்தகத்தை அங்கேயே விட்டுட்டு வந்து  விட்டீர்கள்”

என்று ஒரு பையை நீட்டினான்,

 

அதற்குள் அவனை துரத்திக் கொண்டு வந்த  50 வயது இரட்டை நாடி பெண்மணி,வெடுக்கென்று அந்த பையை பிடுங்கினாள்.

ஆங்கிலத்தில் சரமாரியாக திட்ட ஆரம்பித்தாள்.

 

“அங்கேயிருந்த மேஜையில் பையை வைத்து விட்டு உட்கார நாற்காலி கிடைக்குமா என்று திரும்பி பார்ப்பதற்குள் , என் பையை தூக்கி கொண்டு வந்து விட்டான் இந்த யூஸ்லெஸ் கை”.. (Guy) என்று ஜெனியிடம் புகாராகச் சொன்னாள்.

 

தினேஷ்க்கு கோபம் வந்து “யாரை பார்த்து யூஸ்லெஸ் என்கிறீர்கள். . எதோ தவறு நடந்து விட்டது. இவர் தான் அங்கு நின்றுக் கொண்டுயிருந் தார்  . மேலும் நான் ஒரு  டாக்டர் தெரியுமா”……?

“டாக்டரா……!! பார்த்து …….தம்பி.  இவருக்கு பதில் அவர்  என்று  எதாவது அறுவை சிகிச்சை பண்ணிட போற”.என்று   கோபமாக சொல்லிவிட்டு சென்றார்.

 

ஜெனி அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

இவனுமே “ஸாரி ஆண்ட்டி” என்றான்.

அவர் போனவுடன்,சிரிப்பை அடக்க முடியாமல்  சிரித்தாள்.

“நம் சந்திப்பு  இரண்டாவது முறையும் இப்படியேத் தானா.”

 

“ஐயாம்  டாக்டர்.தினேஷ்.  ஹார்ட் ஸ்பெலிஸ்ட்”   என்று கையை நீட்ட ,

அவளும் “ஐயாம் ஜெனி” என்று கையை  நீட்ட  பற்றிக் கொண்டு  குலுக்கினான்.

 

சடசடவென்று மழை பெய்ய  “ வாங்க ஜெனி அங்கே இருந்த காபி ஷாப்புக்குள் போகலாம்” என்று  அவள் கையை பிடித்துக் கொண்டே.ஓடினான்.

 

காபி ஷாப்பிற்குள் போனதும் மழை நின்றது.

 

அதைப் பார்த்து விட்டு மறுபடியும் சிரித்தாள்.

“சே… நான் கொஞ்சம் அவசர குடுக்கை யாக இருக்கேன்”.

 

“கொஞ்சம் இல்ல…நிறைய”…….என்று நினைத்துக் கொண்டாள்.

“சரி. வந்து விட்டோம். காபி குடிப்போமா  ப்ளீஸ்”… 

இரண்டு இடம் கிடைத்தது. 

உட்கார்ந்தார்கள்.

 

சுதாவிடமிருந்து போன் வர, ‘அச்சச்சோ மறந்தே போச்சே.’

எடுத்து “ஹலோ’ என்றாள்.

 

“ஹலோ…ஹலோ…. உனக்கு எத்தனை தடவை  பண்ணுவது. நேற்றே சொன்னேனே  . எங்களை ஏண்டி அவமான படுத்தற.”

 

“வெயிட்..  வெயிட்…என்ன அவமான படுத்தறேன்”.  ?  ஜெனி புரியாமல் கேட்க,

 

“உன் அண்ணியின் அண்ணன்  பிரசாத் உன்னிடம் பேச  ஹோட்டலுக்கு அழைத்து போகப்போறான்  என்று சொன்னேனே.”

“எப்ப”……?

“நேற்று சாப்பிட்டு விட்டு, லானில் இருந்தியே அப்போ’…….

“அட   அம்மாவே என் காதில் ஹெட்போன் இருந்தது. நீ பேசியது எனக்கு கேட்கல.”

“அது சரி. அவனுக்கு என்னிடம் பேச என்ன இருக்கு.”

“அவன், இவன் எனறு சொல்லாதே. மரியாதையுடன் பேசு”.

 

அதற்குள் தினேஷ் இரண்டு காபி கோப்பையுடன் வர, தணிந்த  குரலில், அம்மாவிடம், “உன்னிடம் அப்புறம் பேசுகிறேன்” என்று வைத்து விட்டாள்.

ஹலோ.. ஹலோ… என்று கத்தி எப்படியே சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தார்.

 

மருமகள் அவளிடம், “எங்கே உங்க பொண்ணு. அவளை அழைத்த போக என் அண்ணா வந்து விடுவார்”.

 

சுதா தயங்கியவாறே,”நீ டைம் சொல்லாததால் இவள் வெளியே போய் விட்டாள். வருவதற்கு எப்படியும் ஒன்அவர் ஆகுமாம்.

 

“என்ன அத்தை…. என் அண்ணன் ரொம்ப பிஸியான ஆளாச்சே, இவளிடம் பேச 

 7  to  8 மணிக்குத் தான் ஒதுக்கி இருந்தான். பாரின் டெலிகேட்ஸ் வருகிறார்கள்.

9 .30 மணிக்கு மீட்டீங் என்றான்’”

 

“என்ன கத்தப் போறானோ..!!!

 

“ நீ போன் போட்டு சொல்லிடுமா”…

 

அதற்குள் கார்ஹார்ன் சத்தம் கேட்டது.

அவன் உள்ளே வராமல், “ஜெனியை அனுப்பு” என்றான்.

 

“ஸாரினா… அவள் வெளியே போய் இருக்கிறாள் இன்னும்  வரவில்லை.”

 

“புல்ஷிட்” என்று கத்திவிட்டு காரை கிளப்பிக்  கொண்டு போய் விட்டான்.

 

ஜெனியின் அப்பா   மகேந்திரன் இறங்கி  வந்தார்.

 

“உன் அண்ணன் கார் போர்ஷே வந்தது போல்   இருக்கே.உள்ளே வரவில்லையா” என்று மருமகளை பார்த்து கேட்க,

அவள்  ஒன்றும் சொல்லாமல் கோபமாக, “அத்தையே சொல்வார்” என்று  போய் விட்டாள்.

“என்ன கோபம் அவளுக்கும் அவள்   அண்ணனுக்கும்” …

இப்படித்தான் வாசல் வரை வந்து அப்படியே போவதா . மரியாதை இல்லை  “என்று பொறிய,

 

“நீங்கள் வேற..  எல்லாம்  உங்கள் செல்லப் பெண்ணால் வந்தது.”

 

“அவள் என்ன செய்தாள்.  அந்த மாதிரி செய்யக் கூடியவள் இல்லையே”

 

சுதா  நடந்ததை சொல்ல,” இதில் ஜெனி தப்பு எதுவுமில்லை. மதி அவளிடம் நேராக சொல்லி இருக்கணும்.  இவள் அண்ணன் மட்டும் தான் பிஸியா இருப்பாரே. நம் பெண்ணுக்கு வேலை இல்லையா”.  

தன் மனைவியை பார்த்து, “நீ ரொம்ப இடம் கொடுக்கிற- நம்   மருமகள் கூட நம்மை மதிப்பதில்லை. பார்த்து நடந்துக் கொள். நாம ஒன்றும் அவர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை.”

 

“ஏங்க  இப்படி பேசறீங்க. நம்ப பொண்ணு நல்லா இருக்கணும் என்று 

தானே நினைப்பேன்”.

 

“யாரு… அந்த பிரசாத் கூட வா அவனிடம் பணம் மட்டும் தான் இருக்கு. மற்றபடி எந்த குணமும் இல்லை.”

“மெதுவா பேசுங்க. மதி காதில் விழப்போகுது”.

 

“எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்” என்று அலுத்துக் கொண்டு தன்னறைககு  போய் விட்டார்.

 

புத்தக திருவிழாவில்…

 

காபியை  சுவைத்துக் கொண்டே, “இந்த மழை வாழ்க.இந்த மழையினால் தான் நாம் இப்பொழுது காபி குடித்துக் கொண்டு இருக்கிறோம். “

 

“ஆனால், மழை பெய்யவில்லை.” என்று ஜெனி சொல்ல,

.

“அதுதான் என் வருத்தமே. இன்னும் கொஞ்ச நேரம் பெய்யக் கூடாதா”.

 

“ஏன்”……?.

 

“இன்னும் ஒரு காபி குடிக்கலாம்.”

 

சிரித்தாள்.

 

சிரிக்கும் போது அவள் விழிகளை காண  பரவசம் கூடியது.

அவளை நன்றாக பார்த்தான்.

பகட்டான உடை இல்லாமல் நேர்த்தியான உடையை அணிந்து இருந்தாள்.

இன்று நீலகலரில் சூரிதார் போட்டு இருந்தாள். ஸ்டெப் கட்டிங் தலைமுடி அலை அலையாக கழுத்தில் புரண்டது. காதில் சின்னதாக தோடு. வைரம் போலும். ஜொலித்தது. கழுத்தில் மெலிதான குட்டியூண்டு ஆட்டின்  டாலர் .அது அவள்  கழுத்தை ஒட்டியே இருந்தது.  அந்த வட்ட முகமும், வளைந்த புருவமும், சீரான  பல்வரிசை எப்படியோ பெண்களுக்கு அமைந்து விடுகிறது.

அவள் சிரிக்கும் போது யாரோ மேலிருந்து ரோஜா இதழ்களை வாரி இறைத்தது போல் உணர்ந்தான்.

இரண்டு முறை மேலே பார்த்தான்.

என்னவென்று கேட்டாள்.

“நீங்கள் சிரிக்கும் போது , யாரோ பூக்கூடையை   கவிழ்ப்பது போல் உணர்கிறேன்.”

“ஹலோ… அது பூக்கூடையில்ல. மழை துளி. அப்பப்போ பெய்கிறது. நாம வெளியே நின்று பேசிக் கொண்டு இருக்கிறோம்.”

 

அவன் அவள் கண்களையே பார்ப்பது, அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

 

அதை தவிர்க்க வே “நான் கிளம்புகிறேன்”.  என்றாள்.

 

“இருங்க உங்க ஹோண்டாவில் தானே வந்து இருக்கிறீர்கள்”.

 

“இல்ல. காரில் வந்து இருக்கிறேன்.”

 

“வாங்க. உங்களை ஏற்றி விட்டு போகிறேன்”.

 

இருவரும் மெளனமாகவே நடந்தார்கள்.

வானில் நிலா இவர்கள் மீது தன் குளிர்ச்சியை தாராளமாக வழங்கியது.

இவளின் கார் அருகே வந்ததும், இருவருமே தயங்கினர். 

 

பிரிய. வேண்டுமே என்ற ஏக்கம்  மேலோங்கியது.

 

“நீங்கள் பைக்கில்  போவதால் சீக்கிரம் போங்கள். மழை வரப் போகுது”.

வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

 

மேகம் கலைந்துவிட்டது. மழை வராது. அவள் நிலவொளியில்  ஜொலித்ததை ரசித்த படியே சொன்னான்.

 

காரில் ஏறும் சமயம் தினேஷிடம் கை கொடுத்து நைஸ் டூ மீட் யூ” என்று  அவன் கை பற்றி சொன்னாள்,

 

மறுபடியும்….. என்று தினேஷ்  தயங்கியபடியே கேட்க,

“பார்க்கலாம்”   என்றாள்.

 

தலையசைத்து விட்டு காரை கிளப்பினாள்.

அவள் போவதையே பார்த்தான்

 

போனதும் ஒரு சுற்றி விட்டு  எகிறி குதித்தான்.

 

அவளும் அதை  ரிவர்வியூ கண்ணாடியில் பார்த்து  சிரித்துக் கொண்டாள்.

 

“ஜதி என்னும் மழையினிலே  ரதியிவள்

நனைந்திட வே

அதில் பரதம் துளிர்விட்டுப்

பூப்போல பூத்தாட

மனமெங்கும் மணம் வீசுது.

எந்தன் மனமங்கும் மணம் வீசுது.”

என்ற பாட்டை  மெலிதாக பாடிக் கொண்டே தன் ராயல் என்பீல்டை ஸ்டார்ட் செய்தான்.

…………………………………………

 

R.A  புரம்.

ஜெனி தன்  மினி கூப்பர்  காரை  போர்டிகோவில் நிறுத்தினாள். .  சாவியை டிரைவர் பெற்றுக் கொண்டு ஷெட்டில்  விட்டான்.

அண்ணி மதிவதனி இவளை பார்த்ததும், முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு போனாள்.

 

நேராக தன் மாமியாரிடம்,”உங்கள் அருமை மகள் வந்து இருக்கிறாள். என்னவென்று கேளுங்கள்.”

 

எள்ளும்  கொள்ளும் வெடிக்க சுதா ஜெனியிடம் வந்தாள்.

 

“ நீ மனசில் என்ன  நினைச்சிட்டு இருக்க”….!!!

 

“ஏம்மா என்ன ஆச்சு”.

 

“இன்னிக்கு சனிக்கிழமை லீவு தானே.

வீட்டில் இருந்து இருக்கலாம். பிரசாத்துக்கு அவமானமா போச்சு. உன்னிடம் பேச, ஹோட்டலுக்கு அழைத்து போக வந்தான்.”

 

“அம்மா… அவருக்கு  என்னிடம் பேச என்ன இருக்கு. அதுவுமில்லாமல் அவர் பேசப் போகிறார்  என்று எனக்கு எப்படித் தெரியும்.

அநியாயமாய் கோவப்படாதே.”

 

மதி  அப்போது அங்கு வந்து அத்தே,, “நாளைக்கு இராத்திரி 7 மணிக்கு மேடம்  ஃப்ரியா என்று   அண்ணன் கேட்க  சொல்றார்.

 

“அவர் கோபப்பட்டு, இறங்கி வருவது இது தான் முதல் தடவை.   கேட்டு சொல்லுங்க அத்தை”…

ஜெனி பதிலேனும் சொல்லாமல் திரும்ப,

“நில்லுடி உங்கண்ணி சொன்னது காதில் விழுந்தா  …பதில் சொல்லு.”

“இப்போ  எனக்கு  பசிக்குது. சாப்பிட்டு சொல்றேன்”.என்று  சொல்லி தன்னறைக்கு போய் விட்டாள்.

பிரஷ் அப் ஆகிவிட்டு “ ராஜம்மா ரொம்ப பசிக்குது. சாப்பாடு எடுத்து வையுங்கள்.”

“வாம்மா நீ மதியமே வெறும் மோர்சாதம் சாப்பிட்ட. பசியோடு வருவேன்று தெரியும். உனக்கு பிடித்தது எல்லாம் செய்து வைத்து இருக்கிறேன்.”

“அப்படி யென்றால் ஒரு பிடி பிடித்து விட வேண்டியது தான் .”

 

சாப்பிட்டு முடித்தவுடன்,பிரசாத்திடமிருந்து இவளுக்கு போன் வந்தது

“ஹலோ”……..

“ஹலோ…ஹலோ”…..

“நாளை   இரவு  7 மணிக்கு டின்னர் போகிறோம். .ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக் கொள்கிறேன் “ என்றதும்,

அம்மா கண்களால் கெஞ்ச,

“சரி “என்றாள்.

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page